உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, January 17, 2010

தமிழ்மணம் 2009 விருதும் அமிதமான சந்தோசமும்

பிரபலமான தமிழ்மணம் என்ற இணையதள வலைப்பதிவு இதழ் பலராலும் எழுதப்பட்ட 7000 பதிவுகளை உள்ளடக்கி சராசரியாக தினம் 350 இடுக்கைகளை பல நாடுகளிலிருந்து தமிழ் எழுத்தார்வலர்களால் எழுதப்பட்டு அதை அனைவராலும் வாசிக்கப்பட்டும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தமிழ்மணத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் அந்தாண்டின் சிறந்த பதிவு என வலைப்பதிவர்களாலும் வாசகர்களாலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுத்த பதிவுகளை முதல் இரண்டு என்ற பரிசின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது.

தமிழ்மணம் 2009 விருது இந்த ஆண்டு நடந்தேறியதில் மொத்தம் 16 பிரிவுகளில் 500 க்கும் அதிகமான இடுக்கைளுக்கு மேல் கலந்துக் கொண்டுள்ளன. இதில் முதல் கட்ட வாக்கெடுப்பு பதிவர்களுக்காக மட்டும் வைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் பத்தும் பன்னிரெண்டும் என்ற கணக்கில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த தேர்வில் நானும் கலந்து எனது இரு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தேன்.
முதல் கட்ட வாக்கெடுப்பில் ஒரு கட்டுரை மட்டும் பொருளாதாரத்தைப் பற்றி நான் எமுதிய தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும் என்ற தொடர் கட்டுரை மட்டும் வலைப்பதிகளால் வாக்குகளிட்டு தேர்வு பெற்றது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் வாசகர்களும் பதிவர்களும் ஒருங்கிணைந்து வாக்குகளித்து எனது பொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசை பெற்று தந்துள்ளார்கள். மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

அமீரகத் தமிழ் பதிவர்களில் நகைச்சுவை பிரிவில் முதல் பரிசைப் பெற்ற நண்பர்கள் குசும்பன் ஆதவன் இவர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எழுத்துலகில் நான் பிரவேசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
ஒன்று படிப்பியலும் பல நூல்களும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களும் எனக்குள் என்னை தேடவைத்தது.
இரண்டு அந்த தேடுதலில் கிடைத்தவர்கள்தான் எனது ஆன்மீக குரு. அவர்கள் என்னை எனக்கு காண்பித்து தந்தார்கள்.

எழுதுகின்றளவுக்கு கல்லூரிவாசம் இல்லை என்றாலும் ஏதோ திக்கி திணறி முட்டி மோதி எதையாவது எழுதவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்த பாதையில் இதைத்தான் எழுதவேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை எனக்குள் உருவப்படுத்தியது என்றால் அது என் குருவிடம் நான் கற்றுக் கொண்ட ஞானம்.
என்னை இவ்வுலகிற்கு ஞானியாக காண்பிப்பதற்குகாக அல்ல. எடுத்த பிறவியில் மனிதனாக வாழ்வதற்கு.

பத்திரிக்கை உலகை நம்பிக்கொண்டிருந்த காலங்களில் காதலிக்கு கடிதம் கொடுத்துவிட்டு பதில் வருமா வராதா என்று பதட்டத்துடன் காத்திருப்பதுபோல் பத்திரிக்கையில் பிரசுரமாகுமா ஆகாதா என்ற பரிதவிப்பு ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஏற்படுத்தியது.

இன்று இணையதளங்களில் படைக்கப்பட்ட படைப்புகளை பத்துநிமிடங்களுக்குள் பத்தாயிரம் கண்கள் மேய்ந்து விடுகிறது அறிவு ஆய்ந்துவிடுகிறது. இணையதளத்தில் இலவசமாக கோகில் வலைப்பூக்கள் என்ற நிலத்தை தந்ததால் இன்று பலரோடு நானும் அதில் எழுத்து பயிர்களை அறுவடை செய்ய முடிகிறது.

வலைதளத்தின் வருகையால் இன்று பலரும் பல நாடுகளிலிருந்து எழுத்துலகில் வெகு இலகுவாக தூரங்களை கடந்து தமிழ் அழுதை ஆர்வத்துடன் அருந்துகிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பல விதமான கருத்துக்களை எழுதுகிறார்கள்.பலர் எழுத்துப் போர்களை நடத்துகிறார்கள்.
யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவரவர்களுக்கு அவரவர்கள்தான் கட்டுபாடாக எழுதவேண்டும் இருக்கவேண்டும் என்ற நிலையில் இணையதள வலைதளத்தின் வளர்ச்சி இருந்துவருகிறது.

ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் வசிகரித்த எழுத்துக்களுக்கு அவரவர்கள் எழுதியவர்களை ஊக்கப்டுத்தும் முகமாக விருதுகளையும் பின்னூட்டங்களில் பாராட்டுகளையும் கொடுத்துக் கொண்டிருப்பது எழுத்துலகின் ஆரோக்கியத்தை காட்டுகிறது.

எனது வலைதளத்தில் சுற்றுலா கட்டுரைகளை தொடராக எழுதி வந்தேன் அதன் நிமித்தம் உலகம் சுற்றும் வாலிபன் என்ற முதல் விருதை அன்பிற்குரிய நண்பர் அமீரகப்பதிவர் நாஞ்சில் பிரதாப் வழங்கி என்னை உற்சாகமூட்டியதை நினைவுகூர்ந்து நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

வானலை வளர் தமிழ் அமைப்பின் மூலம் கவிஞராக அறிமுகமாகி என் இதயத்தில் இடம் பிடித்த அமீரகப்பதிவர்களின்
தளபதி குறும்பட இயக்குனர் கீழைராஸா எனக்களித்த இன்ட்ரஸ்டிங் பிளாக்விருதும் என்னை உற்சாகப்படுத்தியது என்று கூறுவதில் பெருமையடைகிறேன். நண்பர் கீழைராஸாவிற்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

கவிஞர் அன்புடன் மலிக்கா இவரும் வானலையில் வளம் வரும் நீரோடை. ஐந்து நபர்களுக்கு வழங்கியதில் எனக்கும் “2009 பிளாக்கர் அப்ரிக்ஸன் விருதை அளித்து ஊக்கமளித்த அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கு மனமிக்க நன்றியை உரித்தாக்குகிறேன்.

பரிசுப் பெற்ற கட்டுரையை எழுதுவதற்கு தூண்டுதல் தந்த பதிவர் பராரி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இணையதள இதழான தமிழ்மணம் பல ஆண்டுகளாக வலைதள பதிவர்களை ஒருங்கிணைத்து எழுதுபவர்களை ஊக்கவித்து வருவது வழக்கமாக கொண்டிருக்கிறது. தமிழுலகிற்கு ஆற்றிவரும் தொண்டாக செய்துவருகிறது. இந்த ஆண்டில் நானும் போட்டியில் பங்கெடுத்து எனது படைப்பிற்கு பதிவர்களும் வாசகர்களும் வாக்களித்து முதல் இடத்தை பெற்று தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.அத்துடன் தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

சிங்கை நாதனுக்கு இதயம் தந்த நல்லுள்ளங்கள் நிறைந்த வலைஉலகில் நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது மனம் நிறைகிறது.

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கூறி பின்னூட்டமிட்டவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் நன்றி !நன்றி ! நன்றி!

முதல் பரிசுப் பெற்ற “தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்” தொடர் கட்டுரையை நூலாக அச்சில் வெளியிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த இடுக்கையை வாசித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

19 comments:

குசும்பன் said...

இஸ்மத் பாய், வாழ்த்துக்களும் சந்தோசங்களும்!

Prathap Kumar S. said...

அண்ணே நாங்கல்லாம் தீர்க்கதரிசி மாதிரி...:-)
தகுதி உடையவர்களுக்கு கிடைக்கவேண்டியது கண்டிப்பாக கிடைக்கவேண்டும்.

வாங்கிய விருதுக்கும் மேன்மேலும் பல விருதுகள் வாங்கவும் வாழ்த்துக்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அன்புச்சகோதரருக்கு வணக்கம்! தமிழ்மணம் விருது பெற்ற உங்களுக்கு,வாழ்த்துகளும்,வந்தனைகளும்.மிகுந்த மகிழ்ச்சி.இன்னும் பல விருதுகள் பெற்று நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் இஸ்மத் அண்ணே :))

துபாய் ராஜா said...

வாங்கிய விருதிற்கும், வாங்கப் போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

Barari said...

ALHAMDHULILLAH.MIKKA MAKIZCHI.VAZTHUKAL ISMATH.

கோவி.கண்ணன் said...

மேலும் மேலும் பரிசுகள் குவிக்க வாழ்த்துகள் !

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் இஸ்மத் அண்ணே.

கிளியனூர் இஸ்மத் said...

குசும்பன்,
நாஞ்சில் பிரதாப்,
க.நா.சாந்தி லெட்சுமணன்,
ச.செந்தில்வேலன்,
துபாய் ராஜா,
இராகவன் நைஜிரியா,
நட்புடன் ஜமால்,
முத்துலெட்சுமி,
ஜெ.ஜெயமார்த்தாண்டன்,
சந்தனமுல்லை,
பராரி,
கோவி.கண்ணன்,
ஹுஸைனம்மா,

வாழ்த்துக்கள் கூறிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

cheena (சீனா) said...

அன்பின் இஸ்மத்

நல்வாழ்த்துகள் - மேன்மேலும் புகழ் பெற நல்வாழ்த்துகள்

ஸாதிகா said...

மேன் மேலும் விருதுகள் பல பெற்று மகிழ வாழ்த்துக்கள்!

Anonymous said...

Very proud to be associated with you. Wishing you all success in your all your future Endeavor.
Congrats

Mohamed U Mohideen

கிளியனூர் இஸ்மத் said...

சீனா
சகோதரி ஸாதிகா
முஹம்மது மைதீன்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....