உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 8, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 3

இது ஒரு பாலை அனுபவம்

ஒரு நபருடன் அன்சாரி எங்கள் அருகில் வந்து இவர்தான் எனது தம்பி என்று சொன்னபோது எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் திட்டம் தீட்டிய விசயத்தை கூறியபோது அன்சாரி நம்பவில்லை அவர் தம்பியிடமே நீங்க போன் செய்தீங்களா? என்று கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்து இறுதியாக ஏர்போர்ட் வந்துபோன சிலவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் அதாவது நானே ஏற்றுக் கொண்டேன்.

இப்படி கலாட்டாக்கள் நிறைய நடந்தேறியக் காலம் அது. அரபி வீடுகளில் இரவு பத்து மணிக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல இயலாது சில நேரங்களில் வெள்ளிக்கிழமை அல்லாத நாட்களில் திரையிடப்படும் திரை படங்களுக்கு செல்வது கடினமாக இருக்கும் என்றாலும் அன்சாரி இடம் சினிமா டிக்கேட் பணத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு நான் கம்பியை நீட்டிவிடுவேன் அரபிகள் கேட்டால் நான் உறங்குவதாக சொல்லி சமாளிக்க கொடுத்த லஞ்சம் அது.

சினிமாவைப்பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்துதான் வீட்டுக்குள் வரவேண்டி இருக்கும் பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவதுபோல நானும் அரபி இடம் மாட்டி உள்ளேன்.
நமது ஊர்களில் அப்பாவிடம் திட்டுவாங்குவதுபோல இவர்களிடம் வாங்கிக் கொள்வது வழமையாகிவிட்டது.

எனது ஊர் நண்பர்கள் பக்கத்தில் ஓர் ஏரியாவில் பணிப்புரிவதாக சில நண்பர்கள் கூற அவர்களைத் தேடி கண்டுப்பிடித்து அலாவுவதில் எத்தனை இன்பம்.
சில ஹவுஸ்பாய்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் தங்களின் ஸ்பான்சரை விட்டு வேறு இடத்தில் தெரியாமல் அதாவது ஓடிப்போய் வேலை செய்வார்கள் அப்படி செய்வதினால் மாதச்சம்பளம் ஸ்பான்சர் தருவதைவிட இரு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக கிடைக்கும்.

அப்படி ஒருநாள் நண்பன் சிஹாபுதீன் சகோதரர் ஒடிப்போய் வேலைப்பார்த்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள எனக்கும் அன்சாரிக்கும் அதே சிந்தனையாக இருந்தது.
இந்த சம்பளத்தில் வேலைப்பார்த்து நாம் எப்போது முன்னுக்கு வருவது அதனால் கம்பியை நீட்டிவிடலாம் என்று திட்டம் வகுத்தோம் நண்பன் சிஹாபுதீன் இடம் இதனால் உனக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? காரணம் நீ அடிக்கடி இங்கு வந்துபோவதினால் உனக்கு தெரியும் என்று அரபுகள் நம்புவார்கள் அல்லவா அப்படி வந்தால் நீ எப்படி சமாளிப்பாய் என்று பலவாறு கேள்விகள் கேட்டு அவன் கொடுத்த பதிலும் தைரியமும் அங்கிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக இருந்தது.

அன்சாரி சகோதரர் அபுதாபியில் பணிபுரிகிறார் அவருக்கு தகவல் சொல்லி எங்களை அழைத்துப்போவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஒருவெள்ளிக்கிழமை எப்பவும்போல் மதியம் பஜார் புறப்படுவதுபோல் சில பைகளில் மட்டும் துணிகளை எடுத்துக் கொண்டு - கொண்டு வந்த பேக்குகளை அங்கேயே விட்டு சென்றோம். பேக்குகளை மட்டுமா விட்டுச் சென்றோம் எங்கள் பாஸ்போர்ட்களையும் தானே விட்டுச் சென்றோம்.

இரவு புறப்பட்டு அபுதாபி வந்தடைந்தோம் தமிழர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு பிளாட்டில் தங்கிருந்ததை பார்த்த மனம் சந்தோசமடைந்தது. தாயகத்தில் இருப்பதைப்போன்ற உணர்வைக் கொடுத்தது.

அங்கிருந்தவர்கள் பலரும் பல கம்பெனிகளில் வேலைப்பார்த்தார்கள் யார் யாருக்கு என்ன வேலை என்று கேட்டறிந்தேன். ஒவ்வொருவர்களும் ஒரு வேலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கென்று ஒரு வேலை இருக்கிறது ஆனால் எனக்கு நான் என்ன படித்தேன் எனக்கு என்ன வேலைத் தெரியும்? என்னுடைய எதிர்காலம் என்ன? எனக்கு யார் வழிகாட்டி? அப்போது தான் அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“படிப்புடைய அருமை உனக்கு இப்பத் தெரியாது நீ கஸ்டப்படும்போது நீ உணர்ந்து பார்ப்பாய். உன்னை சம்பாதிக்க வேண்டி வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை புத்திபடிக்கத்தான் அனுப்புகின்றோம்” என்ற வார்த்தைகள் என் எண்ணத்தில் வந்துபோயின.
தனது பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பெற்றோர்களிடமும் இருக்கிறது ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாக மாற்றிக் கொள்வதும் பெற்றோர்களே தான்.

பிள்ளைகளின் மேல் எதிர்பார்ப்புகளை மட்டும் வைத்திருந்தால் போதுமா? அவர்களுக்கு ஆர்வம் கொடுத்து வழிகாட்டுவது யார்? பிள்ளையை கண்கானிப்பது யார்? பள்ளிக்கூடம் சென்றானா? அல்லது வெளியில் சுற்றுகிறானா? படிக்கிறானா? பிட்அடிக்கிறானா? கட் அடிக்கின்றானா? அவனுக்கு அல்லது அவளுக்கு எதன் மீது அளவுகடந்த ஆர்வம்?அவனுடைய நண்பர்கள் யார்? அதிகமாக எந்த விளையாட்டை விளையாடுகிறான்? இப்படி ஒவ்வொன்றையும் ஆய்வு செய்த பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

இப்படி எல்லாம் இன்று எனது பிள்ளைகளுக்கு நாளை அவர்கள் பதிவுபோடாத வண்ணம் செயல்படுவதற்கு முயற்சிக்கிறேன்.

அபுதாபியில் அன்சாரியின் சகோதரர் யாரிடமோ விசாரித்து எங்களை பெனியாஸ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சமையல் வேலைக்கு சேர்த்துவிட முயற்சி செய்தார்.
அந்த பெனியாஸ் என்ற ஊர் யமனிகள் அதிகம் வாழக்கூடிய இடமாக இருந்தது நம்மூர் அரசு காலனிகளைப்போல அபுதாபி மன்னர் அரசு ஊழியர்களுக்கு காலனிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் கட்டிக் கொடுத்துள்ளார் அங்கு பல வீடுகளில் தமிழ் நண்பர்கள் தான் சமையல்காரர்களாக பணிபுரிகிறார்கள்.அங்குதான் எங்களுக்கும் வேலை கிடைத்தது.
இங்கு எனது முன்னால் நண்பர்களும் பணிபுரிந்ததினால் அவர்களுடன் ஜாலியாக பொழுது போனது.
ஆனால் அங்கு புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்தது அப்படிபட்ட நண்பர்கள் அங்கு குறைவு அதனாலயே அதிக நாட்கள் அங்கு எனக்கு தாக்குபிடிக்கவில்லை.

அங்கிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அபுதாபி பார்டருக்கு என்னையும் எனது உறவினரையும் ஒரு அரபி அழைத்துச் சென்றார்.

தொடர்வோம்…

7 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புதிய புதிய இடங்களுக்குச் செல்கின்றீர்கள்.
புதிய அனுபவங்கள்... தொடருங்கள்.
பாஸ்போர்ட் விட்டுச் சென்றீர்கள்;
அது தொடர்பான நிகவுகள் அடுத்தடுத்து
வருமா?
இருந்தாலும் அன்சாரி தம்பி ஏர்போர்ட்டுக்கு
வந்தது பற்றிய விவரம்தான் இன்னும் குழப்புகிறது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இருந்தாலும் அன்சாரி தம்பி ஏர்போர்ட்டுக்கு
வந்தது பற்றிய விவரம்தான் இன்னும் குழப்புகிறது.
தாயகத்திலிருந்து புறப்படும்முன் அன்சாரியின்
தம்பி, அன்சாரிக்கு தகவல் தெரிய்ப்படுத்தாமலா
புறப்பட்டிருப்பார்? அவருக்கு விசா அனுப்பிய
ஸ்பான்சர் யார்? இப்படி நீங்கள் மூவரும்
ஏர்போர்ட் போகவில்லை என்றால் அவர்
எப்படி தனது வேலையிடத்திற்கு போவார்?

கிளியனூர் இஸ்மத் said...

//புறப்படும்முன் அன்சாரியின்
தம்பி, அன்சாரிக்கு தகவல் தெரிய்ப்படுத்தாமலா
புறப்பட்டிருப்பார்?//
ஆமாம் நிஜாம் அவர் முன் கூட்டியே தகவல் கொடுக்கவில்லை.துபாய் இறங்கி போன்செய்ய இருந்துள்ளார் பலர் துபாய் இறங்கிதான் போன் செய்வார்கள்.பாஸ்போர்ட் விசயம் பின்னால வரும். எனிவே நன்றி நிஜாம்.

அ.மு.அன்வர் சதாத் said...

அன்பு அண்ணே,
உங்களின் அனுபவம் ஒரு குறும் படமாக மாற விரும்புகிறேன்.
தேவை எனில் அதின் நல்கை நானாக இருக்க தயாராக இருக்கிறேன்.
நீண்ட நாளாக ஒரு விருப்பம்.
அதாவது வளைகுடா வாழ்க்கை குறித்த ஒரு குறும்படம் எடுக்க வேண்டி.
உங்களின் அனுபவமே அதன் பூர்வீகத்தை சொல்கிறது

கிளியனூர் இஸ்மத் said...

வளைகுடா வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ கவிதைகளும் கதைகளும் வந்துள்ளன ஆனால் இன்னும் அவ்வளவாக குறும்படம் வந்ததில்லை எனது நண்பர் இஷாக் அந்நியன் என்ற டைட்டிலில் வளைகுடாவைப் பற்றி குறும்படம் எடுக்கப்போவதாக கூறி வருடம் கடந்துவிட்டது நீங்கள் முயற்சி செய்யுங்கள்.வெற்றி கிடைக்கும் ... எனிவே நன்றி.

அ.மு.அன்வர் சதாத் said...

அண்ணே,
ப்ளாக் தொடங்க சொன்னீர்கள் தொடங்கினேன்.
ஆனால் குறும்படம் என்பது நான் காணவேண்டிய ஆசைதானே தவிர அதற்க்கு துமி அளவுகூட துறைசார்ந்த அறிவு எனக்கு இல்லை.
நன்றி
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கிளியனூர் இஸ்மத் said...

ஆர்வம் இருந்தாலே அது சம்பந்தபட்ட அறிவு கிடைக்கும். கோகுலில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....