காலையில் மழைத்தூறலுடன் நாங்களும் சுற்றுவதற்கு தூறலானோம்…
கேரளத்து மன்னர் சேரமான் பெருமான் அவர்களுடைய அடக்கஸ்தலத்திற்கு கேரளத்து சகோதரர் வாகன ஓட்டுனர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த இடத்தைப் பார்த்ததும் என்னுடைய நினைவுகள் கேரளாவிற்கே அழைத்துச் சென்று விட்டது… ஆம் வாழைத்தோட்டம் தென்னந்தோட்டம் வெற்றிலைக்கொடி சீதாப்பழமரம் பப்பாளி தோட்டம் இப்படி தோட்டங்களாக அணிவகுத்து அழகுப்படுத்தி நின்றது.
சேரமான் பெருமான் மன்னர் தாஜ்தீன் என்றப் பெயரில் இஸ்லாமியரானார் என்றும் கூறினார்கள்.
சேரமான் பெருமான் மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காண்பதற்காக கேரளாவை விட்டு கப்பலில் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களை கண்டு விட்டு வரும் வழியில் சலாலாஹ்வில் காலமானார்கள் என்று சுருக்கமாக வரலாறு சொன்னார்கள். அவர்களின் அடக்கஸ்தளத்தை சுற்றி சுமார் ஐந்து கிமீ தொலைவிற்கு கேரளாவைப்போல் பசுமையாக இருக்கிறது.
இதற்கும் பக்கத்தில் புல் பூண்டும் விளையாத கட்டாந் தரையாக இரண்டு கிமீ தொலைவிற்கு இருக்கிறது. இது திருக்குர்ஆனில் ஆதாரமாக உள்ள இடம் என்றார்கள்.
இறைவனுடைய கோபப்பார்வைக்கு ஆளாகி பூமியை புறட்டி போட்ட இடம் இன்றுவரையில் இந்த இடத்தில் எந்தவித செடிகளும் வளரவில்லை. அந்த இடத்தை சுற்றி முள்வேலிபோட்டு வைத்துள்ளார்கள். அதைப்பார்பதற்கும் வழிவைத்துள்ளார்கள்.
நான் அதைப்பார்ப்பதற்கு ஆவல் கொண்டேன். கேரளத்து சகோதரர் வேண்டாம் காரில் செல்லும்போதே பாருங்கள் என்று காரிலே சென்றுக் கொண்டே காண்பித்தார்.
பின் அங்கிருந்து சுமார் 50கிமீ தொலைவில் உள்ள மலைக்குன்றுக்கு அழைத்துச் சென்றார். இது யூசுப் நபியை கிணற்றில்போட்ட இடம் என்றார். ஆனால் அங்குள்ள பலகையில் ஆழமான பெரிய துவாரம் என்றுதான் எழுதியிருந்தது.
ஒரு கல்லை தூக்கி போட்டுப்பார்த்தேன். அது விழுந்த சப்தமே கேட்கவில்லை. சில ஆங்கிலேயர்கள் இந்த துவாரத்தில் இறங்கி இரண்டு தினங்கள் தங்கயிருந்து ஆராய்ச்சி செய்ததாக அன்நாட்டு பிரஜை ஓமானி கூறினார். அந்த இடத்தில் நல்ல வெப்பம் இருந்தது.
பின் அங்கிருந்து காந்த பாறைக்கு சென்றோம்… ரோட்டிலிருந்து மண்ரோட்டிற்கு வாகனத்தை செலுத்தினார் அது சமமான தளமாக இருந்தது. வாகனத்தை முழுமையாக செயலிழக்கவைத்தார். நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். செயலிழந்த வாகனம் தானாகவே நகரஆரம்பித்தது. மெல்ல மெல்ல நகர்ந்து 20 30 கிமீ வேகத்துக்கு ஒடியது. எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பலர் எங்களைப்போன்று அவர்களுடைய வாகனத்தையும் ஒடவிட்டு இரசித்தனர்.
பின் அங்கிருந்து பல்கீஸ் அரண்மனைக்கு சென்றோம் . அது பொட்ட பாலைவனத்தில் கடற்கரையோரம் இருக்கிறது. அதை ஒமான் அரசு பராமரித்து வருகிறது.அதனுல் செல்வதற்கு 10 திரஹம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜின்களால் கட்டப்பட்ட கோட்டை என்கிறார்கள். அரண்மனையின் அஸ்திவாரம் மட்டுமே இப்போது காட்சியளிக்கிறது.
அரண்மனையையொட்டி கடல்கரை ஆறுபோல் அரண்மனையை உரசி கடல்நீர் ஓடுகிறது.
பின் அங்கிருந்து புறப்பட்டு பீச் சென்றோம். நாங்கள் மதியநேரத்தில் சென்றதால் ஆட்களின் நடமாட்டம் மிகக்குறைவு. சீசனில் திருவிழாப்போல் இருக்கும் என்றனர்.
கடல் அலைகள் மலைகளை மோதி மிக நீளமான துவாரங்கள் ஏற்பட்டிருக்கிறது. நாம் பாறைகளில் நிற்கும்போது சிறய சிறிய துவாரங்கள் வழியே கடல்நீர் பீறிட்டு அடிக்கிறது. நான் நனைந்தேப்போய் விட்டேன்.
நல்லக்காற்று கண்ணுக்கு எட்டியவரையில் மலையடிவாரம் மேகமும் கடலும் மயலயம் ஒன்றாக இணைந்து ஒரே புகைமண்டலமாய் காட்சித் தந்தது.
சில இடங்களில் வெப்பத்தையும் சில இடங்களில் குளிரையும் ஒரேநாளில் காணமுடிந்தது.
நகரத்தில் பல இடங்களில் அடக்கஸ்தளங்கள் அதிகம் காணப்பட்டன. அவைகளெல்லாம் வரலாற்று சிறப்புமிக்க வலிமார்கள் மகான்கள் நபிமார்கள் என புன்னிய மனிதர்கள் சலாலாஹ்வில் அடக்கமாகி உள்ளார்கள் அதனால்தான் என்னவோ அங்குள்ள சீதோசனம் இப்படி இருக்கிறது என்று தோன்றியது. இவ்வளவு அடக்கஸ்தளங்களையும் ஒமான் அரசு நினைவுச்சின்னமாக பராமரித்து வருகிறார்கள்.
சலாலாஹ்வில் வாழக்கூடிய ஒமானியர்கள் பெரும்பாலோர் விவசாயம் மீன்பிடிக்கும் தொழில் வாகன ஒட்டுனர்கள் இப்படி பலவித வியாபாரங்கள் செய்கிறார்கள். ஒமான் ஹல்வா பிரசித்தம் பெற்றது.
பலதரப்பட்ட மனிதர்கள் சலாலாஹ்வை சுற்றிப்பார்க்க வருகைப்புரிகிறார்கள்.
கேரளத்து சகோதரர்களின் உணவகங்கள் நிறைய இருக்கிறது. துபாயைவிட உணவு விலை அங்கு குறைவுதான்.
நகரில் நபி இம்ரானுடைய அடக்கஸ்தளம் பள்ளிவாசலுக்கு அருகில் பசுமைப்படுத்தி பூங்காவாக அமைத்து வைத்திருக்கிறார்கள். நீளமான அடக்கஸ்தளமாக இருந்தது.
மறு தினம் காலையில் சலாலாஹ்விலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள சாலிஹ் நபி அடக்கஸ்தளத்திற்கு புறப்பட்டோம். அங்கு வினோதமான மிக உயர்ந்த மலை இருக்கிறது நாம் கைதட்டினால் அந்த உயரத்திலிருந்து தண்ணீர் சொட்டுகிறது.
ஆமா… நான் அதில் குளித்தேன்… தொடரட்டும் குளியல்...!

8 comments:
padangalin keeze intha idam endru peyar kurippittal purinthu kolla ethuvaaka irukkum.
மிகவும் அருமையாக இருக்கிறது அங்க போய் பார்க்கனும் என்ற ஆசை வருகிறது.
நாம் கைதட்டினால் அந்த உயரத்திலிருந்து தண்ணீர் சொட்டுகிறது.
//
ஆச்சரியங்கள் வரட்டும்..!!
Very nice! Do Hindu's get a chance to travel on tourism in Saudi?
அருமை இஸ்மத் அண்ணே. இவ்வளவு ஆச்சர்யங்களையும் வரலாற்றுச்சிறுப்புகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
உங்கள் வர்ணனை இளமையுடன் உள்ளது. உங்கள் ஊஞ்சல் ஆட்டமும் தான் ;-)
மிக அருமையான பயணம் ... படிக்கும்போதே சூப்பரா இருக்குதே ...
3 ஆம் பகுதியும் வெகு விறுவிறுடன்
உள்ளது.
வாங்க பராரி...உங்கள் கருத்துபடி இனி புகைப்படங்களுக்கு கீழ் எந்த இடம் என்பதை குறிப்பிடுகிறேன் வருகைக்கு நன்றி....
வாங்க குசும்பன்....உங்கபேர்மேல எனக்கு ஒரு இது....
மின்னனு மின்னல்....குருப்புல கலக்குறீங்களே உங்கள் வருகைக்கு நன்றி...
Raju சார்...சவுதிக்கு அனைவரும் செல்லலாம்...ஜித்தாவிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மக்காவிற்குள் மட்டும் முஸ்லிம்கள் மட்டுமே அனுமதி அதேபோல் மதினா....மற்ற எல்லா இடங்களுக்கும் எல்லோரும் சென்று வரலாம்... வருகைக்கு நன்றி.
வழக்கம்போல் செந்தில் வேலன்...உங்கள் வருகை நான் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறமாதிரி...நன்றி..
ஸ்டார்ஜன் வாங்க சார்...உங்கள் வருகைக்கு நன்றி...
வாங்க நிஜாம்...என்னைத் தொடருபவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி...
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....