அழைப்பு மணி அலறியது –
அடுக்கலையில் வேலையாயிருந்த லைலா அப்படியே போட்டு விட்டு கதவைத் திறந்தாள்.
கையில் கடிதத்துடன் ஜூனைதா நின்றுக் கொண்டிருந்தாள் .
வாடி ஜூனைதா நல்லாயிருக்கியா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு திடிர்னு வந்திருக்கே என்ன விசயம் ?
உன்னை பார்த்திட்டு போகலாம்னு தான் வந்தேன் பதிலுரைத்தாள் ஜூனைதா.
ஏய் பொய் சொல்லாதே ! அது என்ன கையில-லட்டரா? யாரிடமிருந்து வந்திருக்கு?-உட்காரு-என்றாள் லைலா.
சோபாவில் அமர்ந்தபடி ‘உம் மச்சான் போட்டிருகாரு-கொஞ்சம் படிச்சுக் காட்டேன்’-என்றாள் ஜூனைதா.
‘அதானேப் பார்த்தேன் அம்மா சும்மா வரமாட்டாங்களேன்னு…கொஞ்சமென்ன பூராவையும் படிச்சுக் காட்டுறேன் இருடி அடுப்புல ஆணமிருக்கு இறக்கி வச்சிட்டு வந்துடுறேன்.-ஒரு மெல்லிய புன் சிரிப்பை உதிர்த்து விட்டு அடுக்கலைக்குள் சென்றாள் லைலா.
சோபாவில் அமர்திருந்தவாறே தன் பார்வையை அந்த ஹாலில் மேய விட்டால் ஜூனைதா.
பெரிதும் சிறிதுமில்லாத கணகச்சிதமான அறையாக இருந்தாலும் வைக்க வேண்டிய இடத்தில் பொருட்களை வைத்திருப்பது ரசிக்குமளவு அழகைத் தந்நது. தன் வீட்டிலும் இப்படி பொருட்களை ஒழுங்குப்படுத்தி வைக்க வேண்டும்மென அவள் மனம் எண்ணியது.
சில வினாடிகளுக்குப் பின் காபியுடன் லைலா ஹாலில் தோன்றினாள்.
எதுக்குடி இப்பக் காபி –என்றாள்
குடிக்கத்தான் ! வந்த விருந்தாளிக்கு இது கூட கொடுக்கலேன்னா என்ன மரியாதை இருக்கு –என கூறிய வாறு அவளிடம் காபியை நீட்ட மறு ஆட்சேபனை செய்யாமல் பவ்யமாய் காபியை ஜூனைதா வாங்கிக் கொண்டாள்.
கொடு லட்டர படிச்சுக் காட்டுறேன் ! –என ஜூனைதா இடமிருந்து கடிதத்தை வாங்கி பிரித்துப் படித்தாள்.
ஆரம்ப வரிகள் வர்ணணையில் துவங்கியிருந்ததால் நாணத்துடனும் புன்சிரிப்புடனும் லைலா படித்துக் காட்டிய போது ஜூனைதா வெட்கித்துப் போனாள்.சில சில்மிசமான விசயங்களை அவள் படித்த போது ஜூனைதா கூனி குறுகினாள்.
என்ன மனுசன் இவரு இப்படியா கடிதத்துல எழுதுவாங்க-என ஜூனைதாவின் வெளி மனம் கசந்தாலும் அவளின் உள் மனம் அதை விரும்பியது ஆனால் தான் படித்து ரசிக்க வேண்டியதை பிறரை விட்டு படித்து கேட்கும் போது அவள் மனம் சஞ்சலப் பாடாமலில்லை.
கடிதத்தை ஒரு வழியாய் லைலா படித்து முடித்த பின் அந்த லட்டருக்கு இப்பவே பதிலும் எழுதிடலாமா ?-
என்று –ஜூனைதா கேட்டபோது மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் -எழுதிடலாம் -என தாளையும் பேனாவையும் தாயார் செய்துக் கொண்டாள் லைலா.
ஜூனைதா சொல்ல சொல்ல லைலா எழுதினாள்.ஆனால் வந்தக் கடிதத்திற்கும் இப்போது பதில் எழுதும் கடிதத்திற்கும் நிறைய்யவே வேறுபாடு இருப்பதை லைலா உணராமலில்லை.
ஜூனைதா தயங்கி தயங்கி ஒவ்வொரு விசயமாய் யோசித்து கூறியபோது லைலா அவளின் மனதை முழுவதுமாய் புரிந்துக் கொண்டாள்.
பதில் எழுதி முடித்தப் பின்-
ஜூனைதா ! நான் சொல்றேன்னு தவறா நினைக்காதே ! ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் மனம் விட்டு எல்லாவற்றையும் பேசலாம் ஆனால் சில விசயங்களை தவிர.உன் கணவர் சுதந்திரமா உனக்கு எழுதியது மாதிரி நீயும் எழுதனும்னு விரும்புகிறாய் ஆனால் சில குடும்ப விசயங்களை இன்னொருத்தியிடம் கூறி கணவருக்கு கடிதம் எழுதுவதை உன் மனம் தடைப்போடுது அதே நேரத்துல அப்படி தன்னால எழுத முடியவில்லையே என்ற ஏக்கமும் உன் மனதை ஆட்கொள்ளுது இதை உன்னால மறுக்க முடியாது .
நம்ம சமுதாயத்துல நீ மட்டுமல்ல எத்தனையோ பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு. இதற்கு காரணம் கல்வியறிவு இல்லாமப் போனது தான் ஒரு ஆண் மகனை படிக்கவைக்கிற அளவிற்கு ஒரு பெண்பிள்ளையை படிக்கவைப்பதில்லை.
ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டாள்னா அந்த பொண்ணோட பெற்றோருக்கு ஒரே லட்சியம் அவ கல்யாணம் தான்.
உன்னோட வாழ்க்கை லட்சியம் கல்யாணம் தான்னு அந்த பொண்ணுக்கும் உணர்தப்படுகிறது அவ அதை நோக்கியே சிந்திக்கிறா கனா காண்கிறா.
தனது பெண்ணுடைய வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கின்ற பெற்றோர்கள் அவளைடைய கல்வியைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது கிடையாது.
வாழப்போற பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்தக் கூடியவர்களும் பள்ளிக்கே அனுப்பாத பெற்றோர்களும் இந்த சமுதாயத்துல இருக்கத்தான் செய்யிறாங்க
ஓரு பெண்ணுக்கு மார்க்க அறிவு எவ்வளவு முக்கியமோ அதேயளவு உலக கல்வியறிவும் மிகமிக முக்கியம்.
புகுந்த வீட்டுக்கு போறவ அங்கே வேலைக்காரியாகவும் புருசனுக்கு மனைவியாகவும் ஒரு இயந்திரமா வாழ்றதுல சந்தோசமும் இன்பமும் அவ வாழ்க்கையிலே நிலைத்திடும்னு கற்பனை செய்யிறது முட்டாள் தனம்.
தான் பெற்ற பிள்ளை அது என்ன படிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளவதிலும் அவர்களின் படிப்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும் எவ்வளோ சந்தோசமிருக்கு...
பட்டம் பெற்ற கணவனுக்கு ஆறாம் வகுப்பு தாண்டாத ஒருமனைவி கிடைக்கிறப்ப அவனோடு சரிக்கு சமமா அவனுடைய ஆபிஸ் பிரச்சனைப்பற்றியோ குடும்பப் பிரச்சனைப்பற்றியோ சமுதாய பிரச்சனைப்பற்றியோ ஒரு நாட்டுடைய பிரச்சனைப்பற்றியோ வாதிடவோ அல்லது ஆலோசனை கூறவோ முடியாமப்போயிடுது .
அந்த மாதிரி நேரத்துல தன் கணவனே அவனுடைய பிரச்சனைப் பற்றி அவளிடம் வாதிடமாட்டான் காரணம் அவள் தான் படிப்பறிவு இல்லாதவளாச்சே.சொல்லித்தான் என்னவாகப் போகுது சொல்லாம இருந்தால் தான் என்ன பயன் கிடைக்கப் போகுது. என்று லைலா மென்னையோடு கூறி ஜூனைதாவை பார்தபோது சோகமாக அமர்திருந்தாள்.
ஜூனைதா நான் உன்னை உதாரணம் காட்டி பேசறதா நினைத்து வருத்தப்படாதே நீயும் நானும் சுய சிந்தனையாய் இந்த வயசுல கல்வியை நினைத்து வருத்தப் படுவதை நமது பெற்றோர்கள் நாம சின்னப் பிள்ளையாக இருக்கும் போது வருத்தப்பட்டிருந்தாங்கன்னா உனக்கும் உன்னை போலுள்ள பெண்களுக்கும் இந்த நிலமை ஏற்பட்டிருக்காது.
படித்தப்பெண் குடும்பத்தை சிறப்பான முறையில் நடத்த முடியும்.
அதனால் தான் படித்த பெண்களை பல்கலைக்கழகத்திற்கு சமமாக ஒப்பிடுகிறார்கள்.
என்று கூறி முடித்த போது ஜூனைதா அவளையே உற்றுப்பார்தாள்.
அந்த பார்வையில் அவளின் வம்சத்தின் எதிர்காலம் பிரகாசமாக தெரிந்தது. . . . . .!

7 comments:
//ஓரு பெண்ணுக்கு மார்க்க அறிவு எவ்வளவு முக்கியமோ அதேயளவு உலக கல்வியறிவும் மிகமிக முக்கியம்.// இஸ்லாமிய பெண்கள் இன்று கொஞ்சம் மாறியிருப்பதாக நான் நினைக்கிறேன். முழுவதும் மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானகவும் ஆமீன்
உங்கள் பிரார்தனை நிறைவேற நானும் துவாச் செய்கிறேன்....வருகைக்கு நன்றி...!
ரொம்ப எளியமையாக இயல்பாக
அருமையான அவசியமான விடயத்தை கூறி உள்ளீர்கள்
என் அத்தை பெண்களையும் இப்படித்தான் பத்தாவதோடு நிறுத்தி விட்டார்கள். நாங்களெல்லாம் போராடி கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் படிக்க வைச்சோம். இன்னைக்கு நிலைமை மாறி வருதுங்கறதும் சந்தோஷம்.
excellent message to Muslim community.Thanks Ismath
ரொம்ப அழகாக , அழுத்தமாக, .... பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்த்திய கதை...
உங்கள் அனைவரின் துண்டுதல்களுக்கு மிக்க நன்றிங்க...
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....