தங்கத்தின் விலை அவுன்ஸில் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராம் எடைகொண்டதாகும்.
உலக வர்த்தகசந்தையில் அவுன்ஸ் அளவின்படி அமெரிக்க டாலரில் விலை கோடிடுவார்கள்.இணையத்தில் கிட்கோ டாட்கம்மில் தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆயில் கரண்சி போன்றவைகளின் விலையை டாலரில் காணலாம்.
தற்போது ஒரு அவுன்ஸின் விலை 1100-டாலர்.
இது இன்னும் ஏறுமா இறங்குமா…? என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.
கடந்த ஆண்டு 2008 ஆகஸ்ட் செப்டம்பரில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 685 டாலர் வரையில் இறங்கியது.அந்த தருணத்தில் பலர் இன்னும் இறங்கும் என்று எதிர்ப் பார்த்தார்கள்.ஆனால் ஏறத்தொடங்கியது.டிசம்பரில் 900 டாலராக அவுன்ஸின் விலை ஏற்றத்தைக்கண்டது.
ஜனவரி பிப்ரவரியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 1200 வரை வரும் என்று நிபுணர்களின் கணிப்பு இருந்தது.அந்தச் சமயத்தில் அவுன்ஸ் 920 டாலராக இருந்தது.
ஆனால் பிப்ரவரியில் விலை ஏற்றம் நாளுக்கு நாள் 20 டாலரிலிருந்து 30 டாலர்வரையில் ஏறி 1005- சை தொட்டது.ஆனால் அது நீடித்து நிற்கவில்லை. மீண்டும் ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 875 டாலர் வரையில் இறங்கியது.மீண்டும் 950 வரையில் சென்று ஏற்ற இறக்கம் கண்டது.
ஆகஸ்ட் 2009 தங்கவிலை கடுமையாக இறங்கும் என்று பல வல்லுனர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு நேர் எதிர்மறையானது தங்கவிலை.
பலகாரணங்கள் பலரால் கூறப்படுகிறது.
1.பங்கு சந்தை சரிவினால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.
2.இணையதள வர்த்தகத்தால் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.
3.அமெரிக்காவின் பொருளாதார சரிவினால் டாலரின் மதிப்பு உலக நாடுகளுக்கிடையில் குறைகிறது.அதனால் தங்கம் விலை ஏற்றம்.
4.சீனா இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் டன் கணக்கில் தங்கம் வாங்கியிருப்பதினால் தங்கவிலை ஏறுகிறது.
5.தென்ஆப்ரிக்காவில் மின் தட்டுப்பாட்டின் காரணமாக தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதினால் உலகில் தங்கக் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தின் விலை ஏற்றம்.
6.ஆயில் விலை கூடிவிட்டது அதனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் என்றார்கள்.இன்று ஆயிலின் விலை 100 சதவீதம் இறக்கம்.ஆனால் தங்கம் ஏற்றம்.
இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் தங்கத்தின் விலை 1990-லிருந்து சுமார் 19 வருடங்களில் இன்று வரையில் 450 சதவீதம் விலை கூடி இருக்கிறது.
பங்குசந்தையை பொருத்தமட்டில் 21000 சென்ஸஸ் அதிகபட்சமாக சென்றிருந்தாலும் அதன் இறக்கம் 7000 சென்ஸஸ் வரையில் இறங்கி பல பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்து மீண்டும் ஏறி வருகிறது. ஆனால் தங்கம் ஏறும் முகமாக இன்று வரையில் இருந்து வருகிறது.
ஆதலால் அதிகபட்சமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்கத்தில் குறுகிய கால முதலீடாக இல்லாமல் நீண்டகால முதலீடாக வைத்திருக்க நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.இது அவரவர்களின் விருப்பத்தை பொருத்ததே.
இந்தப் படத்தைப் பார்த்தலே தெரியும்....தங்கவிலை ஏறியதின் காரணம்.
தங்கம் விலை ஏறிவருவதினால் தங்கக் கடைகாரர்களுக்கு கொள்ளை லாபம் என்று பலர் கருதுவது உண்டு.உண்மையாகவே தங்க ஏற்றத்தில் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்று கேட்டால் வெகு சிலருக்கு கிடைக்கலாம் ஆனால் பெரும்பாலோருக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு.
காரணம் இது ஒருவகையான சூதாட்ட வியாபாரம் (கேம்லிங்).
ஒரு கடைக்காரர் தன்னுடைய கடைக்கு ஐந்து கிலோ தங்கம் கொள்முதல் செய்கிறார் என்றால் அந்த ஐந்து கிலோவிற்கு சுத்ததங்கமாக கொடுப்பார்.அல்லது அதற்கு நிகரான தொகையை கொடுத்து விடுவார்.
பணமாக கொடுக்கும் பட்சத்தில் அன்றை விலை ஒரு கிராம் ஆயிரம் ரூபாய் என்றால் அந்த விலையை அவர்நிர்ணயம் செய்து உறுதிபடுத்த வேண்டும் (பிக்ஸிங்) .விலையை நிர்ணயிக்காமல் உறுதிபடுத்தாமல் (அன்பிக்ஸ்) வாங்கி இருந்தால் சில நாட்களில் தங்கத்தின் விலை 1200 என்று ஏறும் போது அவர் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் வித்தியாச தொகையை செலுத்தவேண்டும்.
அதே விலை 800 ரூபாயாக குறைந்தால் அவர் தான் வாங்கிய ஐந்து கிலோ தங்கத்தை பிக்ஸ் பண்ணினால் 200 ரூபாய் கொள்முதல் செய்தவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்வார்.
பெரும்பாலான கடைகளில் தினசரி வியாபாரங்களில் விற்பனையான தங்க எடைக்கு உடனே கொள்முதல் செய்பவர்களிடம் பிக்ஸ் அன்றைய விலையை நிர்ணயம் உறுதி செய்துக் கொள்வார்கள்.அப்படி செய்யாமல் ரெஸ்க் எடுத்தார்களென்றால் ஆபத்தில் தான் முடியும்.
இந்த விலை நிர்ணயத்திற்கு காலஅவகாசம் உண்டு.ஒவ்வொரு மொத்தவியாபாரிகளும் ஒரு கணக்கை வைத்திருப்பார்கள்.
விலை நிர்ணயிக்கப்படாத கடைக்காரர்கள் (அன்பிக்ஸ்ஸில்) பலர் நடுரோட்டுக்கே வந்துமிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் தொடர்வோம்….
7 comments:
இங்க சாப்பாட்டுக்கே மாச கடைசில சிங்கி அடிக்க வேண்டியிருக்கு எங்க தங்கம் வாங்குறது. நாமல்லாம் தேரால கோல்டுலாண்டு கடைக்குமுன்னாடி நின்னு போட்டோபுடிக்குறதோட சரி. இப்புடியே போனா கிராம் 2000 ரூவாயா ஆனாலும் ஆகிடும். இப்பவே முடியல அப்ப ஹுஹும்....
I would like to buy pure gold in europe. Where can I get?
Do the custom officials ask for money if one takes gold biscuits?
ஜீவன் பென்னி...உங்க வருகைக்கு நன்றி.....
நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள்...துபாயில் இருந்தால் நான் வாங்கித்தருவேன்....மற்ற நாடுகளில் இருந்தால் நகைக்கடைகளில் கிடைக்கும் விசாரியுங்கள்....ஒரு பிஸ்கட் எடுத்துச் செல்லலாம்....கஸ்டமஸ் தீர்வை இருக்காது...
Interesting Details !!.
//நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள்...துபாயில் இருந்தால் நான் வாங்கித்தருவேன்....மற்ற நாடுகளில் இருந்தால் நகைக்கடைகளில் கிடைக்கும் விசாரியுங்கள்....ஒரு பிஸ்கட் எடுத்துச் செல்லலாம்....கஸ்டமஸ் தீர்வை இருக்காது...//
ஒரு பிஸ்கட் என்றால் எத்தனை கிராம்? 100gms or below?
நான் துபாய் இல்தான் உள்ளேன்.
நான் தங்கம் வாங்கும் போது உங்களை தொடர்பு கொள்ளலாமா ?
முரளி உங்கள் வருகைக்கு நன்றி.....
பிஸ்கட் என்பது 100 கிராம் அதற்கு கீழேயும் உள்ளது.....10 தோலா டிடி பார் என்பதையே பிஸ்கட் என்று கூறுவார்கள்....இது 116.64 கிராம் எடைக் கொண்டதாகும்....இன்றைய விலை 15500 திரஹம்.
எனது தொலைபேசி எண் வலைப்பூவில் உள்ளது நீங்கள் தாடர்புக் கொள்ளுங்கள் வாங்கித்தருகிறேன்.....
மிக்க நன்றி.
கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....