உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, March 20, 2010

மார்ச் 20


1988 மார்ச் 20 லிருந்து 2010 மார்ச் 20 வரையில் சுமார் 22 வருடங்கள் கழிந்திருந்தாலும் எங்களுடைய வாழ்க்கையில் கூட்டல்களை வகுத்தல்களை கணக்கியலை திருமண பந்தம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆம் இன்று நான் எனது மனைவி பிள்ளைகளுடன் திருமணநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

எனது இருமகள்களும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்து என்னிடம் வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

எங்களின் 22 வருட வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் நிறைய இருந்தாலும் அவை இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு இப்படி எல்லாம் கலந்த மசாலாவாக இருந்துக் கொண்டிருக்கிறது.

உணவுக்கு மசாலா எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கும் தெரியும்தானே. அதில் எந்த ஒன்றும் அதிகமானாலும் ருசி மாறிப்போகும்.ருசி மாறினால் பசி தீராதே. பசிக்காக ருசியே இல்லாமல் என்றோ ஒரு நாள் சாப்பிடலாம் தினம் சாப்பிட முடியுமா?தினம் ருசியில்லாமல் சமைக்கத்தான் முடியுமா? காலம் கற்றுக் கொடுத்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான் கற்றுக் கொடுக்கிறது விட்டுக் கொடுக்கும் பட்சத்தில்.

எங்கள் வாழ்க்கையை கற்றுக் கொண்டுவாழ்கிறோம், நிறைய எங்களுக்குள் விட்டுக் கொடுத்தும் வாழ்கிறோம்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாலையும் கழுத்துமாய் அம்பாஸிட்டரில் அமர்ந்திருந்தபோது என் உறவினர் தேரிழந்தூர் அப்துல் மஜீது அவர்கள் என்னிடம் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நேற்று வரையில் நீ அரை மனிதன் இன்று முதல் நீ முழு மனிதன் என்றார்.

திருமணம் பந்தத்தின் மூலம் மனிதன் முழு மனிதனாகின்றான்.அதுவரையில் என்னதான் கற்றறிந்தாலும் அந்த மனிதன் முழுமை அடைவதில்லை.

அன்று எங்கள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பலரை இன்று நாங்கள் இழந்திருக்கிறோம். வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இருக்கத்தானே செய்கிறது.

எப்படி பிறந்தோம் என்றறிந்தால் எப்படி வாழ்வது என்பதறிவோம் என்ற வரிகளை இங்கு பதிவு செய்ய எனது 22 வருட மணவியல் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

திருமணமான சில நாட்களில் மகானைக் காண நான் சென்றபோது எனது தாயார் வருந்தினார்கள். இந்த வயசுல எதுக்கு இதுவெல்லாம் என்றார்கள்.

அறிவைத்தேட வயதிருக்கிறதா? புரிந்துக் கொள்வதற்குத்தான் வயது தேவைப்படுகிறது.

அந்த தருணத்தில் எனது மனைவி பயந்திருக்கிறாள். பயத்தை போக்குவதற்கு தெளிவைக் கொடுத்தேன்.

புரிந்துக் கொண்டார் எனக்கு என் மனைவி புதியவரல்ல. மணம் புரிந்தப்பின் என் மனதில் புகுந்தவரல்ல. என் தந்தையின் சகோதரி மகள் என்றாலும் கூட இரு மனம் கலந்தால்தான் அது காதல். ஆனால் அந்தக் காதல் சில வருடங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்திற்காக காத்திருந்தது.

காலம் கடந்தது எங்கள் காதல் வளர்ந்தது. என் வீட்டில் எதிர்ப்பு நிறைந்தாலும் என் தந்தை மறுப்பு சொல்லவில்லை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குப் பாடம்.

விட்டுக்கொடுத்தால் விரோதியும் நமக்கு நண்பனாகி விடுவான். விரோதியே நண்பனாகும்போது நமக்கே நமக்காக வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துவிட்டால்..... எழுதுவதற்கு எளிமையாக இருக்கிறது படிப்பதற்கும் அப்படித்தானிருக்கும் நடைமுறைப் படுத்தி வாழ்ந்துப் பார்த்தால் கடினம்மாதிரி இருந்தாலும் அது கஸ்டமாவதில்லை நம் வாழ்க்கையை நஷ்டமாக்குவதில்லை.

எங்கள் திருமணத்திற்கு பாலமாக நின்ற என் இனிய நண்பர் ஒலிமுஹம்மது.இவர் எங்கள் இரு வீட்டாருக்கும் தூதுச் சென்ற வெள்ளைப் புறா மறக்க முடியாத மனம்.

திருமணத்தை முன்னின்று நடத்திய என் அன்பிற்குரிய மாமா அப்துல்ஜப்பார்.என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மாவீரர்.

என் பிள்ளை ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக என்னவளை மருமகளாய் ஏற்றுக் கொண்ட என் அன்னை.

என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் என் தந்தை.

ஓடியாடி வேலைகளை செய்த என் உடன் பிறந்த சகோதரர்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் பாசங்காட்டிய என்நண்பன் அத்திக்கடை சிஹாபுதீனின் தந்தை செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனிபா.

எங்களை வாழ்த்துவதற்காக கூடிவந்த சொந்தங்கள், பந்தங்கள், உள்ளுர் வாசிகள்

இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு தூதுச் சென்ற எனது மைத்துனர் ஷேக்அலாவுதீன்.

நாங்கள் யாரையும் மறக்கவில்லை எங்கள் மனதில் மறைக்கவில்லை.

28 comments:

வடுவூர் குமார் said...

ம‌ண‌ நாள் வாழ்த்துக்க‌ள்.

எம்.எம்.அப்துல்லா said...

இனிய மணநாள் வாழ்த்துகள் அண்ணா.


//இறப்பதும் பிறப்பதும்தான் வாழ்க்கையாக இருக்கிறது.

//


பிறப்புக்கு,இறப்புக்கும் இடைப்பட்ட பிறப்பு,இறப்புகள்தானே வாழ்க்கை :)

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் இஸ்மத் அண்ணே...

என்னைப்போன்றவர்களுக்கு நீங்கள் சொன்னவிசயங்கள் வாழ்க்கையில் உபயோக இருக்கும்...நன்றிண்ணே...

mohamedali jinnah said...

எனக்கு மனம் மகிழ்கின்றது வாழ்த்துகள் Jazakom Allaho Khayran.

ஹாய் அரும்பாவூர் said...

வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

seasonsali said...

http://www.quranclub.net/2009/11/how-to-love-your-wife-as-muslim.html

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஆஹாஹா! அருமை!மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் தம்பதியராய் நீடுழி வாழ இறையை
வேண்டும் அன்புச்சகோதரி. திருமண
நாள் விருந்தாய் இரு அருமையான பொன் மொழி கொண்ட வாழ்த்து அட்டைகள். நன்றி

ஜோதிஜி said...

நல்வாழ்த்துகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இறையருளால் மனம்மகிழ்ந்து, நீடு வாழிய
என்று வாழ்த்துகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்கள் மணநாளில் தங்கள் கருத்துக்கள்,
தத்துவங்களாய் யோசிக்க வகிக்கின்றன.
இதன் கருத்துக்களை அனைவரும் பின்பற்றினால்
அவர்தம் மணவாழ்வு, மகிழ்ச்சிகரமாய் வாசம்
வீசும் என்பதில் இல்லை ஐயம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இலங்கைப் பயணக் கட்டுரை எப்போது அண்ணே?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாழையும் கழுத்துமாய் //
'மாலையும் கழுத்துமாய்' என்பதே சரி.
//மருமகாளாய் ஏற்றுக் கொண்ட என் அன்னை.//
'மருமளாய்' என்று மாற்றுங்கள்.
எல்லா வாக்கியங்களும் அருமையே.
இருப்பினும் இந்த இரு சிறு பிழைகளையும்
சரி செய்தால், சிறப்புறும். கருத்துக்களுக்காக
வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மருமகாளாய்//
'மருமகளாய்' என்று மாற்றுங்கள்.

SEASONSNIDUR said...

Prophet Muhammad (s) said: “Among my followers the best of men are those who are best to their wives, and the best of women are those who are best to their husbands.

Anonymous said...

Of marriage: (Among His signs is that He created for you spouses of your own kind in order that you may repose to them in tranquility and He instilled in your hearts love and affection for one another; verily, in these are signs for those who reflect (on the nature of the reality).) (Ar-Rum 30: 21).

In another place, Allah refers to the relationship between males and females in terms of partnership for achieving goodness and fulfilling the divine mandate for their lives. (The believers, males and females, are partners of one another; they shall jointly enjoin all that is good and counsel against all that is evil.) (At-Tawbah 9: 71)

தருமி said...

மதங்களை மறந்த மனிதனைத்தேடி...அலையும் நல்ல மனிதரின் திருமண நாளுக்கான என் வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

அண்ணாச்சிக்கும், அண்ணியாருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

dheva said...

Gr8 Aniversarry wishes Anna! 22 years is a milestone...we will have t follow your foot steps!

Dheva. S

ஜீவன்பென்னி said...

அண்ணாச்சிக்கு திருமண வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்களை தூய்மையான அன்பினால் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்

வடுவூர் குமார் (உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி)

எம்.எம்.அப்துல்லா ( உங்கள் கருத்தை ஏற்று வரிகளை திருத்திக் கொண்டேன் நன்றி)

நாஞ்சில் பிரதாப் (பார்த்து நாலாச்சு சீக்கிரமா பதிவர் சுற்றுலா ஏற்பாடு செய்யனும்)

நீடுர் அலி (உங்கள் வாழ்த்துக்கு நன்றி .அண்ணே உங்களின் பதிவுலக சேவை அபாரம்...வாழ்த்துக்கள்)

ஹாய் அரும்பாவூர் (உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி)

கா.நா.சாந்தி லெட்சுமணன் (சகோதரி வாழ்த்து அட்டை கிடைக்கவில்லை உங்கள் வாழ்த்துக்கு நன்றி)

ஜோதிஜி (உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி)

நிஜாமுதீன் (எழுத்துப்பிழையை கண்டிப்பாக தவிற்கவே முயற்சிக்கிறேன் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி திருத்திக் கொண்டேன்....இலங்கைப்பயணக்கட்டுரை இன்ஷாஅல்லாஹ் விரைவில். உங்கள் வாழ்த்துக்கு நன்றி)

தருமி (ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி)

துபாய்ராஜா (ராஜா நலமா இருக்கீங்களா? நாம் எப்போது சந்திப்பது...வாழ்த்துக்கு நன்றி)

தேவா (உங்கள் வாழ்த்துக்கு நன்றி...நீங்களும் சகோதரியும் என்றும் சந்தோசத்துடன் வாழ வாழ்த்துகிறேன்)

ஜீவன்பொன்னி (உங்கள் வாழ்த்துக்கு நன்றி...எப்போ கல்யாணம்?)

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் அண்ணா.

ஹுஸைனம்மா said...

வித்தியாசமான மணநாள் கொண்டாட்டம்!! எல்லாரும், இந்நாளில், தம்மையும், துணையயும் மட்டுமே முன்னிறுத்தி எழுதுவார்கள்/ பேசுவார்கள். நீங்களோ, திருமணம் நிறைவேற உறுதுணையாக நின்றவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்ததில் உங்களின் நல்மண/னம் தெரிகிறது!!

Barari said...

தங்கள் குடும்பம் மேன்மேலும் சிறந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் தூவா செய்கிறேன்.வாழ்த்துகள்.

அன்புடன் மலிக்கா said...

திருமணநாள் வாழ்த்துக்கள்.அருமையான நினைவுகூறல்..

அப்துல்மாலிக் said...

இன்று போல் அன்போடு, சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனிடம் துவா செய்பவனாக‌

கிளியனூர் இஸ்மத் said...

அக்பர்
ஹுஸைனம்மா
பராரி
அன்புடன் மலிக்கா
அபுஅஃப்ஸர்

உங்கள் வாழ்த்துக்களை மனமுடன் ஏற்றுக் கொண்டேன்...உங்கள் வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

மணநாள் வாழ்த்துக்கள்.

நல்ல பகிர்வு.

mohamedali jinnah said...

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை
Please visit:
http://seasonsnidur.blogspot.com/2011/01/blog-post_08.html

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....