உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, January 6, 2011

எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு


சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.

பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.

கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு கிடையாது என்றேன். அதற்கு அவர் எங்களுடைய வழக்கமும், பழக்கமும் இதுதான் என்றார்.
இருக்கலாம் ஆனால் வங்கி எங்களை எச்சரிக்கைப் படுத்தி இருக்கிறது என்று கூறிவிட்டு
சரி நான் விமான நிலையத்தில் பணமாகவே கட்டிவிடுகிறேன் என்றேன் அவரும் சரி என்றார்.

விமான நிலையம் சென்று எமிரேட்ஸ் கவுண்டரில் பயணச்சீட்டைக் கொடுத்ததும் தேதி மாற்றத்திற்கு 500 கட்டவேண்டும் என்றார் நானும் சரி என்றேன்.
எமிரேட்ஸ் மேற்பார்வையாளரிடம் அவர்பேசிவிட்டு அந்த தொகையை நீங்கள் கடன் அட்டை மூலம் தான் கட்டவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

நான் பணமாக கட்டுகிறேன் கடன் அட்டை மூலம் என்னால் கட்ட இயலாது அவர்கள் இரசிய எண்ணை கேட்கிறார்கள் நான் எப்படி அதை கொடுக்க முடியும் எனது கடன் அட்டைக்கு பாதுகாப்பு கிடையாது அது உங்களின் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த காரணமாகிவிடும் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் நீங்கள் அந்த தொகையை கடன் அட்டை மூலம்தான் கட்ட முடியும் நாங்கள் பணமாக வாங்கக் கூடாது எங்களிடம் வேறு வழி இல்லை என்று மேலாளர் கூற, வேறு வழிஇன்றி கடன் அட்டையின் மூலம் கட்டினேன்.

எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை பயணிகளுக்கு சிறப்பாக செய்வதாக கூறுகிறது ஆனால் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சரிவுதான்.

ஒருவரின் கடன் அட்டையின் முழுவிபரம் ஒரு ஊழியருக்கு தெரியும் பொழுது அவர்களால் அதை தவறாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை எமிரேட்ஸ் போன்ற நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது.

வங்கிகளில் கடன் அட்டையின் ரகசிய எண்ணை மாற்றுவதற்கு நாம் தொலைபேசி மூலம் அந்த எண்ணை நசுக்கி பதிவு செய்வோம் அதுதான் பாதுகாப்பான முறை இப்படி வெளிப்படையாக எல்லா இலக்க எண்களையும் ஒருவரிடம் கொடுக்கவும் கூடாது அப்படி கொடுப்பது ஆபத்தானது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முறையை மாற்றி அமைத்தால் பயணிகளின் பயம் நீங்கும் ஊழியர்களின் குறுக்கு சிந்தனையை போக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளேன்.

16 comments:

Senthil said...

you are right.

Mak said...

this is common to all credit card services. usually they will ask all the details including 3/4 ccv number. nothing to worry about this

இராகவன் நைஜிரியா said...

எமிரேட்சின் கஸ்டமர் கேருக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றீர்கள் என்றால் நிச்சயம் பலன் இருக்கும். பதிலும் கொடுப்பார்கள். எனக்கு தெரிந்த வரையில், கஸ்டமர்களுக்கு பதில் கொடுப்பதில், அவர்களை திருப்தி படுத்துவதில் எமிரேட்ஸ் நன்றாகவே செயல் ஆற்றுகின்றது.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி செந்தில்

கிளியனூர் இஸ்மத் said...

மேக்....! நீங்க சொன்ன மாதிரிதான் ஏர்லைன்ஸ்காரர்கள் கூறுகிறார்கள் பிரச்சனைன்னு வரும்போது யாரும் காமன்னு சொல்ல மாட்டாங்க நீங்க கவனமாக எச்சரிக்கையாக இருந்திருக்கனும்னு அட்வைஸ் பண்ணுவாங்க...உங்கள் வருகைக்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

உண்மைதான் இராகவன் சார்...ஆனால் சென்னை மேலாளர் எமிரேட்ஸ் சர்வீஸைப் பற்றி கவலையில்லாமல் பேசுகிறார்.கஸ்டமர் கேரில் பதிவு செய்துள்ளேன்..நன்றி

Anonymous said...

Becoz of this kindly of issues i am recommending you to take Tickets from the Travel Agent. Definitely we will help you if the guest stuck anywhere during their journey.

**OUR SERVICES WILL FOLLOW TILL END OF YOUR JOURNEY**

Regards
Amzath

கிளியனூர் இஸ்மத் said...

ஹம்ஜத்...
டிராவல்ஸ்சில் டிக்கேட் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்...காசு கூடுதலாக வாங்கி இருப்பீர்கள்.. ஆன்லைன் டிக்கேட் எடுக்கும் அனுபவம் எனக்கு கிடைத்திருக்காது...மற்றபடி தேதி மாற்றம் செய்திருந்தால் டிராவல்ஸாக இருந்தாலும் ஆன்லைன்னாக இருந்தாலும் பணம் pay பண்ணித்தானே ஆகனும்..
பிரச்சனை இரண்டிலும் ஒன்றுதான்...வருகைக்கு நன்றி

Anonymous said...

Good awareness post!

R.Ravichandran said...

Many airlines are wants the payment thro credit card only, even they do not accept debit cards.

ஜோதிஜி said...

வெறுமனே வலையில் எழுதுவதோடு மட்டுமல்லாமல் மின் அஞ்சல் அனுப்பிய விதத்திற்கு என் வாழ்த்துகள்.
இராகவன் நைஜீரியா சொன்னதும் உண்மைதான்.

Avargal Unmaigal said...

சார் ரொம்ப பயப்டாதிங்க. பிஸினஸில் அந்த மாதிரி கேட்பது நார்மல்தான். சில பிஸினஸில் வர்த்தகம் நடத்த அந்த நம்பர் தேவையேன புரோகராம் செய்து இருப்பார்கள். மோஸ்ட்லி அட்டோமெடிக் போன் ஆர்டரில் அந்த நம்பரி தேவை. சில பிஸினசில் அது தேவையில்லை. நீங்க வேணா அந்த நம்பரி இல்லாம உங்கள் கார்டு நம்பரை மட்டும்தாருங்கள் உங்கள் கிரடிட் காரிடின் மேக்ஸிமம் அமோண்டையும் நான் யூஸ் பண்ணி காண்பிக்கிறேன். பயப்படாதீங்க நண்பரே நீங்கள் க்ரெடிட் கார்டு கொடிக்கும் பேங்கின் ஆன் லைன் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி டெய்லி செக் பண்ணுங்கள் அதுதான் பாதுகாப்பனது ஏதாவது மிஸ் யூஸ் தெரிந்தால் உடணே பேங்கை தொடரிபு கொள்ளுங்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

Sai Gokula Krishna உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

R.Ravichandran நன்றி சார்...

கிளியனூர் இஸ்மத் said...

ஜோதிஜி...நன்றி நன்றி..

கிளியனூர் இஸ்மத் said...

Avargal Unmaigal...கடன் அட்டை எண்ணைக் கொடுத்தால் தனி சாப்டுவேர் போட்டு திருடலாம்...ccv எண்ணைக் கொடுத்தால் நேரடியாக திருடலாம் அவ்வளவுதான் வித்தியாசம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....