உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, December 3, 2009

ஆகாயத்தில் ஒரு அவமானம்


ஒருமுறை தாயகம் செல்லும்போது மும்பை வழியாக சென்றேன்.அப்போதெல்லாம் சென்னைக்கு நேரடி விமானச்சேவை இல்லை.துபாயிலிருந்து விமானத்தில் புறப்பட்டபோது எனது முன் இருக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்த அன்பர் ஓருவர் இருந்தார்.

நாங்கள் இருவரும் விசாரித்துக் கொண்டோம்.விமானம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் வந்து என்னுடைய கூலிங் கிளாஸை காணவில்லை நான் சற்றுமுன் பாத்ரூம் போய் வந்தேன் எனது பக்கத்தில் ஒரு உபி காரன் அமர்ந்திருக்கிறான் அவன்தான் எடுத்திருப்பான் என்று கூறினார்.

நீங்க உங்க உடமைகளை சோதனை செய்து பாருங்கள் என்றேன்.தேடிவிட்டேன் கிடைக்கவில்லை அவன் தான் எடுத்திருக்கான் என்று உபி காரர் மேல் பழிசுமத்தினார்.
சரி அவரிடம் கேளுங்கள் என்றேன் கேட்டுவிட்டேன் அவர் எடுக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறார் என்றார்.

என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை.அவருடைய பொருள் பாவம் எவ்வளவு ஆசையாக வாங்கி இருப்பார்.இப்படி தொலைத்துவிட்டாரே என வருந்தினேன்.
மும்பை வந்து இறங்கி இமிக்கிரேசன் வந்தேன்.அந்த தமிழ் நண்பர் போலீஸ்காரரிடம் தன்னுடைய கூலிங் கிளாஸ் காணமல் போனதாகவும் பக்கத்தில் உள்ள உபி காரர் எடுத்து விட்டதாகவும் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் உபி காரரின் உடமைகளை முழுவதையும் சோதனை செய்து பார்த்துவிட்டு அவரிடம் இல்லை என்று கூறிவிட்டார்.அந்த உபி காரரின் முகம் அவமானத்தில் வாடிப்போய் விட்டது.

இமிக்கிரேஷனை முடித்து விட்டு லெக்கேஜ் எடுப்பதற்கு ட்ரோலியை தள்ளிக் கொண்டு வெளியில் வர எத்தணித்தேன்.அந்த தமிழ் நபர் ஒடி வந்து என்னிடம் கூலிங் கிளாஸ் கிடைத்து விட்டது என்றார்.

அப்படியா! எங்கு கிடைத்தது? என்று கேட்டேன் என்னுடைய பேக்கின் அடியில் கிடந்தது என்றார்.எனக்கு சரியான கோபம் வந்தது நீ என்ன மனுஷனா.?அந்த உபிகாரரை இப்படி அவமானப்படுத்திட்டியே அவரு எப்படி யெல்லாம் மனசலவுல வேதனைப்பட்டிருப்பார்.அவரிடம் போய் மன்னிப்பு கேளு என்றேன்.

அவரைப்பார்த்து கேட்டு விட்டேன் என்றார்.அவர் கேட்டாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவியின் மனச நோகடித்து விட்டாரே என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.

அந்த இரண்டரை மணி நேரம் பயணம் முழுவதும் தன்னை குற்றவாளியாக்கியதை எண்ணி உபிகாரர் மன உலச்சல் அடைந்திருப்பார் அல்லவா.? தன் குடும்பத்தை காண்பதற்கு விடுப்பில் தானே அவரும் சென்றுக் கொண்டிருப்பார்.எத்தனை கனவுகள் அவரை சூழ்ந்திருக்கும் அவைகளை ஒருவரின் கூலிங் கிளாஸ் விரட்டி விட்டதே.

தன்னுடைய பொருள் காணாவில்லை என்றால் முதலில் அதை தன்னிடம் தான் தரவாக தேடவேண்டும்.பின்னர்தான் நம ;பக்கத்தில் அல்லது எதிரில் இருப்பவர்கள் என்று விசாரிக்க வேண்டும்.அவசரமாக நாம் ஒருவரை குற்றவாளி யாக்கக் கூடாது.

தன்னை விட உடையில் தரம் குறைந்திருப்பதினால் தன் பொருளை அவர்தான் எடுத்திருப்பார் என்று உறுதி கூறுவது முட்டாள்தனமானது.அப்படி கூறுபவர்கள் நேர்மையான மனிதர்கள் அல்ல .தங்களின் நேர்மையின்மையான குணத்தைதான் அங்கு வெளிபடுத்துகிறார்கள்.
எளிமையாக ஒருவரை குற்றவாளியாக்கி விடுகிறோம்.அதன் வலியை குற்றம் சுமத்தக் கூடியவர்கள் உணர்ந்திருக்கிறார்களா.?அல்லது குற்றம் சுமத்த காரணமான பொருள் கிடைத்ததும் அதை குற்றம் சுமத்தப்பட்ட நிரபராதிக்கு ஈடாக கொடுத்துவிடுகிறோமா.?
இதுவே இங்கிலாந்துகாரனாக இருந்திருந்தால் பல லட்சங்கள் நஷ்ட ஈடாக நீதி மன்றம் மூலம் வசூலித்திருப்பான்.

பொருள்களை நேசிக்குமளவு மனிதர்களை நேசிக்க ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை.
எப்பவும் பயணத்தின் போது நம்மிடையே ஒரு வித பதட்டம் இருக்கும்.சில நேரங்களில் சிலர் தங்களின் பாஸ்போர்ட் பணத்தையும் கூட தொலைத்து விடுவார்கள்.நிதானம் என்பது பயணத்தில் பலருக்கு இருப்பதில்லை.

புறப்பட்டதிலிருந்து போய் சேரும் வரையில்.
ஓவ்வொருவரின் பயணமும் பல கனவுகளை சுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது தயவுசெய்து ஒரு கூலிங்கிளாசினாலோ அல்லது வேறு எதைக் கொண்டும் கலைத்து விடாதீர்கள்.!

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் இஸ்மத்

சில பேர் செய்யும் தவறுகள் எவ்வளவு பதிப்பினை ஏற்படுத்துகின்றன - என்ன செய்வது - மனிதர்கள் திரு்ந்த வேண்டும்

நல்வாழ்த்துகள்

நாஞ்சில் பிரதாப் said...

இப்படியும் மனிதர்களா? ஒரு கூலிங் கிளாஸ் மனித உணர்வுகளை விட பெரிதா...
ஆண்டவா உலகம் எங்கேப்போய்கிறது.?

வேலன் said...

இதே போன்றதொரு நிகழ்வை சென்னை மின்சார ரயிலில் பார்த்தேன். ஒரு நடுத்தர வயது பெண்மணி தன் சங்கிலியைக் காணோம் என்று வயதான ஒரு தம்பதியினரைக் கைகாட்டிக் கொண்டிருந்தார். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. நாங்க எடுக்கலையம்மா என்று அந்த வயதான கிழவி கைகூப்பி அழுதது இன்னும் எனக்கு மறக்கவில்லை.

மனிதர்களா இவர்கள் ? பார்க்கும் கேட்கும் நமக்கே பொறுக்கவில்லை. அவமானப்பட்டவர்கள் மனம் எவ்வளவு நொந்திருக்கும்

இராகவன் நைஜிரியா said...

நீங்கள் சொல்வது மிகச் சரிங்க. மற்றவரை நோக்கி ஒரு விரல் நீட்டும் போதும் மூன்று விரல்கள் நம்மை நோக்கி காண்பிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ஷி said...

:(

வருந்தத்தக்க நிகழ்வு

துளசி கோபால் said...

செய்யாத தவறுக்குக் கிடைக்கும் மன உளைச்சல் கொஞ்சநஞ்சமல்ல.

முந்தாநாள் சென்னையில் எனக்கு 'தமிழில் அர்ச்சனை' நடந்தது. மன உளைச்சல் சகிக்கமுடியலை. 'நாய் கடிச்சுருப்பா'ன்னு ஒரு பதிவு போட்டு மனசைக் கொஞ்சம் ஆத்திக்கிட்டேன்(-:

பாவம்...அந்த உ.பி. காரர்.

மீன்துள்ளியான் said...

ஆமாங்க . இப்போ எல்லாம் மனித உணர்வுகளுக்கு மதிப்பு குறைந்து வருவது வருந்ததக்கது .

ஆனால் இதை எண்ணி பார்க்க நம்மள மாதிரி ஆட்களும் இருக்கிறோம் என்பது ஆறுதல்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ஷாகுல் said...

இவர் தவறு செய்துவிட்டு அவர் மேல் வீண்பழி சுமத்தியுள்ளார். பாவம் அந்த உ.பி.காரர்.

Anonymous said...

poi soolathengo. antha aal ungalai thane kaatinan. neegal ean antha paliyai ennoruvan meel poodureengal

கிளியனூர் இஸ்மத் said...

சீனா
நாஞ்சில் பிரதாப்
வேலன்
இராகவன் நைஜிரியா
சென்ஷி
துளசி கோபால்
மீன்துள்ளியான்
சாகுல்
பெயரில்லா அன்பர்
தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி...!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....