உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, December 1, 2009

புலவரை புண்படுத்திய புல்லன்கள்...

என் மனதை பாதித்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதில் சம்பந்த பட்டவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட நான் விரும்ப வில்லை.

சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்காக துபாயிலிருந்து 40 பேர்களுடன் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் இலங்கை சென்றிருந்தோம்.

அந்த நிகழ்ச்சி கொழும்புவிலிருந்து சுமார் 150 கீ மீ தொலைவில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை வாழ் புரவலர்கள்,புலவர்கள்,காவியர்கள்,கவிஞர்கள்,அறிஞர்கள், ஆலிம் பெருமக்கள் என பெரும் கூட்டமே இதில் கலந்துக் கொண்டார்கள்.

இன்னும் இந்தியா,சிங்கப்பூர்,மலேசியா,குவைத்,கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை புலவரும் பல காவியங்களை படைத்தவருமான வயதில் எங்களுக்கு மூத்தவருமான அந்த பெரிய மனிதர் எனக்கும் நண்பர் ஷர்புதீனுக்கும் நன்கு அறிமுகமாகி நண்பரானவர் மற்றும் துபாய் வாழ் இலக்கியவாதிகளுக்கு நல்ல பரிச்சயமானவர் .

இரண்டுநாட்கள் நடந்த விழாவிற்கு பிறகு நாங்கள் துபாய் திரும்புவதற்கு ஆயத்தமானோம். இரவு 8 மணிக்கு ஒரு வேனில் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் மற்றும் துபாய் நண்பர்கள் 3 பேர் அதில் ஒருவர் துபாயில் பத்திரிக்கை நடத்தி அதன் ஆசிரியராக இருந்தவர்.அத்தோடு இலங்கை புலவரும் மற்றும் சிங்கை நண்பர்கள் இருவர்.

நாங்கள் புறப்படுமுன்னே இலங்கை புலவர் கூறினார் கொழும்பில் எனது வீடு இருக்கிறது இரவு அங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் விமான நிலையம் செல்லவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

முன்னாடியே அவர் வீட்டுக்கும் தொலைபேசி செய்து சாப்பாடு தயார் செய்ய சொல்லியும் விட்டார்.

நாங்கள் போகும் வழியில் தேனீர் குடிப்பதற்காக வேனை நிறுத்தினார்கள். நாங்கள் தேனீர் அருந்தினோம். துபாய் பத்திரிக்கையின் ஆசிரியரும் அவரின் இரு சகாக்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இலங்கை புலவர் அவர்களிடம் கெஞ்சினார் இன்னும் கொஞ்ச தூரம் தான் என் வீடு. வீட்டில் சாப்பாடெல்லாம் தயாராக இருக்கிறது கொஞ்சமாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்கள் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. வயிறுமுட்ட சாப்பிட்டார்கள்.

அவரின் வீட்டுக்கு வந்தடைந்தோம் அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தார் .
நாங்கள் அனைவரும் வந்தோம் அந்த மூன்று நபர்களைத் தவிர. இந்த செயல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது .

இலங்கை புலவர் அவர்களிடம் நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை தேனீர் அல்லது தண்ணீர் அருந்தலாம் வாருங்கள் என்று எவ்வளவோ நயந்து தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் கெஞ்சினார்.
அவர்கள் நாங்க வேனிலேயே இருக்கிறோம் என்று பிடிவாதமாக அவர் வீட்டுக்குள் வராமல் இருந்து விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி அவரின் மனதை பெரிதும் பாதித்தது. வருத்தத்தை கொடுத்தது.
பத்திரிக்கை நடத்தியவர் அதன் ஆசிரியராக இருந்தவர் இப்படி நடந்துக் கொள்கிறாரே மற்றவரை மதிக்க தெரியவில்லையே. என்று அந்த புலவர் மனம் குமற நானும் எனது நண்பர் ஷர்புதீனும் அவரை சமாதானப்படுத்தினோம்.

உணவருந்திவிட்டு புலவரிடம் அவர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விமானம் நிலையம் நோக்கி புறப்பட்டோம்.

இவர்கள் ஏன் இப்படி நடந்துக் கொண்டார்கள் என்ற காரணத்தை என்னால் ஊடுறுவ முடிந்தது.

இலங்கை புலவர் துபாய் வந்த சமயம் அவருடைய காவியம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைகாட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க பலரை அழைத்திருந்தார்கள் என்னையும் உள்பட . அதில் பத்திரிக்கையின் ஆசிரியரின் சகோதரருக்கும் அழைப்பு .
இந்த பத்திரிக்கை ஆசிரியரின் சகோதரர் தான் பிரபலமானவர் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

இந்த நிகழ்ச்சியில் தன் சகோதரரை மேடையில் அழைத்து அமரவைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சில வினாடிகளில் அந்த பத்திரிக்கை ஆசிரியரும் அவருடைய சகோதரரும் அவர்களுடைய சகாக்களும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

இந்த சம்பவம் இலங்கை புலவருக்கு தெரியாது.

இதை மனதில் வைத்து கொண்டு இலங்கை புலவரை அவமரியாதை செய்வதாய் எண்ணி தங்களை தாங்களே இழிவு படுத்திக் கொண்டார்கள்.

(இவர்கள் நடத்திய பத்திரிக்கையில் துணை ஆசிரியர்களாக நானும் ஷர்புதீனும் இருந்து விட்டு ஆசிரியரின் குணமறிந்து விலகினோம் என்பது குறிப்பிடதக்கது.)

இந்த ஈனமனிதர்களிடம் பேச்சையும் பழக்கத்தையும் நானும் நண்பர் ஷர்புதீனும் நிறுத்தி விட்டோம்.

மனிதர்களிடம் மனிதனாக நடக்கத்தெரியாத இவர்களை போன்றவர்கள் எத்தனை ஞானம் அறிந்திருந்தாலும் அது சாணத்துக்கு சமம்…!

பதிவர்களே இவர்களை பற்றிய உங்களுடைய கருத்து என்ன…? சொல்லுங்கள்…!

12 comments:

tamilnadunews said...

சாணத்துக்கு சமம்…!

சென்ஷி said...

நீங்களே பதில் கொடுத்துருக்கீங்களே இஸ்மத் பாய்!

கீழை ராஸா said...

அன்பு சகோதரருக்கு, அவர் அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக தாங்கள் அவர்களைத்தாக்கி இப்படி ஒரு பதிவு எழுதியுள்ளது எனக்குப்பெரும் அதிர்ச்சியைக்கொடுக்கிறது.உங்களை நான் நன்கறிவேன் அந்த சிரித்த முகம் மாறாத தங்களைக்கோபப்படுத்த இந்த நிகழ்ச்சிமட்டும் காரணமாக அமைநததா..?என்ற கேள்விக்குறி என்னுள் எழுகிறது...ஆன்மீகம் பேசி, அன்பாய் அரவணைத்து எங்களை நகைச்சுவை மழையில் நனைக்கும் நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள்...இது போன்ற பதிவுகளை தவிருங்கள் என்பது மட்டுமே உங்களிடம் உரிமையுடன் நான் கேட்கும் அன்பான வேண்டுகோள்.

துபாய் ராஜா said...

/இந்த ஈனமனிதர்களிடம் பேச்சையும் பழக்கத்தையும் நானும் நண்பர் ஷர்புதீனும் நிறுத்தி விட்டோம்./

நீங்கள் செய்தது சரி தான்.

Anonymous said...

கீழை ராஸாவின் பின்னூட்டத்தோடு உடன்படமுடியவில்லை இஸ்மத் பாய். இதில் தாக்குதல் எங்கிருந்து வருகிறது? ஒருவரின் தவ்றை சுட்டிக் காட்டுவதை தாக்குதல் என்று முத்திரை குத்துவது முறையல்ல.

மனிதர்களை நேசிக்கும் நாம் அவர்களது இழிகுணங்களை வெளிப்படுத்தவும் முன்வரத் த்யங்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் சொன்ன அதே மனிதர்களை வேறு சிலர் மகான்களாகவும் எண்ணி ஏமாந்து கொண்டிருக்கக் கூடும். நீங்கள் சொன்ன சகோதரர்கள் யாராக இருக்க முடியுமென யூகிக்கமுடிகிறது. 'அவர்களாகத்தான்' இருக்க முடியுமென்றால் எனக்கு வியப்பேதுமில்லை :-)

இலங்கை புலவர் பாகிஸ்தானின் அதிபர் பெயரையும் உங்கள் நண்பரின் பெய்ரையும் சேர்த்துக் கொண்டவர்தானே? அவரது காவியம் கலைஞரால் உரைநடையில் எழுதப்பட்டதுதானே? :-)

கீழை ராஸா said...

//ஆசிப் மீரான் said...
கீழை ராஸாவின் பின்னூட்டத்தோடு உடன்படமுடியவில்லை இஸ்மத் பாய்.//

என்னிக்குத்தான் உடன் பட்டீங்க அண்ணாச்சி...

இலங்கை புலவர் பாகிஸ்தானின் அதிபர் பெயரையும் உங்கள் நண்பரின் பெய்ரையும் சேர்த்துக் கொண்டவர்தானே? அவரது காவியம் கலைஞரால் உரைநடையில் எழுதப்பட்டதுதானே? :-)

இதுக்கு பேரையே எழுதியிருக்கலாமே?

கிளியனூர் இஸ்மத் said...

கீழை ராஸா அவர்களே… மறந்துபோன சம்பவத்தை நினைவு படுத்த வைத்து பதிவு எழுத வைத்த நன்மை உங்களைச்சாரும்…!
என்னை கோபப்படுத்தியதினால் இதை நான் எழுதவில்லை பாதிக்கப்பட்டவரின் வலியை நான் உணர்ந்ததினால்
இதே சம்பவம் உங்களுக்கு நடந்து அதை என்னிடம் நீங்கள் சொல்லி இருந்தாலும் கூட நான் பதிவில் போட்டிருப்பேன்.
காரணம் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதுதான் அவைகள் களையப்படும் .

ஆசிப்மீரான் அவர்களே...! மிக துல்லியமாக கண்டுபிடித்து விட்டிர்கள்….!
tamilnadunews
சென்ஷி
துபாய் ராஜா

உங்கள் கருத்துக்கு நன்றி

சிம்ம‌பார‌தி said...

மறந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி ஒருவரின் நிஜமுகத்தை வெளியுலகுக்கு காட்டியிருக்கிறீர்கள்.

இருந்தாலும் ஈனம், சாணம் போன்ற வார்த்தை பிரயோகங்களை உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டாமென்று
எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் நான் இப்பொழுது தான் இந்த வலைப்பூக்களில் வலம் வர ஆரம்பித்திருக்கிறேன்.

ஜின்னா சர்புதீன் போன்ற பெரிய அறிஞர்களுக்கு மரியாதை கொடுக்கத்தெரியாத இவர்களை....

சிம்மபாரதி

கிளியனூர் இஸ்மத் said...

Further, I like to recall the below in relation to this subject:


A few months later, our Sri Lankan journalist friend came to Dubai. The renowned Tamil journalist, Thiru Lena Tamilvaanan who was also visiting Dubai that time was invited by a Tamil friend in Sharjah for lunch.


My self and my friend Ismath were accompanying Thiru Tamilvaanan and the renowned

Sri Lankan journalist to Sharjah and while we were returning to Dubai after the lunch, have been involved in chatting about Humanity, literature, etc.


That time, our friend the Sri Lankan Journalist was happened to quote/remember the subject ill fated incident in Sri Lanka.


We have told him that after the incident, we had stopped talking to those ill minded people even though they were very well known to us. (It is not appropriate to mention them as our friends??!)


Best Regards

S.Sharfuddeen

நட்புடன் ஜமால் said...

மனிதர்களிடம் மனிதனாக நடக்கத்தெரியாத இவர்களை]]

மனிதம் அற்றவர்கள் ...

Anonymous said...

It's true

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா said...

“pulawarai punpaduthiya pullangal”

Unmaiyil ungaludaiya intha incident manathai rommba pathithadu.. எத்தனை ஞானம் அறிந்திருந்தாலும் அது சாணத்துக்கு சமம் algaana wasanam

Rizna
srilanka

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....