உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 14, 2010

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி சென்ற ஆண்டைப்போல் சார்ஜா அண்ணாச்சி சத்திரத்தில் மிக சிறப்பாக இந்த ஆண்டும் நடைப்பெற்றது.

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல் அனைத்து பதிவர்களும் சிலரைத்தவிர கலந்துக் கொண்டார்கள்.

இப்தார் நிகழ்ச்சிக்கான உணவுத்துறையை கீழைராஸா ஏற்றுக் கொள்ள நான் விட்டுக் கொடுக்காமல் பிரியாணியை எனது காரில் ஏற்றிக் கொள்ள(எனது கைப்பட்ட பிரியாணி எப்படி என்பதை அமீரகப்பதிவர்கள் அறிவார்கள்)…சட்டிக்கு பாதுகாவலர்களாய் முகிலும் ஊமையனும் (ஹக்கீம்)உடன் வந்தார்கள்.

வெள்ளி மாலை 5.00 மணிக்கு துபாயிலிருந்து வாகனம் ஊர்வலமாய் பிரியானி, நோன்பு கஞ்சி, சமூசாவுடன் அண்ணாச்சி சத்திரத்தை அடைந்தது.

ஆவலுடன் காத்திருந்த அனைத்து பதிவர்களும் இப்தாருக்கு தயாரானார்கள்.

நோன்பின் மாண்பை அறிந்திருந்த அனைத்துப் பதிவர்களும் உணவுகள் பறிமாறப்பட்டு நோன்பு திறப்பதற்குரிய அந்த பாங்குடைய நேரம் வரையில் அமைதியாக அமர்ந்திருந்து கண்ணியம் செய்தனர்.

இப்தாருக்குப் பின்னர் மஹ்ரிப் தொழுகையை பதிவர் சுல்தான் இமாமாக இருந்து தொழவைத்தார்.தொழுகைக்குப் பின் பதிவர்கள் குழு கூடினார்கள்.

சென்ற மாதம் தாயகம் சென்று திரும்பிய அண்ணாச்சி மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாஸ்மீன் படித்த நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு(திருநெல்வேலி) தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கணினியை புதிதாக அமீரகப்பதிவர்களின் சார்பில் வழங்குவதற்கு ஏகமனதுடன் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துடன் தனது பணி மாற்றத்தின் காரணமாக இனி சந்திக்க இயலாது என பிரியாவிடை பெற்ற பதிவர் அஹமது சுபைர்ருக்கு அனைவரும் வாழ்த்துக்களை வழங்கி இனி மெயிலில் சந்தித்துக் கொள்ளலாம் என விடை கொடுத்தார்கள்.

பதிவர் சுந்தரின் பொதுநல தொண்டை அங்கு நினைவுக்கூர்ந்து பாராட்டை அனைவரும் வழங்கினர்.

பெண் பதிவர்களில் ஜெஸிலாவைத் தவிர்த்து மற்ற யாரும் வரவில்லை என்றாலும் குசும்பன் கீழைராஸா செந்தில்நாதன் நவ்புல் இவர்களின் குடும்பமும் வந்ததினால் பதிவர் ஜெஸிலாவிற்கு ஆறுதலாக இருந்தது.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தார் ரியாஸ் அவருக்கு அமீரகப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துக்களை வழங்குகிறோம்.
இனி அடுத்த சந்திப்பு சுற்றுலாவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


பழம் நறுக்கும் முகில்

சமூசாவுடன் ஊமையன் ஹக்கீம்


நோன்பு கஞ்சியை கலக்கும் ரியாஸ்


இஸ்மத்பாய் உங்கள தட்டையபார்த்துக்க சொன்னா கேமராவ பாக்குறீங்க...இதான் சமயமுன்னு கீழைராஸா ஒரு தட்டைய ஆட்டைய போடுறாரு

ஆலோசனைக் கூட்டம் எந்த தட்டில் யார் அமர்வது


கோல்கேட் விளம்பரத்திற்கு என்னுடன் சென்ஷி


உணவுக்குமுன் உணர்வுடன் காத்திருக்கும் நோம்பாளிகள்


அண்ணாச்சி கேட்டா கொடுக்கனும் சுபைர்...இப்படி அடம்பிடிக்ககூடாது

இப்படியெல்லாம் லுக்கு விடப்படாது...ஒரு ஆளுக்கு ஒரு பிளேட்டுதான்...


கஞ்சிமேல சத்தியமா ஒரு தட்டுதான் வச்சிருக்கேன் சுபைர்...இதை உங்களுக்கு கொடுக்க முடியாது..


சீக்கிரமா சாப்பிடுங்க சுபைர் நம்ம தட்டைய பாக்குறார்...


குசும்பா உஷார்....சுபைர் தட்டு காலியாக இருக்கு..


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....என் தட்டுல உள்ள கறியை யார் எடுத்தது?


சின்னப்புள்ளயா இருக்கியேன்னு பாக்கிறேன் ஆமா... குசும்பன் தட்டுலேந்து நானா கறிய எடுத்தேன்...


கறிய எடுத்தது யாருங்க கண்டுபுடிச்சாச்சா அண்ணாச்சி


எலே முகிலு நீ கறிய எடுத்து துண்னுட்டு என்மேல வச்சிட்டியே...அதுக்கு தண்டனைதான் இந்த கொக்கு புடி...குசும்பனுக்கு போட்டியா இந்த முயற்சி...

17 comments:

சென்ஷி said...

அண்ணாச்சியை விட்டுட்டு சுபைரை ரொம்பவும் கலாய்ச்சுட்டீங்க பிரபல மூத்தப்பதிவரே ;)

சென்ஷி said...

//பதிவர் சுந்தரின் பொதுநல தொண்டை அங்கு நினைவுக்கூர்ந்து பாராட்டை அனைவரும் வழங்கினர்.//

வலக்கை தருதல் இடக்கை அறியாமலிருத்தலின் பொருளாக சுந்தரின் மனப்பாங்கு பாராட்டுக்குரியது.. அவரது சேவை மனப்பான்மைக்கும், தொண்டுள்ளத்திற்கும் தலை வணங்குகின்றேன்.

அகமது சுபைர் said...

நான் தான் அன்னைக்கு கம்மியா சாப்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறாங்க... நடக்கட்டும்... நடக்கட்டும்...

நல்ல பதிவு அண்ணே... :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. நல்ல தொகுப்பு. நன்றிங்க.

//நான் தான் அன்னைக்கு கம்மியா சாப்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறாங்க... நடக்கட்டும்... நடக்கட்டும்...//

சொல்லவே இல்ல..

அப்துல்மாலிக் said...

நல்ல தொகுப்பு, கலந்துக்காததில் வருத்தமே

nidurali said...

நான் துபாயில் இல்லையே ! நானும் கலந்துருப்பேன் . துபாயில்தான் எங்கும் freeயாக பள்ளிவாசலில் கிடைக்குமே .அது மிகவும் மகிழ்வுதனையும் ஆத்ம திருப்தியும் தரவல்லது .
அது சரி நோன்புக்காக இப்தார் நிகழ்ச்சியா அல்லது இப்தார்க்காக நோன்பா !

☀நான் ஆதவன்☀ said...

:))) சுபைர் கமெண்ட் கலக்கல் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அருமையான பகிர்வு இஸ்மத்பாய்.மிக்க நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

படங்களும் சப்டைட்டிலும் மிக அருமை

ஜீவன்பென்னி said...

இஸ்மத் அண்ணே படங்களும் கமெண்ட்ஸ் சூப்பர்.

NIZAMUDEEN said...

நல்லா சூடாத்தான் இருந்திருக்கு.
(நான் இஃப்தார் நிகழ்ச்சியைச்
சொன்னேன்!) இடுகையும்தான்
சுவை, சுவை!

Leo Suresh said...

இஸ்மத் பாய், நல்ல பதிவு
லியோ சுரேஷ்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:)))

கிளியனூர் இஸ்மத் said...

அன்பின் பதிவர்களான
சென்ஷி,
அகமது சுபைர்,
ச.செந்தில்வேலன்,
அப்துல்மாலிக்,
நீடுர் அலி,
நான்ஆதவன்,
கீதப்பிரியன்,
ஜீவன்பென்னி,
நிஜாமுதீன்,
லியோசுரேஷ்,
யெஸ்.பாலபாரதி

உங்கள் அனைவருக்கும் நன்றி

துயரி said...

லேட்டா படிச்சாலும், ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது சார்!. நானும் அமீரகத்தில்தான் இருக்கின்றேன்.. ஏதோ பதிவுகள் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன், அப்ப நானும் பதிவர்தானே!!?? அப்படீன்னா அடுத்த இப்தாருக்கு நானும் வருவேன் என்ன சொல்றீங்க??

கிளியனூர் இஸ்மத் said...

துயரி அடுத்த இப்தாரில் கண்டிப்பாக நீங்க கலந்துக்கலாம்...உங்க கைபேசி எண் கொடுங்க...நன்றி

துயரி said...

என் அலைபேசி எண் 0502864290 அழைப்புக்கு மிக்க நன்றி சார்..

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....