உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, November 16, 2009

தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6


தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற செய்தி பரவிவருவதால் ஏற்கனவே தங்கத்தில் பிஸ்கட்டுகளாக வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்தில் இருந்தாலும் அதை விற்பனை செய்வதற்கு முன்வர வில்லை.

விலை இன்னும் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலர் முதலீட்டின் நோக்கத்துடன் தங்கக்கட்டிகளை வாங்கி குவித்துக் கொண்டு வருகிறார்கள்.அதனால் துபாய் தங்க சந்தையில் தங்கக்கட்டிகள் வாங்குவதற்கு சில தினங்களாக தட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒரு அவுன்ஸ்க்கு 3டாலர் பிரிமியம் என்ற கணக்கில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்த மொத்தவியாபாரிகள் தற்போது 6 டாலர் என்ற கணக்கில் விற்பனை செய்துவருகிறார்கள்.காரணம் டிமாண்ட் என்கிறார்கள்.

இந்த ஏற்றம் எதிர் வரும் ஜனவரி பிப்ரவரி வரை தொடரலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இன்னும் சீன வருட பிறப்புக்கு பின் குறையலாம் என்று சீனர்கள் கருத்து கூறுகிறார்கள்.

எனவே முதலீடு என்ற எண்ணத்தில் இறங்கக்கூடியவர்கள் கவனமாக இறங்கலாம்.

சமீபகாலமாக வைரத்தின் விளம்பரங்களை நிறைய காண்கிறோம்.வைரக்கல் மோதிரம் ,வைரத்தோடு ,வைரநெக்லஸ் இப்படி வைரத்தில் நிறைய நகைகள் பலரை கவர்ந்து வருகிறது.

வைரத்தில் நகைகளை வாங்கக்கூடியவர்கள் வைரத்தைப்பற்றி அறிந்திருக்கிறார்களா.? என்றால் பலருக்கு அது சூனியமாகவே இருக்கிறது.
சாதாரண அமெரிக்கன் ஜர்கோன் கல்லையும் வைரக்கல்லையும் காண்பித்து எது வைரம் என்றால் திணறிப்போவார்கள்.

இந்த அறியாமை பலரை ஏமாறவைக்கிறது.தங்கத்திலிருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமான விலையில் வைரநகைகளின் விலைகள் இருக்கிறது.

வைரத்திலும் தரம் இருக்கிறது அதற்கும் கேரட் இருக்கிறது.தங்கம் காப்பரின் அளவில் தரம் பிரிக்கப்படுகிறது.
வைரம் அதன் நிறம் கட்டிங் எடை இவைகளில் தரம் பிரிக்கப்படுகிறது.

வைரத்தின் தரம்

விவிஎஸ்-1 (VVS-1)
விவிஎஸ்-2 (VVS-2)
விஸ்-1 (VS-1)
விஸ்2 (VS-2)
எஸ்ஐ-1 (SI-1)
எஸ்ஐ-2 (SI-2)

இது தரத்தின் பெயர்கள்.அதன் நிறத்தை சி(C) டி(D) இ(E) எப்(F) ஹச்(H) ஐ(I) என ஆங்கில அரிச்சுவடி வார்த்தைகளில் நிறத்தை நிர்ணயித்துள்ளார்கள்.

விவிஎஸ்-1(VVS-1) சி(C) நிறத்தில் உள்ள வைரம் விலை அதிகம். தரம் நிறைந்ததாகும். பெரும்பாலும் கடைகளில் விஎஸ்-2(VS-2) மற்றும் எஸ்ஐ-2(SI-2) இந்த ரக வைரங்களை மோதிரம், நெக்லஸ்சில் பொருத்தி விற்பனை செய்கிறார்கள்.

விவிஎஸ்-1 (VVS-1)C நிறத்தின் ஒருகேரட் விலை $ 3500 அமெரிக்கன் டாலராகும்.
விஸ்-2 (VS-2)ஒருகேரட் $ 400 டாலராகும்.
ஒருகேரட் என்பதின் எடை 0.10 மில்லியாகும்.
போடிவைரக்கற்களை பதித்து அத்துடன் சில கலர் கற்களையும் பதிதத்து ஒரு நெக்லஸ் $ 5000 டாலர் என்று விற்பனை செய்வார்கள். தள்ளுபடி 25% அல்லது 50% சதவீதம் என்பார்கள்.

நாம் வாங்கிய சில மாதங்கள் கழித்து அதை விற்பனைக்கு கொடுத்தால் வைரத்திற்கு மதிப்புப்போட மாட்டார்கள். தங்கத்தின் எடைக்கு மட்டும் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை தருவார்கள். காரணம் வைரத்தின் தரம் எஸ்ஐ-2 என்ற குவாலிட்டியைச் சார்ந்தது. அதற்கு வாங்கும்போது மதிப்பிருக்கிறது. விற்கும் போது மதிப்பில்லை.

அதேநேரத்தில் விவிஎஸ்-1 அல்லது விவிஎஸ்-2 போன்ற வைரக்கற்கள் பதித்த நெக்லெஸ் வாங்கும் போது விலை அதிகம் . விற்கும்போதும் அதே விலை இல்லையென்றாலும் 75 சதவீதம் அதனுடைய தொகை திரும்ப கிடைக்கும்.

வைரத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் தொடர்வோம்…

8 comments:

சந்தனமுல்லை said...

நன்றி...ஏதோ கொஞ்சம் புரிந்தமாதிரி இருக்கிறது!! :-)

Anonymous said...

VERY USE FULL MESSEAGE - RAJAKAMAL

Anonymous said...

WE ARE WAITING FOR NEXT PUBLISH ISMATH - RAJA KAMAL

மு.சீனிவாசன் said...

தலைவா, இந்தத் தகவல்களைத்தான் 2 நாட்களா தேடிட்டு இருந்தேன். தங்கம் பற்றிய உங்களோட அனைத்துப் பதிவுகளயும் படிச்சேன். மிகவும் உபயோகமா இருந்தது. உங்களுக்குத் தனி மடலும் அனுப்பி இருக்கிறேன்.

Anonymous said...

படித்தது பிடித்தது

கிளியனூர் இஸ்மத் said...

வாருங்கள் சந்தனமுல்லை........பரவாயில்லையே கொஞ்சமாவது புரிந்துக் கொண்டீர்களே...நன்றி..

நாசர்....உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

மு.சீனிவாசன்....உங்கள் தனி மடல் கிடைத்தது அதற்கு பதிலும் விரிவாக எழுதி உள்ளேன்....நன்றி..

ராம்மலர்......படித்தது உங்களுக்கு பிடித்திருக்கிறது...அதனால் பின்னூட்டம் எனக்கு கிடைத்திருக்கிறது.....நன்றி...

S.Gnanasekar said...

தங்கத்தை பற்றிய நிறைய பயனுள்ள விசயங்களை உங்கள் இடுகை மூலம் தெரியபடுத்தினீர்கள் பயனுள்ள பதிவு நன்பர் கிளியனூர் இஸ்மத் அவர்கலே...
சோ.ஞானசேகர்..

K.MURALI said...

மிக‌வும் பயனுள்ள தொட‌ர்.
ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ஆர்வ‌ம் அதிக‌ரிக்கிர‌து.

முர‌ளி.
துபாய்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....