உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, July 23, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எனது தாய்மாமன் மகன் மன்சூர். நாங்கள் படித்த காலத்தில் கோடைவிடுமுறையில் ஊர்ஊராக உறவினர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி வருவோம்; இன்று அவனிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு பிஸியாக இருப்பது காற்று உள்ள போதே தூற்றிக் கொள் பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.

அதிகாலையிலிருந்து இரவு வரையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் மச்சான் மன்சூரைப் பார்க்க மனம் மகிழ்கிறது. பல கஸ்டங்களை சந்தித்தவன் குடும்ப நபர்களே ஒரு மாதிரியாக பார்த்த காலம் இருந்தது அவர்கள் இன்று வேறு மாதரியாக பார்க்கிறார்கள். என்ன வித்தியாசம் பைக்கில் சுற்றியவன் இன்று இண்டு இடுக்குகளில் இனோவாவில் சுற்றுகிறான். பைக்கில் சுற்றியபோது பொருள் இல்லை இப்போது பொருளோடு இனோவாவில்.

தன் சொந்தங்களும் வளமோடு வாழவேண்டும் என்ற எண்ணமுடையவன். ஆயிரம், லட்சங்கள் மறைந்து கோடியில் பரிவர்தனைகள். பல அனுபவங்களை பெற்றவன் ஆனால் எல்லோரையும் எளிதில் நம்புவதைப்போன்று எனக்குள் பிரம்மை! எங்களுக்குள் இருப்பது உறவு அல்ல நட்பு. வயது வித்தியாசம் கொஞ்சம் இருந்தாலும் கூட சில தருணங்களில் டா போட்டு பேசிக் கொள்வதில் நெருக்கம் அதிகம் தெரியும். வளமாக, நலமாக மச்சான் வாழவேண்டும் பிராத்திக்கிறேன்.

* பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது என் எதிரே என் சகோதரன் எனக்கு அடுத்து பிறந்தவர். எங்களுக்குள் பேச்சு வார்த்தை சில காலமாக இல்லாமல் இருக்கிறது. பேச்சுவார்த்தை நேரடியாக இல்லாமல் இருந்தாலும் இதோ என் எதிரே தென்பட்ட சகோதரனை காணும் போது மனம் பேசத்தானே செய்கிறது. என்னைப்போல் என்சகோதரனுக்கும் மனம் பேசி இருக்குமே.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அந்த நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் எண்ணத்தில் பளிச்சிட்டது; அந்த ஒரு நொடியில் நம்மைப் பற்றிய ஈகோ மறைந்து சுயம் மின்னலாய் தோன்றி மறைந்ததே. எத்தனைதான் வெளுத்துப்போன முடிகளுக்கு சாயம் அடித்தாலும் அது கரைந்துதானே போகும். உன் முகத்தில் வயோதிகத்தைப் பார்த்தேன் ஆனால் முன்னைவிட நான் என்ற அகந்தை கொஞ்சம் நம் இருவருக்கும் குறைந்தது போல தெரிகிறது.

அன்பு சகோதரா! உன்னிடம் நான் வந்து பேச எண்ணுவது இது முதல்முறை அல்ல. அண்ணன் தம்பி உறவைப்பற்றி நாம் விளங்காமல் இருக்கின்றோமா? விளங்குவதற்கு எந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும்? சித்தர்கள் தவம் செய்வதற்கு குடும்பத்தைவிட்டு காட்டுக்கு செல்வார்கள். ஆனால் நீயோ உன் உடன்பிறந்தவர்களையும் உன்னை பெற்ற அன்னையையும் விட்டு விட்டு உன் மனைவி மக்களுடன் தவம் செய்துக் கொண்டிருக்கிறாய்...முக்தி பெற்றால் நலம்... என்ன செய்ய தான் ஆடாவிட்டாலும் சதையாடுதே!

* எனது சகலையின் மகனாரை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பைனனான்ஸ் இரண்டு ஆண்டு படிப்பதற்கு அட்மிஷன் போடுவதற்கு சென்னை புறப்பட்டேன்.
இரயிலில் முன் பதிவு இல்லாததால் பேருந்தில் பயணம் தொடர்ந்தது சூலை மாதத்திலும் வெப்பம் தனிந்தபாடிலில்லை. மதியம் சரியான உச்ச வெயிலில் சத்தியபாமா பல்கலைகழகத்திற்குள் சென்றேன்.

பெரும்பாலான பல்கலைகழகங்களில் அன்பளிப்பு என்று பெயரில் லட்சங்களை வாய்கூசால் கேட்கிறார்கள். கல்வி என்பது வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை அனைத்து கல்வி ஸ்தாபனங்களும் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.
அதில் படிக்கும் மாணவர்களிடம் நாகரீகம் வளர்ந்திருக்கிறது இளைஞனும் இளைஞிகளும் சமம் என்ற அளவில் இருபது வயதின் ஈர்ப்பின் விளையும் நட்பு என்ற பெயரில் பழக்கம் மிகைத்திருக்கிறது. நட்பு என்ற எல்லையுடன் இருப்பவர்கள் மிகச்சிலரே!

பெற்றோர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணிக்க வேண்டிய நிலையில் கண்காணித்தால் உங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று கூறுகிறார்கள் இன்றையக் காலத்து இளைய சமுதாயம்.


மகனாரை சத்தியபாமாவில் சேர்ப்பதற்கு பரிந்துரை வழங்கியவர் எனது ஆன்மீக சகோதரர் ஹைதர்நிஜாம்... இவர் இந்த பல்கலைகழகத்தில் பயின்று கேம்பஸில் தேர்வு பெற்று இன்று சென்னையில் நல்ல கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார். இவருடைய அனுபவமிக்க ஆலோசனையின் பேரில் சத்தியபாமாவில் அட்மிசன் போட்டுவிட்டு அவரை அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டேன். திண்டுக்கல் ஆன்மீக சகோதரர் ஐனுல்ஹக் அவரையும் அங்கு சந்தித்துவிட்டு வேளச்சேரி இரயில் நிலையத்திற்கு விரைந்தேன் பறக்கும் இரயிலில் படம் பிடிக்க கீழே காண்பது இரயிலிருந்து கிளிக்...


• சில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்திற்கு விருந்தினராய் வந்திருந்த ஜெர்னலிஸ்ட் வசீகரன் மாஸ்டர் ரிப்போர் பத்திரிக்கையின் ஆசிரியருடன் அன்யோன்ய நட்பு மலர்ந்திருந்தது. ஜனனாயக மக்கள் கட்சி என்று ஒரு அரசியல் கட்சியையும் நடத்திக் கொண்டிருப்பவர் சென்ற ஆட்சியில் மின்வெட்டு தட்டுப்பாட்டை தைரியமாக தட்டிக்கேட்டு வழக்கு தொடர்ந்த ஒரே ஜெர்னலிஸ்ட் வசீகரன்தான் என்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்துக் கொண்டேன்.

சூலை முதல்தேதியில் சென்னை மெட்ரோ என்ற பெயரில் ஆங்கில தினப் பத்திரிக்கை ஒன்றை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெறுகிறது அவசியம் வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சி அவர் சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்திருந்தார் அந்த நிகழ்விற்கு பிரபலங்கள் நிறையப்பேர்கள் இருந்தார்கள். இதில் சினிமா காமடி நடிகர் சிங்கமுத்துவும் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்திஜியின் நேர்முக உதவியாளர் திரு.வீ கல்யாணம் அவர்கள் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார். மத்திய அரசையும் அதனுடன் உள்ள கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார். காந்திஜியின் சொல்படி இந்தியாவில் மிகச்சிலரே ம் வாழ்கிறார்கள் என்றும் அதில் முடிந்தளவு தானும் பேணிநடப்பதாகவும் கூறினார். சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருடைய ஒரு மாதச்சிலவு ஆயிரம் ரூபாய் என்று எம்பது கடந்திருக்கும் திரு. வீ. கல்யாணம் கூறினார்.

வின் டிவியில் நீதியின்குரல் சி.ஆர்.பாஸ்கரன் தனது சிம்மக்குரலால் அனைவரையும் வசீகரித்தார். மக்கள் டிவியிலும் இவர் பணி செய்தவர் ஊடகத்துறையைப் பற்றி அதிலுள்ள கஸ்டங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கிடையே வசீகரனை சந்தித்தேன். அவரைப்பற்றி ஒருசில வரிகள் பேசுவதற்கு எனக்கு ஆர்வமாக இருந்தது. அமீரகத்திற்கு வந்திருந்த வசீகரனின் அனுபவம் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதைக் கூற ஆர்வமாக இருந்தேன் ஆனால் நேரம் போதாத காரணத்தினால் அவர் என்னைப்பற்றிய அறிமுகத்தை மேடையில் செய்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்து.

இந்த நிகழ்ச்சிக்கு பல விருந்தினர்களில் ஒருவர் டிராபிக் ராமசாமி இவர் தோற்றத்தில் வயோதிகர் ஆனால் செயல்பாடுகளில் பத்து இளைஞர்களுக்கு சமம் என்கிறார்கள். இவருடைய பாக்கெட்டில் கத்தை கத்தையாக பணமல்ல கேஸ் கட்டுகள். பல சமூகநல வழக்குகளை தொடுத்துக் கொண்டிருப்பவர் சென்னை வட்டாரங்களில் இவர் பிரபலம்.
இன்னும் பலர் அதில் சீனியர் ஜெர்னலிஸ்ட் ஆனந்தன் இ.கோபால் இவர் வசீகரனின் சென்னை மெட்ரோ பத்திரிக்கையின் கொளரவ எடிட்டர் ஆலோசகர். மற்றும் வழக்கறிஞர் அருளரசன் சந்தோ’ஷ்குமார் ஜனன் ஜாகிர் உசேன் தொழிலதிபர் ஹாஜி கே.ஏ.மன்சூர் இப்படி பலரைக் காணமுடிந்தது. இவர்களில் சிலருடைய அறிமுகமும் கிடைத்தது.

நிகழ்ச்சிக்குப்பின் நீதியின்குரல் சி.ஆர்.பாஸ்னை சந்தித்தேன் அவருடைய டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதித்தேன். அலுவலகம் வரும்படி கைபேசி என்னையும் கொடுத்தார்.
வசீகரினின் கனவு இதோ சென்னை மெட்ரோ தினநாழிதல் மூலம் செயல்படத்துவங்கி இருக்கிறது. பத்திரிக்கை உலகிற்கு இவர் புதியவர் அல்ல மேடையில் இறுதி நிமிடம் வரையில் அச்சிலிருந்து பத்திரிக்கை மேடைக்கு வரவில்லை எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் வாயாலேயே வசீகரன் பத்திரிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இறுதி கிளைமாக்ஸில் பத்திரிக்கை வந்து சேர்ந்தது… சென்னைக்கு மெட்ரோ வருகிறதோ இல்லையோ வசீகரனின் சென்னை மெட்ரோ நாளிதழ் இனி மாலையில் வரும் என்பது மட்டும் நிச்சயம்.


• இரவு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஊருக்கு புறப்படும் முன் என் வகுப்புத் தோழன் முஹம்மது நூஹ்கை சந்திக்க கைபேசியில் அழைத்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரிலேயே இரு நான் அங்கு வருகிறேன் என்று வந்தான் இரவு உணவை அவனுடன் பேசிக்கொண்டே அருந்தினோம். ஊருக்கு செல்ல முன் பதிவு இல்லாததால் எக்மோர் சென்று முயற்சிக்கும்படி அறிவுருத்தினான் விடைப்பெற்று அதன்படி முயற்சி செய்தோம் ஹேப்பி ரோடுவேஸ்சில் டிக்கேட் கிடைத்தது ஆனால் இருமடங்கு தொகை செலுத்தினோம் அன்று வெள்ளி இரவு என்பதால் வார விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்களின் ஊர்களுக்கு செல்கிறார்கள்…

6 comments:

ஸாதிகா said...

//இதோ என் எதிரே தென்பட்ட சகோதரனை காணும் போது மனம் பேசத்தானே செய்கிறது. //தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதுதானோ?

//ஹேப்பி ரோடுவேஸ்சில் டிக்கேட் கிடைத்தது ஆனால் இருமடங்கு தொகை செலுத்தினோம் // ஆம்னி பஸ்சில் கூட லஞ்சமா?

//பெற்றோர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணிக்க வேண்டிய நிலையில் கண்காணித்தால் உங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று கூறுகிறார்கள் // இதுதான் யதார்த்த உண்மை.

//பெரும்பாலான பல்கலைகழகங்களில் அன்பளிப்பு என்று பெயரில் லட்சங்களை வாய்கூசால் கேட்கிறார்கள். கல்வி என்பது வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை அனைத்து கல்வி ஸ்தாபனங்களும் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.// அர்சாங்கம் எவ்வளவுதான் கெடுபிடி செய்வது போல் தெரிந்தாலும் கல்விக்கொள்ளை என்பது தறிகெட்டுப்போய்கொண்டுள்ளது.இப்போது ரொம்ப டிமாண்டில் உள்ள மெக்கானிக்கல்,எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற பொறியிற் பட்டப்படிப்புகளுக்கு 10.12 லட்சம் வரை கேபிடேஷன் பீஸ் வாங்குகின்றார்கள்.என்னத்தை சொல்ல?

abusalik786 said...

vaalthukkal

nidurali said...

"என் சகோதரன் எனக்கு அடுத்து பிறந்தவர். எங்களுக்குள் பேச்சு வார்த்தை சில காலமாக இல்லாமல் இருக்கிறது. பேச்சுவார்த்தை நேரடியாக இல்லாமல் இருந்தாலும் இதோ என் எதிரே தென்பட்ட சகோதரனை காணும் போது மனம் பேசத்தானே செய்கிறது. என்னைப்போல் என்சகோதரனுக்கும் மனம் பேசி இருக்குமே."

"பேச்சு வார்த்தை சில காலமாக இல்லாமல் இருக்கிறது" You too...!
நீங்கள் பேசாமல் இருந்தது .நம்ப முடியவில்லை .
அருமையான கட்டுரை . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சரித்திரம் .அதனை பகிர்ந்துக் கொள்வதால் கொடுப்பவருக்கும் பெற்றவருக்கும் மகிழ்வு . அதில் ஒரு வழிகாட்டுதலும் உள்ளது . நல்ல காரியங்களை எடுத்து நடக்கவும் அல்லவைகளை தவிர்த்துக் கொள்ளவும் உதவும் .
எளிய தமிழ், சரளமான நடையழகு படிப்பதற்கு மகிழ்வாக உள்ளது . பெற்ற அனுபவங்களையும், கற்ற கல்வியையும் மற்றவர்களுக்கு ஏற்றி வைப்பது சிறந்த செயல் . வளர்க உங்கள் சேவை.

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி சகோதரி ஸாதிகா

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சகோதரர் அபுசாலிஹ்

கிளியனூர் இஸ்மத் said...

அன்பு அண்ணன் நீடுரின் தங்கம் உங்களிடமிருந்து இப்படியொரு வார்த்தை கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...உங்களின் வாழ்த்து எனக்கு கிடைத்த பாரத ரத்னா விருதாக எண்ணி மகிழ்கிறேன்.. மிக்க நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....