உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, October 7, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்...4 (நிறைவு)


மிக உயர்ந்த மலையிலிருந்து தண்ணீர்; கொட்டுகிறது ஆனால் நாம் கை தட்டவேண்டும் அது உற்சாக மலைப்போல் இருக்கிறது.நாம் கைத் தட்டி உற்சாகப் படுத்தினால் நாம் குளிக்கலாம் . நான் கைத் தட்டினேன் சந்தோசமாக கொட்டிய தண்ணீரில் குளித்தேன் என் குட்டிஸ்களும் என்னுடன்.
எங்களுடன் இணைந்து வந்த மலையாளி குடும்பம் சலாலாஹ்வில் வாழக்கூடியவர்கள். இந்த மலையிலிருந்து கைத் தட்டும்போது அதிகமாக தண்ணீர் வரும் இப்போது குறைவாக கொட்டுகிறது என்று கூறினார்கள். கொஞ்சமாக கொட்டினாலும் கைத்தட்டினால் தண்ணீர் வருகிறது என்பதை பார்க்க முடிந்ததே அதுவே எங்களுக்கு போதும் என்றேன்.

அந்த மலைக்கு எதிரில் கடல் அலைஅதிகமாக இருந்தது கடல்கறையில் பல வண்ணங்களிவல் கூலாங்கற்கள் கிடந்தன. கடல்அலையில் அந்த கற்கள் தங்களுடைய நிறங்களை நமக்கு அழகாக்கி காட்டியது. அதனால் அந்த கற்களை அங்கேயே பார்த்து விட்டு வருவதற்கு மனமில்லை. என் குட்டிஸ்கள் ஆர்வத்துடன் கற்களை பொருக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் அனைவரும் பொருக்க பெரிய மூட்டையாகி விட்டது. இதை எப்படி தூக்கிச் செல்வது என்று எல்லோரும் சென்று தூக்கி வேனில் போட்டு ஆளுக்கு பாதியாய் பங்கிட்டுக் கொண்டோம்.

பின் அங்கிருந்து நபி சாலிஹ் அடக்கஸ்தளத்திற்கு சென்றோம். அது மலையின் உள் பகுதியில் இருக்கிறது. நடந்து செல்வதற்கு ரோடெல்லாம் போட்டிருக்கிறார்கள். அதை ஓமான் அரசு நிர்வகித்து வருகிறது.

நாங்கள் சென்ற பகல் நேரத்தில் யாருமே இல்லை. அந்த இடமே நிசப்பதமாக இருந்தது. இந்த இடத்தில் பெரிய பாம்புகள் இருந்ததாக கூறினார்கள். இப்போது இல்லையாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் அடக்கஸ்தளங்களை எப்படி சரியாக அடையாளங்கண்டு பராமரித்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை. சில இடங்களைப் பற்றி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோல் சாலிஹ் நபியின் வாழ்க்கை வரலாறும் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது. குர்ஆனை ஒதியதால் அதன் விளக்கங்களை வரலாறுகளை படித்ததினால் இந்த இடங்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அதேபோல் அய்யுப் நபி அவர்களின் அடக்கஸ்தளமும் அவர்கள் நோயிலிருந்து விடுபடுவதற்கு கிணற்று நீரால் தங்கள் உடலை சுத்தம் செய்த அந்த கிணற்றையும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

சாலிஹ் நபியின் அடக்கஸ்தளத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மீன்பிடி இடமிருந்தது. அங்கு நின்று பலவகையான மீன்களை பார்த்தோம் விலை மலிவு. வாங்கி சமைப்பதற்கு இடவசதியில்லாததால் வருத்தத்துடன் புறப்பட்டேன்.

சலாலாஹ் ரோடுகளில் வாகனம் ஓட்டுவதற்கு மிக கவனம் தேவை. எந்த நேரத்தில் ஒட்டகங்கள் குருக்கே வரும் என்று சொல்லமுடியாது.

சிலர் அமீரகத்திலிருந்து தங்களின் சொந்த வாகனத்தில் சலாலாஹ் செல்கிறார்கள். அப்படி செல்லக்கூடியவர்கள் மிக கவனத்துடன் செல்லவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மாலை சலாலாஹ் நகரம் வந்தோம் மேகமூட்டம் மலைகளின் பக்கம் இருந்ததால் ஓட்டுனரிடம் மீண்டும் அய்யுப் நபியின் அடக்கஸ்தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். போறவழியில் நீர்வீழ்ச்சி இருக்கிறது அதில் தண்ணீர் இப்போது வரவில்லை இன்னும் சில தினங்களில் தண்ணீர் கொட்டும் இருந்தாலும் அந்த இடத்தை பார்க்கலாம் என அழைத்துச் சென்றார். தண்ணீர் கொட்டியதற்கான அடையாளமாய் அந்த பாறையில் கறைகள் இருந்தது.

அதற்கு பக்கத்தில் பெரிய பூங்காவை உருவாக்கி வருகிறார்கள். கிட்டதட்ட கொடைக்கானல் லேக் மாதிரியான இடம். நல்ல பசுமை நாங்கள் பார்க்கும்போது வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இதுவரையில் பூர்த்தி ஆகிஇருக்கலாம்.
அய்யுப் நபியின் அடக்கஸ்தளத்திற்கு மறுபடியும் செல்லும் போது மேகமூட்டம் குறைவாக இருந்தது. இந்த முறை பார்த்ததும் புறப்படவில்லை நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்து கொஞ்சம் நடந்து சிலமணிநேரங்கள் அங்கு பொழுதை கழித்தோம். அது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது.

இரவு கடைவீதி சென்று பழங்கள் பொருட்கள் முக்கியமா அல்வா வாங்கினோம்.
அங்குள்ள கடைகளில் பெரும்பாலோர் ஒமானிகள் வேலைப்பார்க்கிறார்கள்.
சலாலாஹ்வின் வருமானம் கடல்மீன்களும் விசவாய வருமானமும் அதிகம்.

மறுதினம் மதியம் 3 மணிக்கு பேருந்து துபாய்க்கு புறப்பட்டது. ஒருவாரக்காலம் அங்கு தங்கியிருந்து மனதிற்கு மகிழ்வையும் பல வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்த்த திருப்தியும் ஏற்பட்டது.

நிறைவோடு மறுதினம் காலை 8.30 மணிக்கு துபாய் வந்து சேர்ந்தோம்.
சலாலாஹ் சுற்றுலா யாரும் செல்லலாம். துபாயிலிருந்து வாகனத்தில் செல்பவர்களுக்கு பெரிய சிலவு ஒன்றும் வந்துவிடாது. விமானத்திலும் செல்லலாம்.
செல்லக்கூடியவர்கள் சீசனில் சென்றால் கண்களும் மனமும் குளிரும்.
சென்றுவாருங்கள் உங்கள் பணயம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நிறைவு.

அடுத்த பயணம் முஸந்தம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

4 comments:

குசும்பன் said...

அண்ணாச்சி அருமை! அடுத்து முஸண்டமா ஆஹா சுத்தாத இடம் இல்லை போல! ஆவலுடன் வெயிட்டிங்!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

இஸ்மத் அண்ணாச்சி, அழகாக இன்னொரு தொடரை நிறைவு செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

வரலாற்றுச் சிறப்புடன் நீங்கள் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. முசுந்தம் நானும் சென்றுள்ளேன். உங்கள் எழுத்துகளில் படிக்க ஆவலுடன் உள்ளேன் :)

மின்னுது மின்னல் said...

கலக்கல் போஸ்ட்

ஆனா அந்த கைதட்டுனா தண்ணி கொட்டுறது புரியல நன்கு விளக்கி இருக்கலாம்

NIZAMUDEEN said...

சலாலாஹ் பயணக் கட்டுரை
4-ஆம் பகுதி படித்து முடித்தபோது
நானும் உடன் வந்ததுபோல் இருந்தது.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....