உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, March 4, 2010

காவிக்குள் காமம்

காவி உடைக்குள் காமம் இல்லை என்று யார் சொன்னது.?
பச்சைக்காயில் பழத்தின் ருசி இருக்காது பழத்தில் பச்சைக்காயின் வீரியம் இருக்காது.

காய்களை வாங்கிவிட்டு பழம் என்று சொன்னால் அது யார் தவறு.?

பூத்து காயாகி கனிவதற்கு முன் காய் தன்னை கனி என்று எண்ணிக் கொண்டால் அது பழமாகி விடுமா.?

இரு தினங்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவது காவிக்குள் நுழைந்த காமம்.

மனிதனாக பிறந்த மனிதன் வேதங்களை கற்று மனனம் செய்து அதை பிறருக்கு உபந்நியாசம் செய்துவிட்டால் சமூகத்தில் பலரால் அவர்களை மகானாக பார்ப்பதற்கு பட்டங்களை வழங்குவதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.
தங்களின் தேவைகளை குறை நிறைகளை அவர்களிடம் கூறி மனஆறுதலை தேடுகிறார்கள்.

மனித உடலுக்கு எல்லாத் தேவைகளும் தேவையாக இருக்கிறது.அந்த தேவைகளை பூர்த்திச் செய்யாமல் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.

பசிக்கின்றபோது புசிக்கவேண்டும் புசித்துவிட்டால் வயிற்று பசி அடங்கி காமப்பசி தலைத்தூக்கும்.தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி என்ற அந்தஸ்துடன் வாழ்க்கைநெறியை பேணவேண்டும்.அதை அணைப்போட்டு தடுப்பது என்பது தற்கால சாத்தியம் என்றாலும் அது நிரந்தரம் அல்ல.அணைக்குப் பின்னால் தேக்கம் இருந்துக் கொண்டுதானிருக்கும்.
மனிதனை கடவுளாக பார்க்கும் தன்மை மிருகங்களுக்கு கிடையாது ஆனால் மிருகமாக நடக்கும் தன்மையும் கடவுளாக பார்க்கும் பார்வையும் மனிதனிடம்தான் இருக்கிறது.

கடவுளை ஒவ்வொரு மனிதனும் ஒரு அளவுகோள்வைத்து நம்பிக் கொண்டிருக்கின்றான்.இறைவனை அறிபவர்களைவிட நம்புகின்றவர்களே இவ்வுலகில் அதிகம்.நம்பிக்கை அறிவாகுவதில்லை ஆனால் அறிவு நம்பிக்கையை வழுப்படுத்தும்.

இறைவனை இறைவனாக பார்ப்பவர்கள் இவ்வுலகில் மிகச் சொற்பபேர்கள்தான்.
பலர் தன்னை கடவுளாக எண்ணிக் கொண்டு பிறரை எண்ணவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தன்னை அறியாத இவர்கள் தன்னை கடவுள் என்று சொல்லி இந்த உலகில் எதைப் படைத்தார்கள்.?

பல ஊர்களில் நாடுகளில் ஆசிரமங்களை வளர்தார்கள்.தங்களின் வங்கி கணக்கில் கோடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் நோய்களை குணப்படுத்த மருத்துவரிடம் செல்லக் கூடியவர்கள் மருத்துவரை கடவுளாகப் பார்ப்பதில்லை.அதில் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆனால் காவியை கண்டுவிட்டால் பலருடைய கண்களுக்கு சாமியாகத் தெரிவதுதான் வியப்பு.

அந்த சாமிகள் தானும் ஆசாமிதான் என்பதை அவ்வபோது நிருபிக்கும்போது அவரை வணங்கியவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தான் தவறு செய்யலாம் ஆனால் தான் வணங்கக்கூடியவர் எந்தவிதத்திலும் தவறிழைப்பதை பொருந்திக் கொள்ளமுடியாது என்பதை ஆசிரமங்கள் அடித்து நொருக்கப்பட்டதில் தெரிகிறது.

இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்.

நேற்றுவரையில் ஊடகங்கள் அவருக்கு குடைப்பிடித்து அவருடைய சொற்பொழிவுகளை தொடராக பலரை தொடவைத்தது.
இன்று அதே ஊடகம் அவரை கூவமாக்குகிறது.

ஒரு போலி வளர்வதற்கு காரணமாக இருந்த ஊடகங்களை ஏன் இந்த மக்கள் முற்றுகை இடுவதில்லை.?

ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.

ஒரு பொருளை வாங்கக்கூடியவர்கள் அந்த பொருளின் தரம் மணம் நிறம் இவைகளை அலசி ஆராய்ந்து வாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள்.
தங்களின் குழந்தைகளை எந்தப்பள்ளியில் எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேர்ப்பது படிக்கவைப்பது என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்.
ஆனால் இறைவனுடைய விசயத்தில் அறிவைவிட நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எளிதாக ஏமாந்துவிடுகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் உண்மையான மகானும் உண்மையான ஞானமும் மக்களிடம் சென்றடைவதில் சுனக்கம் ஏற்படுகிறது.
மனிதனை மனிதனாக வாழவைத்தவர்கள் மற்றவர்களுக்கு மத்தியில் மனிதனாக வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் சொல்கிறது அவர்கள் கடவுளாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

திரைப்படங்களை கண்டுவிட்டு தங்களின் நாட்டையே தாரைவார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

இதுவும் கடந்து போகும்.!

10 comments:

ஜீவன்பென்னி said...

இதுவும் கடந்து போகும்.!

இந்த செய்தியை கேட்டதிலிருந்து இந்த வார்த்தை என் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

நட்புடன் ஜமால் said...

மனிதனை மனிதனாக பார்ப்பது என்று வருகின்றதோ ...

அப்துல்மாலிக் said...

//ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.//

ஆறாவது அறிவை பயன்படுத்தினாலொழிய மருகத்துக்கும் மனிதனுக்கு வித்தியாசமில்லை

அழகா சொல்லிருக்கீங்க, இதுவும் கடந்துப்போகும்.. சில நாள் கழித்து இன்னொரு லீலைகள் மீடியாக்களுக்கு வருவது உறுதி

சிம்மபாரதி said...

''ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.''

அருமையான கருத்து.... இது எப்பொழுது புரியுதோ அப்பதான் எல்லாம் உருப்படும்..

சிம்மபாரதி

Unknown said...

<<<
பசிக்கின்றபோது புசிக்கவேண்டும் புசித்துவிட்டால் வயிற்று பசி அடங்கி காமப்பசி தலைத்தூக்கும்.தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி என்ற அந்தஸ்துடன் வாழ்க்கைநெறியை பேணவேண்டும்.அதை அணைப்போட்டு தடுப்பது என்பது தற்கால சாத்தியம் என்றாலும் அது நிரந்தரம் அல்ல.அணைக்குப் பின்னால் தேக்கம் இருந்துக் கொண்டுதானிருக்கும்
>>>

நல்லா சொல்லீருக்கீங்க

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சரியான,பொருத்தமான அறிவுரை.கோவில்களை,இறைவனைத்தொழுவதை விட்டு மனிதனைத் தொழுவதன் முடிவு இது!

sathishsangkavi.blogspot.com said...

//இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்//

உங்களுடன் இணைந்து நானும் இக்கருத்தை வழிமொழிகிறேன்...

அன்புடன் மலிக்கா said...

//இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்//

சரிதானே. தவறை தூண்டுவது இவர்களுக்கு குற்றமாக தெரிவதில்லை.

எழுதியுள்ளேன் இதையும்பாருங்கள்.

http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

நிலாமதி said...

நல்லா சொல்லீருக்கீங்க

கிளியனூர் இஸ்மத் said...

கருத்துக்களை வழங்கிய சகோதரர்களுக்கும் ,சகோதரிகளுக்கும் மிக்க நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....