உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, November 7, 2009

அமீரகப்பதிவர்களின் அட்டகாச அரட்டைகள்....


நவம்பர் 6 -என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .(ஏன் என்ற பதிலை கடைசி வரியில பாருங்க)
அமீரகப்பதிவர்களின் அட்டகாச அரட்டைக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30க்கே
தயாரானேன்.
8மணிக்கெல்லாம் கீழைராஸாவின் சினுங்கல் ஆரம்பித்துவிட்டது.

ராஜாகமாலின் வருகைக்காக காத்திருந்து அழைத்துக் கொண்டு கீழைராஸாவின் வாகனத்தில் (கார்மேக) முகிலுடன் பிரியாணியை தூக்கிக் கொண்டு (இப்ப நாங்க தூக்கினோம் இத சாப்பிட்டதற்கு அப்புறம் எங்கள தூக்கப்போகுது) பேருந்து நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றோம்.
மூக்குகண்ணாடியுடன் மூலையில் நின்றுக் கொண்டிருந்த நாஞ்சில் பிரதாப்பை நான் பேருந்து ஒட்டுனர் பாக்கிஸ்தானி என்று நினைத்துக் கொண்டேன்…பின்தான் தெரிந்தது உலகம் சுற்றும் வாலிபன் விருதை எனக்கு தந்த நாஞ்சில்பிராதாப் என்று…
கைகுலுக்கி உங்களை புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் ரொம்ப வித்தியாசமிருக்கிறதே…என்று கூறிக் கொண்டேன்.அவரும் அப்படியே என்னைக்கண்டு கூறினார்.

முகில், ஹக்கீம், ஆசாத், நான்


ஆசாத்அண்ணன் சந்திரசேகர் ஹக்கீம் இவர்களும் வந்துவிடவே கைகளை கொடுத்து வாங்கிக்கொண்டு கிழக்கிற்கும் மேற்க்கிற்கும் அழைந்துக் கொண்டிருந்த எங்கள் டேராதளபதி கீழைராஸாவுடன் பேருந்து ஷார்ஜாவை நோக்கி புறப்பட்டது.

இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் பேருந்தில் பேனர் கட்டியிருக்கலாம் ஆனா அமீரகத்தில் அனுமதி வாங்கவேண்டும் என்றாலும் அந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற ஆர்வத்தில் கீழைராஸா நான்கு போஸ்டர்களை பேருந்தினுல் அண்ணாச்சி அழைக்கிறார் என்ற வாசகத்துடன் ஒட்டி வைக்க பேருந்து ஷார்ஜா வந்து சேர்ந்தது.

காத்திருந்த ஆசிப்மீரான் (அண்ணாச்சி)கலையரசன் சுல்தான் பாய் கோபிநாத் கார்த்திக்கேயன் ஆதவன் சென்ஷி செந்தில்வேலன் லியோ இவர்கனைவரையும் அள்ளி திணித்திக் கொண்டு பேருந்து பெருமூச்சுடன் புறப்பட்டது…

நான் கல்லூரி செல்லாதவன் என்பதாலோ இந்த நிகழ்வு எனக்கு அமீரகப்பதிவர்கள் என்றக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செல்லும் சுற்றுலாவாகவே எனக்கு காட்சியளித்தது.

இந்த பதிவர்களுக்கு மத்தியில் வயசு தடையில்லை மதங்கள் தடையில்லை அங்கு நட்பு ஒன்றே படிகளாய் இருந்தது.

இரண்டு மணிநேர பேருந்து பயணம் எனக்கு 20 நிமிடமாகவே தெரிந்தது. வாய்விட்டு சிரித்து அளவும் வயிறும் வலித்தது.

ஒவ்வொருவர்களும் ஒவ்வொருதுறைகளில் பணிபுரிந்தாலும் அவைகளை மறந்து ஒன்றாக இணைந்து 18 வயசு இளைஞர்களாக அந்த நிகழ்வுமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு முன் நடந்த பதிவர்களின் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இருந்தாலும் அதில் நெருக்கம் தெரியவில்லை.இந்த சுற்றுலா நெருக்கத்தை கொடுத்து எல்லோருடைய மனதிலும் நட்பை ஆழமாக பதித்துவிட்டது.

சில பதிவர்கள் தாயகம் சென்றிருந்ததினாலும் சிலர் வேலையின் நிமித்தமாக கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலையிலாலும் அவர்களை இந்த சுற்றுலா இழந்தாலும் அவர்களை நினைவுக் கூறும் முகமாக அண்ணாச்சியும் கீழைராஸாவும் அவ்வபோது அவர்களின் பெயர்களை உச்சரித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பை சென்ஷி அபாரமாக மடிகணினியில் தமிழ்மணத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையை தொழுதுவிட்டு கோர்பக்கான் பீச்சில் பிரியாணியை இறக்கினோம்…வழக்கம்போல் சட்டி என் கஸ்டடியில்தான்…

பிரியாணி சட்டியை தூக்கிவரும் சுல்தன் பாய் ராஜாகமால்


அட....பிரியாணிய கொடுங்கப்பா.....

பிரியாணிய வச்சாச்சில்ல....


உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பதுபோல் சிலர் சரிரத்தை சாய்த்தார்கள்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது கிரிக்கெட் மட்டையை பிடித்து விளையாடிவிடவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அண்ணாச்சி ஒரு அணியாகவும்
தளபதி கீழைராஸா ஒரு அணியாகவும் பிரிந்தார்கள்.

இவங்கள்ளாலம் ஆடி என்னத்த ஜெயிக்க போறங்கன்னு அண்ணாச்சி பார்க்கிறார்



நிக்கிற ஸ்டைல பார்தீங்களா...தளபதி கீழைராஸா



தளபதிக்கு எப்பவுமே சேனாதிபதியா நான் இருக்கனும் என்பதால் தளபதி அணியில் நான்.
மட்டையை பிடித்து ஆறு வீச்சத்தில் ஒரு ரன் எடுத்தேன் …பந்தை வீசி ஒருவரை ஆட்டம் இழக்கவைத்தேன். என்னை மாதிரியான வீரர்களை வைத்துக்கொண்டு அணி எப்படி ஜெயிக்கிறது…அதனாலயே எங்க அணி தோத்திடுச்சு என்றாலும்…அண்ணாச்சி அணியை ஜெயிக்க வச்சுட்டோம்.

தீவிரமான ஆட்டம்



ஜெயிச்ச டீமோடு சேர்திட்டோமில்ல....


எல்லோரையும் தனித்தனியே பேட்டிக் கண்டார் முகில். குறும்படம் வந்த பின்னாடிதான் தெரியும் பேட்டியா இல்ல பொட்டியான்னு…

எப்போதுமே அமைதியாக ஒதுங்கி இருக்கக்கூடிய எனது நண்பர் ராஜாகமால் இந்த பதிவர்களின் குழுமத்தில் இணைந்து கலகலப்பானார்.

படகுசவாரி இனிமையாக இருந்தது.அங்கு அனைவரும் சேர்ந்து பாடிய பாடல்களும்தான்.

கடல் குளியல்…அண்ணாச்சி குளிக்க வரவில்லை …யாரோ சொன்னார்கள் பெருநாளைக்குதான் அண்ணாச்சி குளிப்பாருன்னு…
முத்தெடுப்பதாக எண்ணி முகில் நத்தைகளை எடுத்தார்.
பதிவுல நன்றாக நீச்சலடிக்கும் சென்ஷி கடல்ல கரகாட்டம் ஆடுவாருன்னு எதிர்பார்த்தேன் அதை கலையரசன் செய்தார்…

அடுத்த குடும்பச்சுற்றுலாவிற்கு இந்த பீச்சை வாங்கிடலாமான்னு சுல்தான் பாயின் டிஸ்கஷன்


லியோவும் கோபியும் கும்மி அடித்தாரகள்;…சுல்தான் பாயிடம் சுறுசுறுப்பான நீச்சல். தளபதியைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவர் தரையிலேயே நீச்சலடிக்கக் கூடியவர் அவர் உடம்பை பார்த்துவிட்டு யாரும் ஏமாந்து விடக் கூடாது.

குளியலை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்…பேருந்தில் அண்ணாச்சியின் இனிமையான குரலில் பாடல்கள்…சுல்தான்பாயின் காதல் ஒவியப்பாடல்…
தளபதி கீழைராஸாவின் இஸ்லாமிய கீதம்
கலை கோபி சென்ஷி செந்தில் லியோ ஆதவன் இவர்களின் குத்துப்பாடல்கள் .

பலமுறை கோர்பகான் சென்றுள்ளேன்…வரும்போது அனைவரும் தூங்கிவிடுவது வழக்கம்…ஆனால் பதிவர்களின் இன்பச்சுற்றுலாவில் புறப்பட்டபோது எப்படி உற்சாகமிருந்ததோ அதே உற்சாகத்துடன் திரும்பி வரும்போதும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியாவிடை கொடுத்து ஷார்ஜா வாசிகளை இறக்கிவிட்டு துபாய் வாசிகள் தளபதி கீழைராஸா நாஞ்சில் ஆசாத் அண்ணன் ராஜாகமால் ஹக்கீம் சந்திரசேகர் முகில் நாங்கள் மீதிருந்த பிரியாணியை பங்குப்போட்டு…

எங்களை ஏற்றிய இடத்திற்கே கொண்டு வந்து விட்ட எங்கள் தளபதி கீழைராஸா அவர்களுக்கு நன்றி கூறி மறக்காமல் அண்ணாச்சியை நினைவுக் கூர்ந்து விடைப்பெற்றோம்…
அண்ணாச்சி குறிப்பிட்டதைப் போல இந்த சுற்றுல வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடியதே…

எனது ஆரம்ப வரியில் குறிப்பிட்ட இந்த நவம்பர் 6 எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் ஆனால் மறந்துவிட்டேன் அன்று எனது பிறந்தநாள்…அந்த நாளையே இந்த சுற்றுலா மறக்கவைத்திருக்கிறது என்றால் பதிவர்களின் சுற்றுலா எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம்…வராதவர்கள் அடுத்தமுறை மிஸ்பண்ணிடாதீங்க…

சந்தோசத்துடன் வீடுவந்தேன்…அங்கே ஒரே பனிமூட்டம்…!

19 comments:

geethappriyan said...

அருமை இஸ்மத் பாய் பதிவும் படங்களும் மிக அருமை, ஒட்டுக்கள் போட்டாச்சு

geethappriyan said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
நேற்றே தெரிந்திருந்தால் ஒரு கேக் வாங்கி வெட்டியிருக்கலாமே? பாய். மிஸ் பண்ணிவிட்டோம்.:(

சென்ஷி said...

ஆஹா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இஸ்மத்ஜி.. நேத்தே சொல்லியிருந்தா இன்னும் கோரஸா பத்து பதினஞ்சு ஓ போட்டிருப்போமே :))

வூட்டுக்கு போறப்ப பிரியாணி தர்றேன்னு சொன்னீங்க. கடைசியில மறந்து நீங்களே தனியா எடுத்துட்டு போயிட்டீங்க.. பிரியாணி போட்டோ பார்த்தா இப்பவும் நாக்கு ஊறுது :(

கீழை ராஸா said...

இப்படி ஒரு குண்டைத்தூக்கி போட்டு விட்டீங்களே கடைசி வரை உங்கள் பிறந்த நாள் என்று கூறாததற்கு பதிவர்கள் சார்பாக கடூம் கண்டனங்களுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

துபாய் ராஜா said...

லேட்டானாலும் லேட்டஸ்ட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

//இந்த பதிவர்களுக்கு மத்தியில் வயசு தடையில்லை மதங்கள் தடையில்லை அங்கு நட்பு ஒன்றே படிகளாய் இருந்தது.//

நிதர்சனமான உண்மை வரிகள்.

படங்களும், வர்ணனையும் அருமை அண்ணாச்சி.

கீழை ராஸா said...

தளபதி, தளபதின்னு உசுப்பேத்தி எங்கே போய் கவூத்த போறீங்களோ தெரியலை...

ஆனா பதிவு சும்ம கலக்கல்...

//நான் கல்லூரி செல்லாதவன் என்பதாலோ இந்த நிகழ்வு எனக்கு அமீரகப்பதிவர்கள் என்றக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செல்லும் சுற்றுலாவாகவே எனக்கு காட்சியளித்தது.//

மனதை தொட்டு விட்டீங்க இஸ்மத் பாய்...

Prathap Kumar S. said...

அண்ணே கலக்கல்...ஒட்டுப்போட்டாச்சு

Prathap Kumar S. said...

அண்ணே பிறந்தநாள்னு ஏன் சொல்லவேயில்ல.. வாழ்த்துக்கள்.


//வீட்டுல ஒரே பனிமூட்டம்//
ஹஹஹஹ பின்ன அவங்களை விட்டுட்டுப்போனா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மற்றுமொரு அழகான தொகுப்பு. கலக்கீட்டீங்க இஸ்மத் அண்ணே. பிறந்த நாள் வாழ்த்துகள்!!

குசும்பன் said...

இஸ்மத் பாய், போட்டோவில் எல்லாம் ஒரு 10 வயசு குறைஞ்சு 16 வயசு பையன் மாதிரி தெரிகிறீர்கள் பாய்!நேற்று நீங்க கொண்டா இருந்தது 26வது பிறந்த நாள் என்று சொல்லி இருந்தா யாரும் நம்ப மாட்டாங்க என்றுதானே நீங்க சொல்லவில்லை:)


ஆமா, கருப்பு சொக்கா, கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு அங்கிள் இருக்கிறாரே அவரு யாரு????

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அண்ணா

----------------------

எப்பதான் உங்க பிரியாணி திம்பமோன்னு இருக்கு ...

செ.சரவணக்குமார் said...

உங்கள் அமீரக சுற்றுலாவில் நான் மிகவும் ரசித்தது பிரியாணி பாத்திரத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து நிலைகொள்ளாது சிரிக்கும் உங்களின் புகைப்படம்தான் நண்பரே. மிக அருமை.

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் இஸ்மத் பாய் :)

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
நேற்றே தெரிந்திருந்தால் ஒரு கேக் வாங்கி வெட்டியிருக்கலாமே? பாய். மிஸ் பண்ணிவிட்டோம்.:(
//


பெரிய ரிப்பீட்டே!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இஸ்மத் பாய் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பதிவர் சுற்றுலா சிறப்பாக இருந்ததா ...

அது ஒரு கனாக் காலம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..... நீங்க யூத்( து )... தான் ...சூப்பரா இருக்கீங்க... ஆமா அது யாரு ஒரு வக்கீல் அங்கியில்???!!!!

கோபிநாத் said...

தல....சொல்லவேல்ல...மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

கிளியனூர் இஸ்மத் said...

என்பிறந்தநாளை 6ம் தேதியே சொல்லிருந்தா....இத்தனை பின்னூட்டமிட்டு வாழ்த்திருப்பீங்களா...?
முதல்முறையா பல நண்பர்களின் வாழ்த்துக்களை பெறுகிறேன்....அதனாலோ என்னவோ மறந்துவிட்டேன்....வாழ்த்துச் சொன்ன அத்தனை நல்உள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றியினை சமர்பிக்கிறேன்....

ஜமால் அண்ணே...எங்கே உங்களை ரொம்பநாளா காணும்...நீங்க துபாய் வந்தால் உங்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி நான் தயார்செய்து தருகிறேன்....

குசும்பா....என்வயதை சரியா சொல்லிட்டீங்க....அடுத்த டூருல எக்ஸ்டரா ஒரு பிளேட் பிரியாணி உண்டு.....குட்டி குசும்பன் எப்படி இருக்காரு...? நான் விசாரித்ததாக சொல்லுங்க...அவருக்கு தெரியும்..

சரவணக்குமார்....நான் வச்சிகொடுக்கிற பிரியாணிய சாப்பிட்டதும் இவங்களெல்லாம் என்ன நிலமைக்கி ஆவாங்கன்னு நெனச்சேன்...அதனால சிரிச்சேன்...

ஸ்டார்ஜன்....சுற்றுலா சூப்பரு...நீங்களும் வந்திருக்கலாம்....


கோபி...அது ஒரு கனாக் காலம்....ஆதவன்....செந்தில்வேலன்....நாஞ்சில் பிரதாப்...எங்க தளபதி கீழைராஸா....கார்த்திக்கேயன்...சென்ஷி....எல்லாருக்கும் நன்றி....அண்ணாச்சிய மட்டும் காணல....

கீழை ராஸா said...

புரஃபைல் படத்தை மாற்றினேன்.... அது தான் சும்ம கமெண்ட் போடலாமே என்று வந்தேன்....ஹலோ மைக் டெஸ்ட்டிங்...ஒண் டூ திரீ..............

Jazeela said...

தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துகள்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....