மனம் கவர்ந்த மலேசியா பாகம்-8ல் மதிப்பிற்குரிய பதிவர் “வந்தியத் தேவன்" அவர்கள் ஜூலை 31-ல் பின்னூட்டம் போட்டிருந்தார்…அதில் லங்காவி போனீர்களான்னு கேட்டிருந்தார்.
லங்காவி போகாமல் மலேசியாவை சுற்றி பார்த்ததாக யாரும் கூறினால் அது முழுமைப் பெறாது. என்பது எனது கருத்து
லங்காவி டூட்டி பிரின்னு சொன்னேனில்லையா… அங்கு சிகரெட், மதுபானங்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், மற்றும் துணிமணிகள், சாக்லேட் வகைகள், பேக் இப்படி ஏராளமான பொருட்களுக்கு வரி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பொருட்களை வாங்கிச்செல்வதற்கு ஒரு சட்டமும் உண்டு. எப்படின்னா…
மூன்று தினங்கள் நாம் லங்காவியில் தங்கிருந்தால்; நாம் வாங்கிச் செல்லும் பொருட்களுக்கு வரிவிலக்கு உண்டு. இல்லையெனில் தீர்வை கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த விதிமுறை இல்லை என்று கூறுகிறார்கள்…அதை நம்பி நானும் சாமான்கள் (வீட்டு உபயோக பொருட்கள்) வாங்கினேன். எனக்கு தீர்வை போட்டாங்களான்னு நீங்க கேட்கிறீங்க…. ம்…அவசரப்படாமல் நிதானமா சொல்றேன்.
அங்கு பீச் , முதலை பண்ணை ,மன்னர் மியூசியம், மார்கெட் ,நிறைய ஹோட்டல்கள் இப்படி பார்க்கவேண்டிய இடங்கள் உண்டு.
நாங்கள் லங்காவியில் இறங்கியதும்.... ச்சோன்னு நல்ல மழைபெய்ந்தது. (பின்னே இருக்காதா…பிரபல பதிவர் வரேன்ல … அதான் மழைவரவேற்பு.)
இறங்கியதுமே எனது மைத்துனர் திரும்பி செல்வதற்கான டிக்கேட் எடுத்துக் கொண்டார். மாலை 7.30 மணிக்கு செல்லக் கூடிய பேரிக்கு .மாலை நாம் திரும்பும் போது தாமதம் ஆகிவிட்டால் டிக்கேட் கவுண்டரை மூடிவிடுவார்களாம்.
அங்கே ஒரு மினிவேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு 30 ரிங்கிட் என்றார்கள்.
அங்கிருந்து முதலில் ஸ்கைபிரிஜ்கு சென்றோம். போகும் வழியெல்லாம் மழை எங்களை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. சந்தோசமாகத்தான் இருந்தது ஆனால் ஸ்கைபிரிஜ் போவதற்கு கேபிள் கார் வழியாகதான் செல்லவேண்டும் கிளைமேட் நன்றாக இருந்தால்தான் கேபிள் காரை இயக்குவார்களாம்.
அங்கே போய் இறங்கியதும் பார்த்தால் நிறைய மக்கள் கேபிள் காருக்காக காத்து நிற்கிறார்கள். டிக்கேட் கொடுக்கப்படவில்லை.
விசாரித்தோம் நம்ம ஊரு வானிலை அறிக்கை சொல்றவங்க மாதிரி … எதிர்பார்க்கிறோம் வரலாம் அப்படின்னு சொன்னாங்க. அதாவது மழையை எதிர்பார்கிறார்களாம் மேகமூட்டம் அதிகம் வரலாம்ன்னு சொன்னாங்க அதனால காத்திருப்போர் லிஸ்டில் நீங்களும் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
அடக்கடவுளே இவ்வளவு தூரம் வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு நாங்க எல்லோரும் வருத்தப்பட்டோம்.
அதுவரைக்கும் அங்குள்ள முயல்கள் பண்ணை மான்கள் பண்ணை இவைகளை கண்டு களிக்கலாம்னு சுற்றினோம்… காதுகளை பிடித்து முயல்களை தூக்கி அழகு பார்த்தோம். மான்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தோம்.
இந்த நேரத்தில் மழை நின்றது. மேகமூட்டம் குறைந்தது சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு வானிலை பச்சைக் கொடி காட்டியதும் பெல் அடிச்சாங்க… நாமுந்தி நீமுந்தின்னு முண்டி அடிக்காமல் எல்லோரும் வரிசையில் நின்று டிக்கேட் வாங்கிக்கொண்டிருக்க … நம்மஆளு நம்ம கலாச்சாரத்தை விட்டுக் கொடுப்பாங்களா … எங்களை அழைத்துவந்த வேன் டிரைவர் எங்கோயோ எப்படியோ பூந்து டிக்கேட் வாங்கி வந்துட்டாரு.
எங்களுக்கு சந்தோசம் தாங்கலை .
கேபிள் காரில் ஏறி அமர்ந்தோம் . கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் தூத்திற்கு அது செங்குத்தாக தூக்க கீழேப் பார்தால் பாதாளம் மாதிரி பெரிய குன்றுகள் அடி வயத்தை அப்படியே கவ்விகிச்சி.
என் மனைவி முகத்தை மூடீக்கிட்டாங்க எனக்கு பயம் மாதிரி தெரிஞ்சாலும் …ம்கூம் …நான் பயப்புடலையே.
என் வாண்டுகளுக்கு ரொம்ப தைரியம். நாங்க உட்காந்துகிடப்பதற்கே பயந்துக் கொண்டிருந்தோம் அவர்கள் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
முதல்கட்டமாக 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்டாப்பில் இறக்கினாங்க…
அங்கிருந்து லங்காவியை பார்க்கலாம் லங்காவியை சுற்றி சுமார் 99 தீவுகள் இருக்கிறதாம் இதுதான் மலேசியாவின் பெரிய ஐலாண்ட் என்கிறார்கள்.
அடுத்தகட்ட உயரத்திற்கு செல்ல கேபில் காரில் ஏறினோம். இதேபயம் தான் என்றாலும் முதலில் ஏற்பட்டது போல் இல்லை. கிட்டதட்ட 700 மீட்டருக்கு மேல் சென்று விட்டோம். ஆந்த மலையின் மீது வட்டமான பெரிய மேஜைப்போன்று கட்டிருந்தார்கள் அதில் நின்றால் உடம்;பெல்லாம் மேகத்தில் உரசி நனைந்து தலைமுடி யெல்லாம் ஈரமாகி அட….அட… இப்போ நினைத்தாலே மனசெல்லாம் குளிருதுங்க. அந்த குளிருடன் ஸ்கை பிரிஜ்ஜில் நடக்க தொடங்கினோம்.
நடக்கும் போது மேகம் சூழ்ந்துக் கொள்ள எதிரே நிற்பவரைக்கூட பார்க்க முடியாதளவு மேகம் எங்களை இருக தழுவிக் கொண்டது… அந்த காட்சியே எனக்கு கவிதையாக தெரிந்தது . நடந்தேன் ஒடினேன் அமர்ந்தேன் அங்கிருந்து இந்தியாவிற்கு போன் செய்து எங்கள் உறவினரிடம் பேசி இந்த இடத்தைப் பற்றி விபரமாக என் மனைவி பேச… அன்றைய தினம் பில்லா படம் ஒடிய தியேட்டரில் நல்ல கலெக்ஷன் ஆகிருக்குமுங்க. பில்லா படத்தை அடையாளப்படுத்திதான் எல்லோரிடமும் என் மனைவி கூறினார்.
லங்காவியில் ஸ்கைப்ரிஜ் …இது 2004-ல் அமைக்கப்பட்டதாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 687 மீட்டர் உயரத்தில் அமைத்திருக்கிறார்கள். இந்த பாலத்தின் நீளம் 136 யாட், அகலம் 2 யாட் ஆகும் . இந்த பாலத்தின் சப்போட் 95 யாட் நீளமுள்ள ஓரேயொரு கம்பியும், அதை தாங்கி நிறுத்தும் 8 கயிருகளும் மட்டும் தான்.
அந்த பாலத்தில் நாம் நடக்கும் போது காற்றின் வீச்சத்தில் சின்னசின்ன அதிர்வுகளை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வு ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த பயத்தில் சந்தோசம் கிடைக்கிறது.
பயம் தொடரும்………….

9 comments:
இந்த பிரிட்ஜை மலேசியத் தமிழர்கள் சிலர் பில்லார் பிரிட்ஜ் என்கிறார்கள். லங்காவியின் காலநிலையே மழைதான் போலிருக்கிறது நாங்கள் போன நேரமும் மழைதான்.
பில்லார் அல்ல பில்லா அஜித்தின் பில்லா படம் பெரும்பகுதி லங்காவியில் தான் சூட்டிங் செய்தார்கள், லங்காவி விமான நிலையம் கூட படத்தில் வருகிறது.
அழகான இடம்..:-)
நானும் மே மாதம் போய் வந்தேன், water scooter, parasailing சூப்பராக இருந்தது.
அழகான படங்களுடன் அருமையான பதிவு.
பக்கத்தில் இருந்து பார்த்தது போல உணர்வை ஏற்படுத்திய இனிமையான எழுத்துநடை.
சூப்பர் அண்ணா , ... நல்லா என்ஜாய் பண்ணுங்க .... படங்கள் நல்லா இருக்கு
உங்களுடைய மலேசியாத் தொடர் அருமை.. உங்களுடன் பயனிப்பது போன்ற உணர்வேற்படுகிறது. தொடருங்கள்..
இன்னும் போகலை
படங்கள் அழகு
எழுத்தின் மூலமே கால் பாகம் பார்த்த திருப்தி
வந்தியத்தேவன், ’டொன்’ லீ ,அமுதா கிருஷ்ணா ,துபாய் ராஜா,அது ஒரு கனாக் காலம் ,
ச.செந்தில்வேலன்,
நட்புடன் ஜமால்
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க....
நட்புடன் ஜமால் எப்போபோகப்போறீங்க...?
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....