உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, November 4, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...3

கேடிஎம் எல்லா நாடுகளிலும் உபயோகிப்பதில்லை… சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு ரசாயனம் .(கெமிக்கல்)
கேடிஎம் இல்லாத செம்புக்கலக்காத தங்கத்துகலினால் பற்றவைக்கப்படும் நகைகளில் 916 தரம் கிடைக்கும். முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு ) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி . இந்த பொடியை பயன்படுத்தி நகை பற்றவைக்கும் போது பொடியில் உள்ள செம்பு இ மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன் சேர்ந்து விடும் அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் கேடிஎம் வந்த பிறகு அந்த பிரச்சனை இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் கேடிஎம் சேர்த்தால் போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் கேடிஎம் மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும்
கேடிஎம் நகைகளைப் பொருத்தமட்டில் அதனுடைய தரம் கிட்டதட்ட 916 என்றால் 916 இருக்கவேண்டும்.
வாங்கக்கூடியவர்கள் அதை சோதித்துப்பார்பதில்லை.

தரம் பரிசோதிக்கும் லேசர் கருவி

சோதிப்பது எப்படி…?

லேபில் சோதனை செய்யும்போது நகையை உருக்கி தங்கத்தையும் அதில் கலந்திருக்கும் உலோகத்தையும் பிரித்து பார்ப்பார்கள்.அப்போது தான் அதன் தரம் விளங்கும்.ஆனால் நகை உருகுலைந்து விடும் .அதனால்தான் இன்றைய நவீன விஞ்ஞானத்தில் லேசர் கருவிகளை கண்டுபிடித்து நகைகள் உருகுலையாமல் அதன் தரத்தை சோதிப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
இந்த லேசர்கருவிகள் தரக்கூடிய ரிப்போர்ட்டை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.
அதிலும் முறைக்கேடுகள் நடப்பதாக கூறுகிறார்கள்.

பல பெரிய நகைநிறுவனங்களில் இந்த கருவியை வைத்து தரம் பரிசோதிக்கிறார்கள்.தங்களுடைய கடையின் பொருளை அதில் வைத்தால் 916 என்று சரியாக வருவதுபோல செட்டப் செய்திருக்கிறார்கள் என்று பலர் குற்றம் கூறுகிறார்கள்.

நெருப்பில் நைட்ரிக் அமிலத்தோடு நகையை உருக்கி அதன் கலப்பை கண்டறிவதனாலயே அதனுடைய சுத்தத்தை விளங்கமுடியும் .வாங்கிய நகையை உருகுலைக்க யாரும் விரும்புவதில்லை.

தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைக்கல்லும் அமிலங்களும்

தாங்கள் வாங்கிய நகை தரம் குறைவானது என்று நினைத்தால் முதலில் உரைக்கல்லில் உரைத்துப்பாருங்கள். கொல்லர்களிடம் இந்த உரைக்கல் கிடைக்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த நகைக் கடைகளில் கொடுத்து சோதியுங்கள். அந்த சோதனையில் அது தரம் குறைவு என்றால் லேசர் இயந்திரத்தின் மூலமும் சோதனை செய்யுங்கள் அதிலும் தரம் குறைவு என்று காணப்பட்டால் இறுதியாக வாங்கிய கடையில் நகையை திருப்பி கொடுத்து விடுங்கள். வாங்க மறுத்தார்கள் என்றால் நுகர்வேர் நீதி மன்றத்துக்கு போகப்போவதா சொல்லுங்கள் அதற்கும் மசியவில்லை என்றால் நைட்ரிக் அமிலத்துடன் நகையை உருக்கி அதன் தரத்த்தின் ரிப்போர்ட்டை வைத்து நுகர்வேர் நீதிமன்றத்தில் வழக்காடலாம்.

இதெல்லாம் நடக்கின்ற காரியமா…? என்று யோசனை செய்கிறீர்களா…?

இது நடந்திருக்கிறது. சிலர் வழக்கு பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்…
பல நகைக்கடைக்காரர்கள் நீதிமன்றங்களுக்கு தங்களின் வாடிக்கையாளர்கள் செல்வதை விரும்பமாட்டார்கள் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக உடனே நகையை திரும்ப பெற்றுக் கொள்வார்கள்.
ஆதலால் நாம் வாங்கும் நகைகள் தரம்மிக்கதுதானா என்று பரிசோதித்து வாங்குங்கள்.

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடியவர்கள் 22 கேரட்டில் முதலீடு செய்யாதீர்கள். காரணம் ஆபரண தங்கத்தை வாங்கும் போது அதற்கான சேதாரம் மற்றும் செய்கூலி கொடுக்கவேண்டும். மீண்டும் விற்கப்படும் போது அன்றைய சந்தை நிலவரப்படி என்ன விலையோ அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை கழிவு செய்தே வாங்குவார்கள்.அதனால் சேதாரமும் செய்கூலியும் நமக்கு நஸ்டமாகும்.

ஆதலால் 24 கேரட் கட்டிகளை சுத்ததங்கம் 10 கிராம் அல்லது 20 கிராம் நம்மிடம் உள்ள பணத்திற்கு தகுந்த மாதிரி வாங்கிக் கொள்ளலாம். விற்கும்போது நஸ்டம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மொத்த வியாபாரிகள் (ஓல்சேல்) நகைகளை தொழிற்சாலையிலிருந்து வாங்கும் போது வாங்கக்கூடிய நகைகளிலிருந்து ஒரு பொருளை பரிசோதித்து தரத்தை சோதனை செய்வார்கள்.இது அமீரகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் வழக்கம்.

காரணம் அமீரக அரசாங்க தங்ககட்டுபாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைகளுக்கும் வருகைத் தந்து அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள்.
அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால் அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்கு கட்டளையிடுகிறார்கள்.
இரண்டாம் முறையும் இதே தரம் குறைவு என்றால் அபராதமும் ஒருமாதக்காலம் கடையடைப்பும் செய்வார்கள்.
மூன்றாம் முறை கடையின் லைசன்சை இரத்துசெய்துவிடுவார்கள்.
இந்த கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம் அமீரகத்தில் இன்று வரையில் தலைத்தூக்கி சர்வதேச சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.

அமீரகத்தில் பல தொழிற்சாலைகள் இருக்கின்றன இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா துர்க்கி இத்தாலி இந்தோனேசியா போன்ற நாடுகளில் தயார் செய்யப்பட்ட நகைகள் அதிகம் அமீரக சந்தையில் விற்பனையாகின்றன.

அனைத்து நாடுகளின் நகைகளும் தரம்பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பனைசெய்யப்படுகிறது.அமீரகசந்தையை பொருத்தமட்டில் பல நாடுகளுக்கு நகைகளை ஏற்றுமதி செய்வதால் தரத்தில் மிக கவனமாக தங்கக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது.
குறிப்பாக இந்தியா இலங்கை சிங்கை மலேசியா வளைகுடாநாடுகள் மற்றும் இங்கிலாந்து அமெரிக்கா ஸ்பெயின் ஆஸ்தெரிலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு துபாயிலிருந்து நகைகள் ஏற்றுமதியாகின்றது.

உலகசந்தையில் துபாய் சந்தை குறிப்பிடதக்கது.சில இந்திய நகைக்கடைகள் தங்களுடைய கிளைகள் துபாயிலும் இந்தியாவிலும் உள்ளதால் இந்தியாவில் அவர்களின் கிளைகளில் வாங்கிய நகைகளை துபாய் சந்தை விலையின்படி வாங்கிக் கொள்கிறார்கள்.அதுபோன்ற நம்பிக்கைமிக்க கடைகளில் நகைவாங்கினால் நம்முடைய பணத்திற்கு மதிப்பும் வாங்கிய பொருளில் தரமும் கிடைக்கும்…

இன்னும் தொடர்வோம்….

11 comments:

அமுதா கிருஷ்ணா said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி...

வடுவூர் குமார் said...

அருமையான தகவல்கள்.
துபாயில் இருக்கும் போது ஒரு நகை கூட வாங்கவில்லை. :-(

சுல்தான் said...

அவசரமாக படித்தேன். நிறைய தகவல்கள் இருக்கிறது. நன்றி.
இன்னுமொரு முறை பொறுமையாக படிக்க வேண்டும்.

Ziavudin Ahmed said...

பயனுள்ள தகவல்கள்! பதிவிற்கு மிக்க நன்றி. துபாயில் தங்கம் வாங்க கோல்ட் சூக் வந்து தங்கத்தை எளிதாக வாங்கி விடலாம். ஆனால் சொந்த வண்டியில் வருபவர்கள் வண்டியை நிறுத்த இடம் கிடைப்பது, நிலவில் இடம் பிடிப்பதை விட மிகமிக கடினமான விஷயம். எனவே, கோல்ட் சூக் வருபவர்கள் மாற்று ஓட்டுனருடன் வாருங்கள் அல்லது வண்டியை தூரமாக நிறுத்திவிட்டு வாருங்கள். என் சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட ஆலோசனை இது. வண்டிக்கு இடம் பிடிப்பதற்குள் விலை 2 திர்ஹம்கள் உயர்ந்து வெறுப்பைக் கூட்டிய கொடுமையை நானே தனிக் கட்டுரையாக எழுதலாம். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இஸ்மத் சாருக்கு மிக்க நன்றி!

கிளியனூர் இஸ்மத் said...

அமுதா கிருஷ்ணா
வடுவூர் குமார்
சுல்தான்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....!

வாங்க...ஜியா சார்...
உங்க அனுபவத்தை பின்னூட்டத்தில் பதிவாகவே போட்டுடீங்களே......உங்க ஆதாங்கத்தை துபாய் ஆர்டிஏ காரங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்....அப்போதாவது பார்க்கிங் கிடைக்கிறதான்னு பார்ப்போம்....

Rifath said...

அருமையான தகவல் தந்தமைக்கு எனது மனம் நிறைந்த பாரட்டுக்கள் - ஹக்கீம் சேட் (ஊமையன்)

malar said...

அதுபோன்ற நம்பிக்கைமிக்க கடைகளில் நகைவாங்கினால் நம்முடைய பணத்திற்கு மதிப்பும் வாங்கிய பொருளில் தரமும் கிடைக்கும்…,,,
துபாய் அரசாங்கத்தில் இருந்து தரம் நிர்ணயம் செகிறார்கள் என்று சொல்கிறேர்கள் அப்புறம் எந்த கடையில் வாங்கினால் என்ன ?
ungkal bloggel post comment elutha mudiyavillai globe idathai adaikirathu.

கிளியனூர் இஸ்மத் said...

மலர் உங்க வருகைக்கு நன்றி...துபாயில் எந்தக் கடையிலும் வாங்கலாம்....இந்தியாவில் வாங்குபவர்களுக்கு சொன்னேன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

super article ismath paay

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான தகவல்கள்

ரொம்ப நன்றி இஸ்மத் பாய்

K.MURALI said...

பயனுள்ள தகவல்கள்!
மேலும் ஒரு நாளைக்கு விலையில் எவ்வ‌ள‌வு முறை ஏற்ற‌ இர‌க்க‌ம் இருக்கும் துபாயில்.

ந‌ன்றி,

முர‌ளி.கி
துபாய்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....