உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, December 26, 2009

வானலையில் கலந்த நீரோடை


அமீரகம் துபாயில் ஐந்தாண்டுகளாய் இயங்கிவரும் வானலை வளர் தமிழ் அமைப்பு கவிஞர்களை உருவாக்கியும் எழுத்துலகில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கவித்தும் வருகிறது.
சுவிஸ்டார் பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் மாதந்தோரும் ஒன்றுக் கூடல் நிகழ்வும் அதன் நிமித்தம் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களை கௌரவித்து தமிழ்த்தேர் என்ற தனிச்சுற்று பத்திரைக்கையும் வெளியீட்டு வருகிறது.


இது வரையில் 44 தலைப்புகளில் கவிதைகள் அரகேற்றப்பட்டிருக்கிறது. சமயங்கள் சார்பற்ற தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் சங்கமிக்கும் அமைப்பு இது என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளலாம்.

புலவர் ஜின்னா அளிக்கும் விருதை தன் கணவருடன் பெரும் மலிக்கா


இந்த அமைப்பில் 25.12.2009 அன்று நடந்த மாதாந்திர நிகழ்வில் கவிஞர் திருமதி மலிக்கா பாருக் அவர்களுக்கு விருது ஒன்றை தனிப்பட்ட முறையில் சிறுகதை எழுத்தாளர்கள்; ஷேக்மதார், திருச்சி சையது, கமால் ஆகியோரும் அவர்களுடன் இலங்கை புலவர், காவியத்திலகம் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்களும் இணைந்து வழங்கி திருமதி மலிக்காவை உற்சாகமூட்டினார்கள்.

திருமதி மலிக்கா பாருக் எழுதிய கவிதைகளைப் பற்றியும் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் அவருக்கு பிடித்த கவிதைகளை வாசித்து கவிஞரைப் பாராட்டினார்.

திருமதி மலிக்கா பாருக் அவர்கள் நீரோடை என்ற தனது வலைதளத்தில் கவிதைகளை எழுதிவருபவர். நூறு கவிதைகளை இதுவரையில் எழுதிஉள்ளார். விரைவில் கவிதை நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.

சமூகம் சார்ந்த கவிதைகளை அதிகம் எழுதிவருபவர்.இவரின் எழுத்துநடையும் சொல்லவரும் கருத்து நடையும் படிப்பவருக்கு எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இவர் வானலை வளர் தமிழ் அமைப்பில் அங்கத்தினராக இருந்து வருகிறார். மற்றும் அமீரகப்பதிவர் வட்டத்திலும் வலம் வருபவர்.இவரின் எழுத்து திறமைக்கு
தனியொரு விழாவினை விருது வழங்கியவர்கள் செய்திருந்தால் இன்னும் மெருகூட்டப்பட்டிருப்பார் என்பது எனது ஆதாங்கம்.

நானும் வானலை வளர் தமிழின் அங்கத்தினர் என்றாலும் அவரை அந்த அமைப்பின் சார்பாகவும் அமீரகப்பதிவர்களின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

மென்மேலும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதி பல விருதுகளை பெறவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

புலவர்ஜின்னா, பாருக், மலிக்கா

கவிஞர் திருமதி மலிக்கா அவர்களின் எழுத்துப் பணிக்கு முக்கியமான முதல் உற்சாகர் என்றால் அவருடைய அன்புக் கணவர் பாருக் அவர்கள்.அவருடைய தூண்டுதலும் மலிக்காவின் எழுத்துக்கும் விருதுக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

திருமதி மலிக்காவை போன்ற வலைதள பெண்எழுத்தாளர்கள் அமீரகத்தில் நிறைய பேர்கள் இருந்தாலும் சில பெண்பதிவர்களின் எழுத்தும் அவர்களின் மேடைப் பேச்சும் என்னை பாதித்திருக்கிறது.
அப்படிப்பட்டவர்களில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி ஜெஸிலா ரியாஸ் இவரின் பேச்சாற்றல் அமீரகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள் பல மேடைகளை கலக்கியவர் பல விருதுகளை வென்றவர்.
மற்றும் ஐந்தரைப் பெட்டி ஹுசேனம்மா அவர்களின் எதார்த்த எழுத்து நடை பல பதிவர்களை கலக்கிருக்கிறது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்.

அந்த வரிசையிலே கவிஞர் திருமதி மலிக்கா அவர்களும் இடம்பெறுகிறார் என்கின்ற போது அவரை உளமாற வாழ்த்தி இன்னும் நிறைய எழுதி பதிவுலகில் விருதுகள் பல பெற வேண்டும் என்பது அமீரகப்பதிவர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

திருமதி மலிக்கா அவர்களுக்கு உற்சாகமூட்டி விருது வழங்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

12 comments:

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு. சகோதரி மலிக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Jaleela Kamal said...

மலிக்கா வாழ்த்துக்கள், மிக்க மகிழ்சி, அருசுவை, தமிழ்குடும்பம், இப்ப பிலாக் மூலமாக மலிக்கா பழக்கமான மலிக்கா, 100 கவிதைகளை படைத்து கலக்கிய மலிக்கா என் தோழி என்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது,

இஸ்மத் இந்த பதிவை போட்டதும் உடனே போன் செய்து சொன்னார், உடனே ஓடோடி வந்தேன் பாராட்ட. இன்னும் உங்கள் கவிதைகள், உலகெங்கும் நீரோடையாய் ஓடி பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.


//இஸ்மத அவர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் இந்த தொகுப்பை இங்கு போட போய் தான் எங்களுக்கு தெரிய வந்தது. //

ரொம்ப தெளிவாக போட்டு இருக்கிறீர்கள்.

ஸாதிகா said...

மலிக்கா,சகோதரரின் பதிவைப்பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வாழ்த்துக்கள்.சகோதரர் இஸ்மத் உங்கள் வலைப்பூ மூலம் எங்களுக்கு அறியத்தந்தந்தமைக்கு மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

மலிக்கா, வாழ்த்துக்கள். இவ்வளவு திறமையுள்ள கவிஞரா நீங்க, எவ்வளவு எளிமையா இருக்கீங்க, மாஷா அல்லாஹ். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இஸ்மத் அண்ணே, இந்தச் சிறப்புரையில் என்னையும் அன்புடன் பாராட்டி எழுதி ஊக்குவித்ததற்கு மிக மிக நன்றி!!

கிளியனூர் இஸ்மத் said...

S.A.நவாஸ்தீன்
ஜலிலா
ஸாதிகா
ஹுஸைனம்மா ...
உங்கள் அனைவருக்கும் நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துக்கள் மலிக்கா! ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!

கிளியனூர் இஸ்மத் said...

SUMAZLA/சுமஜ்லா//
முதல்முறையாக என் வலைதளத்தில் நுழைந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.....நன்றி

Anonymous said...

masha allah

hatsoff to mallikka :0)

m.m.abdulla

SUFFIX said...

மிக்க மகிழ்ச்சியான செய்தி. சகோதரிக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சாதிக்க எமது பிராத்த்ணைகளும்.

அன்புடன் மலிக்கா said...

தங்கள் வலைப்பூவில் வெளியிட்டமைக்கு ரொம்ப சந்தோஷம் சகோதரர் இஸ்மத் அவர்களே.மிக்க நன்றி..

என்னை வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

Kavipriya said...

Thiramaiyana Kavingarukku Arumaiya Parisu!
Congratulations Malikka!

Anonymous said...

saga kavignar enra muraiyil paaraattukkal
anbudan kandanathan

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....