சென்ற ஆண்டு மார்ச் மாதம் துருக்கி இஸ்தாம்புவில் நடைபெற்ற தங்க நகை கண்காட்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்ததைப் போல இந்த ஆண்டும் கிடைத்திருக்கிறது.
முழுக்க முழுக்க வியாபார சிந்தனையுடன் செல்லக்கூடிய இந்த பயணத்தில் எனக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்களை இங்கு பதிவு செய்கிறேன்.
மார்ச் 21 மதியம் 2.45 மணிக்கு துபாயிலிருந்து புறப்படும் எழில்மிக்க எமிரேட்சில் பயணம் துவங்கியது. வழக்கம்போல தமிழ்படங்கள் இரண்டு மற்றும் இணையதள விளையாட்டு என ஐந்து மணி நேரத்தின் பொழுது இனிமையாய் கழிந்தது.
துருக்கி மற்றும் அமீரகத்திற்கும் இரண்டு மணி நேரம் வித்தியாசம் உண்டு மாலை 5.30 மணிக்கு இஸ்தாம்புல் அட்டாட்ருக் விமான நிலையத்தில் இறங்கினேன். குளிர் 14 டிகிரியில் இருந்தது சென்றமுறை என்னை அழைத்துச் செல்வதற்கு இஸ்தாம்புல் நண்பர் வந்திருந்தார் இந்த முறை வழிகாட்டல் தேவை இல்லாமல் இருந்தது. விமான நிலையத்திலிருந்து வாவ் விடுதிக்கு இஸ்தாம்புல் மெட்ரோவை உபயோகித்தேன். இந்த ஒரு ஆண்டில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. அதனால் எளிதாகவே விடுதிக்கு வந்தடைந்தேன்.
முன்பதிவு செய்திருந்தமையால் விடுதியின் அறை தயாராகவே இருந்தது. இதே விடுதியில் ஏமன் நாட்டைச் சேர்ந்த சவூதிஅரேபியாவில் தங்கக்கடையில் பணிப்புரியும் இரு மேலாளர்கள் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளருமான இவர்களும் இந்த விடுதியில் தங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் காலையிலேயே வந்தும் விட்டார்கள்
மாலை ஆறுமணிக்கு விடுதி அறையில் எனது உடமைகளை வைத்துவிட்டு வந்திருக்கும் ஏமன்
No comments:
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....