உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 14, 2010

தேகப்பயிற்சியும் தேற்றவேண்டிய மனமும்நாளைமுதல் காலையில் எழுந்து உடற்பயிற்சி கட்டாயமாக செய்யனும் என்று நம் மனசுக்கு ஆர்டர் போடுவோம்.
மனசும் சரி நாளைக்கு செய்யலாம் என்று சம்மதிக்கும். காலையில் அலாரம் அடிக்கும்போது கண்விழித்து பார்ப்பதற்கு மனம் அனுமதி கொடுக்காது. கையால தடவி அலாரத்தை அடக்கிவிட்டு இன்னும் நன்றாக உறங்குவதற்கு ஒரு சுகத்தை மனம் நமக்கு காண்பிக்கும் அந்த சுகத்துடன் நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு மீண்டும் உறங்கிவிடுவோம்.
சிலர் மனதிற்கு போக்கு காண்பித்துவிட்டு எழுந்து விடுவார்கள் சிலர் மனம் சொல்லுக்கு மாறமால் நடந்துக் கொள்வார்கள்.

அமீரகத்தில் கோடைகாலம் மாறி வாடைக்காலம் ஆரம்பமாகிறது அதனால் வாக்கிங் ஜாக்கிங் என்று பலரும் செய்துவருகிறார்கள்.

பெரும் முயற்சிக்கு பிறகு இந்த வாரத்திலிருந்து நடைபயிற்சி செய்துவருகிறேன். அதிகாலையில் இறைவணக்கத்திற்குப் பின் மம்ஸர் பார்க்கில் தினம் நடக்கின்றேன்.அங்கு கூட்டம் அதிகமில்லை நடந்து செல்வதற்கும் தேகப்பயிற்சி செய்வதற்குக்காண சாதனங்களும் கடற்கரையோரம் மணலில் வைத்திருக்கிறார்கள்
இரு தினங்களாக குளிர்ந்த காற்றுவீசுகிறது நடப்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது.
எல்லா வசதிகளும் இலவசமாக இருந்தாலும் நம்முடைய மனதை அதிகாலையில் தட்டி எழுப்புவதற்கு கஸ்டமாக இருக்கிறது என்பது உண்மை.

தொடர்ந்து செய்துவருகின்ற ஒரு செயலில் இருந்து மாறுவது என்பது மனதிற்கு பிடிக்காது. எப்பவும் எட்டு மணிவரை உறங்கிவிட்டு திடீரென ஐந்து மணிக்கு விழிக்கவேண்டும் என்றால் மனதிற்கு பிடிக்காது நாம் இழக்கும் சுகங்களை நமக்கு சொல்லிகாண்பிக்கும் அதை காதில்வாங்காமல் நாம் செய்யப்போகின்ற செயலில் கிடைக்கக்கூடிய சுகங்களை மனதில் நிறுத்தினால் அந்த மனம் நம் செயலுக்கு உடன்படும்.

மனம் எப்பவும் இச்சையை நோக்கியேதான் போகும் அதன் தன்மையே அப்படிதான். அதற்கு கடிவாளமிட்டு வைக்கவேண்டும்.
ஒன்றை மனம் ஆசைப்பட்டு விரும்பி விட்டால் அதை அடையும்வரை மனம் தூங்காது. மனம் ஆசைப்பட்ட ஒன்றை அறிவு ஆராயவேண்டும் அதில் நன்மை இருக்குமேயானால் மனதிற்கு நாம் கட்டுப்பட்டு அதன் விருப்பத்தை நிறைவேற்றலாம். அதில் தீமை இருக்கிறது என்று எண்ணிணால் அதை தவிர்க்கலாம் ஆனால் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

மனதை நம்கட்டுப்பாட்டில் வைப்பதற்கு யோகா தியானம் தொழுகை என பலவிதமான பயிற்சிகள் இருக்கிறது. பலர் இந்த பயிற்சியை நாடுகிறார்கள்.
பயில்கிறார்கள் மனம் ஒன்றித்தலுடன் செய்யப்படும் பயிற்சிகளில் மடடுமே வெற்றிகிடைக்கிறது.

மனதை பற்றி தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் நிறைய சொல்லி உள்ளார்கள்
மனம் சரியாக இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கை மணக்கும் மனம் சரியாக இல்லை என்றால் நமக்கு எதுவும் சரியாக இருக்காது
அதனால் மனதிற்குள் நல்ல அறிவுகளை வழங்கவேண்டும் அந்த அறிவுகளை மனம் அறியவேண்டும்.

மனதிற்கு பயிற்சி என்பது நல்ல விசங்களை நாம்படிப்பதும் சிந்திப்பதும் செய்வதும்தான் அதன் மூலம் நம்மனதை நம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் முயற்சிப்போம்.!

5 comments:

DrPKandaswamyPhD said...

மனதுதான் மனித வாழ்க்கையில் மிக கஷ்டமான இரு உறுப்பு. அது இல்லாதிருந்தால் எவ்வளவோ சௌகரியமாக இருக்கும்?

கிளியனூர் இஸ்மத் said...

உண்மைதான் டாக்டர் அதேநேரத்தில் மனம் இல்லையெனில் மனிதனால் யாருக்கும் புரயோஜனம் இருக்காதே...இருப்பதை வைத்து சந்தோசமாக வாழகற்பதுதானே சிறப்பு....

கிளியனூர் இஸ்மத் said...

டாக்டர் ஐயா அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

A.M.Anwar Sadath said...

நான்
சரித்திரத்தில் தான்
கேட்டிருக்கிறேன்
சமரின் முடிவில்
தோற்றவனின்
பொன்னும் பெண்ணும் பொருளும்
வென்றவனுக்கு என
ஆனால்
சமரும் இல்லை
தோல்வியும் இல்லை
பொன்னும் கொள்ளை இடப்படுகிறது
பெண்களும் சூறையாடப்படுகிறார்கள்
ஆனால் விந்தை
வீரர்களின் உயிர் மட்டும்
போகவில்லை
வெளிநாட்டில்
நான்.................

கிளியனூர் இஸ்மத் said...

அன்வர் சாதாத்....உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வலைதளம் அமைத்து உங்கள் சிந்தனைகளை பதிவுசெய்யுங்களேன்...வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....