உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, October 11, 2010

மறதி இல்லையெனில் இந்த உலகம் மயானம்


மரணம் எங்கிருந்து தொடங்குகிறது?
என்ற கேள்விக்கு பிறப்பு எங்கிருந்து தொடங்கியதோ அங்கிருந்துதான் மரணமும் தொடங்குகிறது என்ற பதில் கிடைக்கும்.

மரணம் என்பது பயமா? என்று கேட்டால் கிட்டதட்ட பலருக்கும் பயமாகவே தான் இருக்கிறது.
ஒன்றைப் பற்றி அறியாத போது பயமே அறிவாக இருக்கும்.பாம்பை கண்டு "பாம்"மை கண்டு
அச்சப்படுதலின் ஆணிவேர் என்ன? மரணம்தான்.

ஆனால் மரணத்தைக் கண்டு அச்சப்படாதவர்கள் யார்?

சூபியாக்கள் மஹான்கள். இவர்கள் அச்சத்தை அறிந்தவர்கள் துக்கத்தை துறந்தவர்கள்.
மரணம் என்பது ஒரு மாற்றம் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவது.

மகான் தாஹிர்பாவா கூறினார்கள்
“இருப்பது அழியாது இல்லாதது உருவாகாது”- இதுதான் இந்த பிரபஞ்சத்தின் தாரக மந்திரம். அழிவென்பது எதற்குமே இல்லை அனைத்திற்கும் மாற்றம் மட்டும்தான் உண்டு.
என்னதான் மரணம் ஒரு மாற்றம் என்று சொன்னாலும் அது நம்மைச் சார்ந்தவருக்கு நிகழும்போது நம்மையறியாத ஒரு அதிர்ச்சி கலக்கம் துக்கம் நமக்குள் ஏற்படத்தானே செய்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மரணத்தின் நிகழ்வை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.நாம் நடக்கும் போது நமக்கு முன்னும் பின்னும் வருவது நிழல் அல்ல மரணம்.

மரணம் என்பது நிச்சயம் என்பதை நாம் உணர்ந்திருந்தாலும் நமக்குள் இருக்கும் ஈகோ நம்மைவிட்டு மரணமாவதில்லையே. மனிதனுக்கு மறதி இல்லை எனில் இந்த உலகம் மயானம்தான். மறதியால் தான் மனிதன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

எதைமறக்க வேண்டுமோ அதை மறந்து விட்டால் துக்கமும் துயரமும் பறந்துபோகும் நல்ல தூக்கமும் நிம்மதியும் நம்மிடம்நிறைந்துபோகும்.

முயற்சிப்போம் நம்மிடம் நிறைந்திருக்கிறது.

4 comments:

katheem said...

மறதி பற்றியதுதான் எனினும் மறக்கக்கூடாத தகவல்.

கிளியனூர் இஸ்மத் said...

Br.katheem Thanks....

ஸாதிகா said...

ஆஹா..அருமையான தத்துவமழை பொழிந்து விட்டீர்கள் சகோதரரே!இடுகையில் மனதிற்கு பூஸ்ட் கொடுக்கும் வரிகளை பொன்னெழுத்துக்களில் பொறிக்கலாம்.//எதைமறக்க வேண்டுமோ அதை மறந்து விட்டால் துக்கமும் துயரமும் பறந்துபோகும் நல்ல தூக்கமும் நிம்மதியும் நம்மிடம்நிறைந்துபோகும்.

முயற்சிப்போம் நம்மிடம் நிறைந்திருக்கிறது. // வைரவரிகள்.நன்றி!

கிளியனூர் இஸ்மத் said...

Thanks சகோதREE ஸாதிகா

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....