அதிகாலை 5 மணிக்கே எழுந்து எல்லாக்கடன்களையும் முடித்து விட்டு பினாங்கிலிருந்து பட்டர்வொர்த் இரயில் நிலையம் வந்தோம் .
இரயில் நிலயத்தில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. காலை இரயில் என்பதால் கூட்டம் குறைவு என்றார்கள். இந்த இரயில் பட்டவொர்திலிருந்து சிங்கப்பூர் செல்கிறது. காலை 7.30மணிக்கு புறப்பட்டு இரவு சிங்கைக்கு 9.30 மணிக்கு சென்றடைகிறது.
இரவு இரயிலில் பயணச்சீட்டு கிடப்பதே சிரமம். சில தினங்களுக்கு முன்பாகவே பதிவு செய்து வைக்க வேண்டுமாம்.
பெரும்பாலோர் சொகுசு பேருந்தில் தான் பயணிக்கின்றார்கள். இதனால் கால அவகாசம் மிச்சமாகிறது குறித்த நேரத்தில் சென்று விடலாம் இரயில் மெதுவாகத்தான் செல்லும் அவ்வளவு வேகமிருக்காது நேரம் அதிகம் சிலவாகும்.
முதல்வகுப்பு இருக்கையில் பதிவு பண்ணியிருந்ததால் எனது குட்டிஸ்களுக்கு விளையாட ரொம்பவும் ஜாலியா பீல் பண்ணினாங்க… ஏன்னா முதல்வகுப்பு இருக்கையில எங்களத் தவிர வேறு யாரும் இல்லை.
எங்களை வழியனுப்ப எனது மைத்துனர் அவரது குடும்பமும் வந்தார்கள். எனது மைத்துனருக்கு ஒரு பெரிய வருத்தம் ஒருமாசம் முழுசா பினாங்கில் தங்கனுமாம்
அதனாலென்ன இன்னொரு சுற்றுலா வந்திடுகிறேன் என்றேன்.
அவருக்கு நம்பிக்கை இல்லை… இந்த வருகையே மூனு வருசமா சொல்லி இந்த வருசம் தான் வந்தீங்க ன்னார்…
மதியம் 2 மணிக்கு தான் கோலலம்பூர் போய்சேரும் … இரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் உங்களை அழைக்க ரெஜாக் என்ற நண்பர் காத்திருப்பார். அவர் நீங்க தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்து தருவார் மற்றபடி சுற்றி பார்க்க அவருடைய காருக்கு மூன்று தினங்களுக்கு ஏழுநூறு ரிங்கிட் கொடுங்கள் என்று எல்லா விபரங்களையும் மைத்துனர் சொல்ல கவனமாக கேட்டுக் கொண்டேன்.
இரயில் புறப்படவே உங்களின் அன்பிற்கும் அனுசரனைக்கும் நன்றின்னு பின்னூட்டம் போடுவது மாதிரி ரெடிமேட் வார்த்தைகளை சொல்லிவிட்டு மெல்ல மெல்ல அவர்களைவ pட்டு நாங்கள் நகர எங்களைவ pட்டு அவர்கள் நகர… இரயில் எங்கள் பயணத்தை உறுதி படுத்தியது.
கையசைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தோம் டிடிஆர் வந்து எங்கள் பயணச்சிட்டை பரிசோதித்துவிட்டு குடிப்பதற்கு மினரல் வாட்டரும் சாப்பிட கேக்கும் கொடுத்தார்.
எல்லாவற்றையும் சரிபார்த்து சரி செய்துவிட்டு பெருமுச்சுடன் இருக்கையில் சாய்ந்தேன்.
பத்துதினங்கள் பினாங்கில் ஒடியதே தெரியவில்லை . ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இடத்திற்கு சுற்றிபார்க்க அலுப்பே படாமல் ஓரு கைடு மாதிரி வந்த எனது மைத்துனரை நினைத்து பெருமிதம் கொண்டேன். என்னால் அப்படி செய்திருக்க முடியுமா என்பது என்னிடம் நான் கேட்கும் கேள்வி…?
இந்த பத்துதினங்களும் என்மைத்துனர் வீடு இருந்தாலும் அவருடைய மாமனார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்வீட்டில் நாங்கள் தங்கிஇருந்தோம்.
அங்கு அவர்கள் கொஞ்சமும் முகம்சுளிக்காமல் அடுக்கலைப்பக்கம் என் மனைவியை அனுமதிக்காமல் ஒவ்வொரு வேலைக்கும் மிக சந்தோசமாக உபசரித்த அண்ணன் தாஜ் குடும்பத்தினருக்கும் எப்படி நன்றி சொல்வேன் என்று எனக்கு தெரியவில்லை.
எங்கே குறைவந்து வடுமோ என்று பார்த்து பார்த்து அவர்கள் செய்த அன்பு உபசாரத்தை என்னால் மறக்க முடியாது.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே…இது மலேசிய வாழ் தமிழ் மக்களின் குணம் மணம் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள்… இது முற்றிலும் உண்மையான வார்த்தை. விருந்தோம்பல் என்பது இது தான். ஆனால் பத்து தினங்கள் தங்கியது எனக்குள் வெட்கத்தையளித்தது.
இரயில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. எனது குட்டிஸ்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பல ஸ்டேசன்களில் நின்று நின்று இரயில் சென்றது. இடைக்கிடையே எனது மைத்துனர் விசாரித்து வந்தார்.
மலைகளில் இரயில்பாதை அமைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பசுமையே .
சரியாக 1.50 மணிக்கெல்லாம் கோலலம்பூர் வந்தடைந்தது.
எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஸ்டேசனைவிட்டு வெளியில் வந்தோம். அண்ணேன்னு ஒருக்குரல் … புரிந்தது… நீங்கதானே ரெஜாக் ன்னு கேட்டேன் ஆமாம் என்று கூறி விட்டு உடமைகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.
அவரைப் பின்தொடர்ந்து நாங்களும் சென்றோம். சுமாரான கார்.ஏழுபேர் அமரக்கூடியது.
ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டோம். தமிழ்நாட்டில் எங்கே என்ன ஊர் என்று விசாரித்ததில் எங்க ஊருக்கும் பக்கத்து ஊருதான்.
கோலலம்பூருடைய அனுபவத்தை கூறினார். இவருடைய குடும்பம் இங்கேதான் இருக்கிறது இவருக்கு குழந்தைகள் அதிகம் என்றார்.
மதியம் சாப்பிட தமிழ் உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்டலில் தங்குவதற்கு அழைத்துச்சென்றார்.
இந்தியா மோஸ்க் ஏரியா அதிகமான டிராபிக் இருக்கும். ஆதனால கொஞ்சம் தள்ளி நம்ம வீடு இருக்கு அங்கே தங்கினால் நீங்கள் கூப்பிட்ட உடனே நான் வந்துவிடுவேன் என்றார்.
ஹோட்டலுக்கு வந்தோம் ஒரு நாளைக்கு 100 ரிங்கிட் வாடகை எக்ஸ்டா பெட் இரண்டு கொடுத்தார்கள். அதற்க்கு 25 ரிங்கிட் .
மாலை 6மணிக்கு வருகிறேன் கோலலம்பூர் மினாரா டுயின்ஸ்டவர் இவைகளை பார்க்க அழைத்து போகிறேன் ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் வரும் வரை காத்திருப்போம்…!

5 comments:
Good coverage of your SIngapore Malaysis tours
Keep it up
உங்க பயணக் கட்டுரை அருமை வழக்கம் போலவே... ... சும்மா உள் குத்து எல்லாம் போட்டு தள்றீங்க ..//.உங்களின் அன்பிற்கும் அனுசரனைக்கும் நன்றின்னு பின்னூட்டம் போடுவது மாதிரி ரெடிமேட் வார்த்தைகளை சொல்லிவிட்டு மெல்ல மெல்ல //...
உள் குத்து இருக்குன்றாங்க எனக்கு விளங்கல
நல்லா விவரிச்சி எழுதுறீங்க
//அது ஒரு கனாக் காலம்//
சும்மா உள் குத்து எல்லாம் போட்டு தள்றீங்க ..//
அண்ணே....குடும்பத்துல குழப்பம் வேண்டாம்ணே....ஏதோ உள்குத்துன்னு சொல்லி புட்டிங்க ....வீட்டுல கேக்குறாங்க .... நான் அப்படியா எழுதிருக்கேன்... இன்னொருமுறை படிங்கன்ணே.... அதுக்கு பிரியாணிவேணுன்டாலும் செஞ்சுதாரேன்....
ஜமால் அண்ணே....உங்க கண்ணு மாதிரிதான் எனக்கும்..... விளங்கல....ஆனா ஏதோ இருக்கும் போல....
நெருப்பில்லாம புகையாதும்பாங்களே....அப்படி ஏதும்....?
நான் சாதரணமா தான் சொன்னேன் சார், ...
அதாவது சும்மா செயற்கையா..பின்னோட்டத்துக்கு நன்றின்னு சொல்றா மாதிரின்னு புரிந்து கொண்டேன் .... வேற ஒன்னும் இல்ல. ஹி ஹி
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....