உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, July 20, 2009

மனம் கவர்ந்த மலேசியா...1

கோடை விடுமுறையை கழிக்க குளிர் காலத்தில் திட்டம் வகுத்தேன். குடும்பத்துடன் கூடி மலேசியா போகலாம்னு…பட்ஜெட் போட்டுபார்த்த டெம்பரேச்சர் அதிகமா காண்பிச்சது…
இருந்தாலும் இந்த மனசு இருக்கு பாருங்க அது… நாம சொல்லுறத கேட்பதே கிடையாது. நாம சொல்லி மனம் கேட்டா நாம வளர்ந்திருப்போமில்ல…மனம்சொல்லுக்குதானே ஆடுறோம்… மனைவி சொல்லுக்கு ஆடுவது போல…( ஹி…ஹி…நான் என்ன சொல்லிக்கல)

சரி ஆன்லைன் மூலமா பட்ஜெட் விமானத்தை பிடிக்கலாம்னு டிராவல்ஸ் நண்பர் அறிவுரையை ஏற்று தேடி கண்டுப்பிடிச்சேன்…
ஜூன் 15 க்கு அப்புறம் போவதற்கு மார்ச் மாதமே டிக்கேட் ஆன்லைனில் எடுத்தாச்சு…நீங்க தங்கப்போற இடம் 5ஸ்டார் ஹோட்டலா?...ன்னு நீங்க கேட்பது என்காதுல விழுகுது… ஆமா… எனது சொந்தங்கள் அங்கே இருக்காங்க… அவங்க ஸ்டார் ஹோட்டலை விட என் மனசுல சூப்பர் ஸ்டாரா இருக்காங்க…நான் ஹோட்டல்ல தங்கினா அவங்க கோச்சிக்க மாட்டாங்களா?(ஐஸ் வைக்கிறேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க)அவங்க வீட்டுல தங்கலாம்னு முடிவு.

சரிபோறதுதான் போறோமே மலேசியா பக்கத்துல உள்ள சிங்கப்பூருக்கும் போய் விட்டு வந்திடலாம்னு ஒரு ஐடியா தோனுச்சு…ம்…முதல்ல சிங்கப்பூர் போய்விட்டு அங்கிருந்து ரோடு வழியாக மலேசியா போகலாம்னு திட்டம் வகுத்தேன்…(ஏதோ நாட்டையே பிடிக்கின்ற மாதிரி)

போட்ட திட்டமெல்லாம் சரிதாங்க…போற நாட்டுக்கு இங்கு (துபாயில்) விசா வாங்கனுமில்ல… முதல்ல சிங்கப்பூர் தூதரகத்துக்கு போன் செய்து விசாவைப்பற்றி விசாரித்தேன்…

விஎஸ்ஏ –என்ற தனியார் நிர்வனத்தின் மூலம் விசா அப்ளை செய்யவேண்டும்னு சொன்னாங்க. அது துபாயில ஷேக்ஜாயித் ரோட்டுல 2வது மெட்ரோ பிரிஜ் கிராஸிங் பக்கத்தில் ஹபீப் பேங் பில்டிங்கில் 14 வது மாடியில் அந்த நிருவனம் இருக்கு…கூட்டமா இருக்குமோன்னு யோசனை பண்ணிக்கிட்டு போனா நம்மளை அவங்க எதிர்பார்த்துக்கிட்டு உட்காந்திருப்பது போல இருந்தாங்க.

அப்ளிக்கேசன் ஆன்லைனில் எடுத்து புல் பண்ணி பாஸ்போர்ட் போட்டோ2 டிக்கேட் எடுத்துகிட்டு போனேன்…பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு கையிலேயே கொடுத்திட்டாங்க…பாஸ்போர்ட் தேவை இல்ல…இது ஆன்லைன் விஸா…4 தினங்களில் விஸா கிடைக்கும்…டெலிபோன் செய்து கேட்டுக் கொண்டு வாங்கன்னு சொன்னாங்க…என்னையும் சேர்த்து 4 பேரு 500 திரஹம் கறந்திட்டாங்க…

நான்கு நாள் கழித்து விஸா வந்திடுச்சு..போய் வாங்கி பார்த்தால்…பெரிய அதிர்ச்சி…(சிங்கிள் எண்ட்றீக்கு) ஓரு முறை செல்ல தான் அப்ளை பண்ணிருந்தேன் ஆனால் (மல்ட்டி எண்ட்றீ) பலமுறை செல்ல விசா 2 வருடத்துக்கு கொடுத்திருக்காங்க…எனக்கு இன்ப அதிர்ச்சி அட நம்ம யோக்கியதை இவங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு அதனால தான் நமக்கு பலமுறை போய்வர கொடுத்திருக்காங்ன்னு சந்தோசமா நினைச்சி என் நண்பனுக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன்…

சிங்கப்பூர் செல்ல துபாயில் யார் விசா அடித்தாலும் 2 வருடத்திற்கு மல்ட்டி எண்ட்றி விசா தற்காலியமா கொடுத்து வராங்க..நீரொம்ப அலட்டிக்க வேண்டாம்னு சொன்னாரு…சப்புண்ணு போச்சு…இருந்தாலும் 2வருடம் கிடைச்சுருக்குங்குற சந்தோசம் இருந்துச்சு…(ஒருமுறை போவதற்கே முழிபிதுங்குது)

மலேசிய தூதரகத்துக்கு போன் செய்து இடம் விசாரித்தேன்…துபாய் கராமாவில் லேம்ஸிபிளாசாவுக்கு பக்கத்தில் மலேசியன் டிரேடிங் பில்டிங் இருக்கிறது…அதில் கீழ் தளத்தில் துதரகம் இயங்கி வருகிறது.

மலேசியா விசா அடிக்க 1-பாஸ்போர்ட் 2-போய் வர டிக்கேட் 3- நம்முடைய கம்பெனி லட்டர் 4- மலேசியாவில் தங்குவதற்கான ஹோட்டல் புக்கிங் (உறவினர் இருக்காங்க அங்க தங்கப்போறோம்னு சொன்னா உறவினர்களுடைய விபரம் அவங்களுடைய அழைப்பிதழ்) 5- 2 புகைப்படம் இதைக் கொடுத்து ஒருமுறை செல்ல விசாவிற்கு 50 திரஹம் 3மாதம் மட்டுமே விசா காலம்...இன்று கொடுத்தால் மறுநாள் பாஸ்போர்ட்டில் விசா அடித்து கொடுத்திடுவாங்க…

மல்ட்டி எண்ட்றீ (பலமுறை செல்ல) விசாவிற்கு 100 திரஹம் ஆனால் 3மாதம் தான் விசா காலம்(ரொம்ப அநியாயமா இருக்குல்ல) விசா அப்ளிகேஷன் ஆன்லைனில் கிடைக்கிறது…

இதை எழுதவே மூச்சு வாங்குது…இன்னும் மலேசியாவை பற்றி பார்த்த இடங்களைப் பற்றி சொல்லனும்… இல்லைன்னா தலை வெடிச்சுடும்…
இப்போதைக்கு இது …அடுத்து சிலவு சம்பரதாயங்களை பற்றி சொல்லலாம்னு இருக்கேன்…

இருந்தாலும் பயமா இருக்கு இந்த பின்னுட்டக் காரங்க இருக்காங்கலே அதிலும் கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை… எதையாவது ஒரு பிட்டை போட்டு…கலக்கிடுறாங்க…ம்…கலக்குங்க ராசா கலக்குங்க…!(இப்படி சொன்னாதான் கலக்குவீங்களா?)

11 comments:

Tariq Mohamed said...

கலக்கல் இஸ்மத் .... கேரி ஆன் ....

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி..... தாரிக் முஹம்மது

சென்ஷி said...

:))

//கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க//

எனக்கென்னமோ அவருக்கு சொல்லிக்கொடுக்கறதே நீங்கதான்னு தோணுது!

சுவாரஸ்ய பகிர்வுகள்.. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்!

கிளியனூர் இஸ்மத் said...

//எனக்கென்னமோ அவருக்கு சொல்லிக்கொடுக்கறதே நீங்கதான்னு தோணுது!//

சொல்லிக் கொடுத்தினால் தான் அவர் தொகுதியில் அவர் முன்னியில் இருக்கிறார்....ன்னு நீங்க சொல்வது போல தெரியுது...!
பின்னூட்டத்திற்கு நன்றி....கட்டுரை தொடரும்

Unknown said...

A wonderful tour guide..

Inspirated me a lot...

thanks

syed ali moulana

கீழை ராஸா said...

மலேசியன் சிங்கப்பூர் எம்பசியிலே இருந்து உங்களுக்கு அவார்ட் தர பரிந்துரைக்கலாம்னு இருக்கேன்...

பின்னே என்ன ஜி...ஒரு நாட்டுக்கு செல்ல இதை விட தெளிவா யாராவது சொல்ல முடியுமா...?

லக்கலக்க கலக்கல் பதிவு.. இஷ்மத் பாய்

புகைப்படத்தில் ஜொள்ளு கொஞ்சம் ஓவரா இருக்கு...

கீழை ராஸா said...

//இருந்தாலும் பயமா இருக்கு இந்த பின்னுட்டக் காரங்க இருக்காங்கலே அதிலும் கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை… எதையாவது ஒரு பிட்டை போட்டு…கலக்கிடுறாங்க…ம்…கலக்குங்க //

என்னை வம்புக்கு இழுக்காம இருக்க மாட்டீங்களா...

கீழை ராஸா said...

//சென்ஷி said...
:))

//கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க//

எனக்கென்னமோ அவருக்கு சொல்லிக்கொடுக்கறதே நீங்கதான்னு தோணுது!//

என்னை தருமி என்று சொல்லிட்டீங்களே நாகேஸ் ரசிகரே...

கிளியனூர் இஸ்மத் said...

//மலேசியன் சிங்கப்பூர் எம்பசியிலே இருந்து உங்களுக்கு அவார்ட் தர பரிந்துரைக்கலாம்னு இருக்கேன்...//

துபாய் பதிவர்கள் தருகிற அவார்ட்டை விடவா எம்பசிலே கொடுத்திடபோறாங்க....

கிளியனூர் இஸ்மத் said...

//என்னை வம்புக்கு இழுக்காம இருக்க மாட்டீங்களா...//



அது என்னமோ...சோத்துக்கு ஊருகாய் மாதிரி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....