உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 7, 2010

கதி கலங்கவைக்கும் கசகசா


வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சாதரன மளிகை பொருட்கள் கூட வளைகுடா நாடுகளில் தடையில் இருக்கிறது. அதுதெரியாமல் எடுத்துவரும்போது நாம் பல கஸ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் சிறைக்கு தள்ளப்படுகிறோம் என்பதை எனக்கு வந்த இமெயில் சுட்டிக்காட்டியது.

சமீப காலத்தில் துபாய் வளைகுடாவிற்கு கசகசா கொண்டு வந்த இந்தியர் ஒருவர் 20 வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என இமெயில் பரவளாக அனைவருக்கும் வந்தள்ளது.அதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

20 வருடங்கள் சிறை தண்டனை கொடுக்குமளவு கசகசா கொடிய பொருளா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

இந்தியர்களை பொருத்தமட்டில் கசகசா ஒரு பெரிய பிரச்சனைக்குரிய பொருளல்ல ருசி கூட்டும் மசால பொருளில் அதுவும் ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளான துபாய் கத்தார் குவைத் ஓமான் சவூதி அரேபியா போன்ற அரபுநாடுகளுக்கு கசகசா போதைதரும் பொருள் அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது என்பது இப்போதுதான் தெளிவாக பலருக்கும் தெரியவந்துள்ளது.
"உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.

இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றிஇ அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.
ஆனால்இ விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது… அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஇ அந்த விதைப் பையைக் கீறி… அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்… அதுதான் ஓபியம்.

‘பாப்பி’ செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் ‘பாப்பி’ மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன."
- நன்றி ஜூனியர் விகடன்


கசகசா ஒரளவுக்கு மேல் உண்டால் அதில் போதை ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்ட உண்மை ஆதலால் அதை போதை வஸ்துக்களுடன் அதாவது கஞ்சா அபீன் போன்ற கொடிய போதைப் பொருள்களுடன் கசகசாவையும் வளைகுடா நாடுகள் சேர்த்திருக்கிறார்கள் என்பது இந்த பிரச்சனைக்குப் பின் தெரிய வந்துள்ளது.

மளிகைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டுச் செல்லும் அன்பர்கள் கவனமாக போதைத் தரக்கூடிய எந்த பொருளையும் எடுத்துச் செல்லாமல் இருப்பது நலன் மீறினால் சுங்கசோதனையில் மாட்டப்படும்போது அதனால் வாழ்க்கையே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.

கசகசா வளைகுடாவில் மட்டும் தடையல்ல சிங்கப்பூரில் 20 ஆண்டுகாலமாக தடையில் இருக்கிறது அதேபோல் மலேசியாவிலும் தடையில் இருக்கிறது ஆதலால் கவனமாக இருக்கவேண்டும்.


மேலும் இஸ்லாமியர்கள் புனிதப் பயணமாகிய ஹஜ் உம்ரா போன்ற யாத்திரைகளுக்கு இந்தியாவிலிருந்து செல்லக்கூடியவர்கள் அங்கு சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் கொண்டுச் செல்வது வழக்கம் அதில் பிரச்சனைக்குரிய கசகசா போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.
அதுமட்டுமல்ல சவூதி அரேபியாவில் சில தைல வகைகளும் தடை செய்துள்ளார்கள். தமிழக இஸ்லாமியர்கள் தலைவலிக்காக அதிகமாக உபயோகம் செய்யும் கோடாலி தைலம் மற்றும் ஐஸ் ஒடிக்கலம் போன்ற தைல வகைகளையும் எடுத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தைல வகைகளில் ஸ்பிரிட் என்ற போதை கலந்திருப்பதால் இதை தடைசெய்துள்ளார்கள்.

சில தருணங்களில் விமான நிலையங்களில் சிலர் தங்களை உறவினர்களுக்கு ஒரு சிறிய கவரைக் கொடுத்து தொலைபேசி எண்ணையும் தந்து கொடுக்கும்படி கூறுவார்கள் அதை நாம்வாங்கி வந்தால் சுங்க இலாகா அதிகாரிகளினால் நாம் கைது செய்யப்படலாம் காரணம் அதில் போதை பொருட்கள் ஏதும் இருக்கலாம் அல்லது தடைச் செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் இருக்கலாம் ஆதலால் தெரியாதவர்கள் யாரும் எதையும் விமான நிலையத்தில் அல்லது உங்களுடனே வரக்கூடிய பயணிகள் இதை வைத்துக்துக் கொள்ளுங்கள் கொஞ்சநேரத்தில் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரியே.
சில தருணங்களில் உண்மையாகவே முடியாதவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் கூடபோய்விடலாம்.
சிலர் உதவி என்று நினைத்து செய்ய அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் இடம் பார்த்து உதவி புரியவேண்டும் எங்கும் எப்போதும் தெரியாதவர்களிடம் மிகக் கவனமாக இருப்பது நல்லது.

11 comments:

Anonymous said...

very usefull information thanks - rajakamal

ஹுஸைனம்மா said...

//சவூதி அரேபியாவில் சில தைல வகைகளும் தடை செய்துள்ளார்கள். ... கோடாலி தைலம் மற்றும் ஐஸ் ஒடிக்கலம்//

புது தகவல்.. ஆச்சர்யம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மூரில் கிடைக்கும் சாதாரண வாசனைப் பாக்கு (நிஜாம் பாக்கு) வகைகளும் தடை செய்யப்பட்டிருகிறதாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓடிகலம், கோடாலி தைலம் சவூதியில் சுப்பர் மார்க்கெட்டுகளில் தடையில்லாமல் கிடைக்கிறதே! (ஆனால் இந்த ICE ஓடிக்கலம், நம்மவர்கள் கடைகளில் மட்டும் ரகசியமாக வைத்து விற்கப்படுகிறது, மற்ற வகை ஓடிக்கலம் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கிறது)

கிளியனூர் இஸ்மத் said...

வருகைக்கு நன்றி ராஜாகமால்.....

சவூதிக்கு சமீபத்தில் இந்த தைலங்களை அனுப்பியபோது அதை திருப்பி துபாய்கே அனுப்பி விட்டார்கள்...அங்கு போதைக்காக தைலங்களை சிலர் உட்கொள்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள்...உங்கள் வருகைக்கு நன்றி ...ஹுஸைனம்மா.!

கிளியனூர் இஸ்மத் said...

நிஜாம் பாக்கு மற்றும் பான்பிராக் போன்ற பாக்குவகைகளும் அனுமதியில்லை என்று சமீபத்தில் வானொலி செய்தியில் அறிந்தேன்.....உங்கள் வருகைக்கு நன்றி .. தமிழர்கள் அதிகம் உபயோகிக்ககூடிய கோடலி மற்றும் ஐஸ்ஒடிக்கலம் தடை செய்யப்பட்டிருக்கிறது ....பன்னிக்குட்டி ராம்சாமி

AzeezR said...

Thanks for making awareness to all. What about the Curry Masala and Damroot? Of course we mix kasa kasa with curry masala, Right?. Is it allowed?
Regarding Eau di cologne and Axe oil, it may be allowed (small bottle) for personal use.

கிளியனூர் இஸ்மத் said...

வருகைக்கு நன்றி.......AzeezR

yarl said...

மிகவும் பயனுள்ள தகவல் இஸ்மத். நன்றி. அடிக்கடி பயணம் செய்பவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டியது. சர்பத், பாலூடவில் கலக்கும் கசகசா தானே இது?
அன்புடன் மங்கை

கிளியனூர் இஸ்மத் said...

yarl...வருகைக்கு நன்றி.

நிலாமதி said...

பயனுள்ள் தகவலுக்கு நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....