உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, October 11, 2009

மும்மலைக் காண முசுந்தம்

சலாலாஹ் சுற்றுலாவை படித்து விட்டு பின்னூட்டமிட்ட அன்பு நெஞ்சங்கள் பராரி, ராஜூ, ஸ்டார்ஜன், கலை, அன்புடன் மலிக்கா, சிம்மபாரதி, சென்ஷி ,ச.செந்தில்வேலன், ஜெஸிலா, சிவராமன், சுல்தான், குசும்பன், மின்னுது மின்னல், நிஜாமுதீன், ராஜாகமால்.

தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துக்களை வாரிவழங்கிய சீனிவாசன் மற்றும் ஜெபல்அலியிலிருந்து அன்பு சகோரதரர் (பெயர் மறந்திட்டேன் மன்னிக்கனும்) இவர்கள் தொடர்ந்து பதிவுகளை படித்து வருவதாக கூறி என்னை படிக்கவைத்துவருகிறார்கள்.
உங்கள் அத்தனைபேர்களுக்கும் என் நன்றியினை சமர்பிக்கிறேன்…!

மீண்டும் அமீரகவாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு இன்னொமொரு சுற்றுலா…அதாவது அவர்கள் எளிதாக சென்று பார்த்துவரக் கூடிய தூரம்.
இப்போ நாம் செல்ல இருப்பது முசுந்தம்.இது துபாயிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஒமான் நாட்டைச்சேர்ந்த பகுதி.
முசுந்தம் என்பது அந்த பகுதிக்கு உள்ள பெயர். அந்த பகுதியில் சிறிய நகரமாக இருக்கக்கூடியது கசப்.இங்கு படகில் நம்மை வெகுதூரம் அழைத்துச் செல்வார்கள்.
செல்லும் வழியில் டால்பீன்களை பார்க்கலாம். இருபக்கம் மலையும் நடுவில் கடல் நதிபோல் பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.மலையின் உயரத்தில் ஏறி முசுந்தத்தை முழுமையும் பார்க்கலாம். துபாயிலிருந்து செல்லக்கூடியவர்கள் கட்டாயம் ரிஸிடன்ஸ் விசா உள்ள பாஸ்போர்ட்டுடன் செல்லவேண்டும்.

இது ராஸ் அல் கைமாவிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமீரக எல்லை இருக்கிறது. வெள்ளிவிடுமுறையில் அதிகாலை 6.00 மணிக்கு சொந்த வாகனத்தில் நாங்கள் புறப்பட்டோம். ராஸ் அல்கைமாவில் காலைடிபன் முடித்துவிட்டு 8.00 மணிக்கெல்லாம் அமீரக எல்லை (பார்டர்) வந்தோம்.
கடற்கரையை ஒட்டிய அந்த எல்லைமுடிவு இரசிக்கும்படியாக நம்மை பெரிதும் மகிழ்விக்கிறது.துபாய் இமிக்கிரேஸனில் எக்ஸிட் பண்ணுவதற்கு ஒரு பாஸ்போர்ட்டுக்கு 30திரஹம் கொடுக்கவேண்டும்.
அதை முடித்துக்கொண்டு அதற்கும் பக்கத்தில் உள்ளது ஒமான் நாட்டு எல்லை அங்கு நம் வாகனத்துக்கு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும்.(ஒமான் இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்துக்கு மட்டும்) அதற்கு 100 திரஹம் அங்கேயே அலுவலகத்தில் கட்டவேண்டும்.
ஓமான் எல்லைக்குள் செல்லக்கூடிய நமக்கு நுழைவுத் தொகை (குழந்தைகளுக்கு இலவசம் …இது ஒமானில் மட்டும்) 10திரஹம் கட்டனும். அவ்வளவுதான் எ(தொ)ல்லை பிரச்சனைகளை முடித்துக் கொண்டு நாம சுற்றுவதற்கு புறப்படவேண்டியது தான். அந்த எல்லையிலிருந்து முசுந்தம் ஆரம்பமாகிறது நாம் அங்கிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள கசப் என்ற சிறிய நகரத்திற்கு செல்லவேண்டும். கடல் ரோடு அதைஒட்டிய மலை… வளைந்து வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாதை. விடுமுறை நாட்களில் தான் இங்கு வாகனங்களை அதிகம் காணமுடியும். நாங்கசென்ற போது அவ்வளவாக வாகனங்கள் இல்லை. செல்லும் வழியில் கடற்கரையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மனதைகவர்ந்த பீச்சில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். காலை 11.00 மணிக்கு கசாப் சென்றடைந்தோம். அங்கு நிறைய சுற்றுலா அலுவலகங்கள் இருக்கிறது. கேரளத்து சகோதரர்கள் இருக்கிறார்கள்.ஒரு அலுவலகத்தில் படகில் செல்வதற்கு விசாரித்தோம். 900 திரஹம் என்று கூறினார்கள். சுமார் நான்கு மணிநேரம் சுற்றிவருவார்களாம்.அதில் பலங்கள் தேனீர் குளிர்பானங்கள் இலவசம். காலை 10 மணிக்கு படகை வாடகைக்கு எடுத்தால் மாலை 5.00 மணிக்கு தான் கரைக்கு திரும்புவார்கள். மதியம் சாப்பாடு அவர்களே தருவார்கள் அதற்கு 1200 திரஹம் நாம் கொடுக்கவேண்டும். சிலர் பலரை ஏற்றிக் கொண்டு ஒரு நபருக்கு 50 திரஹம் 100 திரஹம் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.நாங்கள் பேரம்பேசி 500 திரஹத்திற்கு தனி படகை அமர்த்திக்கொண்டு நாங்கள் மட்டும் மதியம் வெள்ளிகிழமை தொழுகை முடித்துக் கொண்டு 1.30 மணிக்கு படகில் புறப்பட்டோம்.பெரிய படகு காப்பகஆடைகளும் உண்டு நாம் குழந்தைகளுக்கு அணிவித்துக் கொள்வது நல்லது. படகு சுமாரனவேகத்துடன் சென்றது. காற்றும் அதே வேகத்தில் அடிக்க நமக்கு ஆனந்த பரவசம் தான். குறிப்பிட்ட தூரம் சென்றதும் விசில் அடிக்கிறார்கள். ஏன் படகோட்டி விசில் அடிக்கிறார்னு பார்த்தால் டால்பீன்களை கூப்பிடுகிறாராம். படகுபோகின்ற வேகத்துக்கு மூன்று டால்பீன்கள் வேகமாக தாவிதாவி வந்தது. நாங்கள் ஆரவாத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினோம்.குழந்தைகள் மிகவும் உற்சாகமடைகிறார்கள். சிறிது நேரத்தில் டால்பீன்கள் சென்று விடுகிறது பின் மீண்டும் நம்மைத் தொடர்கிறது. திட்டுதிட்டான மலைகள் அங்கு சில வீடுகள் இருக்கிறது படகோட்டி சொன்னார் பலஆண்டுகளாக அந்த மலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் கிடையாது மருத்துவம் கிடையாது. பள்ளிக்கூடம் கிடையாது இப்படி அத்தியவாச தேவைகள் ஏதுமில்லாமல் பழங்குடியினர் இன்னும் வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். என்று கூறினார். ஆலம் குறைவான இடத்தில் படகை நிறுத்தி காப்பக ஆடையனிந்து குளிக்கலாம் என்றார். நாங்கள் சென்றநேரம் மிதமான வெப்பம். குடல்நீரோ ஜில்லுனு இருந்தது இருந்தாலும் குளியல் என்பது எனக்கு அலாதியான இன்பம். குதித்து விட்டேன். என்குட்டிஸ்களுக்கு குளிக்க ஆசை…ஆலமாக இருந்ததால் அவர்களை இறங்க அனுமதிக்கவில்லை. எங்களைப்போன்று பல படகுகள் அங்கு குழுமின. அதில் நிறைய ஐரோப்பியர்கள் ஆண்களும் பெண்களுமாய் கும்மியடித்துக் கொண்டு குளித்தனர் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அதை முடித்துக் கொண்டு மீண்டும் சவாரி மீண்டும் டால்பீன்கள் எங்களைத் தொடர சந்தோசமாக இருந்தது மாலை 5.30 மணிக்கு கரைவந்தோம்.
படகிலேயே நேரம் சென்று விட்டதால் மலைகளில் ஏறவில்லை. அங்கு தங்குவதற்கு அறைகளும் கிடைக்கிறது. முசுந்தம் கசப்பில் நல்ல உணவகங்களும் இருக்கிறது விமான நிலையம் இருக்கிறது. ரிசோர்ட் இருக்கிறது.சுற்றிப் பார்க்க இடங்களும் இருக்கிறது விடுமுறையைக் கழிக்க நல்ல இடம்.

வெப்பத்தின் தாக்குதல்லிருந்து இப்போது விடுபட்டுக் கொண்டிருக்கிறோம் ஆதலால் முசுந்தம்- கசப் சென்று வருவதற்கு ஏற்றநேரம் இது.

அமீரகவாழ் தமிழ் அன்பர்களே உங்கள் விடுமுறையை சந்தோசமாக கழியுங்கள்… உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்…!

வயசு பையன் குளிக்கிறான் பாருங்க....

5 comments:

மின்னுது மின்னல் said...

வழக்கம் போல் கலக்கல் !

Prathap Kumar S. said...

அண்ணே...நீங்க ஒரு உலகம் சுற்றும் வாலிபன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இஸ்மத் அண்ணே, வழக்கம் போல அழகான பயணக் கட்டுரை. வாழ்த்துகள்!

கசாபில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு கிளம்பி விட்டால் அருமையான இயற்கைக் காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இஸ்மத் பாய் , ரொம்ப அருமையான இடத்துக்கு பயணம் போயிட்டு வந்திருக்கீங்க . வாழ்த்துக்கள்

குசும்பன் said...

அண்ணாச்சி டால்பின் கவ்வ கூடாத கூடாத இடத்தில் கவ்விட்டா? என்ன செய்வது?

பதிவு அருமை!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....