உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, July 22, 2009

துபாய் பதிவரின் தூறல்...

கீழைராஸா காலைல போன் செஞ்சாரு....பதிவை பாத்தீங்களா...?ன்னாரு...இன்னும் இல்லையே...ன்னே...பாருங்களேன்னாரு....பார்த்தேன்....படித்தேன்...வியந்தேன்....
வியக்கின்ற அளவுக்கு என்ன இருக்குன்னு நீங்க கேட்குறீங்க தானே.....
சுவிஸ்டார்ல பார்த்த கீழைராஸா ...அமீரகபதிவர்களின் மாநாட்டிற்கு போய்ட்டு வந்ததும்...சூப்பர் ஸ்டாரா ஆயிட்டாரேன்னு....வியப்பு.!
32 கேள்விகளுக்கு பதிவர்கள் எல்லாரும் பதிலைத் தரனும்னு...இதுவேண்டுகோளா தெரியலை...தராட்டி வெட்டிபுடுவேன்னு(கொலை வெறி அதிகமிருக்கு) சொல்றா மாதிரி இருந்ததினால.....
பயந்துதான் பதிலை சொல்லிருக்கேன்....அமீரகப்பதிவர்கள் அனைவருக்கும்னு சொன்னதுனால...கொஞ்சம் தைரியம் வந்திருச்சிங்க......அந்த தைரியம் தான் இந்த பதிலுங்க....


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
K.லியாக்கத்அலி...இது அப்பா அம்மா வைத்தது
நான் பிறந்தது கிளியனூர்....எழுத்தின் மேல் உள்ள காதலால்...எழுந்தது...இஸ்மத் என்ற புனைப்பெயர்...இந்த இரண்டும் இணைந்தது தான்....கிளியனூர் இஸ்மத்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
ஆண்கள் அழக்கூடாது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
அதுதான் என் தலை எழுத்து

4.பிடித்த மதிய உணவு என்ன?
மீன்குழம்பு

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்பு நட்பாக இருந்தால்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்க ரொம்ப பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
ஆர்வம்
கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
காதல்
மோதல்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் சுயத்தின் பக்கம்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையும் நீளமும்

12.என்ன பார்த்துஃஃகேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்அலுவலக ஜன்னலை தாண்டி தெரியும் கடல்கரை
உண்மைகளை சொல்லி மாட்டிக்காதடா...என் உள்மனம்


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மனதை கவரும் வானவில்

14.பிடித்த மணம் ?
குழந்தையின் மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அதை கீழை ராஸாகிட்டத்தான் கேட்கனும்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அமீரகப் பதிவர்கள்

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே ஒரு விளையாட்டு

18.கண்ணாடி அணிபவரா?
கண்ணாடியாக இருக்க ஆசை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
வாழ்க்கையை படிக்கும் படம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் வாடையும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மனிதர்களை

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இனிமேல் தான் யோசிக்கனும்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மலர்கள் மலரும் சத்தம்
மனித வெடிகுண்டுகளின் சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தூரம் அதிகமில்லை என் மனதில்


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அதை நீங்கதான் சொல்லனும்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தீவிரவாதம்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கவிதை எழுதுகிறான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல் - மலேசியா - மஸ்கடில் உள்ள சல்லல்லாஹ்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மனிதனாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சமையல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாடகமேடை

6 comments:

ஜோ/Joe said...

//துபாய் பதிவரின் தூறல்...//
கொஞ்சம் மலையாளம் பரிச்சயம் உள்ளவங்க படிச்சா படிச்சதும் தோணுறதே வேற ..சை ..நான் வர்றேன்பா!

கீழை ராஸா said...

//படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....
//

இனித்தது...

கிளியனூர் இஸ்மத் said...

ஜோ...நீர் சரியான ஜொல்லு பார்ட்டியப்பா...

ஜோ/Joe said...

//ஜோ...நீர் சரியான ஜொல்லு பார்ட்டியப்பா..//
கிழிஞ்சுது போ ..அது ஜொள்ளு இல்லீங்க ..மூக்க பொத்திக்கிற மேட்டர் ..ஆசிப் அண்ணாச்சி கிட்ட கேளுங்க.

ஜோ/Joe said...

//கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....
//

முதலில் படிக்கும் போது "கருமத்தை சொல்லலாம் தானே" -ன்னு படிச்சுட்டேன்.

SIMMA said...

அய்யா எங்களையெல்லாம் உங்க அமீரகப்பதிவர்கள் வட்டத்துக்குள் சேத்துக்க மாட்டீங்களா??? ஒங்கள மாதிரியெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது தான் அதுக்காக அப்பிடியே விட்ரதா...!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....