உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, January 8, 2011

வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?

அன்பின் பதிவர்களே!

எத்தனையோ தெரியாத விசயங்களை வலைப்பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இணையதளம் நமக்கு உருவாக்கி இருக்கிறது.

ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் நூல்களை தேடி அல்லது அறிந்தவர்களை தேடி அலைந்தக் காலம் மலைஏறிவிட்டது.அறிவியலின் வளர்ச்சில் இருக்கும் நாம் அறையில் இருந்துக்கொண்டே இந்த உலகை சுற்றி வந்துவிடலாம் பல சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுவிடலாம்.

இது எல்லாம் சரிதான் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்புவிடுப்பது தெரிகிறது.

நாம் பதிவு செய்துக்கொண்டிருக்கும் நமது வலைப்பூவில் வைரஸ்தாக்குதல் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது(?) என்பதை தெரிந்த பதிவர்கள் தயவுசெய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் அல்லது லிங்க் கொடுங்கள்.

பலவாசகர்கள் எனது வலைதளத்திற்குள் வரமுடியவில்லை தலைப்புடன் நின்றுவிடுகிறது என்று புகார் செய்கிறார்கள். பலரால் கமாண்ட்டும் போடமுடியவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கெல்லாம் வைரஸ்தானே காரணம்? தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உபயோகமாக இருக்கும்...இதற்கு முன்னால் யாரும் வைரஸை நீக்குவதைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கலாம் அவர்களுடைய லிங்க் கிடைத்தால் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..

இதை வாசித்த உதவி செய்ய போகின்ற பதிவர்களுக்கு மிக்க நன்றியினை சமர்பிக்கின்றேன்.

நன்றி...நன்றி....நன்றி..!!!

8 comments:

இராகவன் நைஜிரியா said...

தேவையில்லாத ... Side Bar - ல் கொடுத்திருக்கும் live feed, திரட்டிகளின் லிங்க், ஃபேஸ் புக் விட்ஜெட்.. எல்லாத்தையும் எடுத்துடுங்க.

சிம்பிளா போடுங்க... சரியாயிடும்.

இராகவன் நைஜிரியா said...

அது மாதிரி ஃப்ளாஷ் போட்டாலும், பலருக்கு லோட் ஆவதற்கு நேரம் எடுக்கும்.

தமிழ் மணம், இண்ட்லி தவிர மற்ற லிங்குகள் விதெட் போடும் போது கவனம் தேவை.

கிளியனூர் இஸ்மத் said...

இராகவன் நைஜிரியா...உங்கள் ஆலோசனைப்படி பல லிங்கை எடுத்துவிட்டேன்...மிக்க நன்றி.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அண்ணா! என்ன தான் செய்தாலும் ஆண்டி வைரஸ், அங்கிள் வைரஸ் போட்டு வச்சா தான் சரிப்படும்.

நட்புடன் ஜமால் said...

I am able to open your blog.

May be internet explorer only causing problem.

If still some one finds problem in your blog, just try changing your template.

Keep them simple as Raghav anna said

கிளியனூர் இஸ்மத் said...

//ஆண்டி வைரஸ், அங்கிள் வைரஸ் போட்டு வச்சா தான் சரிப்படும்.//

ஹா...ஹா...ஹா... அப்படியாவது போகுதான்னு பார்ப்போம்... நீண்ட நாட்களுக்கு பின் உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி..சகோதரி க.நா.சாந்தி லெட்சுமணன்.. நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

ஜமால் இராகவன் சொன்னமாதிரி செய்திட்டேன் அடுத்து நீங்க சொன்ன மாதிரி டெம்லேட் மாத்திட்டேன்... இதுக்கு மேலயும் நான் என்ன செய்யிறது...? நன்றி.

Anonymous said...

தற்செயலாக உங்கள் வலைப்பூவில்....மேய நேர்ந்தது...சிந்தனைக்கு தீணியாக நிறைய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது...மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
இன்னும் உங்கள் வலைப்பூ தலைப்புடன் நின்று விட்டு ரொம்ப நேரம் யோசனை செஞ்சிட்டுத்தான் திறக்கிறது..

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....