உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, September 5, 2009

டிப்டாப்பும்...லவ்டாப்பும் (சிறுகதை)


அழைப்பு மணி சினுங்கியது…

அடுக்கலையில் வேலையாயிருந்த சித்ரா தன் ஈரக்கைகளை துணியில் துடைத்துக் கொண்டு …சுவற்றுக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி 5.48

யாராக இருக்கும்…? அவர் ஆறுமணிக்கு தானே வருவார்…
தனக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்…

குமார் நின்றுக் கொண்டிருந்தான்…
குமாரைக் கண்டதும் சித்ராவிற்கு முகம் மலர்ந்தது…

“வாங்கண்ணா …வாங்க…எங்களையெல்லாம் மறந்திட்டிங்களா…?
அண்ணிவரலைய்யா”…?கேட்டாள்.

“இல்லம்மா… நா ஒரு வேலைய்யா வந்தேன்.அந்த வேலையோடு உங்களையும் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்…எங்கே ரவி …?
இன்னும் அலுவலகத்திலிருந்து வரலைய்யா”…?-குமார் கேட்டான்.

“வர்ர நேரம்தான்னே…நீங்க உள்ள வாங்க”…-அழைத்தாள் சித்ரா

வரவேற்ப்பறையில் அமர்ந்தான் குமார்…

“அண்ணாக்கு காபி தானே”…?-சித்ரா கேட்டாள்

“ரவி வரட்டுமே” …-என்றான் குமார்

“ஏன் ரவி வராமே காபி குடிக்க மாட்டிங்களோ”…கேட்டுக் கொண்டே ரவி நுழைந்தான்…

“வாடா ரவி எப்படிஇருக்கே …உங்களை யெல்லாம் பார்த்து நாளாச்சி” …-என்று குமார் முடிப்பதற்குள்…

“பரவாயில்லையே… எங்கே..! கல்லூரியோடு நட்பு முடிந்திடுமோன்னு நினைச்சேன்…ஞாபகம் வச்சிருக்க”…பேசிக்கொண்டே தனது சட்டையின் பித்தான்களை ரவி கழற்றினான்…

சித்ரா அடுக்கலைக்குள் காபி போடச் சென்றாள்…

ரவி தனது அலுவலக உடைகளை கழற்றி விட்டு கைலியும் பனியனுடன்
கையில் பல் பிரஷ்சுடன் கழிவரைக்குச் சென்று வந்தான்.

“என்னடா ரவி இப்பபோய் பல் துலக்கிட்டு வர்ரே”…?-கேட்டான் குமார்

பல் தெரியாமல் சிரித்து விட்டு தனது அறைக்குச் சென்று உடை மாற்றி வந்தான் ரவி…

குமார் ரவியை உற்றுப்பார்த்;தான்…

“ஏண்டா …இப்படி பாக்குறே”…?-ரவி கேட்டான்.

“இல்ல நீயும் அண்ணியும் எங்கயாவது வெளியில போறீங்களா”…?-குமார் கேட்டான்…

“ஏன்கேக்குற”…?-ரவிக்கேட்டான்

“இல்ல நீயும் அண்ணியும் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு வெளியில கிளம்புர போலத் தெரியுது …இந்த நேரத்துல நான் தொந்தரவு கொடுத்திட்டேனோன்னு தோனுது”…-குமார் சொன்னான்..

ரவி சிரித்துக் கொண்டு … “ஏன் வெளியில போனாத்தான் டிப்டாப்பா ஆடை அணியனும்மா…?வீட்டிலிருந்தா அலங்காரமா இருக்கக் கூடாதா”…?-கேட்டான் ரவி…

குமார் வியப்போடு பார்த்தான்.. தான் தவறாகக் கேட்டு விட்டோமோ என்ற உணர்வோடு… “அது இல்ல ரவி…இப்பதான் ஆபீஸ் விட்டு வந்தே...! …வந்த வேகத்துக்கு மறுபடியும் ஆபீஸ் கிளம்புறா மாதிரி டிரஸ் பண்ணியிருக்கிறதனால தான் கேட்டேன்…நா ஏதும் தப்பா கேட்டுவிட்டேனா”…?-குமார் கேட்டுக் கொண்டான்…

“இப்படி டிரஸ் பண்றது என் மனைவிக்கும் எனக்கும் பிடிக்கும் .அலுவலகம் போறப்ப மட்டும் யாருக்காகவோ அலங்கரித்துக் கொண்டு
வீட்டுக்கு வந்ததும் அலங்கோலமா இருந்தா மனைவியோட மனசு எப்படி இருக்கும்”;…ரவி பேசிக்கொண்டிருந்தான் சித்ரா காபி தந்தாள்..

“தன் கணவனை அழகா பார்க்க எந்த மனைவிக்கு தான்
பிடிக்காது…அவங்க மனசுக்குள்ள நாம தானே கதாநாயகன்…அவங்க ஆசைப்படுற அத்தனை ஹீரோவையும் நம்ம உருவத்துல தான் பார்க்கனும்…தன் மனைவி தன் கண்ணுக்கு அழகானவளாக குணமானவளாக மணமானவளாக இருக்குனும்னு எதிர்பார்க்கிறோமில்ல …அது மாதிரி
அவங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் தானே”…?-காபி குடித்துக் கொண்டான் ரவி…

“அது மட்டுமல்ல ஒரு நாளைக்கி மூனு முறை பல் துலக்குறேன்…நான் பேசும் போது என் வாயுடைய துர் நாற்றம் என் மனைவிக்கு முகம் சுளிக்க வைக்கக் கூடாது…இது மாதிரி சின்ன சின்ன விசயங்கல்ல கவனமா இருந்தா இல்லறம் நல்லறமா இருக்கும்”;….-ரவி கூறியதை ஆழமான சிந்தனையோடு கேட்டான்….தன்னைக் கண்டு அவ்வபோது தன் மனைவி சிடுசிடுப்பதின் காரணம் விளங்கியவனாய் புறப்பட்டான் குமார்….!

9 comments:

Jazeela said...

பெரிய தத்துவ கதையால இருக்கு :-).
அப்ப குமார் வாய் நாறும் அதான் மனைவியின் சிடுசிடுப்புக்கு காரணம்? :-)). பாவம்பா பெண்கள்.

சந்தனமுல்லை said...

நல்ல முயற்சி! குணம், மணமெல்லாம் டீக்கு மட்டும்தான் நினைச்சேன்! :-)

Unknown said...

சின்ன கதையில் பெரிய கருத்து சொல்லியிருக்கிங்க அருமை. கணவர் வீட்டுக்கு வரும் பொழுது மனைவி அழகாக டிரெஸ் அணிந்திருக்கனும் என்று கணவர் ஆசை படுவார்.. ஆனால் உங்கள் சிந்தனை விதியாசமாக இருக்கு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//இப்படி டிரஸ் பண்றது என் மனைவிக்கும் எனக்கும் பிடிக்கும் .அலுவலகம் போறப்ப மட்டும் யாருக்காகவோ அலங்கரித்துக் கொண்டு
வீட்டுக்கு வந்ததும் அலங்கோலமா இருந்தா மனைவியோட மனசு எப்படி இருக்கும்//

இஸ்மத் அண்ணே, என் மனைவி கூட என்னிடம் இது போல கேட்டதுண்டு. மிக அழகான சிறுகதை. ரசித்தேன் :)

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;))

நட்புடன் ஜமால் said...

நல்ல மெஸேஜ் அண்ணா ...

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,அருமை.

நல்ல கருத்துள்ள கதை.

இதுபோல் நிறைய எழுதுங்கள் அண்ணாச்சி.

வாழ்த்துக்கள்.

சிம்மபாரதி said...

நான் கல்யாணத்துக்கு அப்புறம் நல்ல விமர்சனம் சொல்றேன் இதுக்கு

கிளியனூர் இஸ்மத் said...

வந்தசன எல்லாருக்கும் வந்தனங்கோ.......

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....