மாலை 6 மணிக்கு சொன்னாமாதிரி வந்தார் ரெஜாக்… வரும்போதே என் குட்டிஸ்களுக்கு போர் அடிக்காம இருக்க அவருடைய குட்டிஸையும் அழைத்து வந்தாரு .
அவங்களுக்கு ஜோடி சேர்ந்த சந்தோசத்துல காரிலேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… கேஎல் ரொம்பவும் நெரிசலான ஊருங்க …
இங்கு புதுசும் பழசும் கலந்திருக்கு கிட்டதட்ட எங்க துபாய்மாதிரி தான். (துபாயிலதான் பழைய வில்லாக்களை இடிக்கிறாங்களே) டிராபிக் அதிகம் பெரிய பெரிய உயரமான கட்டிடங்கள், மினாரா , டுவின் டவர், பள்ளிவாயில் ,கோயில், நட்சத்திர ஹோட்டல்கள், இப்படி நிறைய்ய … நாங்க முதல்ல மலேசியா மினரா போனோம்.
இந்த மினாரா மலேசியாஉடைய டெலிகம்முனிகேஷேன் டவர்னு சொல்கிறார்கள். இந்த மினரா 1996-ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 515 மீட்டர் அளவாகும். இது உலகில் நான்காவது உயரமான டவரில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் உள்ளே செல்வதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வப்படுகிறார்கள்.
நாங்கள் செல்லும்போது கூட்டமாகத்தான் இருந்தது. லிப்டில் ஏறும்போது அது மேலே உயரும்போது காதுகள் அடைக்கிறது…
450 மீட்டர் உயரத்தில் நின்றுக் கொண்டு முழு கேஎல் நகரத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் ரசித்து பார்ப்பதற்கு பைனாகுளோர் வைத்திருக்கிறார்கள் அதன் வழியே ஒவ்வொரு உயரமான கட்டிடங்களையும், மார்க்கெட்டையும் பார்த்து ரசிக்கலாம். நாங்கள் நின்ற 450 மீட்டர் உயரத்தையும் தாண்டி ஸ்டார் உணவகம் இருக்கிறது. அதில் சென்றுவர முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் .
நாங்கள் மாலை நேரம் என்பதால் சூரியனின் அஸ்தமனத்தை மினாராவிலிருந்து காண முடிந்தது. மினாரா டவரிலிருந்து டுவின் டவரைப் பார்பதற்கு மிக அழகாக இருக்கிறது… வரக்கூடியவர்கள் இந்த இடத்தில் நின்று தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காகவேண்டி பிரித்தியோகமாக புகைப்படக் கலைஞர்கள் தங்களின் உயர்ரக கேமராவுடன் காத்து நிற்கிறார்கள். நீண்ட நேரம் அங்கு நின்றோம்… குட்டிஸ்கள் இதைப்பார்த்து பிரமித்தார்கள். அங்கும் ஜாலியான விளையாட்டுதான்… சில மணிநேரங்களில் கீழே இறங்கினோம்.
கீழே ஒரு சின்ன மிருக காட்சிசாலை மாதிரி பாம்பு, குரங்கு ,என சில வகை மிருகங்கள் வைக்கப்பட்டிருந்தது… அதில் இரண்டு குரங்கு குட்டிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டதை எனது கைபேசியில் படம் பிடித்தேன். எனது சின்னமகள் மிக கவனமாக தூரத்தில் நின்று குரங்கு சண்டையை ரசித்தாள். காரணம் பினாங்கு அனுபவம்.அதை வேடிக்கை பார்த்து விட்டு கிளம்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது.
டுவின் டவரை பார்பதற்கு சென்றோம் காரை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. நாளை வரலாம் என்றார். இந்திய மார்க்கெட் பக்கம் சென்றோம். ஷாப்பிங் கொஞ்சம் செய்தோம். பின் அங்கிருந்து 10 கீமி தொலைவில் உள்ள எனது மனைவியின் உறவினர் ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் பெரிய உணவகத்தில் பணிப்புரிகிறார்.
பல வகையான மலாய் உணவுவகைகளை கொண்டு வந்து வைத்தார்.
ம்…நல்ல டேஸ்ட்டுங்க… நான் நல்லா கட்டினேன்…
மறுநாள் காலை ஜென்டிங் ஐலாண்ட் போகனும் சீக்கிரம் தூங்கலாம்னு ஹோட்டலுக்கு வரும் போது இரவு 10 மணிங்க…
காலையில 8 மணிக்கு கிளம்பி நம்ம டைவர் ரெஜாக் அண்ணன் அவங்க சாப்பாட்டு கடைக்கு அழைத்துப்போய் புரோட்டா மீன் குழம்பு வைத்து காலை டிபன் தந்தாரு …
காலையிலேயே மீனா…ன்னு கேட்டேன். கோழி இறைச்சி எதுவேணும்னாரு…
நான் காலையில சைவம்ங்க… மதியம் இரவு மட்டும் அசைவம்ங்கன்னே…
நம்ம கடையில சைவமும் அசைவமும் கலந்து தான் இருக்கும் தனித்தனியா இருக்காதுன்னாரு… பரவாயில்லைன்னு சாப்பிட்டேன்.
அவருடைய சாப்பாட்டு கடை ரோட்டின் ஒரத்தில் நம்மஊரு ஸ்டைலில்தான் இருந்துச்சு…நம்ம ஊரு கிராமத்து சாயாக்கடை மாதிரி … அவரு அவருடைய மனைவி அவருடைய குழந்தைகள்ன்னு குடும்பமே வேலைப்பார்க்கிறார்கள்.
அதிக படிப்பு இல்லாததால் பல வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றக்கூடிய சூழ்நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் அவர் பிறந்த ஊராக இருந்தாலும் அடிக்கடி சென்று வருவதற்குரிய சாத்தியம் இல்லை என்கிறார். கடைசியா ஊர்போய் வந்து பத்து ஆண்டுகளை கடந்துவிட்டது என்கிறார். ஆனால் அவருடைய குடும்பம் மலேசியாவில் இருப்பதால் அவருடைய குழந்தைகளுக்கு தாய் நாடு மலேசியாவாகவே இருக்கிறது.
அவர்கள் இந்தியாவை பார்ததே இல்லையாம். நீங்கள் இந்தியா போகவில்லை என்பதற்காக எங்கே தமிழ் தெரியாது என்று சொல்வீர்களோன்னு நினைச்சேன்…ஆனாலும் உங்க குழந்தைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்…
என் பிள்ளைகளுக்கு நான்கு மொழி தெரியும் என்று கூறினார். அரைடஜன் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாலும் அந்த குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. காலை டிபன் முடித்துவிட்டு அவருடைய இரண்டு குட்டிஸ்களையும் அழைத்துக் கொண்டு ஜென்டிங் ஐலேண்ட் புறப்பட்டோம். கேஎல் நகரத்தில் சரியான சூடு இருந்து. வெக்கை அதிகமாகவே இருந்தது காரின் ஒட்டத்தில் அது தனிந்தே இருந்தது…
இதோ ஜென்டிங் ஐலேண்ட் மலைமீது எங்கள் கார் ஏறிக் கொண்டிருக்கிறது…
நோன்பு திறக்கனும் ஒரு சின்ன கேப்புல இந்த பதிவு…மீண்டும் சந்திப்போம்…!

8 comments:
Engal naattukku vanthirukkeengga. Romba pidiththiukkirathaa solliyirukkeengga. Magilchi. Enjoy your trip. :)
அருமையா விவரிச்சி இருக்கீங்க
அந்த மினோரா போட்டோ படு தூள்
-----------------
நோன்பு திறக்கனும் ஒரு சின்ன கேப்புல இந்த பதிவு
அண்ணே என்னே உங்கள் பாசம் ப்லாக் மீது
ஜமால்...ண்ணே....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ப்ளாக் மீது பாசத்தை வைக்க வச்சிட்டாங்களே...!
உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
ஹாய் நண்பா,
இரண்டரை மணி நேரத்தில் மலேசியா போய் விட்டு வந்தேன். கதைய சூப்பரா நகர்த்தி இருக்கீங்க போரடிக்கவே இல்லீங்க..
ம்கும் நானும் பார்த்தேன்..ஆஹா இவரு பெருசா பாம்புடன் போஸ் குடுக்காரேன்னு
பின்புலம் தெரிஞ்சிடுச்சில்ல..
அது சரி உங்க வைப் வடிவுக்கரசி மாதிரி உங்களை பார்த்த போது அசடு வழிஞ்சிருப்பீங்க இல்லை…
தென்ன மரம் என்ன மரம்னு விடை தெரியும் வரை நானும் யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.
விடை கிடைச்சதும் தான் அப்பாடா ன்னு இருந்துச்சு
ரம்புட்டான் பற்றி சொல்லும் போது வாயூறுதுங்க..
மற்றது…
நோன்பு டயம்ல சாப்பாடு கருவாடு நெத்திலி னு எழுதிருக்கியேய்யா..
நல்லாருப்பியா நீ (சும்மா ஜோக்)
லங்காவி னு சொல்லும் போது தான் தோணுச்சு….நம்மட இலங்கை (லங்கா) வந்த அனுபவத்தை எல்லாம் எழுதியிருக்க மாட்டீங்களோன்னு( ம்ம இப்ப தான் யுத்தமே ஓஞ்சிருக்கு….இதுல வேற பீத்தல்)
எங்கள் கவிதை போல அந்த ப்ளேஸ் இருந்திச்சா…
அல்லது அந்த ப்ளேஸ் ஒரு கவிதை போல் இருந்திச்சா.(வைப் உடைய சந்தேகம் தான் எனக்கும் ஹீ ஹீ ஹீ)
எப்படியோ உங்க மச்சானின் செலவில மலேசியாவ பாத்துட்டிங்கல்ல ப்ரதர்…
நீங்க தான் சரியான ஆளு.
உங்க வைப்னா ரொம்ப சந்தோஷப் படுவாங்க….அவர் (அதான் உங்க மச்சான்) துபாய் வந்ததும் எப்படி சமாளிக்கப் போறீங்களோ.புhவம் நீங்க
ஐயோ….உங்க குட்டிஸ் குரங்கிடம் மாட்டுப்பட்டதை வாசிக:;கும் போது ரொம்ப அப்செட் ஆகிட்டேனுங்க…..
ஓகே ஓகே நீ நல்ல ஒழுக்கமானஆளு தான் . இல்லேன்னா மசாஜ் சென்டர் போயிருப்பேல்ல (சந்தோஷம் போகாததற்கு)
இன்னொரு விஷயம்…
தென்னமரத்தின் அர்த்தம் கேட்டு கோடிஸ்வரன் போட்டியில் கலந்துக்கிட்டீங்ளாம்னு காத்து வாக்கில் கேள்விங்க..
ரோம்ப சந்தோஷம்……
எப்படி சரி நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரே மூச்சில் வாசிச்சிட்டேன்ப்பா.
ரெஜாக் அண்ணனைப்பற்றி சொல்லும் போது கவலையாகிட்டு..காரணம் நம்ம டூர் முடியப்போகுதேன்னு ஒரு …பீலிங்..
ஆல் தி பெஸ்ட்
மேலே சொன்ன கருத்து கவிஞை ரிஸ்னா இலங்கை அவர்களின் கடிதம்
//ஜென்டிங்//
இது மலாய்மொழிச் சொல் (Genting).
`கெந்திங்' என்று எழுதவேண்டும்.
கட்டுரை நன்று.
அ.நம்பி அவர்களே...! திருத்தியதற்கு நன்றி...இனி அப்படியே எழுதுகிறேன்..
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....