உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, July 20, 2009

துபாயில் பதிவர்களின் பண்டிகை


துபாய் கராமாவில் நடக்கின்ற பதிவர்கள் மாநாட்டிற்கு போகலாம்னு நம்ம சாருகேசி ராசா சொன்னாரு...ஆனா அவர் புலிகேசின்னு எனக்கு தெரியும்...இருந்தாலும் அவருடன்தான் வந்தேன்...சும்மா வரலை பெரிய எதிர்பார்ப்போடு வந்தேன்...

பாத்தி பாத்தியாக பதிவர்கள் உட்காந்திருப்பாங்கன்னு வந்தால்...வட்டமா உட்காந்து நல்லா வடை சாப்பிட்டு கும்மி அடிச்சாங்க...

மொக்கைகளைப் பற்றி மொக்கையா பேசினாங்க...பாவம் அண்ணாச்சி மொக்கையா விழித்துக் கொண்டிருந்தார்....என்றெல்லாம்
எனக்கு எழுத தெரியாது(இந்த நேரத்திலாவது உண்மைய சொல்லிடனும்)...டைரி எழுதுறதா நினைத்து நான் பதிவு எழுதுவது இல்லை...

அதற்கொரு கண்ணியம் வேண்டும்...நான் எனக்காக எழுதனும்னா...பேசாமா நோட்டிலே எழுதிவைத்துக்கொள்ளலாம்...மத்தவங்க படிக்கனும்னு நினைக்கிறப்ப மத்தவங்களுக்கு பிரயோஜமா எழுதினா பயனாக இருக்கும்...ங்குறது எனது கருத்து (யாரும் என் கருத்தை கேட்கவில்லை என்பது வேறு விசயம்)

தனிமனித சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்க கூடாது...அது பதிவு உலகில் சர்வ சாதாரனமா நடக்குதுன்னு என்பக்கத்துல உட்காந்திருந்த அரைகால் டவுசரு (மன்னிக்கனும் அவரு பேரு தெரியலை)சொன்னாரு...சரியாத்தான் சொன்னாரு....

சில மொக்கையிலும் பிரயோஜனம் இருக்கு அதை படிச்சிட்டு சிரிப்பதினால்...சிரிப்பையாவது தந்தாங்களேன்னு....மனச ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.ஆனா அந்த மொக்கையில இன்னொருவரை நையாண்டி பண்ணி நாம சிரிக்ககூடாது...இல்லையா?

பாதியிலேயே கிளம்பக்கூடிய சூழ்நிலை எனக்கு ...ஆனால் பல புதியவர்களின் அறிமுகம் கிடைத்த ஆனந்தத்துடன் (மனசுக்குள்ள கீழை ராசாவை வாழ்த்திக் கொண்டே) நகர்ந்தேன்...
கராமா சந்திப்பு காரம் இல்லைன்னாலும் புதிய பதிவர்களுக்கு அது காரணமா இருக்குன்னு சொல்லலாம்...

அமீரக பதிவர்கள் தரமானவர்கள் மற்ற பதிவர்களுக்கு உரமாகவும் உதாரணமாகவும் இருப்பார்கள் என்று நம்பலாம்...ஏன்னா நம்ம ...அண்ணாச்சி... அண்ணனுடைய சின்ன ஆசையை நிறைவேற்றுவார்...என்ற நம் பி கையில் இருக்கிறது.!

21 comments:

கீழை ராஸா said...

//அதற்கொரு கண்ணியம் வேண்டும்...நான் எனக்காக எழுதனும்னா...பேசாமா நோட்டிலே எழுதிவைத்துக்கொள்ளலாம்...மத்தவங்க படிக்கனும்னு நினைக்கிறப்ப மத்தவங்களுக்கு பிரயோஜமா எழுதினா பயனாக இருக்கும்...ங்குறது எனது கருத்து (யாரும் என் கருத்தை கேட்கவில்லை என்பது வேறு விசயம்)//

இப்படி விசயத்தை நீங்களே சொல்லிவிட்டு நீங்களே கமெண்ட்-ஐயும் போட்டுகிட்டா நாங்க என்ன பண்ணுறது..இஷ்மத் பாய்...

கீழை ராஸா said...

//சில மொக்கையிலும் பிரயோஜனம் இருக்கு அதை படிச்சிட்டு சிரிப்பதினால்...சிரிப்பையாவது தந்தாங்களேன்னு....மனச ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.ஆனா அந்த மொக்கையில இன்னொருவரை நையாண்டி பண்ணி நாம சிரிக்ககூடாது...இல்லையா?//

கலக்கிட்டீங்க...

கீழை ராஸா said...

//(மனசுக்குள்ள கீழை ராசாவை வாழ்த்திக் கொண்டே) நகர்ந்தேன்...//
வாழ்த்து என்பது இங்கே எதாவது திட்டுவதற்கான கோடு வேர்டா...?

அது ஒரு கனாக் காலம் said...

ஐயா உங்களை எல்லாம் சந்தத்தில் மிக்க மகிழ்ச்சி, ... என் அண்ணன் ஒரு நடன கலைஞர், ( வாத்தியார் )... அவரிடம் என் பதிவை பற்றி சொன்ன பொழுது, பதிவுன்னா என்னான்னு கேட்டாரு, அது ஒரு டயரி மாதிரி ன்னு சொன்னேன், உடனே அவரு " ஐயோ , நம்ம டயரியை மற்றவர்கள் படிக்கலாமா " ன்னு கேட்டாரு. ..அப்புறம் யோசித்து, அப்படி இல்லை - என்ன வேணும்னாலும் எழுதலாம், பார்த்தது, பிடித்தது, சுவைத்தது..... ( இது எல்லாத்துக்கும் எதிர் மறையையும் எழுதலாம் ) ... உங்கள் பதிவை இனி போய் பார்க்கிறேன்

கிளியனூர் இஸ்மத் said...

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.....

கிளியனூர் இஸ்மத் said...

//வாழ்த்து என்பது இங்கே எதாவது திட்டுவதற்கான கோடு வேர்டா...?//

உங்காந்து யோசிப்பீங்களா...ராசா?

கோபிநாத் said...

பகிர்வுக்கு நன்றி ;)

கிளியனூர் இஸ்மத் said...

பின்னூட்டத்திற்கு நன்றி கோபிநாத்...

வினோத் கெளதம் said...

தல பின்னி பெடல் போட்டு இருக்கீங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
பாத்தி பாத்தியாக பதிவர்கள் உட்காந்திருப்பாங்கன்னு வந்தால்...வட்டமா உட்காந்து நல்லா வடை சாப்பிட்டு கும்மி அடிச்சாங்க...
//

இதுவே நம்ம அமீரகப் பதிவர்களின் ஒற்றுமையை காட்டுகிறதல்லவா? அழகாக வர்ணனை

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி வினோத்கௌதம்...செந்தில்வேலன்

கரவைக்குரல் said...

தனிமனித சுதந்திரம் என்றெல்லாம் பதிவுலகில் இன்னொருவரை நையாண்டி பண்ணி எல்லாம் நாம சிரிக்ககூடாது,
கட்டுக்கோப்பான எழுத்தாளர்களின் கருத்து இது

உங்கள் பகிர்வு அருமையான பகிர்வு.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ..........கரவைக்குரல்

கிளியனூர் இஸ்மத் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

வடை போச்சா?

சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்

அருமையா விளக்கிருக்கீங்க‌

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி .........அபுஅப்ஸர்

srinivasan said...

Could have been narrated more..but OK.

கிளியனூர் இஸ்மத் said...

//Could have been narrated more..but OK.//

Thanks srinivasan

geethappriyan said...

ரொம்ப அருமை ,குறித்துக் கொண்டேன்.
நல்ல பதிவு .
ஒட்டு போட்டாச்சு

அன்புடன் மலிக்கா said...

அதுசரி இதெல்லாம் நடந்ததா பிரமாதம் பிரமாதம்..

தாங்களுக்கு என் தளத்தில் விருதுவழங்கியுள்ளேன் வந்து பெற்றுக்கொள்ளவும்

http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

Kalaimahan said...

கலீல் அவ்ன் மெளலானா பற்றி விக்கிப்பீடியாவில் நான் எழுதிய தொகுப்பைப் பார்க்கவும். கீழுள்ளவற்றை வெட்டி ஒட்டிப் பார்க்கவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....