உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, July 26, 2010

வடஇந்திய சுற்றுலா - 2


அக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்மா என்னிடம் கேட்க
கடையின் முகத்திலேயே தெரிகிறதே சப்பாத்தி பூரியைத்தவிர வேறொன்றும் கிடைக்காது என்று என பதில் சொல்லும்போதே வாகன ஓட்டிக்கு இட்லி தோசை என்ற வார்த்தைப்புரிந்து தென்னிந்திய உணவகம் தூரமாக இருக்கிறது என்று கூறிவிட்டு இங்கு டிபன் ருசியாக இருக்கும் எனச் சான்றிதழ் வழங்க அனைவரும் காலை டிபனை அங்கு முடித்து பில் கொடுக்கும்போது தான் தெரிந்தது நாம் சாப்பிட்ட தொகையில் ஒட்டுனருக்கும் பங்கு உண்டு என்று.

வாகன ஒட்டிகள் எங்கு வாகனத்தை நிறுத்துகிறார்களோ அங்கு அவர்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை விளங்க முடிந்தது.

அக்பர்கோட்டைக்கு செல்லும் முன் அந்த கோட்டையைப் பற்றி நமக்கு விளக்குவதற்கு நிறைய கைடுகள் நம் வாகனங்களை வழிமறிப்பார்கள் ஆனால் வாகனவோட்டியோ அவருக்கு பங்கு தரக்கூடிய கைடுகளிடம் மட்டுமே அழைத்துச் செல்கிறார்.கடைகளைப்பற்றியோ ஆட்களைப்பற்றியோ சான்றிதழ் கொடுத்தால் வாகனஓட்டிக்கு வரும்படி இருக்கு என்று நாம் உசாராக இருக்கவேண்டும்.

இந்த உசாரான விசயங்களை எல்லாம் இங்கு என்னால் எழுதமுடிகிறதே தவிர அந்த இடங்களில் கோட்டையைப் பார்க்க கோட்டை விட்டேன்.

ஒரு நபருக்கு கைடு பண்ணுவதற்கு 100 ரூபாய் என அச்சடித்த அட்டையை காண்பிக்கின்றார்கள். எங்கள் குழுவிற்கு 500 ரூபாய் கேட்டார்கள் பெருசா அவர்களிடம் பேசி 100 குறைத்து 400 உறுதி செய்தேன்.எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு போகும் வழியில் யோசனை வந்தது அட கைடு விசயத்தில் ஏமாந்து விட்டோமே என்று.ஒரு நபருக்கு 100 என்றால் எங்கள் 9 நபரில் 2 பேருக்குதானே ஹிந்தி தெரியும் 100 ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்க கூடாதே என கொடுத்துவிட்டு வருத்தப்பட்டோம்.

சரியாக காலை 11 மணிக்கு அக்பர்கோட்டைக்குள் நூழைந்தோம்.மலையின் மீது கோட்டையை கட்டி ஆண்ட அக்பரை நினைத்து ஒரு கணம் திகைக்க வைக்கிறது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் இப்படியொரு கோட்டையை கட்டுவதற்கு முயற்சி செய்தால் பல ஆண்டுகள் ஆகும் எனத்தோன்றுகிறது.ஆனால் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோட்டை இன்னும் புதிதாக சமீபத்தில் கட்டப்பட்;டது போல் காணப்படுகிறது.

மன்னர்கள் கோட்டைக்குள்ளும் அரண்மனைக்குள்ளும் வாழ்வதற்கு அந்த நாட்டின் மக்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நாங்கள் கண்ட கோட்டைகளும் அரண்மனைகளும் சாட்சிகளாக காணமுடிந்தது.

அந்த மன்னருடைய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை காணமுடியவில்லை மக்கள் வசதியாக வாழ்ந்ததற்குரிய அடையாளங்கள் எங்கும் பாதுகாத்து வைக்கப்படவில்லை.

மன்னர் அக்பரின் கோட்டைக்குள் பல சமாதிகள் இருந்தன.மன்னரின் குடும்ப வம்சங்களும் வாரிசுகளும் அந்த கோட்டைக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அக்பரின் குரு சையது சலீம் சிஸ்தி என்ற மகானுக்கு தனியொரு அடக்கஸ்தளத்தை நிறுவி இன்றும் இப்பவும் அவர்களுக்காக பிரார்த்தனை (ஜியாராத்) செய்யப்படுகிறது.நாமும் பிரார்த்தனை செய்தோம்.

இந்த கோட்டைக்குள் செல்வதற்கு எந்த தொகையும் இல்லை காலணிகள் அணிந்து செல்ல அனுமதியில்லை.அதனால் கால்களில் காலுறை (சாக்ஸ்)அணிந்துக் கொள்வது நலம்.

வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக இருந்தது வெற்றுக்காலுடன் நடப்பது கஸ்டமாகவே இருந்தது நீளமான மிதியடிகள் போடப்பட்டிருக்கிறது அதையும் தாண்டி சூடும் இருந்தது.

பார்க்க பார்க்க பிரமிப்பையே ஏற்படுத்தியது இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.அதை விட்டுபுறப்படுவதற்கும் மனம் இல்லை இருந்தாலும் தாஜ்மஹாலை காணவேண்டும் என்ற ஆவலினால் அங்கிருந்து ஆக்ரா கோட்டைக்கு புறப்பட்டோம்.

நடப்பதற்கு கால்கள் வாடகைக்கு கிடைத்தால் நலமாக இருந்திருக்கும் என மேல்ழூச்சு கீழ்மூச்சு வாங்க ஆக்ரா கோட்டைக்குள் நடந்தபோது தோன்றியது.நுழைவு கட்டணம் 20ரூ செலுத்தினோம்.வெளிநாட்டினருக்கு 250 என்றும் 500ரூ என்றும் 750ரூ என்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் வசூலிக்கன்றார்கள்.

தாகத்தின் தாக்குதலால் எத்தனை விதமான பானங்கள் விற்கப்பட்டதோ அத்தiயையும் வாங்கி குடித்தாயிற்று தாகம் தீர்ந்த பாடில்லை.(பானம் என்றதும் போதைத் தரக்கூடியது என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.நாம் அதை தீண்டுவதில்லை)

குடித்த பானங்கள் அனைத்தும் வேர்வையாகவே வெளியேறியது.ஆக்ரா கோட்டையின் மேல்தளத்திலிருந்து தாஜ்மஹாலின் பின்புறத்தை காணமுடிகிறது.மேல்புறத்தில் நாம் நின்றபோது நல்ல காற்றோட்டம் இருந்தது.
மதிய சாப்பாட்டிற்கான பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.

ஆக்ரா கோட்டையினுள் பலிங்கு கற்கலால் கட்டப்பட்ட சிறிய பள்ளிவாசல் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் அனைவரும் அந்தப்பள்ளிக்குள் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள் அந்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறவில்லை. அங்குள்ள குளீருட்டப்பட்ட தண்ணீர் குடத்திற்கு முன் நீண்ட வரிசை நின்றுக் கொண்டிருந்தது.

ஒருமணி நேரத்தில் ஆக்ராகோட்டையை சுற்றிவிட்டு ஒட்டுனர் எங்களை மதிய சாப்பாட்டுக் கடைக்கு அழைத்துச்சென்றார் மறக்காமல் அவருக்கு பங்குதரக்கூடிய கடையாகவே அதுவும் இருந்தது.

நாங்கள் பசிக்கா சாப்பிட்டோமே தவிர யாரும் ருசிக்காக சாப்பிட வில்லை மூன்று வேலையும் சப்பாத்தி என்றால் எப்பூபூடி.

அந்திமாலையில் தாஜ்மஹாலின் நுழைவாயிலில் நுழைந்தோம் எங்கள் மனம் எல்லாம் பரபரப்பாக இருந்தது இன்னும் எங்கள் கண்களில் தாஜ்மஹால் தென்படவில்லை ஆனாலும் அதன் அருகில் நின்றுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே சும்மா ஜிம்முன்னு பறப்பது போல் இருந்தது.

தாஜ்மஹாலை பார்ப்பவனுக்கே இப்படி என்றால் இதை இரசித்து கட்டிய ஷாஜகானின் எண்ணமும் சிந்தனையும் உள்ளமும் உணர்வும் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் தாஜ்மஹாலை நேரில் காணும்போது மட்டுமே உணரமுடியும் புகைப்படங்களில் கண்டு அதை இரசிக்க முடியாது சக்கரையை தாளில் எழுதி அதை ருசிக்க முடியாததைப் போல..
இரசனை தொடரும்..

வடஇந்திய சுற்றுலா-1
வடஇந்திய சுற்றுலா-3
வடஇந்திய சுற்றுலா-4

வடஇந்திய சுற்றுலா-5
வடஇந்திய சுற்றுலா-6

வடஇந்திய சுற்றுலா-7
வடஇந்திய சுற்றுலா-8
வடஇந்திய சுற்றுலா-9
வடஇந்திய சுற்றுலா-10

10 comments:

manjoorraja said...

நல்ல அனுபவம்.

தாஜ்மகாலை கொத்தனார்கள் தான் கட்டினார்களாம்.

அப்துல்மாலிக் said...

அக்பர் கோட்டையை பார்க்கும்போது சுத்தமாக பராமறிப்பது தெரிகிறது, வரலாற்று சின்னங்கள் பாதுகாப்படவேண்டும்..

தொடருங்க

சுல்தான் said...

போன வருடம்தான் குடும்பத்தோடு சென்று வந்தோம். நீங்கள் சொல்லச் சொல்ல மனக்கண்ணில் படமாய் விரிகிறது. நன்றி

ஜோதிஜி said...

தொடருங்க

குசும்பன் said...

கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்களுடன் சென்ற இடம்...

இஸ்மத் பாய் கலக்கல்.

நாஞ்சில் பிரதாப் said...

இஸ்மத் அண்ணே.... எழுதுங்க எழுதுங்க எழுதிட்யே இருங்க..... தாஜ்மகால் பற்றி கொஞ்சம்அதிகமாகவே எழுதுங்க

akkuraan tamil said...

புராதன சின்னங்கள் பாதுகாக்கபடவேண்டுமென்ற எண்ணங்கள் நம்மை போன்றவர்களுக்குத்தான் வரும்ராஜ்யத்தை ஆளநினைப்பவர்களுக்கு "எத்தை தின்னால் பித்தம் பிடிக்கும் (தெளியும்?)" என்ற நிலைதான்.

நிஜாம்

NIZAMUDEEN said...

மூன்றாம் பகுதியில்தான் தாஜ்மஹாலுக்கு(ள்)
செல்வீர்களா?

சிநேகிதி said...

நீண்ட நாள் ஆசை இங்கு போகனும் என்று...
உங்கள் எழுத்துக்களை பார்க்கும் பொழுதே... நேராக பார்த்த உணர்வு வருகிறது அண்ணன்.. அடுத்த பதிவில் தாஜ்மஹாலை பார்க்க வருகிறேன்

கிளியனூர் இஸ்மத் said...

மன்ஜ்சூர்ராஜா...கொத்தனார் கல்லைதான் அடுக்கிருப்பான் ஆனால் தாஜ்மஹாலை சுமந்தது ஷாஜகான் அல்லவா!.........உங்கள் வருகைக்கு நன்றி.

அப்துல் மாலிக்....இப்போஓரளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்...உங்கள் வருகைக்கு நன்றி.

சுல்தான் பாய்...போனவருடம் போனநீங்கள் பதிவுப் போட்டிருந்தால் எனக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் அல்லவா...அதனால்தான் இந்த பதிவு...உங்கள் வருகைக்கு நன்றி.

ஜோதிஜி....உங்கள் வருகைக்கு நன்றி.

ஐயா குசும்பன் ....கல்லூரி ஞாபகத்தை வரவச்சிட்டேனா?...வருகைக்கு நன்றி.

நாஞ்சில்...அதிகமா எழுத முயற்சிக்கிறேன்...வருகைக்கு நன்றி.

ஆக்கூரான் தமிழ்...பெயரு நல்லாதான் வச்சிருக்கே ஆனால் பிளாக்கை மொட்டையா வச்சிருக்கியே...எழுதுங்க ராஜா...இலவசம்ங்குறதுனால சும்மா வச்சிக்கப்படாது...வருகைக்கு நன்றி.

நிஜாம்...மூன்றாம் பகுதியிலாவது தாஜ்மாஹாலுக்குள் அழைத்துச் செல்வேனான்னு தெரியல...சின்னப்பிள்ளையில பசங்களோட சட்டையை பிடித்து இரயில் வண்டிவிளையாடின மாதிரி பின்தொடருங்களேன்(சும்மா தமாஸ்)...வருகைக்கு நன்றி

சிநேகிதி...சகோதரி முதல்முறையா எனது வலைக்குள் வருகிறீர்கள் என நினைக்கிறேன்...நீங்களும் ஒருநாள் தாஜ்மஹாலைக் காண்பீர்கள்.நானும் அப்படித்தான்.தொடந்து வாசியுங்கள்...வருகைக்கு நன்றி...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....