உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, December 18, 2009

அமீரகப்பதிவர்களின் "அண்ணாச்சி அழைக்கிறார்" குறும்படம் வெளியீட்டுவிழா


அமீரகப் பதிவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா கடந்த நவம்பர் 6 ம்தேதி நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியை குறும்படமாக தயாரித்து நானும் ஒரு இயக்குனர்தான் என்று நிருபிக்கும் முகமாக கீழைராஸா தனது திறமைகளை இந்த குறும்படத்தில் காண்பித்துள்ளார்.

(பலஆயிரம் பதிவர்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டது என்னவென்றால் வேட்டைக்காரனுக்கு போட்டியாக அண்ணாச்சி அழைக்கிறார் திரையிடப்படுகிறது.
அதுவும் 18ம் தேதி என்று தேதி அறிவித்ததும் நடிகர் விஜய் கீழைராஸாவுக்கு தொலைப்பேசி செய்து உங்கத் தேதியை மாற்றி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு இயக்குனர் கீழைராஸா நான் ஓருமுறை முடிவுப் பண்ணினா என் பேச்சைதவிர எவன் பேச்சையும் கேட்கமாட்டேன்னு சொன்னதும்…தல என் அடுத்தப்படத்துக்கு இதான் பஞ்ச் டயலாக் ன்னு சொல்லிபுட்டு கட் பண்ணிட்டார்ருன்னு வட்டாரத்திலிருந்து வந்த செய்தி)

18.12.2009 வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் சார்ஜாவில் ஆசிப்மீரான் இல்லத்தில் எப்பொழுதும் போல் எனது கை வரிசையான பிரியாணி சட்டி திறக்கப்பட்டு ஆனந்தமாக அள்ளி அள்ளி வைத்த பிரியாணியும் கறியையும் உண்ட அமீரகப்பதிவர்கள் கொஞ்சம் கூட தளராமல் ஆர்வத்துடன் திரைப்படத்தைக் காண அமர்ந்திருந்தார்கள்.

இந்த விழாவிற்கு முக்கிய சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து காவியத்திலகம், புலவர் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் வருகைத் தந்து சிறப்பித்தார்கள்.

பெண் பதிவர்களான பட்டிமன்ற குயின் ஜெசிலாவும், அபுதாயிலிருந்து உஸேனம்மா மற்றும் அவர்கள் குடும்பத்தினரும், அன்புடன் மலிக்காவும் வருகைத்தந்திருந்தார்கள்.

புதிதாக இம்முறை பதிவர் அபுஅப்ஸர், சமீர் -ஜீவன் பென்னியும் வந்து கலந்துக் கொண்டனர்.அவர்களுடன் ஜியாவுதீன் கலந்துக் கொண்டார்.
சரியாக மதியம் 2.30 மணிக்கு அமீரகப் பதிவர்களின் “அண்ணாச்சி அழைக்கிறார்” குறும்படத்தை புரஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பட்டது.



காட்சியின் துவக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பாரதியின் குரலாய் மாற பாரதி பதிவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
சூப்பர் ஸ்டாரின் டைட்டிலோடு அமீரகப்பதிவர்களின் வரலாற்று சிறப்புமிக்க குறும்படம் ஆரம்பமானது.

மொக்கை தர்பாரும், பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு
நிகழ்வும், கிரிக்கெட் நிகழ்ச்சியும் அவைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த பின்னனி பாடல்களும் மிக அருமை.
பிரியாணி சட்டியை தூக்கிக் கொண்டு செல்லும் பதிவர்களை “எங்கே செல்லும் இந்த பாதை” என்ற பாடலை பின்னனியாகப் போட்டு பிரியாணியை மயானமாக்கிய திறமை பெருமை இயக்குனர் கீழைராஸாவுக்கே உரித்தானப் பாணி.

பதிவர்களின் காட்சிகளுக்கிடையே வைகைப்புயல் வடிவேலின் காமடியும் கலக்கலாக இருந்தது.

ஆஸாத் இயக்குனர் கீழைராஸாவிடம் பிரியாணியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி?

நான்கு மணிநேரமாகியும் பிரியானியின் சூடு ஆரவில்லை அது எப்படி என்று ஆஸாத் கேட்க
"அதுவா! இந்த பதிவர்கள் சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியாதவர்களும், உலகப்பதிவர்களின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலின் உஸ்னத்தினால் தான் பிரியாணி இன்னும் சூடாகவே இருக்கிறது; என்று இயக்குனர் கொடுத்தப் பதில் அனைவரும் ரசித்து சிரித்தக் காட்சிகள்.

அண்ணாச்சியின் பேட்டி நகைச்சுவைமிக்கதாய் இருந்தது.

இந்தப் படத்துல நான் ஹீரோவா காமடியனான்னு இயக்குனரிடம்தான் கேட்கனும்.
இந்தக் குறும்பட வெளியிட்டுவிழாவை சிறப்பாக செய்த குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

கீழைராஸா…இவர் பதிவர் மட்டுமல்ல இவருடன் இயக்குனரும், பாடகரும், இசையமைப்பாளரும், ஒளி,ஒலியமைப்பாளரும், எடிட்டரும், இன்னும் பன்முகத்தார்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் நிருபித்துள்ளது.

படத்தைப் பார்த்து முடித்ததும் பதிவர்கள் அனைவரும் கீழைராஸாவை சூழ்ந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுடன் நானும் ஒருவன்.

(முன்னெச்சரிகையாக முதுகில் பஞ்சை கட்டிக் கொண்டு வந்த இயக்குனர் தப்பித்துவிட்டார்)

அண்ணாச்சியின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது.
அமீரகப்பதிவர்களில் பெரும்பாலோர் கலந்து ரசித்தனர்.

படத்தைக் காண கீழே கிளிக் செய்யுங்க
http://www.youtube.com/watch?v=3kSjIFIbv7w

http://www.youtube.com/watch?v=HnnU9Fo8MOU

http://www.youtube.com/watch?v=A5DzU9oyaPQ

http://www.youtube.com/watch?v=LNvzkEogdmc

25 comments:

gulf-tamilan said...

எல்லாம் சரி, வீடியொ லிங்க் எங்கே???

அது ஒரு கனாக் காலம் said...

:-)... super

ஆயில்யன் said...

//கீழைராஸா…இவர் பதிவர் மட்டுமல்ல இவருடன் இயக்குனரும், பாடகரும், இசையமைப்பாளரும், ஒளி,ஒலியமைப்பாளரும், எடிட்டரும், இன்னும் பன்முகத்தார்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் நிருபித்துள்ளது.///


அப்ப அவுரு ஒரு குட்டி டி.ராஜேந்தருன்னு சொல்லுங்க :)

பாலா said...

லிங்க் கொடுங்க தல..! எனக்கும் உங்களை எல்லாம் பார்க்கனும்னு ரொம்ப ஆசை!!

பாலா said...

அப்புறம் தமிழிஷில்..., ஒரு பாராவை மட்டும்.. காப்பி பேஸ்ட் பண்ணுங்க தல.

ஏன்னா... அந்த கமெண்டில் நீங்க போஸ்ட் செய்வதை... அவங்களால் காப்பிரைட் எடுக்க முடியும். உங்க மொத்தப் பதிவையும் அங்கு பேஸ்ட் பண்ணினீங்கன்னா..., உங்கள் மொத்த பதிவின் உரிமையையும்... அவங்க உபயோகிக்கலாம்னு நீங்க கொடுத்த மாதிரி ஆய்டும்.

கிளியனூர் இஸ்மத் said...

கல்ப் தமிழன்....மன்னிக்கனும் வீடியோ லிங் நாளை வழங்கப்படும் என்று வருத்தத்துடன் சொல்லிக்கிறேன்.

அதுஒரு கனாக்காலம்...நன்றி

ஆயில்யன்...நீங்க சொன்னது 100சதவீதம் சரிங்க


ஹாலிவுட்பாலா

//அப்புறம் தமிழிஷில்..., ஒரு பாராவை மட்டும்.. காப்பி பேஸ்ட் பண்ணுங்க தல.

ஏன்னா... அந்த கமெண்டில் நீங்க போஸ்ட் செய்வதை... அவங்களால் காப்பிரைட் எடுக்க முடியும். உங்க மொத்தப் பதிவையும் அங்கு பேஸ்ட் பண்ணினீங்கன்னா..., உங்கள் மொத்த பதிவின் உரிமையையும்... அவங்க உபயோகிக்கலாம்னு நீங்க கொடுத்த மாதிரி ஆய்டும்.//

தகவலுக்கு நன்றி தல ...இனி கவனமாக இருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரியாணி சூடாவே இருந்த காரணம் நல்லா இருக்கே.. :)

Prathap Kumar S. said...

ஹஹஹ அண்ணே... வாழ்த்துக்கள்... படம் எப்படி இருந்துச்சு பார்க்க ஆவலா இருக்கு...நாளைக்காக வெயிட்ங

கண்ணா.. said...

பாஸ் என்னது லிங்க நாளைக்கா..?

அப்போ ரீலிஸ் நாளைக்குதானா..? இன்னைக்கு பிரிவியூ மட்டும்தானா..?

வேட்டைகாரன் கூட இல்லியா..?


திருட்டு விசிடி எப்போ ரிலீஸ்?

☀நான் ஆதவன்☀ said...

ஆகா... சுடச்சுட பதிவா! :) கலக்கல். நாளைக்கு சினிமாவை வெளியிட்டுரலாம் :)

துபாய் ராஜா said...

டிரைலர்லே கீழை ராஸா கலக்கியிருந்தார். படமும் நிச்சயம் அதிரடியாத்தான் இருக்கும்.

பகிர்விற்கு நன்றி அண்ணாச்சி.

சென்ஷி said...

நல்ல தொகுப்பு இஸ்மத்ஜி... விரைவில் நானும் பதிவிலேற்றி விடுகிறேன்.

கலையரசன் said...

உங்க பிரியாணி மாதிரியே சூடா.. சுவையா இருக்கு ஜி!!

அதுல ஒரு ஆட்டம் போட்டீங்க பாருங்க... ம்..அள்ளுது!!

கிளியனூர் இஸ்மத் said...

முத்துலெட்சுமி...உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

நாஞ்சில்.....விழாவில் உங்களை காணுமே....முக்கிய ஹீரோ நீங்கதானே...

கண்ணா...படத்தோட லிங்க் கொடுத்தாச்சி....பார்த்துட்டு சொல்லுங்க....

நான் ஆதவன்....கிரிக்கெட் மட்டைய வச்சிகிட்டு ஒருஆட்டம் போட்டீகளே...மறக்கமுடியுமா...

துபாய்ராஜா....வாங்க....நீண்ட நாட்களாக ஆளைக்காணுமே....படத்த பாருங்க...கருத்த சொல்லுங்க...

சென்ஷி....கலக்குங்க....

கலையரசன்...நேத்து நீங்க அடிச்ச லூட்டி தாங்க முடியல....

உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி....

குசும்பன் said...

ஹீரோ படத்தில் முண்டாசு கட்டி கலக்கல் ஓப்பனிங் கொடுத்தது நீங்கதானே உங்களுக்காகவே படம் 100 நாள் ஓடும்:)

நெக்ஸ்ட் டைம் கொஞ்சம் ஸ்பெசல் பிரியாணி வேண்டும்:)

கிளியனூர் இஸ்மத் said...

//உங்களுக்காகவே படம் 100 நாள் ஓடும்:)//

இந்த ஒரு வார்த்தைக்காக டபுள் ஸ்பெஷல் பிரியாணி உண்டு குசும்பா....ஆமா நேத்தைய சிலவெல்லாம் உங்களுடையதாமே....அதனாலதான் பிரியாணிய கொஞ்சமா சாப்பிட்டீங்களா?

கண்ணா.. said...

அண்ணே .. படம் அருமைண்ணே...

அண்ணாச்சி அழைக்கிறார் - வெற்றி கொடி கட்டும்..

வினோத் கெளதம் said...

Super :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும் உங்களுக்கு !!

அருமையான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி இது !

வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

அருமையான விமர்சன‌

நானும் கலந்துக்கொண்டதில் ரொம்ப சந்தோஷம்

உங்களை சந்தித்ததிலும் நிறைவடைந்தேன்

ஸாதிகா said...

பகிர்வுக்கு நன்றி சகோதரரே.

கிளியனூர் இஸ்மத் said...

கண்ணா,
வினோத்கௌதம்,
ஸ்டார்ஜன்,
அபுஅஃப்ஸர்,
ஸாதிகா... நீங்க துபாயில் இருக்கிறீர்களா?...பதிவர்கள் நிகழ்வில் கலந்துக் கொள்ளலாமே..!

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.!

ஊர்சுற்றி said...

ஆஹ்ஹா... அருமை அருமை. வாழ்த்த வார்த்தைகளே இல்லை. பதிவுலகில் மற்றொரு மைல்கல். கலக்குங்கள் அமீரகப் பதிவர்களே!

வாழ்த்துகள் எல்லோருக்கும். :)

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி....ஊர்சுற்றி

அ.மு.அன்வர் சதாத் said...

நீங்கள் கொண்டு சென்ற பிரியாணி
சூடாக இருந்ததற்கு
நானும் ஒரு காரணம்.

பொறாமை தீயை
"அண்ணாச்சி அழைக்கிறார்" ரின்
நான்கு கிளிப்பிங்கை கண்டதும்
அதிகமாக வளர்த்து விட்டேன்.

மனிதநேயம் வளர இது போல் சுற்றுலாக்கள்
வளைகுடா முழுவதும் நடத்தப்படவேண்டும்

வாழ்த்துக்கள்

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....