உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, January 5, 2011

எழுதப்படிக்க தெரியவில்லை என்றாலும் பழகத்தெரிந்திருக்கிறார்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 10

இது ஒரு பாலை அனுபவம்

இரண்டு மாதம் விடுமுறையில் தாயகம் சென்ற எனக்கு துபாய் திரும்பும் அந்த நாள் ஆவலைக் கொடுத்தது. கொண்டு போன காசு கரைந்துபோனதாலா? அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கியதாலா? என்றே தெரியாமல் துபாய் மீது தேடல் அதிகரித்து.

வெளிநாட்டிலிருந்து நம் தாய்நாட்டிற்கு செல்லும்போது நம்மை ஏதோ வேறு கிரகத்திற்கு சென்று வந்த மனிதரைப்போல அப்போதைய கிராம மக்கள் பார்த்தார்கள். மித்த மரியாதையும் வழங்குகினார்கள் நம்மிடம் நிறைய பணம் இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். தூரத்து உறவினர்கள் கூச்சப்படாமல் நம்மிடம் துணியும், மணியும் கேட்டார்கள்.

இன்று அப்படியே மாறிவிட்டது ஒவ்வொரு ஊர்களிலும் ஐம்பது சதவீத இளைஞர்கள் தங்களின் ஊர்களில் இல்லை; பலரும் படிப்புக்காகவும், சிலர் வேலைக்காகவும், நகரங்களை நோக்கி அன்னிய நாட்டை நோக்கி, பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் விமானப் பயணம் என்பது பெரிய விசயமாக இருந்தது. இன்று அது நம்மஊரு மினிபஸ் பயணம் மாதிரி ஆகிவிட்டது.
காலையில் சென்னையில் பார்த்தவரை சில மணி நேரங்கழித்து துபாயில் அல்லது சிங்கையில், சவுதியில் பார்க்கமுடிகிறது. தூரம் என்பதை இன்றைய விஞ்ஞானம் சுறுக்கிவிட்டது.

மீண்டும் துபாய் வந்தேன் நண்பன் சிகாபுதீன் ஆவலுடன் ஊர்செய்திகளை கேட்பான் அதை நாள் கணக்கில் சொல்லி காண்பிப்பேன். சொல்லுவதற்கும் அதை கேட்பதற்கும் மிக இனிமையாக இருக்கும்.

பணிமுடித்து இரவு நேரங்களில் பக்கத்து தெருவில் பணிப்புரியும் தேரிழந்தூர் கொல்லி பஷீர், தேரிழந்தூர் சபீருல்லா, அத்திக்கடை நைஸ்காதர் இவர்களுடன் கதைகள் பேசுவதுண்டு. நாங்கள் மட்டுமல்ல பலரும் அன்றாட அரபு வீடுகளில் நடைபெறும் கலாட்டாக்களை கூறுவார்கள் அங்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை போல் கலகலப்பாக இருக்கும்.
பல அரபு வீடுகளில் இலங்கை இளைஞிகளும் பணிப்புரிவார்கள் அதே வீட்டில் வாகனம் ஓட்டுனராக, சமையலராக பணிப்புரிவர்களிடையே காதல் மலர்ந்து சிலர் திருமணம் செய்துள்ளார்கள், சிலர் ஏமாற்றவும் செய்திருக்கிறார்கள்.

அரபிகளுக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்தால் உடனே இருவருடைய விசாவையும் ரத்து செய்து அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைத்து காதலைப் பிரித்து விட்டிருக்கிறார்கள்.
துபாய் தமிழ் பஜாரில் இருந்த ஹவாய் ஸ்டோரை எப்பவும் மறக்க முடியாது காரணம் தமிழ் வாரஇதழ்கள் புத்தகங்கள் அங்குதான் எனக்கு கிடைத்தது. அதில் பணிப்புரிந்த ஆக்கூர் அமீன் அன்று நண்பராக இருந்தார் இன்று குடும்ப நண்பராக இருக்கிறார்.

புத்தகங்களை பறிமாறிக் கொண்டதினால் கிடைத்த நட்புதான் திருவாருர் ஒலிமுஹம்மது. எனது எழுத்து ஆர்வத்தை புரிந்துக் கொண்ட அவர் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார். நாளடைவில் எங்களின் நட்பு வளர்ந்து குடும்ப நட்பாக மாறியது. என்ன செய்ய! அந்த நட்பு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் முருங்கை மரம் போல முறிந்து போனதே!.
மனம் எப்பவும் குரங்குதான் கையில் தடியுடன்தான் நடக்க வேண்டும். அவ்வபோது மனதுக்கு ரெண்டு போடு போடவேண்டும் இல்லையென்றால் அது நம்மை போட்டுவிட்டு மனம் வலிக்குதே எனப் பாடவும் செய்யும் அதுதான் மனம்.

எழுத்து அல்லது படிப்பு இப்படி இருக்கும் எனக்கு இந்த வாடையே பிடிக்காத சில நண்பர்களின் பார்வையில் அரை கிருக்கனாகத் தெரியப்பட்டேன். புதிய நண்பர்களை கண்டால் நான் விடுவதில்லை எதையாவது நான் எழுதியதை கொடுத்து படிக்கச் சொல்லி கருத்துக் கேட்பேன் அதில் ஆர்வம் எனக்கு.

ஒருமுறை ஒரு நண்பர் கடிதம் எழுதிக்கேட்டார் நானும் எழுதிக் கொடுத்தேன் ரொம்பவும் கௌரவமாக பழகினார் நான் எழுதித் தந்து கடிதத்தை வைத்து என்னை புகழ்வார் அவருடைய புகழ்ச்சி என்னுடைய கதை கவிதைகளை அவரிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொடுத்தது.

ஒருநாள் எனது அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தார் அப்போது இதுதான் சமயம் என எனது இரண்டாவது நாவலான யார் அந்தக் குற்றவாளி? –யை அவரிடம் நீட்டினேன். படித்துவிட்டு சொல்லுங்கள் என்றேன்.

எந்த ஆரவாரமுமில்லாமல் வாங்கி வைத்துக் கொண்டு இன்னொரு நாளைக்கி படிக்கிறேனே என்றார். அந்த வார்த்தை எனக்கு அவரிடமிருந்த ஆர்வத்தைக் குறைத்தது.
கடிதம் எழுதவேண்டும் என்றார் அடிக்கடி என்னிடம் கடிதம் எழுதிக் கேட்கிறாரே அவருக்கு எழுதத்தெரியாதா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருமுறை உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இன்னொருமுறை எனது கதையை படிக்க கொடுத்தபோது சொன்னார் எனக்கு எழுத படிக்கத் தெரியாது அதை உங்களிடம் சொல்ல வெட்கப்படுகிறேன் என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரைப் பார்த்தால் படித்தவர்போல தோற்றமளித்தார். பாவம் அவருக்கு எழுத படிக்கத்தான் தெரியாது ஆனால் நன்றாக பழக்தெரிந்திருந்தார். அவரைவிட வயதில் குறைந்தவனாக இருந்தாலும் மரியாதையுடன் எப்பவும் நடந்துக் கொண்டார்.

சிலர் எழுதப் படிக்கத் தெரியாமல் தங்களின் குடும்பத்தினருக்கு மனைவிக்கு கடிதம் எழுதத் திண்டாடிக்கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் டேப் ரிக்காடு பெரிதும் அவர்களுக்கு பாலமாக இருந்தது.

பெரும்பாலும் பூங்காக்களில் பாக்கிஸ்தானிகளும் இந்தியர்களும் டேப்ரிக்காடில் தங்களின் எண்ணங்களை கடிதங்களாகப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.

பதிவைத் தொடர்வோம்…

10 comments:

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அருமையான எழுது நடை. அழகாக கூறியிருக்கிறீர்கள்.

இரண்டாவது நாவலா? அப்போ முதல் நாவல். எனக்கு தான் தெரியாமல் போய்விட்டதா? ஒரு நல்ல அமீரக கலைஞரை (உங்களைத்தான் கருணாநிதியை அல்ல) நண்பராக்கி கொள்ளாமல் விட்டு விட்டேனே இது நாள்வரை.

//அரபிகளுக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்தால் உடனே இருவருடைய விசாவையும் ரத்து செய்து அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைத்து காதலைப் பிரித்து விட்டிருக்கிறார்கள்.//

இதற்கு காரணம் நீங்கள் கூறியதே

//சிலர் ஏமாற்றவும் செய்திருக்கிறார்கள்.//

//பெரும்பாலும் பூங்காக்களில் பாக்கிஸ்தானிகளும் இந்தியர்களும் டேப்ரிக்காடில் தங்களின் எண்ணங்களை கடிதங்களாகப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.//

இதை நான் பார்த்ததில்லை, இருந்தாலும் என் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். தொடருங்கள்.

அபு நிஹான்

ஹுஸைனம்மா said...

ம்.. டேப் ரிகார்டர்கள்தான் அக்காலத்திய புறாவும், அன்னமும்!!

//முருங்கை மரம் போல முறிந்து போனதே//

உடைந்த முருங்கையை நட்டு வைத்தால் மீண்டும் துளிர்க்கும்!! :-))))))

R.Ravichandran said...

I am a regular reader of your blog, good writing, best wishes

Rajakamal said...

really interesting

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி டாக்டர் P.கந்தசாமிPhd அவர்களே!

கிளியனூர் இஸ்மத் said...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) உங்களின் நட்பு கிடைத்தமைக்கு நன்றி...எனது முதல் நாவல் "டெலிபோன்டைரி"(1985)
உங்கள் வருகைக்கும் நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

//உடைந்த முருங்கையை நட்டு வைத்தால் மீண்டும் துளிர்க்கும்!! :-)))))) //

உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஹுஸைனம்மா...நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

ரவிச்சந்திரன் சார் உங்களின் தொடர் படிப்பு எனக்கு உரம்...மிக்க நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

ராஜாகமால் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....