உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, March 11, 2010

விமானத்தில் ஒரு விவாதம்

சென்ற மாதம் எனது நண்பர்களுடன் துபாயிலிருந்து இலங்கைக்கு ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன்.

பல நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவிற்காக வருகைத்தந்தார்கள்.

சார்ஜாவிலிருந்து எங்களது பயணம் ஏர் அரேபியாவில் தொடங்கியது.

நண்பர்களுடன் ஒருமித்து பயணம் செய்வது என்பது அலாதியான இன்பம்.

ஏர்அரேபியா விமானத்தில் இருக்கைகளில் நண்பர்களுடன் ஒன்றாக அமர்வதற்கு எண் கிடைக்கவில்லை.நான் மட்டும் தனித்து சகபிரயாணிகளுடன் அமரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரவு நேரப் பயணம் என்பதால் அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.மூன்று பேர்கள் அமரக்கூடிய இருக்கையில் எனக்கு நடு இருக்கை அமலாகி இருந்தது.

எனது இருக்கையின் இடது பக்கம் இலங்கைவாசி அமர்ந்திருந்தார்.அவர் என்னிடம் பேசவில்லை நானும் பேசவில்லை.அவரவர் எண்ண ஓட்டத்தில் கற்பனையில் சிந்தனையில் ஓத்திகைகளை மனதில் காட்சிகளாக்கி படம் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

எனது வலதுப் பக்க இருக்கைக்கு தாடிவைத்த ஐம்பது வயதை கடந்தவர் வந்தமர்ந்தார்.அவர் தோற்றத்தை வைத்து இஸ்லாமியர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

மதத்தை அல்லது மார்க்கத்தை முழுமையாக பேணுகிறார்களோ இல்லையோ ஆடைகளில் தங்களை எந்தக் கொள்கையை எதைச் சார்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அவர் என்னைக்கண்டு புன்முறுவல் பூத்தார். தன் பெயரைச் சொன்னார் என் பெயரைச் சொன்னேன்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டார் இந்த பரசஸ்பரம் நானும் இஸ்லாமியன் என்பதினால் அவரிடம் ஏற்பட்ட உந்தலாக இருந்தது.

இந்தியன் என்றார் நானும் என்றேன்.


அதோடு அவர் இருந்துவிட வில்லை.கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்.எங்கு போகிறீர்கள் எதற்கு போகிறீர்கள் ஏன் போகிறீர்கள் என்று துப்பறியும் காவலரைப்போல அவர் கேட்டது எனக்கு ஒருவித சலிப்பை கொடுத்தது.இருந்தாலும் பதில் கொடுத்தேன்.

விமானம் பறக்க ஆரம்பித்தது தன்னிடம் ஹைதராபாத் பிரியாணி அதிகமாகவே இருக்கிறது என்னோடு பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

நன்றி... நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன்.மீண்டும் அழைத்தார் மீண்டும் நன்றி சொன்னேன்.ஹைதராபாத் பிரியாணி ருசியாக இருக்கும் மிஸ் பண்ணாதீங்க என்றார்.

(உணவு ருசியாகத்தான் இருக்கும் உண்ணக்கூடிய நாம் ருசியாக இருக்கின்றோமா? என் உள்மனம் கேட்டது)

அவர் உண்பதற்கு ஆயத்தமானார் நான் எனது நண்பர்களின் இருக்கையைத் தேடி சென்றேன்.சிலர் உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் உரையாடிவிட்டு எனது இருக்கைக்கு வந்தேன்.

பிரியாணியை முடித்துவிட்டு எனக்காகவே காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார்.
நான் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார்.

பொதுவான பேச்சல்ல.இறைவனைப் பற்றிய உரையாடல்.அவர் பேச பேச நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இஸ்லாமியனாக இருப்பதினால் இவர் பேசுகிறாரா அல்லது இந்த இருக்கையில் வேறு யார் அமர்ந்திருந்தாலும் இவர் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

பலரிடம் இறைவனைப்பற்றிய அறிவைவிட நம்பிக்கையே அதிகமாக இருக்கிறது.
தன் நம்பிக்கையை எப்படியாவது மற்றவர்களிடம் காட்டிவிட வேண்டும் என்பதில் பலர் ஆவர்வமாக இருக்கிறார்கள்.

ரொம்பவும் சுவாரஸ்யமாக பேசினார்.என்னிடம் தான் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது.அவர் பேசிய பகுதிகளை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதனாலும் கூட சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்.

இவர் தனக்கு இதுவெல்லாம் தெரியும் என்று பேசினாரா அல்லது எனக்கு இவைகள் தெரியாது என்று பேசினாரா? ஏன்று விளங்கவில்லை.ஆனால் ஒன்று மட்டும் விளங்கியது சரியா இவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று.

இவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழி நான் வாயை திறக்கனும் என்று முடிவு செய்தேன்.வாய்ப்பை எதிர்பார்த்தேன் அவர் பேச்சில் ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது உள்ளே புகுந்தேன்.

இறைவனைப்பற்றி நிறையவே பேசினீர்கள் உங்களிடம் இறை நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது சந்தோசம்.
இறைவனை நம்ப வேண்டுமா அறிய வேண்டுமா? முதல் கேள்வியை வைத்தேன்.
அவர் மௌனமாகவே என்னைப்பார்த்தார்.மீண்டும் தொடர்ந்தேன் இந்த உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் மட்டுமே இருந்ததாக வேதம் கூறுகிறது.
ஓன்றை படைக்க எண்ணினால் ஆகுக என்று இறைவன் கூறுவான் அது ஆகிவிடும் என்று வேதம் சொல்கிறது அப்படியான படைப்பில் இறைத் தன்மை இருக்கிறதா?இல்லையா? என்று கேட்டேன்.

மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மன்னிச்சுடுங்க! நம்மைப்போன்ற பலரிடம் இஸ்லாமிய வெளிரங்க ஞானம் அதிகமாக இருக்கிறதே தவிர உள்ரங்க ஞானம் இல்லை.இஸ்லாம் ஒரு பகுதி அல்ல அது முழுமையானது.இஸ்லாம் தர்க்கத்திற்குரியது அல்ல வாழ்வதற்குரியது ஆனால் அதை தர்க்கதிற்குக்கென்று பலரும் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் தன்னை அறியப்படும்போது தன் இறைவனை அறிகிறான்
இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்திருப்பவர்கள் தன்னை அறிவதில்லை.அவர்கள் இறைவனை தன்னை விட்டும் பாரதூரத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறி முடித்தேன்.

மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் மதங்களும் மார்க்கமும் ஆனால் நாம் அதிகமாக இறைவனைப்பற்றி பேசுகிறோம் அதிகமாக மனிதர்களை நேசிக்கின்றோமா?

சரிதான் சரிதான் என்று மெல்ல இந்த வாதத்திலிருந்து விலகுவதைப் போல தனதிருக்கையில் சாவசமாக சாய்ந்தார்.

அப்பாடா தப்பித்தோம் என நானும் இருக்கையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினேன்.

இலங்கை போய் சேரும் வரை அவரும் நானும் எதுவும் பேசவில்லை.இறங்குவதற்கு முன் இருவரும் கைக் குலுக்கி விடைப் பெற்றோம்.

இந்த பதிவு விவாதத்திற்காக அல்ல

8 comments:

Barari said...

IRAIVANAI NAMBUVATHU /IRAIVANAI ARIVATHU MATRUM THANNAI ARIVATHU KONJAM VILAKKUNGALEN SAKOTHARAR ISMATH AVARKALE.

வடுவூர் குமார் said...

நல்ல விவாதம்.
அவர் உங்களை பற்றி எங்காவது எழுதியிருக்கப்போகிறார்!! :-)

அரபுத்தமிழன் said...

இறைவனைப் பற்றிய பேச்சென்றால் அவனை அறிந்தவர்களுக்கு
ஆவல் அதிகரிக்க வேண்டுமே 'லைலாவைப் பற்றி யார் கூறினாலும்
மஜ்னூனுக்கு மகிழ்விப்பது போல்', அல்லது நீங்கள் அறிந்ததை
அவருக்காவது எடுத்து சொல்லியிருக்கலாமே. அதை விடுத்து அவரைக்
குறை சொல்வதிலேயே தெரிந்து விடுகிறது உமது அறியாமையும் தற்பெருமையும்

கிளியனூர் இஸ்மத் said...

பராரி ,

அதை எழுதினால் தேவையில்லா விவாதம் ஏற்படும் என தவிர்க்கிறேன். நன்றி

வடுவூர் குமார்,
என்னைப்பற்றி அவர் எழுதினால் சந்தோசம்தான் எனது குறைகளை தெரிந்துக் கொள்வேன். வருகைக்கு நன்றி.


அ.இப்னுஜுபைர்,

அறியாமை அறிவின் ஒரு பகுதி .... எனது அறியாமை உங்களுக்கு அறிவாக இருக்கிறது என்றால் சந்தோசம் .மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கு முன் தான் கற்றுக் கொண்டுடிருக்கின்றோம் என்ற எண்ணமிருந்தால் யாரும் யாரோடும் விவாதம் செய்யமாட்டார்கள்.
இனிப்பின் ருசியை சொல்லவோ எழுதவோ முடியாது.கருத்துக்கு நன்றி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்ல பதிவு.

Anonymous said...

நீங்கள் கலீல் அவ்ன் குழுவை சேர்ந்தவரா ?

mohamedali jinnah said...

கருத்து பிடித்தது . இறுதியில் ஈர்ப்பு இணிப்பு

Anonymous said...

enakku piditthirunthathu! Yosikka vendiya vishayam thaan!
Gee..Riyadh

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....