உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, March 23, 2010

போலி மனிதர்களும், போலி மருந்துகளும்


இன்றைய நவீன உலகில் சம்பாத்தியம் என்பது போட்டிகளாக மக்கள் மனதில் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சம்பாத்தியம் என்பது வாழ்வதற்கு அவசியமான அத்தியவாசயமான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் எப்படி சம்பாதிக்கிறோம் என்பதில் பலவித கருத்துக்கள் இருக்கிறது என்றாலும் சம்பாத்தியத்தில் நேர்மை என்பது ஒவ்வொருவரும் பேனவேண்டியது அவசியமான ஒன்று என்பது பொதுவிதி.

நாம் எப்படி சம்பாதிக்கிறோம் என்பது அவரவருக்கு மட்டுமே தெரிந்த இரசியமாக இருக்கிறது.

ஒருமனிதனுடைய இரகசியமான செயல்கள் பகிரங்கமாகும்போது மற்றவர்களுக்கு மத்தியில் அவன் பொதுவிதியை நேர்மையை மீறியவனாக காட்சி அளிக்கிறான். பலருடைய விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறான்.
இந்த விமர்சனங்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்கும் தவறிலிருந்து திருந்துவதற்கும் வாய்ப்பை கொடுக்கிறது.ஆனால் தவறு செய்யக் கூடியவர்கள் அதை தவறு என்று உணரும்பட்சத்தில் மட்டுமே அந்த தவறு களையப்படும்.நாட்டின் சட்டம் கடுமையாக தண்டிக்கப்படக் கூடியதாக இருந்தால் தவறுகளிலிருந்து மனிதர்களை குறைக்கலாம்.ஆனால் சட்டம் படித்தவர்களே குற்றவாளிகளை நிரபராதி என்று வாதாடி தங்களின் பொருளீட்டை பெருக்குவதற்கு சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.

கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் யாரை எப்படி ஏமாற்றலாம் என்று இன்றைய நவீன உலகம் ஆசைகளை தூண்டி பலரையும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தனிமனித நேர்மை மனிதர்களிடம் இல்லாதவரையில் ஏமாறவும் ஏமாற்றவும் செய்வார்கள் என்பது திண்ணம்.

தெருவுக்கு ஒரு ஆலயம் வீட்டுக்குள் வணக்க வழிபாடு இப்படி பரவிவரும் பக்தி நிலையில் இறையை தொழுகின்ற மனிதர்கள் அந்த இறையிடம் பொருளைத்தான் வேண்டுகிறார்களேலொழிய நேர்மையை வேண்டுவதில்லை.

ஓவ்வொரு மனிதனும் ஒரே உண்மையிலிருந்து வெளிப்பட்டவன் தான் என்பதை வேதப்படிப்போடு நிறுத்திக் கொள்வதால் அனுவபப் படிப்பில் ஏமாற்றவும் ஏமாறவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் காலவாதியான மருந்துகளை போலி முத்திரையுடன் மீண்டும் மக்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

யாரோ ஒருவர் இந்த மருந்தை வாங்கி அவதிப்படுவதைப் பற்றி அதை விற்ககூடியவனுக்கு துளியும் கவலையில்லை.அவனுக்கு தேவை பணம் மட்டும்தான். இப்படி பணத்தின் மீது குறியாய் இருப்பவர்களுக்கு நேர்மை என்பதோ ஒழுக்கம் என்பதோ துளியும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.மனித உயிர்களை விட பணம் மதிப்பு வாய்ந்ததாக பலரின் மனதிலும் குடிக் கொண்டுள்ளதால் தவறுகள் எளிமையாக நடந்துக் கொண்டிருக்கிறது.இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

காலாவாதியான மருந்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் கால தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் வருவதற்குள் எத்தனை உயிர்கள் பறிப்போகும் என்பது யாருக்குத் தெரியும்.

கல்வித்துறையும் வியாபாரமாகிவிட்டது அதில் பயிலும் மாணவர்களும் வியாரா நோக்கிலேதான் பயின்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாளை இவர்களின் எதிர்காலம் மனித நேயத்தைவிட வியாபாரநேயமே அதிகரிக்கும்.

எதையுமே லாபநோக்கில் பார்க்க கூடிய மனோநிலையை இந்த சமூகம் உருவாக்கிவருகிறது. இந்த நிலை மாறாத வரையில் எல்லாப் பொருள்களிலும் எல்லா மனங்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்யும்.

மனிதநேயத்தை பயிற்றுவிக்கக் கூடியவர்களும், பயில்கிறன்றவர்களும், அதைப் பேணுகின்றவர்களும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இது அதிகமாகத வரையில் பல திடுக்கிடும் செய்திகளை தினசரிகளில் தினம் கண்டுக் கொண்டுதானிருப்போம்.

4 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இன்னிக்கு நாந்தான் ஃப்ர்ஸ்ட். அப்புறம் நீங்க சொல்லியிருக்கும் கருத்து சரியான,காலத்திற்குகந்தது.ஆனாலும் யாருக்கும் அவகாசமில்லை.இறை தான் துணை.

ஸாதிகா said...

///தெருவுக்கு ஒரு ஆலயம் வீட்டுக்குள் வணக்க வழிபாடு இப்படி பரவிவரும் பக்தி நிலையில் இறையை தொழுகின்ற மனிதர்கள் அந்த இறையிடம் பொருளைத்தான் வேண்டுகிறார்களேலொழிய நேர்மையை வேண்டுவதில்லை.
///

///நாட்டின் சட்டம் கடுமையாக தண்டிக்கப்படக் கூடியதாக இருந்தால் தவறுகளிலிருந்து மனிதர்களை குறைக்கலாம்.ஆனால் சட்டம் படித்தவர்களே குற்றவாளிகளை நிரபராதி என்று வாதாடி தங்களின் பொருளீட்டை பெருக்குவதற்கு சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.///வைர வரிகள்.அவசியமான பதிவு,அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள் சகோதரரே
//

அன்புடன் மலிக்கா said...

போலியாய் வாழ்ப்பபழகிக்கொண்டவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பது?எப்படி?

/மனிதநேயத்தை பயிற்றுவிக்கக் கூடியவர்களும், பயில்கிறன்றவர்களும், அதைப் பேணுகின்றவர்களும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்/

அதனால்தான் இப்படியெல்லாம் மனிதன் மனிததுடன் வாழத்தவறிவிடுகிறான் தான் வாழ்ந்தால் போதுமென்று..

நேரம்கிடைகும்போது பார்வையிடுக.
http://fmalikka.blogspot.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....