அரசியல்வாதிகளின் சொத்துக்கு தான்பினாமி . பெரிய பணக்காரர்களின் சொத்துக்கும் பினாமி இருக்கிறார்கள் ஆனால் இணையதள வலைப்பூக்குமா பினாமி என்று ஆச்சிரியப்பட வேண்டாம்.
எழுத்துளலகில் தாள்களில் எழுதியக் காலம் மாறி இப்போது இணையத்தில் கணினிமூலம் எழுதுவதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அலுவலகங்களில் பத்திரிக்கைள் வார மாத இதழ்கள் வாசித்தகாலம் போய் இப்பொழுது இணையத்தில் அனைத்தையும் பார்க்க படிக்க ஏதுவாக இருப்பதால் தங்களின் படைப்புகளை பலரும் இணையத்தில் பதிவிட பரவசம் கொள்கிறார்கள்.
பத்திரிக்கைகளுக்கு தங்களின் படைப்புகளை அனுப்பி அது பிரசுரமாகி விமர்சனங்கள் வருவதற்குள் ஒரு பெண் கற்பம்தரித்து குழந்தைப் பெற்றுவிடலாம். ஆனால் இணையத்தில் பதிவுப்போடப்பட்ட அடுத்தவினாடியே விமர்சனங்களை காணக்கூடிய வாய்ப்பு இருப்பதால் எழுத்தார்வமிக்க பலர் இணையத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். 3000 பேர்களுக்கு அதிகமாக இணையத்தில் வலைப்பூவில் பதிவிடுவதாக கூறப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
சிலருக்கு கணினி வசதியிருக்கிறது எப்படி வலைப்பூவை ஆரம்பிப்பது என்று அதைப்பற்றி தெரிந்து எழுதக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சிலருக்கு கணினி இருந்தும் வலைப்பூ ஆரம்பிப்பது அவர்களுக்கு கடினமாத்தெரிவதால் தங்களின் நண்பர்கள் மூலம் தங்களின் படைப்புகளை வலைப்பூவில் பதிவிடுகிறார்கள்.
இது ஒரு உதவியாக அந்த நண்பரகள் அவர்களுக்கு செய்வது உண்டு. சிலநேரங்களில் அவர்களுக்கு எரிச்சலாகக்கூட இருக்கலாம். தங்களுடைய படைப்புகளை பதிவிடும் தருணத்தில் இதுபோன்ற பினாமிகளின் தொந்தரவால் தங்களின் பணிகள் பாதிக்கப்படுவதும் தங்களுடைய நேரங்களை அவர்களுக்காக சிலவிடப்படுவதும் அவர்களுக்கு சிரமங்களைத் தரலாம்.
புதிதாக வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வப்படக் கூடியவர்கள் தங்களின் நண்பர்களிடம் எப்படி பதிவிடுவது என்று விளக்கமாக கேட்டு அதை எழுதி வைத்துக் கொண்டு தாங்களே பதிவிட முன்வரவேண்டும். அதனால் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் நண்பர்களின் தயவை நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் நினைத்தபடி உங்களின் வலைப்பூவை அமைத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் கடினம்போன்று தெரிந்தாலும் நீங்கள் பழக பழக அது மிக எளிமையாகத் தெரியும்.
உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை எழுதிவைத்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள் கண்டிப்பாக சொல்லித்தருவார்கள்.
உங்கள் நண்பர்கள் சொல்லுவதை அப்படியே எழுதிக் கொள்ளுங்கள். அடிக்கடி ஒரே விசயத்தை பலமுறைக் கேட்காதீர்கள் உங்கள் நண்பர்கள் எரிச்சலடைவார்கள்.
இதை நான் சொல்வதினால் ஏதோ நாலுபேருக்கு நான் பினாமி என்று நினைத்திடவேண்டாம்… அப்படி ஆர்வப்படும் சில நண்பர்களுக்கு பினாமியா இருந்து சொல்லிக் கொடுத்துவிட்டு வருவதில் நான் மகிழ்ச்சிக்கொள்கிறேன்.
ஆனால் எப்போதுமே பினாமியாக இருப்பது கடினம்.
அதனால் கற்றுக்கொள்ளுங்கள் … கற்கும்போது கடினமாத்தெரியலாம் கற்றுக்கொண்டால் எதுவுமே எளிமைதான்…!
4 comments:
:)
ஒரு வேளை நீங்க பினாமி வெச்சு எழுதுறீங்களோ?
அதனால் கற்றுக்கொள்ளுங்கள் … கற்கும்போது கடினமாத்தெரியலாம் கற்றுக்கொண்டால் எதுவுமே எளிமைதான்…! ]]
அருமையா சொன்னீங்க.
சென்ஷி நல்லா சிரிக்கிறீங்க......
மாயவரத்தான்.....நீங்க நம்மஊரு ஆளாச்சே....சந்தேகம் வரத்தான் செய்யும்....(மயிலாடுதுறைக்கு அருகில் கிளியனூர்)
ஜமால்ண்ணே....நல்லா இருக்கீங்களா?
அனைவருக்கும் நன்றி.......
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....