உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, October 22, 2010

கண்ணாமூச்சி ரேரே…





சின்னபிள்ளையில் விளையாடிய கண்ணாமூச்சி ரேயை நாம் மறந்திருக்க முடியாது இப்பவும் கூட சிலர் அல்லது பலர் விளையாடலாம் நமது குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்க்கவும் செய்யலாம்.

கண்ணாமூச்சி ரேரே என்பது ஒரு விளையாட்டு ஒருவர் கண்ணை பொத்திக்கொள்ள வேண்டும் மற்றவர்கள் ஓடி ஒளிந்துக்கொள்வார்கள். ஒளிந்துக்கொண்டவர்கள் ஜூட் சொன்னதும் அவர்களை கண்டுப்பிடிப்பதுதான் இந்த விளையாட்டின் சுவாரஸ்யம்.

ஓளிந்துக்கொண்டிருப்பவர்களை கண்டுபிடிப்பது கஸ்டமில்லை என்றாலும் அவர்களை கண்டுப்படிக்கும் வரையில் களத்தில் உள்ளவர் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருப்பார். அந்தத்தேடலில் ஆர்வமும் நம்பிக்கையும் மிகைத்திருக்கும் .

இதைபோலதான் வாழ்க்கையும்; கண்ணாமூச்சி விளையாடுவதைபோல நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறோம் வாழ்க்கை ஒளிந்துக்கொண்டு இருக்கிறது அதைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வழியில் செல்கின்றோம்.
நம்மில் எத்தனைபேர்கள் ஒளிந்திருக்கும் வாழ்க்கையை கண்டுபிடித்துக் கொண்டோம் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

மனிதன் தனது உண்மையை அவன் தன்னிடம் தேடப்படுவானாகில் அவனிடம் ஒளிந்திருக்கும் சுயம் வெளிப்படும் தன்னைவிட்டு வெளியில் தேடினால் அவன் ஆயுட்காலம் அவனுக்குபோதாது.

கண்ணை பொத்திக் கொள்வது அறியாமை தேடலில் கண்டுப்பிடிக்கப்படுவது அறிவுடமை.
நம் வாழ்க்கை கண்ணாமூச்சிதான் அதனால் நம்மை வெளியில் தேடவேண்டாம் நம்மில் தேடுவோம்.
நாம் தொலைந்துவிட்டிருக்கிறோம் அதனால்தான் ஒவ்வொன்றிலும் வித்தியாசங்களை காணுகின்றோம் எல்லாவற்றையும் பிரித்துப்பார்க்கின்றோம் ஒருவருக்கு துன்பம் என்றால் இன்னொருவர் சந்தோசப்படுவதை பார்க்கிறோம்.

நம்மிடம் நிறையசுயநலம் இருக்கிறதே தவிர கொஞ்சம்கூடசுயம் இல்லை; சுயம் ஒன்று நம்மிடம் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இப்படி தெரியாத விசயங்கள் எவ்வளவோ இருக்கிறது. தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போவதினால் தெரியாதவர்களிடம் தெரிந்ததை பேசும்போதுகேட்பவர்களுக்கு பேதமாக தெரிகிறது.

தனக்கு புரியாத விசயங்களை நாம் மறுப்பதால் அவைகள் இவ்வுலகில் இல்லாமலில்லை இன்று புரியாத ஒரு விசயம் இன்னொரு நாள் புரியும்போது புலங்காயிதம் அடைவோம்.
இதுவும் அப்படியாகக்கூட இருக்கலாம் புரியும்போது பூரித்துக்கொள்ளுவோம்.

அதுவரையில் இது மொக்கைதானே?

12 comments:

எல் கே said...

ஹ்ம்ம் நல்லா இருக்கு

Admin said...

முற்றிலும் மாறுபட்ட சிந்தனை. வாழ்த்துக்கள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீங்கள் யோசித்து எழுதியதைப் படித்து,
எங்களையும் யோசிக்கவைத்துவிட்டீர்கள்.
நன்று!

Anonymous said...

passing some information for some knowledge keep it up - raja kamal

அ.மு.அன்வர் சதாத் said...

அன்பு அண்ணா........
யதார்த்தத்திநூடே ஒரு புரிதல்.
மிகவும் நன்று.
அ.மு.அன்வர் சதாத்
http://engenaan.blogspot.com/

mohamedali jinnah said...

வார்த்தைகளை வைத்து விளையாடி நல்ல கட்டுரை தன்தமைக்கு வாழ்துக்கள் . எங்கள் ஊரில் அதற்கு சிட்டாகோ என்றும் சொல்வர்

கிளியனூர் இஸ்மத் said...

LK உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி அப்துல்பாஸித்

கிளியனூர் இஸ்மத் said...

யோசனை எல்லாம் ஒன்றுமில்லை தெரிந்துக்கொண்டதை பகிர்ந்துக் கொள்கிறேன்...அவ்வளவுதான் வருகைக்கு நன்றி நிஜாம்.!

கிளியனூர் இஸ்மத் said...

யோசனை எல்லாம் ஒன்றுமில்லை தெரிந்துக்கொண்டதை பகிர்ந்துக் கொள்கிறேன்...அவ்வளவுதான் வருகைக்கு நன்றி நிஜாம்.!

கிளியனூர் இஸ்மத் said...

அன்வர் சதாத் ....யதார்த்தத்துடன் நாம் வாழ்ந்தால் நம் சமுதாயத்தில் இத்தனை அமைப்புகள் உருவாகி இருக்காது...உங்களை வலைதளத்தை பார்த்தேன் அருமையாக அமைத்திருக்கிறீர்கள் உங்கள் எழுத்துக்களில் தேடல் நிறைந்திருக்கிறது...தேடப்படுவது விடையாக கிடைப்பதற்கு வாழ்த்துக்கள்...வருகைக்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

நீடுர் சீசன் முஹம்மதுஅலி.....வாழ்க்கையே விளையாட்டாக தாங்கள் ஆடிக்கொண்டிருக்கும்போது வார்த்தை விளையாட்டு பெரிய விசயமே அல்ல...கண்ணாமூச்சி ஆட்டத்தை நம்மஊர்களில் சிட்டாக்கா என்றுதான் சொல்வோம் மறந்துபோனதை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....