166. தீராத நோயினாலே திகைத்த ஹஸன்ஹூஸைனால் தேராத தாய்தந்தை தீர்வாக
நோன்பிருந்தார்.
நபிகள் நாயகத்தின் செல்லப் பேரக் குழந்தைகளான ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகிய
இருவருக்கும் தீராத கடுமையான நோய் ஏற்பட்டு வருந்தினர். இதனால் செய்வதறியாது திகைத்த
அவர்களது பெற்றோர்களான அலி (ரலி) மற்றும் அன்னை பாத்திமா (ரலி) ஆகியோர், ஒரு தீர்வாக இறைவனுக்காக
நோன்பு (நோன்பு நேர்ச்சை) இருக்க முடிவு செய்தார்கள்.
169. கூலிக்கு நுானுாற்று கொடுத்தபடிக் கோதுமையை சாலவுமே சீர்மையுடன் தனியா யரைத்தெடுத்து.
பிள்ளைகள் குணமடைந்ததும், தாங்கள் நேர்ச்சை செய்தபடி
மூன்று நாட்கள் நோன்பைத் தொடங்கினர். அதற்காக அலி (ரலி) அவர்கள் கூலி வேலை செய்து
கொண்டுவந்த கோதுமையை, அன்னை பாத்திமா (ரலி) மிக
நேர்த்தியாகவும் தூய்மையாகவும் தனியாக அரைத்து மாவாக்கினார்.
170. ஐந்துரொட்டி சுட்டெடுத்தே யருந்த விருக்கையிலே நைந்தேழை யொருவர் நாடியவன் வந்துநின்று
அரைத்த கோதுமை மாவைக் கொண்டு ஐந்து ரொட்டிகளைச் சுட்டு எடுத்து, நோன்பு திறந்து உண்பதற்காக அவர்கள் அமர்ந்திருந்த வேளையில், பசியால் வாடி வதங்கிய ஏழை ஒருவர் உதவி தேடி அங்கே வந்து நின்றார்.
