உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, January 23, 2011

அரபு தமிழன்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39- தொடர்- 12

இது ஒரு பாலை அனுபவம்

பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சம்பவங்களை கோர்வைப்படுத்துவதற்கு சற்றுசிரமம்தான். சிலதருணங்களில் நண்பர்களுடன் உரையாடும் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளும் போதும் சில சம்பவங்கள் நம் நினைவுக்குள் வந்துவிடும்.அப்படித்தான் சென்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் திரும்பும்வேளை இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவர்களுடன் உரையாடினேன் இப்போது உங்களுடனும்...

ஹவுஸ்பாய்யாக இருந்த சமயத்தில் எனது அரபு முதலாழிக்கு பேரக்குழந்தை பிறந்திருந்தான்.அவன் பெயர் காலீது பின் ஜமான் ஒன்னரை மாதக்குழந்தையை கையில் அதன் தாய் வைத்திருந்தாள். அந்த குழந்தை கழுத்தை வளைத்து என்னைப் பார்த்தது சிரித்தது.இது எங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பு.

அடுத்த சில தினங்களில் அதே பார்வை அதே சிரிப்பு எனக்கு அவனை தூக்க வேண்டும் போல இருந்தது அரபியிடம் கேட்டதும் எனது கையில் அந்தக்குழந்தையைத் தந்தார்கள். எப்படி தூக்குவது என்றே தெரியாமல் திணறினேன்.

உடனே அந்த குழந்தையை ஒருடவலில் வைத்து சுற்றி மிக எளிதாக ஒரு பொம்மையை தருவதைப்போல என்கையில் தந்தார்கள். தூக்கி கையில் வைத்திருந்த என்னையே உற்றுப் பார்த்தான். இந்த பார்வை அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போலும்...

தினம் என்னை காண்பதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. நாட்கள் செல்ல செல்ல அவன் தேடல் அவன் பொற்றோர்களை விட என்னையே சுற்றி இருந்தது. தன் குழந்தையை யாராவது பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இருந்த அந்த அரபுதாய்க்கு நான் ஹவுஸ்பாய் மட்டுமல்ல இந்த குழந்தையை பாராமரிக்கும் செலித்தாய்யை போல பராமரித்தேன்.தாய்பால் கிடைக்காத அவனுக்கு புட்டி பால் நான் கொடுத்தால் மட்டும் குடிக்கும் பழக்கத்திற்கு உட்பட்டான்.

நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.

அவன் தகப்பனாருக்கு ரொம்ப வருத்தம் என் குழந்தையை ஒரு இந்தியனாக மாற்றுகிறாய் என்று கூறி என்னிடமிருந்து அவனை பிரித்தார்கள். அரபுகாரர்களின் குழந்தைகளின் அட்டுளியம் அடாவடித்தனம் எப்படி இருக்கும் என்பதை அரபு நாடுகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரியும். அப்படித்தான் அடாவடித்தனம் செய்து மீண்டும் என்னிடம் வந்தான் இதனால் எனக்கு சிரமங்கள் எழுந்தது.

ஹவுஸ்பாய்கள் மாலையில் இரண்டு மணி நேரம்தான் வெளியில் சென்றுவர முடியும் அந்த இரண்டு மணி நேரத்தையும் அவனுடன்தான் கழிக்கவேண்டும் என்ற அவனுடைய அன்பு என்னை அவனிடமே பிணைய வைத்தது. சில தருணங்களில் அவனையும் அழைத்துக் கொண்டு மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்க சென்று வருவேன்.

என் நண்பர்கள் அவனிடம் தமிழ்பேசி அழகு பார்ப்பார்கள். ஒருமுறை நண்பர்களிடம் அவன் முன் என்னை அடிப்பது போல் நடிக்கச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்ய அவன் அழுதுக் கொண்டு கற்களை பொறுக்கி நண்பர்களை அடிக்க தொடங்கினான். அப்படியே அவனை வாரி அணைத்து முத்தமிட்டேன்.என்மேல் இத்தனை அன்பா! அவன்தாயிடம் தந்தையிடம் கிடைக்காத ஏதோ ஒன்று என்னிடம் கிடைக்கிறது.

விடுமுறையில் தாயகம் சென்று இரண்டுமாதங்கள் கழித்து வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.அந்த இரண்டுமாதத்தில் என்னை பிரிந்த அவனுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கிறது என்னைப்போல். அதற்காக அந்த பெற்றோர்கள் ரொம்பவும் கஸ்டப்பட்டதாக கூறினார்கள்.

இந்த இரண்டு மாதக்காலத்தில் அவனுக்கு நிகழ்ந்த அத்தனை விசயங்களையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டான் அவனுக்கு பல் விழுந்ததிலிருந்து பல் முளைத்தது வரையில் கூறினான்.

இந்த இரண்டு மாதத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. தமிழ்கூட பல வார்த்தைகளை மறந்திருந்தான்.எப்படியாவது இவனுக்கு முழுமையாக தமிழைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஆனால் அது நிறைவேறவில்லை. குடும்பப் பிரச்சனையில் அந்த குழந்தை தனிக் குடித்தினத்ததிற்கு வேறு இடத்திற்கு சென்றுவிட்டான்.

என்றாவது அவன் இங்கு வரும்போது சில நேரங்களில் நான் ஓய்வில் சென்றிருப்பேன்.நான் இருக்கும்போது வந்தால் அரபியில்தான் என்னிடம் உரையாடுவான்.நான் தமிழை ஞாபகம் படித்தினால் அவன் சிரித்துக் கொண்டே லா...லா...என்று அரபியில் இல்லை தமிழை பேசமாட்டேன் என்று அவன் கூறும்போது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

சிலவருடங்களுக்கு பின் அந்த ஹவுஸ்பாய் வேலையிலிருந்து விடுதலை பெற்றாலும் அந்த அரபு குழந்தையின் அன்பு என் நெஞ்சத்தில் சிறைப்பட்டுதானிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் அன்னியநாட்டு குழந்தையிடம் தமிழை கற்றுக் கொடுத்திட ஆர்வம் கொண்டு அதில் வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் இன்று நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அன்னிய நாட்டுக்காரன் தேவைப்படும் சூழல் உருவாகுவதைக் கண்டு வேதனையாகத்தானே இருக்கிறது.

13 comments:

Anonymous said...

பாரிஸில் இருக்கும் நான் என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரன் மற்றும் கருபர்களிடம் குறைந்த பட்ச தமிழ் சொல்லி தருகிரனே, இப்போதோ அவர்கள் என்னை பார்த்தல் வணக்கம், நன்ட்ரி, தன்னிற், வேலை லீவு இப்படி சின்ன சின்ன வார்த்தை அவர்கள் வாயால் கேட்பது அனந்தம்

அரபுத்தமிழன் said...

என் பெயரைப் பார்த்ததும் என்ன ஆச்சோவென பக் பக்கென்று பாய்ந்தோடி வந்தேன். ஆஹா, என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள் 'இச்'மத் பாய்.
இது காலிதின் போட்டாவா இல்லை கூகுளில் பெற்றதா. முன்பே இது போன்ற ஐடியா இருந்தால் இந்தக் கொள்ளையழகு பொம்மையின் போட்டோவை என் ப்ரொஃபைலில் இட்டிருப்பேனே :)

கிளியனூர் இஸ்மத் said...

பணி செய்யும் இடங்களில் மொழி கற்றுக் கொள்வது வழமைதான் பெரும்பாலும் நல்ல வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளை மிக எளிதில் கற்றுவிடுவார்கள்...தாங்கள் நல்ல வார்த்தைகளை கற்றுக் கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

வாங்க அரபுத் தமிழன் உங்க பெயர் இருப்பதை மறந்துவிட்டு இந்த தலைப்பை வைத்துவிட்டேன்...
புகைப்படம் கோகுலில் எடுத்தது வேண்டுமானால் காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.

NADESAN said...

உங்கள் ஆதங்கம் சரியானதுதான்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

ஹுஸைனம்மா said...

உங்கள் பக்கத்து வீட்டு அரபிச் சிறுமி தமிழில் சரளமாகப் பேசுவதாக எழுதியிருந்தீர்கள் ஒருமுறை. இதில் விட்டதை அதில் தீர்த்துக் கொண்டீர்களோ? :-))))

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் வருகைக்கு நன்றி நெல்லை பெ.நடேசன்.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி ஹுஸைனம்மா அது எனது பக்கத்துவீடு அல்ல எனது நண்பர் பாரூக் பக்கத்துவீட்டு அரபிப் பெண்ணுக்கு அவர் குடும்பம் தமிழ் கற்றுக் கொடுத்ததை எழுதி இருந்தேன்.
உங்கள் வருகைக்கு நன்றி.

சிம்மபாரதி said...

ஒரு குழந்தை விட்டால் என்ன.. இன்னும் எத்தனயோ குழந்தைகள் இருக்கிறது.. கற்றுக்கொடுப்போம்.. காலம் இருக்கிறது.... அன்புடன் சிம்மா

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.//

பாராட்டுக்கள் இஸ்மத் பாய். உங்களின் இந்த உனர்வு எல்லோருக்கும் வர வேண்டும். தமிழ் கற்றுக் கொடுப்பது முக்கியமல்ல. ஆனால் அது முறையாக நல்ல வார்த்தையாக நல்ல் நோக்கத்திற்காக கற்றுக் கொடுக்க வேண்டும். பலர் கெட்ட வார்த்திகளை மட்டும் கற்றுக் கொடுப்பது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது.

கிளியனூர் இஸ்மத் said...

சிம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

அபு நிஹான் உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தொடர் வாசிப்புக்கும் நன்றி.

Mohamed Faaique said...

இந்த பதிவு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. நல்ல உருக்கமா இருக்கு...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....