உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, July 20, 2010

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு

முஹம்மது அலி ஜின்னாஹ்


விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு.
தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

நாட்குறிப்பில் எழுதிய காலத்தில் கூட நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாமல் எழுத்துக்கு வறுமை இருந்தது ஆனால் இன்று இணையதளத்தில் இலவசமாக கிடைத்திருக்கும் வலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எழுதலாம் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நாட்குறிப்பில் எழுதிய சுதந்திரம் வலையில் இல்லை எழுதுபவர்களுக்கு பர்தா தேவைப்படுகிறது.

பேனா நண்பர்களாக அறிமுகமானவர்களை சந்திக்கும் போது எற்படக்கூடிய அலாதி இன்று பதிவர்களை சந்திக்கும்போது இல்லை என்று ஒரு பதிவர் சொன்னார். அவர் சந்தித்த பதிவர் அப்படி ஆனால் எனக்கு அது நேர்மாற்றம். பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.

இந்த விடுமுறையில் ஒரே ஒரு பதிவரை மட்டும் நான் துபாய் புறப்படுவதற்கு முதல் நாள் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நீடுரை நோக்கிச் சென்றேன்.(எனது பக்கத்து ஊர்)

எனது நண்பரின் மகளுக்கு அன்று நீடுரில் திருமணம் நிகழ்ச்சி அதில் கலந்துக் கொள்வதற்கு முன் 70 வயதைக் கடந்த முஹம்மது அலி ஜின்னாஹ் (நீடுர் சீசன்) என்ற பழுத்த ஞானப்பழத்தை சந்திக்க காலை 11 மணிக்கு அவர் இல்லம் வந்தேன்.

(தமிழக இஸ்லாமியர்கள் அறிந்த காலம்சென்ற சிந்தனைச் செல்வர் நீடுர் அட்வகேட் சையது அவர்களின் அன்புச் சகோதரர் தான் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்)

வழக்கம்போல் அழைப்பு மணி..

வெள்ளை நிற ஆடையில் வெண்மை சிரிப்புடன் நரைத்த முடி என்றாலும் நிமிர்ந்த இராணுவச் சிப்பாயைப்போல் பளிச்சிட்ட முஹம்மது அலி ஜின்னாஹ் என்னைக் கண்டு யார் என்று கேட்பார் என எதிர்பார்த்தேன் அவரோ அடையாளங்கண்டு வாங்கோ என்று உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

சிறிய வரவேற்பரையில் அமரப்போன என்னை உள்ளே வாங்க என பெரிய வரவேற்பறைக்கு அழைத்து அமரச்செய்து கூச்சப்படவேண்டாம் எனக்கூறிக் கொண்டே தனது அன்புநிறைந்த துணைவியாரிடம் என்னை ஞாபகமூட்டினார்.(ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார்)

என்னைக் கண்டதில் அவருக்கு அளப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவருடைய பரபரப்பில் காணமுடிந்தது.குடிப்பதற்கு டீ அல்லது காபி அல்லது சர்பத் எதுவேண்டுமோ சொல்லுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் சர்பத் என்றதும் டீ அல்லது காபி வேண்டும் என்றாலும் கேளுங்க கூச்சப்படாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

அவருடைய பேரக்குழந்தை துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்.பொருட்களை எடுத்து உரியவர்களிடம் கொடுப்பதில் திறமைவாய்ந்தவராக காணப்பட்டார்.

உரையாடினோம் அவருடைய பேச்சில் இந்திய மூத்த தலைவர்களைப் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது.இத்தனை வயசிலும் இவ்வளவு விசயங்களை ஞாபத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.பல நாடுகளுக்கு சென்றுவந்தவர்.ஆங்கில புலமை நிறைந்தவர்.

தனது படுக்கையறையில் வைத்து கணினியை செயல்படுத்திக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.கணினிக்கு முன் இருந்த நாற்காழியின் கைப்பிடியில் தலையணைகள் கட்டப்படிருந்ததை வைத்து அதிகமாக இணையதளத்தில் வலம்வருவதை கிரகிக்க முடிந்தது.

வயதாகிவிட்டால் பலர் தங்கள் வாழ்க்கை முடிந்தே விட்டது என்ற கவலையில் பல நோய்களோடு படுத்த படுக்கையில் இருக்கும் பலருக்கு எழுபது வயசிலும் சுறுசுறுப்புடனும் தன்னார்வத்துடன் இளைஞர்களுடன் சரிசமாக பழகிவரும் மதிப்பிற்குரிய முஹம்மது அலி ஜின்னாஹ் பெரியவர்களுக்கு முன்னுதாரணமானவர்.

எனது கட்டுரைகளைப்பற்றி கூறினார் நிறைய அறிவுரைகள் கூறுவார் என எதிர்பார்த்தேன் அவரோ என்னை பேசவைத்து இரசித்துக் கொண்டிருந்தார்.
தத்துவத்தின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கூறினேன்.

எந்த தேவைகளுக்குமே அதிகமாக செல்லாதவர் தனதூரில் நடக்கும் எனது நண்பரின் மகளார் திருமணத்திற்கு அழைப்பு இருந்தும் செல்வதற்கு மனமின்றி இருந்தவர் என்வருகையால் நானும் வருகிறேன் என காரில் செல்ல கூப்பிட நான் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன் எனக்கூறியதும் அதிலே போகலாம் என என்னுடன் வந்தார்.அவருடைய இந்த அனுசரனை எனக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நாளை துபாய் புறப்படுகிறேன் என்றதும் வருத்தப்பட்டார்.சில தினங்களுக்கு முன்னாடியே நாம் சந்தித்திருக்க வேண்டும் நிறைய நேரங்களை சிலவழித்திருக்க வேண்டும் என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கும் அதே ஆதாங்கம் தான் ஆனால் பத்து தினங்கள் தென்மாநில சுற்றுலாவில் கழிந்துவிட்டதினால் நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என விளக்கமளித்தேன்.

வயது வித்தியாசமின்றி தனது மகன் வயதையொத்த என்னிடம் அவர் வெளிப்படுத்திய பண்பை, அன்பை எண்ணும்போது ஒரு குருவைச் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.துபாய் சென்றதும் எனது பையனுடன் தொடர்புவைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.எனது தந்தைக்கு சமமான முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்.

இணையத்தில் முகப்புத்தகத்தில் வலம் வருவதும் வலைப்பூக்களை தொடங்கி பலரின் நல்ல பதிவுகளை அவர்களின் அனுமதிப்பெற்று தனது வலையில் மறுபதிவு செய்வதும் இவரின் வழமையாக இருக்கிறது. தன்னால் டைப் செய்யமுடியவில்லை என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது டைப் செய்யமுடிந்தால் கதைகளை நிறைய பதிவுச் செய்வேன் என முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் கூறினார்.

இந்த மூத்த பதிவரை சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியடைந்தது.இவரின் வயதிலும் சுறுசுறுப்புடன் வலம்வர வேண்டும் என்ற உரத்தை உள்ளத்தில் பதியவிட்டேன்.

எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அவருக்கு என்றென்றும் வழங்க இறைஞ்சுகிறேன்.

என்னை சந்தித்த பாதிப்பு அவரின் இமெயில் வரிகளில் காணமுடிந்தது.

இது பதிவரை பார்த்துவிட்டு வந்த பிரிவு அல்ல
இரு உள்ளங்களுக்குள் எற்பட்ட உறவு.!

16 comments:

Anonymous said...

அன்பு இஸ்மத்,
முஹம்மது அலி ஜின்னாஹ் என்ற அந்த மாமனிதரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிவிடுகிறது உங்கள் அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

-ஷேக்சிந்தா மதார்

அண்ணாமலை..!! said...

பெரிய மனிதரின் ஆசிகளைப் பெற்று அதை
வியந்து எழுதியுள்ளீர்கள்!
நீங்களும்! ஐயாவும் வாழ்க பல்லாண்டு!

NIZAMUDEEN said...

பெரியவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய
தங்களின் வியப்பு, எனக்கு வியப்பேயில்லை. நானும்
அதே நீடூரில் அவர்கள் வசிக்கும் அதே தெருவில்தான்
இருக்கிறேன். அதனால், அவர்கள் வீட்டிற்கு எதிரிலிருக்கும்
பள்ளியில் நான் தொழப் போகும் சிறு வயதிலிருந்தே
என்னிடமும் அன்பாக பழகுவார்கள். அவர்களின் பேச்சும்
நமக்குமட்டும் கேட்கும்வண்ணம் மென்மையாக இருக்கும்.
சென்ற ஆண்டில் நான் ஊருக்குச் சென்ற போதும் அவர்கள்
என்னிடம் அன்போடு உரையாடினார்கள்.
அவர்களோடுடனான தங்கள் சந்திப்பை அழகாக பதிவு செய்தீர்கள்.

அன்புடன் புகாரி said...

தேன் தேன் என்று தேன் வழிய சந்தித்தேன் என்று இனிக்க இனிக்க இனிப்பானவரைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள், இனிப்பாய் இருக்கிறது, சந்திக்க வேண்டும் என்ற நினைப்பாய் இருக்கிறது!

அன்புடன் புகாரி

அப்துல் பாஸித் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்கள் பதிவை மீள்பதிவு செய்துள்ளேன். ஆட்சேபனை இருந்தால் நீக்கி விடுகிறேன்.
http://nidurneivasal.blogspot.com/2010/07/blog-post_20.html

கிளியனூர் இஸ்மத் said...

ஷேக்சிந்தா மதார்
அண்ணாமலை உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

நிஜாமுதீன் நீங்கள் கொடுத்துவைத்தவர் ஒரே தெரு என்பதால்...நன்றி

அன்புடன் புகாரி உங்கள் நினைப்பு இனிக்கட்டும் ....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

அப்துல்பாஸித் மீள்பதிவு இட்டமைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...நன்றி

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பருக்கு,

எனது அன்புக்குரிய நண்பர் திரு. முஹம்மத் அலி ஜின்னாஹ் குறித்து மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

எனது ஒவ்வொரு செயலையும் உடனுக்குடன் பாராட்டி ஊக்குவிக்கும் நண்பரொருவரை, இவரைப் போல வேறொருவரை நான் இதுவரை காணவில்லை. அண்மையில் எனது புத்தகவெளியீட்டு விழா குறித்துச் சொன்னதுமே உடனே என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துச் சொன்னார். நீண்ட நேரம் கதைத்தோம். வயதின் பாரபட்சம் இன்றி, நெருங்கிய நண்பர்களாக உரையாடிக் கொள்ள பல விடயங்கள் இருந்தன.

எனது மிக நெருங்கிய நண்பர், நல்லவர்..அவரை நீங்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி..இன்ஷா அல்லாஹ் அவரை நானும் நிச்சயம் ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், அவருக்கு எல்லாச் சிறப்புக்களையும், பூரண தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்குவானாக ! ஆமின் !

இப்னு ஹம்துன் said...

அன்பும் பண்பும் மிகுந்த அண்ணன் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களுடன் எனக்கும் நல்ல நட்பும் அவ்வப்போது மடல் தொடர்பும் உண்டு. (என்னுடைய சில ஆக்கங்களை வெளியிட்டுள்ள வகையில்).
மிகுந்த கண்ணியமும் பண்புகளும் கொண்டவர் என்பதை உணர்கிறேன். நிறைய எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துவார்

இன்ஷா அல்லாஹ் ஊருக்குச் செல்கையில் கட்டாயம் சந்திக்க எண்ணியுள்ளேன்.

abul bazar/அபுல் பசர் said...

பெரும் மதிப்பிற்குரிய பதிவர். ஜனாப்: நீடூர் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் பற்றி
சிறப்பானதொரு பகிர்வை எங்களூடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றியை தங்களுக்கு
தெரிவித்துகொள்கிறேன்.

நாஞ்சில் பிரதாப் said...

//பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.//

நச்சுன்னு சொன்னீங்கண்ணே... சீக்கிரம் தென்மாநில சுற்றுலாப்பற்றிய பதிவை போடுங்க..

நம்மூருக்கு போனீங்களா...

கிளியனூர் இஸ்மத் said...

எம்.ரிஷான் ஷெரீப் நீங்கள் முஹம்மது அலியைப் பற்றிய கூறுவது முற்றிலும் சரியே...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...தங்களின் நூல் துபாய் கிடைப்பதற்கு ஆவனச்செய்யுங்கள்.

இப்னு ஹம்துன் ...எமுத்தார்வமிக்கவர்களை ஊக்கப்படுத்துவதில் மு.அ.ஜின்னாஹ் அவர்கள் முன்னோடியாக இருக்கிறார்கள்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அபுல் பசர்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

நாஞ்சில் பிரதாப்...நலமா?....தென்மாநில சுற்றுலாவை எழுத ஆரம்பித்துவிட்டேன்...விரைவில் பதிவிடுகிறேன்...வருகைக்கு நன்றி

VANJOOR said...

MAY ALLAH S.W.T BLESS MY DEAR NIDUR MOHAMED ALI JINNAH AND HIS FAMILY WITH ALL THE BEST HERE AND HEREAFTER.

VAANJAIYUDAN

VANJOOR

ராஜவம்சம் said...

துவா சலாம்

Anonymous said...

it is a great article mr. Mohamed ali jinnah really 70 year young man - rajakamal

sonnet said...

I am follwoing
http://seasonsali.blogspot.com/
Good blogger, ....Kind man

Shaikh Sadaqathullah said...

Dear Brother,
Assalamu Alaikum WRWB,
Iam very happy to read article about respected brother Mohammed Ali Jinnah. He is a very nice person and doing lot of good work. May Allah bless him and his family.
Thanks!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....