உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, July 21, 2009

மனம் கவர்ந்த மலேசியா....2

சென்னையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிங்கைக்கு தயாரானோம்…30கிலோதான் அனுமதி…அதுக்கு மேலபோன வெகுமதிங்க…

என்சொந்தக்காரங்க பிள்ளைகுட்டியுடன் சிங்கப்பூர் போகனும்னு என்கூட அனுப்பிவைச்சாங்க…அவங்க புதுசாபோறங்கலாம்…
அவங்களை வழியனுப்பிவைக்க வந்த கூட்டம்…என்னமோ என்முதுகிலே அவங்கள தூக்கிகிட்டு போறாமாதிரி ஒவர் அட்வைஸ்…(அட்வைஸ் என்றாலே எனக்கு அலர்ச்சி)….ஓருவழியா சமாளித்து அழைத்துக் கொண்டு போய்விட்டேன்…

சிங்கையில இறங்கினோம்…இஸ்லாமிய பெண்கள் தான் மூக்குவரை மூடி பர்தா அணிந்திருப்பாங்க…ஆனா சைனீஸ்காரர்கள் ஆண்கள் பெண்கள் வெள்ளை துணியாள் மூக்கை மூடிருந்தாங்க…
இது என்ன புதுகலாச்சாரமா இருக்கேன்னு யோசனை பண்ணிக்கிட்டே இமிக்கிரேசனை நோக்கி நடந்தேன்…

பெரிய கேமரா ஒவ்வொரு ஆளையும் படம் பிடிச்சது…என்னன்னு விசாரித்தா…சொல்றாங்க…ஏதோ பன்றிகாய்ச்சலாம்…வரக்கூடியவர்களுக்கு அது இருக்கான்னு பரிசோதிக்கிறார்களாம்…
அப்பத்தான் விளங்கினது ஏன் மூக்கிலே வெள்ளதுணிண்னு……மூக்கை மூடுனவனுக்கு நோய்இல்ல திறந்திருப்பவனுக்கு இருக்குன்னு நனப்பாங்களோன்னு….
நைசா பேண்ட் பாக்கெட்டுல கையவிட்டேன்…கர்ச்சிப்பை எடுத்தேன் பொத்திட்டேன்ல்ல…மூக்கை…!

இமிக்கிரேசன்ல 30 தினங்கள் சிங்கையில் தங்குவதற்கு அனுமதி தந்தாங்க…சாமான்களுடன் வெளியில் வந்தோம்…எங்களை வரவேற்க என்உறவினர்கள்…என்கூட வந்த குடும்பத்தை அழைப்பதற்கு அவருடைய கணவர்…அவர் என்னைக்கண்டதும்…அப்படியே கட்டி தழுவினார்…

அடா ரொம்ப நல்ல மனுசனா இருக்காரேன்னு நனெச்சேன்…தன் குழந்தை குட்டிக்கு உம்மா கொடுத்துவிட்டு…அப்படியே திரும்பி அவர் மனைவிக்கும் உம்மா கொடுத்தாருங்க…(அடப்பாவி என்குடும்பத்துக்கு நேராவா இதைக் கொடுக்கனும் இறங்கின உடனேயே என்குடும்பத்துல பிரச்சனைய உண்டாக்கிட்டாங்களய்யா)
நான் அப்படியே என் மனைவிபக்கம் திரும்பினேன்…அவங்கபார்த்த பார்வை ஏதோ ஒரு சீரியல்ல வடிவுக்கரசி கோபமா பார்த்தா மாதிரி இருந்துச்சு…அந்த பார்வையோட அர்த்தம்…ம்…நீங்களும்தான் இருக்கீங்களே…!(ரொம்ப மொக்கை போடுறேனோ…)


மறுநாள்…வெளியில் சுற்றுவதற்கு தயாரானோம்…என்உறவுக்காரங்களும் எங்கக்கூட வந்தாங்க…குளிக்கிறமாதிரி உள்ள இடத்துக்கு போகலாம்னு சொன்னேன்…துபாய் ஜூமேராவில் வயில்டு வாடி இருக்கே…அதே மாதிரி …
ஆனால் துபாயை விட அங்குள்ள வயில்டுவாடி நுழைவுக் கட்டணம் குறைவுதான்…துபாயில 150 திரஹம்…சிங்கையில 50 திரஹம் மட்டும்…

என்பிள்ளைகளிடம் குளிக்கப்போறோம்னு சொன்னேன்…அவ்வளவுதான்…கும்மாளம் தாங்கல…என்உறவுக்காரங்க கேட்டங்க…பொய்சொல்லாம சொல்லுங்க…நீங்க குளிச்சு எவ்வளவு நாளாச்சுன்னு…(துபாயில கோடையில் தண்ணிர் கடுமையா சுடும்மே… அதனால குளிச்சிருக்க மாட்டேன்னு நினைச்சிட்டாங்களோ)
அசடுவலிய சிரிச்சிட்டு…குளியல் விளையாட்டுன்னா… என்குழந்தைகளுக்கு பிடிக்கும்…அதான் இவங்க இப்படி அமக்களம் பண்றாங்கன்னு ஒப்பேத்தினே…

மதியம் குளிக்க இறங்கி மாலை 7 மணிக்குதான் கரையேறினோம்…பிள்ளைகள் நன்றாக விளையாடுனாங்க…குழந்தையோடு குழந்தையா நானும் விளையாடினேன்…

எந்நேரமும் வேலை டென்சன்…இப்படியே வாழ்ந்துக்கிட்டிருக்கிற நமக்கு இது மாதிரி ஒரு சூழலை உருவாக்கினால்…மனசுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்…எல்லாத்தையும் மறந்திட்டு குழந்தைகளோடு குழந்தையா அவர்களுடன் விளையாடும்போது நம்ம முகத்துல சந்தோசம் தெரியும்போது அந்த குழந்தைகள் எவ்வளவு சந்தோசப்படுறாங்க…தெரியுமா?
பெற்ற குழந்தைகளிடம் அவங்க அளவுக்கு இறங்கி அவங்க நண்பர்களா மாறும்போது தான் அந்த குழந்தைகளின் தூய அன்பினை பெற்றோர்களால் உணரமுடியும்…( ம்…நிறுத்திட்டேன் காதுல விழுது )
சென்ற பதிவிற்கு பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றிங்க….
இது தொடருமுங்க…….

4 comments:

கீழை ராஸா said...

நல்லா போகுது...இடையில் ஆங்காங்கே நகைச்சுவை நன்றாக உள்ளது...

கீழை ராஸா said...

//குழந்தைகளிடம் அவங்க அளவுக்கு இறங்கி அவங்க நண்பர்களா மாறும்போது தான் அந்த குழந்தைகளின் தூய அன்பினை பெற்றோர்களால் உணரமுடியும்…( ம்…நிறுத்திட்டேன் காதுல விழுது )//

உங்க காதுலே விழுந்தது தான் என் பின்னூட்டம்

வடுவூர் குமார் said...

அட! வந்திருந்தது தெரிந்திருந்தால் ஒரு மீட்டப் போட்டிருக்கலாமே!!

iniyavan said...

மலேசியான்னு தலைப்ப பார்த்துட்டு ஓடி வந்தேன்?

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....