உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, August 12, 2010

வடமாநில சுற்றுலா - 6


பேருந்து தயாராக நின்றது நாங்கள் ஏறி அமர்ந்தோம் அப்போதுதான் தெரிந்தது இது ஏசி வசதி இல்லாத பேருந்து என..நாங்கள் கட்டிய தொகை ஏசி பேருந்திற்கு..

அங்குள்ள பொறுப்பாளனிடம் கேட்டேன் நாங்கள் ஏசி பேருந்துவிற்கு தான் புக்செய்தோம் என்றேன்.அவன் உடனே மன்னிக்கனும் எங்களுக்கு வந்த தகவல் சாதாரன பேருந்தில் பயணம் செய்வதுதான் என்றான்.

இவன்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை எனத் தெரிந்தது ஏமாறக்கூடியவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறுவார்கள்.
வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ விசயங்களில் ஏமாறுகிறோம் ஏமாற்றம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்
பொருளை ஏமாந்தால் தேடிக்கொள்ளலாம் ஆனால் தன்னிடமே ஏமாந்துபோவதுதான் கஸ்டமானது
அது என்ன தன்னிடம் ஏமாறுவது என்கிறீர்களா?
என்னை நான் என்று எண்ணி ஏமாறுவது தான் தன்னிடம் ஏமாறுதல் இங்கு அத்வைதம் வேண்டாம் தேவையானால் தொட்டுக்கொள்வோம்.

அந்த பேருந்தில் சில தமிழ் குடும்பங்கள் இருந்ததினால் ஆதரவாக பேசிக் கொண்டு வந்தோம்.
டெல்லியை பொறுத்தவரையில் டிராபிக் சட்டதிட்டங்களை ஒருவரும் மதிப்பதில்லை.கண்காணிக்க கூடிய காவலர்கள் தங்களின் பாக்கெட்களை நிரப்புவதில் கவனமாக கண்காணிக்கின்றார்கள்.

செனனையில் இருக்கக் கூடிய சுத்தம் கூட மத்தியில் தலைநகரத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

பேருந்தில் குளிர்சாதனம் இல்லை என்றாலும் எங்களை அழைத்துச் செல்லுகின்ற இடத்தை மிக அழகாக தெளிவாக உரையாற்றிய கைடின் வாய் திறமை குளிர்ச்சியாக இருந்தது.

குத்புதீன்ஐபக்கினால் கட்டப்பட்ட குத்துபினார் சென்றோம் அந்த இடத்தை தூய்மையாக பராமரித்துவருகிறார்கள்.நுழைவுக் கட்டணம் உண்டு.

முகலாய மன்னர்கள் கட்டிடக் கலை நிபுணர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளை கடந்தப் பின்னும் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களாய் குதுப்பினார் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறது.

குதுப்பினாரின் கோபுரத்தில் லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மது ரசூலுல்லாஹ் என்று திருக்கலிமா (மூலமந்திரம்) அரபு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.


அங்கிருந்து தாமரை தியானக்கூடத்திற்கு சென்றோம்.நீண்ட தூரம் நடக்கவேண்டி உள்ளது.அந்த கூடத்திற்கு செல்லுமுன் அதன் வாயிலில் நம்மை வரவேற்பதற்கு பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்.

கூடத்திற்குள் அமைதிகாக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார்கள் அந்தக் கூடத்தில் அமைதி நிலவி இருந்தது நான்கு புறத்திலிருந்தும் தென்றலின் தழுவல் இதமாக இருந்தது.என் சுவாசம் உயிர் பைவரையில் சென்று ஆன்மாவுடன் கலந்தது என்று சொல்லலாம்.மொத்தத்தில் மனம் அந்த சில நிமிடங்கள் அமைதி கண்டன.

அங்கிருந்து பாரளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.உள்ளே அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் அனுமதி இல்லை. பாதுகாப்பை கருதி தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
அந்த தூரத்திலிருந்து புகைப்படங்கள் மட்டும் எடுக்கமுடிந்தது.

பேருந்தில் செல்லும் வழியில் காங்கிரஸ்கட்சியின் அலுவலகம் மற்றும் சோனியாகாந்தியின் இல்லம் பிரதமர் மன்மேகான் சிங் அவர்களின் இல்லம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் இல்லங்களையும் காண்பித்தார்கள்.

செங்கோட்டையில் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளே செல்லமுடியவில்லை அங்கிருந்து இந்தியா கேட் சென்றோம்.மிக பிரமாண்டமாக இருந்தது.சுதந்திர தின விழா குடியரசுவிழா இங்கிருந்துதான் தொடங்கும் என்றார்கள்.

இரவுநேரத்தில் இந்தியாகேட் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.டெல்லியின் பெரிய பள்ளிவாசல் (ஜூம்மா மஸ்ஜித்) பார்த்தோம் இவைகளை ஷாஜகான் தனது ஆட்சியில் கட்டியிருக்கிறார்.


ராஜ்கோட் சென்றோம் மகாத்மா காந்திஜியின் அடக்கஸ்தளம் சென்று பார்த்தோம் அங்கு நிற்கும்போதே பரவசமாக இருந்தது மகாத்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துவிட்டு புறப்பட்டோம்.
லஷ்மி நாராயணன் கோயில் மற்றும் மார்கெட் இவைகளை கண்டுவிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்ஹாவிற்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள்.

இறுதியில் இரவு ஏழு மணிக்கு டெக்ஸி அமைத்து நிஜாமுதீன் தர்ஹாவிற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.

மறுதினம் டெல்லியிலிருந்து ஜெய்பூர் செல்வதற்கு வாகனம் தயார் செய்வதற்கு டிராவல்சை அனுகினோம். இரயிலில் டிக்கேட் கிடைக்கவில்லை என்றார்கள் இறுதியாக ஏசி வசதியுடன் டெம்போ தயாரானது ஜெய்பூரின் முக்கிய இடங்களை சுற்றி காண்பித்துவிட்டு அங்கேயே இறக்கி விடுவதாக பேசி ஒப்பந்தம் செய்து முன்பணம் வழங்கினோம்.
ஏற்கனவே ஏமாந்த அனுபவம் இருந்ததால் இந்தமுறை ரொம்பவும் கவனத்துடன் செயல்பட்டோம்.
டெல்லியிருந்து ஜெய்பூருக்கு 260 கி.மீ சுமார் 5 மணிநேரம் பயணம் என்றார்.
அதிகாலை 6.00 மணிக்கு டெம்போ புறப்படும் என்றார்.நபர் 1க்கு 550 ரூபாய் என்றார் பேரம் பேசப்பட்டு 450க்கு இறுதியானது.

ஆதலால் அடுத்து ஜெய்பூரில் சந்திப்போமா?......

6 comments:

katheem said...

ஜந்த்தர் மந்த்தர் பார்க்காமலா தலைநகரை விட்டீர்கள்??

கிளியனூர் இஸ்மத் said...

கதீம் அண்ணே...!ஜந்த்தர் மந்த்தர் தலைநகரில் இல்லை அது ஜெய்பூரில் அல்லவா இருக்கிறது...நன்றி

NIZAMUDEEN said...

நல்லா சுற்றிக் காட்டினீங்க,
எல்லா இடத்தையும்.
வாங்க ஜெய்ப்பூருக்குப்
போவோம்.

நாஞ்சில் பிரதாப் said...

ஜந்தர் மந்தர் டில்லியில் தானே இருக்கிறது இஸ்மத் பாய்...

ஜெய்புர் ரைட் ரைட்....:))

ஸாதிகா said...

நீங்கள் கண்டுகளித்ததை மற்றவர்களுக்கும் நயம்பட காட்சிகளுடன் காட்டி வருகின்றீர்கள்.தொடருங்கள்....காண ஆவலாக உள்ளோம்.

கிளியனூர் இஸ்மத் said...

நிஜாம் நீங்க ஜெய்பூர் போயிருக்கீங்களா?....வாங்க நான் காட்டுறேன்....வருகைக்கு நன்றி...

நாஞ்சில் வருகைக்கு நன்றி...

சகோதரி ஸாதிகா...உங்கள் வருகைக்கு நன்றி....

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....