உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, July 22, 2009

மனம் கவர்ந்த மலேசியா...3

நேற்று குளித்துவிட்டு உறங்குனதுல…காலையில் எழுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கிச்சு…ராத்திரி உறங்கவுவதற்கு முன்னாடியே மனைவி சொன்னங்க….
“ரெண்டு நாள் சிங்கப்பூர் போதும்…மலேசியா போய்டுவோம்…தம்பி போன் போட்டுகிட்டே இருக்கான்னு”….
மலேசியாவில் உள்ள சொந்தம்
என் துணைவியாரின் சகோதரர் எனது பாசத்திற்குரிய மைத்துனர் (படிச்சாலும் படிப்பா(ன்)ர்) பினாங்கில் குடும்பத்துடன் வசிக்கிறார்…அவருடைய தூண்டுதலும் எங்க பயணத்துக்கு ஓரு காரணம்…கிளம்பும் போதே… ரெண்டுநாளுக்கு மேலே சிங்கையில் பார்க்க இடமில்லை…மலேசியாவுல தான் அதிகமான இடம் இருக்குன்னு சொல்லிட்டாரு…
சிங்கைக்கு புதன் இரவு வந்தோம்…வியாழன் -வெள்ளி-சனி (இது முக்கியமான நாள்) –ஞாயிரு…திங்கள் அன்று மலேசியா கிளம்பிடலாம்னு…கணக்கு போட்டு சொன்னேன்…
அத்தனை நாள் என்ன பண்ணப் போறோம்னு என் துணைவி கேட்டாங்க…

இன்று வெள்ளி என் சொந்தபந்தங்களை பார்ப்போம்…

சனி…இது முக்கியமான நாள்…மாலையில் ஒரு கல்யாண நிகழ்ச்சி இருக்கு அதற்கு அவசியம் போய் வரனும் ( சிங்கையின் கல்யாண சாப்பாட்டை மிஸ் பண்ணலாமா…?)
“இந்த கல்யாணத்துக்கு அவசியம் போய்தான் ஆகனும்மா”…ன்னு கேட்டாங்க…
“ஆமாண்டி செல்லம்…தேடிவர்ற பிரியாணிய வேண்டாம்னு சொல்ல யாரும் பிரியப்படுவாங்களா…வந்த இடத்துல வருகிற வாய்ப்பை …நழுவவிடக்கூடாதம்மா”…!
“ம்…உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுங்க”…!
“தேங்ஸ்…மேடம்”…!


ஞாயிறு….சந்தோசா போறோம்….
திங்கள்…பறவைகள் பூங்கா போறோம்….இரவு மலேசியா போய்விடலாம்னு..எனது ஐசக் நீயூட்டனின் திட்டத்தை சொன்னேன்…
“ம்…கும்…சரி..இப்போ எங்கேப் போறோம்”-ன்னாங்க.
“என் மாமா வீட்டுக்கு போய்ட்டு…அப்படியே..தொழுகையை முடிச்சுட்டு சாயங்காலமா…சிங்கம் வாய்லேந்து தண்ணி ஊத்துமே ( இப்படி சொன்னா தாங்க புரியும் நாங்கலெல்லாம் கிராமமுங்க ) அந்த இடத்துக்கு போறோம்னு”- கிளம்பினோம்…

தொழுகையை முடித்தேன்…மாமா தந்த மாமிச பிரியாணியை சுவைச்சேன்…சொன்னா மாதிரி கிளம்பிட்டேன்…

துரியான் பழம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா…? துபாயில கேரிபோர் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்…விலை அதிகம்… பச்சைநிறத்தில் நம்ம ஊரு பழாபழம் மாதிரி இருக்கும் ஆனா சின்னதா இருக்கும்…
விளைச்சல் மலேசியா… ஜூன் மாதம் தான் அந்த பழத்தோட சீசன்.. நிறையக் கடையில கிலோ 5 டாலருக்கு விற்பனை செய்தாங்க…மலேசியாவுல இந்த பழத்தின் விலை குறைவாம்…இதை ஆர்வத்துடன் வாங்குவதற்கு மக்கள் கூட்டம்…
புதுசா சாப்பிடுகிற சிலருக்கு அதன் வாடை பிடிக்காது…சாப்பிட சாப்பி;ட தான் அதன் ருசி தெரியும்ன்னு சொன்னாங்க…
ஒரு பழத்தை வாங்கி என்குடும்பதாரிடம் கொடுத்தேன்…ம்கூம்…யாரும் சீண்டக்கூட இல்லை…விடுவேனா…நானே எல்லாத்தையும் சாப்பிட்டேன்…( அதுதான் எங்களுக்கு தெரியுமேன்னு சொல்றீங்களா)
இப்ப எதுக்கு இந்த பழத்தை பற்றி சொல்றேன்னா…இந்த பழத்துடைய வடிவத்தில் ஒரு பில்டிங் கட்டிருக்காங்க…பார்பதற்கு எவ்வளவு அழகு…!
துபாயில இல்லாத பில்டிங்கான்னு நீங்க சொல்றீங்க…ஆனா இது கொஞ்சம் வித்தியாசம்…!
எந்த அழகையும் ரசிக்கனுமுங்க…
இயற்கையின் அழகையும்…மனித அறிவு வெளிப்பாட்டின் அழகையும் ரசிக்கனுமுங்க… அந்த இறைவனைனுக்கு தாங்க நன்றி சொல்லனும்…!

சிங்கையில ஒரு இடத்துக்கு போகனுமுன்னா கஸ்டம் இல்ல…எம்ஆர்டி ( நமக்கு வரப்போற மெட்ரோ ரயில் மாதிரி) இரயில் எல்லா இடத்துக்கும் போகுது…இடத்துடைய்ய பேரை மட்டும் நாம் கேட்டு வெச்சுக்கனும்…துணை தேவையே இல்ல…யாருக்கும் சிரமம் கொடுக்காம சிங்கை வருகிறவர்கள் அவர்களாகவே சுற்றி பார்க்கலாம்…அவ்வளவு எளிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்…

மாலை நேரத்தில் சிங்கப்பூரின் சிங்கத்தைகான…சிங்க குட்டிகளா நாங்கப்போனோம்…பார்க்க…பார்க்க…அழகா இருந்தது…நேரம் போனதே தெரியலை…என் உறவு காரங்ககிட்ட… “சிங்கத்தோட தலை மட்டும் சிங்கமா இருக்கு…உடம்பெல்லாம் மீன் மாதிரி இருக்கே…இதனுடைய கதை என்னன்னு”…கேட்டேன்…
உடனே என் மகள்… “டேடி…நான்தானே உங்ககிட்டே கேட்டேன்…நீங்க கேட்கிற மாதிரி கேக்கிறீங்க”…?
ஹி…ஹி…ஹி….விடமாட்டேங்கிறாங்கப்பா…

கல்யாணத்துல சந்திப்போமுங்கோ….

6 comments:

அது ஒரு கனாக் காலம் said...

HAVE A NICE TIME SIR ...

கிளியனூர் இஸ்மத் said...

THANKS ...SIR

கீழை ராஸா said...

//“ஆமாண்டி செல்லம்…தேடிவர்ற பிரியாணிய வேண்டாம்னு சொல்ல யாரும் பிரியப்படுவாங்களா…வந்த இடத்துல வருகிற வாய்ப்பை …நழுவவிடக்கூடாதம்மா”…!//

ரொமான்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் போங்க

கீழை ராஸா said...

//…சரி..இப்போ எங்கேப் போறோம்”-ன்னாங்க.“என் மாமா வீட்டுக்கு போய்ட்டு…அப்படியே..தொழுகையை முடிச்சுட்டு சாயங்காலமா…சிங்கம் வாய்லேந்து தண்ணி ஊத்துமே ( இப்படி சொன்னா தாங்க புரியும் நாங்கலெல்லாம் கிராமமுங்க ) அந்த இடத்துக்கு போறோம்னு”- கிளம்பினோம்…//

அசத்துறீங்க...

கீழை ராஸா said...

இந்த பகுதிக்கு சிந்தை கவர்ந்த சிங்கப்பூர் என்று வைத்திருக்க வேண்டும்...இஸ்மத் பாய்...

வடுவூர் குமார் said...

சிங்கையில் சுற்ற இந்த ஊர் ஆள் துணையே தேவையில்லை...சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....