உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 1, 2009

பிரபலங்களும் பிரியாணியும்...

சில தினங்களுக்கு முன் வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி...? என்ற நிகழ்ச்சியை கீழைராஸா ஏற்பாடு செய்தார்...எங்கு வைத்து செய்யலாம் என்ற கேள்வி வந்தது...
நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்...என் வீட்டிலேயே வைக்கலாம்னு உற்சாகத்தில் சொல்லி தொலைக்க... நிகழ்ச்சி முடிவானது....

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணின்னு முடிவு செய்யப்பட்டது...வெள்ளிக்கிழமைதான் துபாய் வாழ் எங்களுக்கு விடுமுறை....தூங்கனும்னு நினைக்கிறதே வெள்ளிதான்...இந்த வெள்ளிக்கு ஆப்புன்னு முடிவாச்சு....சரி ஒரு வெள்ளிக்கிழமை தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்தேன்...

வெள்ளிக்கிழமையும் வந்துச்சு...ஒரு நாளுபேரு வருந்தாங்க.கீழைராஸா ,அப்துல் வாஹித் ,திருச்சி சையது ,சந்திரசேகர்...சிரிச்சு சிரிச்சு பேசினாங்க...அட நல்ல ஆளாக இருக்கிறாங்களேன்னு...நானும் அவங்களோடு சேர்ந்து சிரிக்க ஒரே சிரிப்பு மழையா இருந்துச்சு....!




வரும்போதே கீழை ராஸா அவருடைய லெப்டாப்பை எடுத்து வந்தாரு...அதை வச்சுதான் பதிவைப்பற்றிய பாடம் நடத்தினாரு....எனக்கு ஏற்கனவே பதிவு இருந்தாலும் சரி நமக்கு தெரியாத விசயங்கள் ஏதாவது இருக்கலாம் கத்துக்கலாம்னு ஆர்வத்தோட இருந்தேன்...
இப்படி அப்படின்னு எல்லாத்தையும் தெளிவாதான் சொன்னாரு....எல்லாம் முடிஞ்சு அவர் தயாரித்த குரும்படம் ஒன்னையும் போட்டு காண்பிச்சாரு...அட ஆளு சரியான கில்லாடியா இருப்பார்னு தோனுச்சு...

தொழுகை நேரம் நெருங்கியதுனால நாங்க எல்லோரும் தொழுது விட்டு வந்தோமுங்க.... ஹோட்டலுக்கு போய் மந்தி பிரியாணி சாப்பிடலாம்னு நான் தான் ஐடியா கொடுத்தேன்...கொடுத்தவரைக்கும் சரிதாங்க...

சாப்பிடும் போது எனக்கு முன்னால கீழைராஸா உட்காந்திருந்தாரு...சாப்பிட்டுகிட்டே சொன்னாரு...பிரியாணி சூப்பரா இருக்குன்னு....எனக்கு அப்படியே சில்லுனு இருந்துச்சு... நாம ரெக்கமடேசன் பண்ணின சாப்பாட்டை நல்லாருக்குன்னு சொல்லிட்டாரேன்னு குருட்டு உற்சாகத்துல நான் சூப்பரா பிரியாணி போடுவேன்னு சொல்லி வெச்சேன்...

அட பாராட்டுவாருன்னு பார்த்தா ... அப்படியா அப்ப அடுத்தவாரம் பிரியாணி ஆக்கிடுங்க நம்ம இந்த நாளுபேரும் சாப்பிடலாம்னு சொன்னாரு....! அப்பவே எனக்கு பகீர்ன்னது...ஐய்ஐயோ...வாயக்குடுத்து வாங்கிக்கிட்டமடான்னு....சரி நாலு பேர்தானேன்னு சமாளிச்சுடலாம்னு நானும் ரெடியாவுனேன்....!

ரெண்டு நாள் கழிச்சு கீழை ராஸா போன்போட்டாரு....என்ன பிரியாணி வேளையெல்லாம் எப்படி இருக்குன்னாரு...அதுக்கென்ன வியாழன்கிழமை எல்லா சாமான்களையும் வாங்கி ரெடிபண்ணிடுவேன்னே...



நாம நாளுபேரு மட்டுமல்ல இன்னும் ரெண்டு நண்பர்கள் வராங்கன்னாரு....
பரவாயில்ல ரெண்டுபேரு தானே..சமாளிக்கலாம்னு ஆறா கணக்கு பண்ணினேன்....
இதுல ஏன் பங்குக்கு நண்பர் நாசரை கூப்பிட்டேன்

மறு நாளு வாஹித் இருக்காறே....அவருதாங்க இந்த பட்டிமன்றத்துல யெல்லாம் குழைப்பாறே....அவரு போன் போட்டு
என்ன இஸ்மத் பாய் பிரியாணி வேளைய ஆரம்பிச்சுட்டீங்களான்னு கேட்டாரு....
அட என்னா பாசமா கேக்குறறேன்னு வியாழன்கிழமை தான் சாமான்கள் வாங்கனும்னு சொன்னேன்....
அப்படியா நல்லவேளை சாமான்கள் வாங்கிட்டீங்களோன்னு நனெச்சேன்னாரு
ஏன்னே...?
எனக்கு வேண்டியபட்டவரு ரெண்டுபேரு வறாங்க அதான் உங்ககிட்ட சொல்லிக்கிலாம்னு சரி சரி நீங்க வேலைய பாருங்கன்னாரு....
கணக்கு பார்த்தா எட்டுபேரு...?கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சமாளிப்போம்னு தைரியம் இருந்துச்சு....

மாலைல திருச்சி சையது போன் பண்ணி பாய் நீங்க ஒன்டியா இருந்து கஸ்டப்படுவீங்களே நான் கூடமாட ஒத்தாசைக்கு வரவான்னாரு...? பரவாயில்லை நம்மமேல எவ்வளவு பாசம்ன்னு நினைச்சு...எதுக்கு உங்களுக்கு கஸ்டம் இவ்ளோ பண்றேன்....சின்னசின்ன வேலைகளையும் நானே பண்ணிக்கிரேனேன்னு சொன்னேன்...

அப்புறம் பாய் நம்ம வானலை வளர்த்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தனுக்கு
தெரிஞ்சா வருத்தப்பட்டுக்குவாறேன்னு அவரையும் பிரியாணிக்கு கூப்பிட்டிருக்கேன்னாரு...!அவரு மட்டும் தானான்னே...? அவரைமட்டும் கூப்பிட்டா நல்லா இருக்காதேன்னு நம்ம பழனி அவரையும் கூட அழைச்சிருக்கேன்னு சொல்லிட்டு சாரி பாய்னு போனை வச்சுட்டாரு....

எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுடுச்சு....இன்னும் ஒருத்தருதான் பாக்கி நாளாவது சந்திரசேகர்....அவரு போனவாரமே நான்வரமாட்டேன் லீவுல ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு...இல்லன்னா அவருரெண்டு பேர அழைச்சுட்டு வரேன்னு போன் பண்ணிருப்பாரு....தப்பிச்சோம் இதுவே பத்து பேராச்சு....

இதை நெனச்சு பயமே வந்துடுச்சு....ஒருவழியா எனக்கு நானே ஆறுதல்படித்துதிகிட்டு சமாளிக்கலாம்னு தைரியமா இருந்தேன்....

இன்று வியாழன் டூட்டி முடிச்சுட்டு பிரியாணிக்குள்ள வேலைய ஆரம்பிக்க ரெடியானேன்....காலிங் பெல் சப்தம் கேட்க கதவை திறந்தேன்....
பெரிய உருவத்தோடு கீழைராஸாவும் திருச்சி சையதும் நின்னாங்க....வாங்க வாங்க...ன்னு உள்ளே அழைத்தேன்....

உங்களுக்கு உதவிசெய்யலாம்னு தான் வந்தோம்னு கீழைராஸா சொன்னாரு....
என்னங்க உதவி பத்துபேருதானே சமாளிச்சுடுவேன்னு சொன்னேன்....
அந்த நேரம் பார்த்து கீழைராஸாக்கு போன் வந்துச்சு.....பேசினாரு பேசிகிட்டே வாச பக்கம் போனாரு....
நான் எதையோ எடுக்க வாசப்பக்கம் போக எதேச்சயா அவரு பேசுறத கேக்கக் கூடிய சந்தர்ப்பம் அமைஞ்சுடுச்சி....

சர்புதீன் பாய் ஒரு நல்ல பார்ட்டி சிக்கிருக்கு நல்லா பிரியாணி போடுவானாம்....நாளைக்கி பிரியாணி போட்டு பார்க்குக்கு எடுத்து போறோம்னு சொன்னாரு....
நானும் வரவான்னு அவருகேட்டிருப்பாரு போல...
உங்கள உட்டுட்டு போனா நல்லாயிருக்காது நீங்க அவசியம் வாங்கன்னாரு....
திரும்பவும் அவரு ஏதோ கேட்க.... பசங்களையா...? எத்தனை பேரு...?
எது வேனு நிறைய்யவா....அவ்ளோபேறா...?ன்னு கீழைராஸா வாயை பிளக்க....இதைக் கேட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு....ஒருத்தவனை வச்சு இவ்வளவு பேறா சமைக்கிறது...!
எக்குதப்ப இந்த ஆளுங்க கையில மாட்டிக்கினோம்டா...ன்னு சுதாரிச்சேன்....

திரும்பவும் பேசிக்கிட்டு இருந்தாரு .... இல்லபாய் இந்த வாரம் நீங்க மட்டும் வாங்க அடுத்தவாரம் உங்க பசங்ககளை யெல்லாரையும் அழைச்சுகிட்டு வரலாம்னு....போனை கட்பண்ணினாரு....
அடப்பாவிங்களா...இந்த வாரத்துக்குள்ள பிரியாணியே இன்னும் ரெடியாகல....அடுத்தவாரத்துக்கு இப்பவே பிளான் பண்றான்களேன்னு....இதை இப்படியே விட்டா சரியாவராது....முடிவுகட்டனும்னு நினைச்சேன்....

சாதரனமா வெள்ளிக்கிழமையில 10 மணிக்கும் 11 மணிக்கும் எழுந்திருக்கக்கூடிய நான் ....இந்த வெள்ளிக்கிழமை 4 மணிக்கே எழுந்திருச்சு பிரியாணி வேலைய ஆரம்பிச்சு 8 மணிக்கு தான் முடிச்சேன்....
வேலையெல்லாம் முடிச்சுட்டு கீழைராஸாவுக்கு போன் போட்டா....அந்தாளு அப்பதான் எழுந்திருக்கிறாராம்....என்னப்பா 8 மணிக் கெல்லாம் கிளம்பிடனும்னு சொன்னீகளே.... இன்னும் தூங்குறீங்களேன்னேன்...
வெள்ளிக்கிழமை பாய்...ன்னாரு...எது வெள்ளிக்கிழமையா...?
அப்ப எனக்கு என்ன கிழமையா..?.அடப்பாவிங்களா எல்லாருமா சேர்ந்து என் தூக்கத்தை கெடுத்திட்டீங்களடான்னு...ஒரு வழியா கிளம்பி பார்க் போய் சாப்பிட ஆரம்பிச்சாங்க...

ஒரு வாய் பிரியாணிய வாயில வச்சவுடனே திருச்சி சையது சொன்னாரு .....பாய் இது மாதிரி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லன்னு சொல்ல....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி மாட்டி விடுறாங்களே...
ஒவ்வொரு ஆளா அதையே ரிபிட்டு பாட....சட்டி காலியாச்சு...மனசுக்கு கொஞ்சம் திருப்பதியா இருந்தாலும்.....


கீழைராஸா எல்லாத்தையும் போட்டா எடுத்தாரு....சரி ஒரு ஞாபகத்துக்காக எடுக்குறார்னு நினைச்சேன்....
வானலை நிகழ்ச்சிக்கு போனப்ப பார்த்தா பிரியாணி போட்டோ எல்லார்கையிலும் இருந்துச்சு...என்னப் பார்த்ததும் பாய் நம்மள மறந்திட்டீங்களேன்னு குசலம் விசாரிச்சாங்க....

நாளுபேருன்னு சொல்லி இப்ப 400 பேருக்கு எத்திவச்சிட்டாங்களேன்னு .... நிகழ்ச்சி முடிந்ததும் வேகமா கிளம்பினேன்...

இஸ்மத் பாய்ன்னு ஒரு குரல்....
திரும்பி பார்த்தா சிம்மபாரதி....

வருகிற வெள்ளிக்கிழமை 4 பேருமட்டும் பிரியாணி போடுங்களேன்னு... சொன்னாரு
அவ்வளவு தான்....தலைதெறிக்க...திரும்பி கூட பார்க்காம ஒடிட்டேங்கோ....

இன்னும் முச்சு வாங்குதய்யா....முச்சுவாங்குது....!

(வடிவேல் பாணியில் ஒரு முயற்சி....சம்பவம் உண்மை)

19 comments:

Suresh said...

ha haa super

கீழை ராஸா said...

இப்படியா போட்டு தாக்குறது...கலக்கிட்டீங்க தல...இதைக் கொண்டாட அடுத்த வாரம் ஒரு பிரியாணி ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான்...

Anonymous said...

மந்தி பிரியாணியா ‍ மந்தின்னா குரங்காச்சே, காக்கா பிரியாணிமாதிரியா :)

மலர்வனம் said...

பிரியாணி புகழ் இஸ்மத் காக்கா அவர்களுக்கு…


ஊர்ல பெண்டாட்டி கையில் பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாகி நாக்கு செத்துப்போன எங்களுக்கு பாசத்தோடு ருசியான பிரியாணி செஞ்சு தந்த நீங்க நல்லா இருக்கணும்…


இத்தனைநாள் நல்ல நல்ல கவிதைகள் தந்து மனசை நிறைவுபடுத்தினீங்க… அன்னிக்கு சுவையான பிரியாணி செஞ்சு கொடுத்து வயிற்றை திருப்திப்படுத்திட்டீங்க…



சிநேகத்துடன்…

திருச்சி சையது


குறிப்பு :

அடுத்த பிரியாணி சாப்பிட சிம்மபாரதி வர்றப்ப நாங்க வர்லலைன்ன உங்க மனசுக்கு கஸ்டமாக இருக்கும்… நானும் வர்றேன். (வழக்கம்போல்கூட தம்பி கீழை ராஸாவையும், வாகீதையும், காவிரிமைந்தனையும் அழைச்சுட்டு வர்றேன்…) எங்கே ஓடுறீங்க பாய்…?

கீழை ராஸா said...

//ஊர்ல பெண்டாட்டி கையில் பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாகி நாக்கு செத்துப்போன எங்களுக்கு பாசத்தோடு ருசியான பிரியாணி செஞ்சு தந்த நீங்க நல்லா இருக்கணும்… //

சும்ம கதை விடாதீங்க சையது...உங்க வீட்டுலே எப்பவும் உங்க சமையல் தான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...

Leo Suresh said...

இஸ்மத் பாய், முன்னாடியே சொல்லி இருந்தா குடும்பத்தோட வந்து இருப்பேன் இல்ல
லியோ சுரேஷ்

துபாய் ராஜா said...

நாங்க ஒரு 40 பேரு இருக்கோம். எந்த வெள்ளிக்கிழமை வசதின்னு சொல்லுங்க பாய். :))

நல்லதொரு நண்பர்கள் தின பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Unknown said...

\ஒரு வாய் பிரியாணிய வாயில வச்சவுடனே திருச்சி சையது சொன்னாரு .....பாய் இது மாதிரி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லன்னு சொல்ல./

திருச்சி சையது கிட்ட சொல்லுங்க " திருச்சி பீமநகர் கே எம் எஸ். முஸ்தபா " பிரியாணி ய சாப்பிட்டு பார்க்க சொல்லி சொல்லுங்க. நானும் பல நாட்டுல பிரியாணி சாப்பிட்டு இருக்கேன் அவர் செய்ற பிரியாணி ருசி எங்கயுமே கிடைகல...

மலர்வனம் said...

திருச்சி முகம்மது அவர்களே!


உங்களுக்கு சேதி தெரியுமா…? திருச்சி பீமநகர் கே.எம்.எஸ். முஸ்தபாவும் நம்ம இஸ்மத்பாயும் ஒண்ணா படிச்சவங்க… அவருக்கு பிரியாணி செய்ய கத்துக் கொடுத்ததே நம்ம இஸ்மத் காக்காதான்!


சிநேகத்துடன்

திருச்சி சையது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்ப நீங்க ரொம்ப நல்லவாங்கன்னு சொல்லுங்க...,

Anonymous said...

//ஒரு வாய் பிரியாணிய வாயில வச்சவுடனே திருச்சி சையது சொன்னாரு .....பாய் இது மாதிரி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லன்னு சொல்ல//

உண்மையாத்தான் இருக்கும். Photo பார்த்தாலே நாக்குலே ஊறுதே!

கீழை ராஸா said...

அன்பிற்குரிய கிளியனூர் பிரியாணி பாய் அவர்களுக்கு
உங்க பிரியாணி ருசியில் சிக்கி சின்னாபின்னமான ஒரு பிரியாணிப்பிரியனின் அன்பு மடல்...(இடையிலே புதினா,கொத்த மல்லி போட்டுக்குங்க...)

உங்க பிரியாணி ருசியில்லை..
எத்தனை பேர் வந்தாலும் அத்தனைப்
பேருக்கும் சமைத்த உங்க அன்பின் முன்
உங்க பிரியாணி ருசியில்லை..

உங்க பிரியாணி ருசியில்லை..
பிரியமுள்ள உங்க பிரியாணிக்கு முன்
உங்க பிரியாணி ருசியில்லை..

இப்படி எழுதிக்கிட்டே போகாலாம் ஆனால் எவ்வளவு
சொன்னாலும் கடைசியில் அது பிரியாணியிலேயே வந்து நிற்கும்...இனி அன்பைத் தருவதானால்...அதன் அடையாளமாக பிரியாணியுடன் தாருங்கள்...பிரியம் தருவதானால் பிரியாணியுடன் தாருங்கள் என்ற என் வேண்டு கோளை முன் வைத்து முடித்துக் கொள்கிறேன்.

பின் குறிப்பு:

நண்பர்கள் தினவிழாவில் தமிழ்மணத்தை...பிரியாணி மணதால் நிரப்பிய உங்கள் அன்பு மனதிற்கு நன்றி...

கிளியனூர் இஸ்மத் said...

ஐயா...அண்ணா....இப்படி என்ன பெரிய பண்டாரியாக்கி ....உலக முழுவதிலிருந்தும் வந்து பிரியாணி கேக்கிறாங்களே....என்ன செய்வேன் ...என்ன செய்வேன்....நாலு பேருக்கு பிரியாணி ஆக்குன்னு சொல்லி இன்னைக்கு நாலாயிரம் பேருக்கு தெரியபடுத்திட்டீங்களய்யா....போதும்டா சாமி.....என்ன ரொம்ப நல்லவன்னு வேற சொல்லிபுட்டாங்களே.....


1.சுரேஷ்
2.கீழைராஸா
3.சின்ன அம்மிணி
4.திருச்சிசையது
5.லியோ சுரேஷ்
6.துபாய் ராஜா
7.முஹம்மது
8.சுரேஷ் (பழனி)
9.சிர்தி சைதாசன்

நண்பர்களே...!இந்த இனிய நண்பர்தினத்தில் பின்னூட்டமிட்டு உங்கள் அன்பை வெளிப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்....இதே வேகத்தை மனம் கவர்ந்த மலேசியா தொடருக்கும் காட்டுங்களய்யா.....!

கீழை ராஸா said...

டும் ...டும்....டும்

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....

இந்த படைப்பை மாபெரும் வெற்றிப்படைப்பாக மாற்றித்தந்த

1.சுரேஷ்
2.கீழைராஸா
3.சின்ன அம்மிணி
4.திருச்சிசையது
5.லியோ சுரேஷ்
6.துபாய் ராஜா
7.முஹம்மது
8.சுரேஷ் (பழனி)
9.சிர்தி சைதாசன்

போன்ற நண்பர்கள் உட்பட 1500 அனானிகளுக்கு இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரியாணி புகழ் இஸ்மத் பாய் துபாய் கிரீக் பார்க்கில் "பொரிச்ச கறியுடன் கூடிய பிரியாணி...பொட்டணம் வழங்குவார்...என்பதால் இதில் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...டும் டும் டும்

ஆனந்தன் said...

இஸ்மத் பாய், சூப்பரான பிரியாணி படத்த போட்டு வயத்தெரிச்சல கிளப்பாதிங்க.ஆமாம்,அவங்க எல்லாம் நல்லா இருக்குனு சொன்ன உங்க பிரியாணிய எப்படி செய்வதுனு ஒரு பதிவு போட்டா எங்களுக்கெல்லாம் உதவியா இருக்குமே? செய்வீங்களா????????????????????????

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கீட்டீங்க போங்க :)

அப்போ நம்ம அடுத்த பதிவர் சந்திப்புல பெரிய கூட்டம் இருக்கப் போகுது ;)

கிளியனூர் இஸ்மத் said...

//1500 அனானிகளுக்கு இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரியாணி புகழ் இஸ்மத் பாய் துபாய் கிரீக் பார்க்கில் "பொரிச்ச கறியுடன் கூடிய பிரியாணி...பொட்டணம் வழங்குவார்...என்பதால் இதில் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...டும் டும் டும்///

வேணா...வேணா...கீழைராஸா....நான் அழுதுடுவேன்....ஒன் இம்சை தாங்கலையே....ஆன்மீகவாதியா இருந்த என்னை இப்படி பிரியாணிவாதியா மாத்திட்டியேய்ய....இப்ப சந்தோசம்தானய்யா...?


//உங்க பிரியாணிய எப்படி செய்வதுனு ஒரு பதிவு போட்டா எங்களுக்கெல்லாம் உதவியா இருக்குமே? செய்வீங்களா????????????????????????///

ஐயா...ஆனந்தா...எனக்கு தெரிஞ்ச ஓரே கலை பிரியாணிதான்...அந்த ரகசியத்தையும் கேட்டா...எப்படிய்யா....? இதைவச்சிதாய்யா நாளுபேரு என்ன சுத்திவரான்....அது உமக்கு புடிக்கலையைய்யா...? படத்தைப் பார்த்து நீரும் ஏமாறனுமா...?


//அப்போ நம்ம அடுத்த பதிவர் சந்திப்புல பெரிய கூட்டம் இருக்கப் போகுது //

ஐயா....செந்தில்வேலா....சொல்றதபார்த்தா வருகிற வாரத்திலேயே பதிவர் கூட்டத்தை கூட்டிடுவீங்க போலிருக்கே.....!

லதானந்த் said...

தமிழ்நாட்டுகு வர்ரப்ப அவசியம் சொல்லுங்க. ஒரு 10 பேருக்கு பிரியாணி வேணுமாம்.

கிளியனூர் இஸ்மத் said...

//தமிழ்நாட்டுகு வர்ரப்ப அவசியம் சொல்லுங்க. ஒரு 10 பேருக்கு பிரியாணி வேணுமாம்.//

லதானந்த்...அண்ணே....! ரகசியமா ஒரு செய்தி...காத கிட்ட கொடுங்க...!
மானு...அதாசாமி....மான் கறி கெடச்சா சொல்லுங்க உங்களுக்கு மட்டும் பிரியாணி போட்டு தாரேன்...வெளியில யாருட்டேயும் சொல்லப்படாது...நீங்க காட்டிலாக்கா அதிகாரிதானே...!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....