
பலவருடங்களுக்கு முன் துபாயிலிருந்து தாயகத்திற்கு சென்றேன்.என்னை அழைப்பதற்கு எனது நண்பரும் எனது சகோதரரும் விமான நிலையம் வந்திருந்தனர்.
என்னை அழைத்துக் கொண்டு எக்மோர் வந்தார்கள். இரவு 10 மணிக்கு புறப்படும் இரயிலில் எங்கள் ஊருக்கு செல்லலாம் என்பது திட்டம் ஆனால் முன்பதிவு ஏதும் செய்திருக்கவில்லை.
நாங்கள் இரயில் நிலையம் வருவதற்கும் இரயில் புறப்படுவதற்கும் சரியாக இருந்ததினால் அவசரமாக ஏதோ ஒரு பொட்டியில் சாமான்களுடன் ஏறிவிட்டோம்.
சிறது நேரத்தில் டிடிஆர் வந்ததும்தான் எங்களுக்கு தெரிந்தது இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்று.
டிடிஆரிடம் விசயத்தை கூற அவரும் அலட்சியமாக சீட்டு இருக்கு என்றார்.
உடனே எனது நண்பர் டிக்கேட்டை கொடுத்து பதிவுசெய்யப்பட்டதைப் போல் மாற்றி அதற்கான தொகையை கொடுத்து அத்துடன் டிடிஆருக்கு லஞ்சமாக அவர்கேட்ட தொகையும் கொடுத்துவிட்டோம்.
எனது நண்பருடன் பல அனுபவங்களை உரையாடிக் கொண்டிருந்தேன்.படித்தது படித்ததில் பிடித்தது பழகியது என பல விதமான தலைப்பில் எங்கள் உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.
டிடிஆர் தனது பரிசோதனையை முடித்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் அவரும் அமர்ந்தார். எங்களின் சுவாரஸ்யமான உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.
சாதரணமாக சோதனையை முடித்துக் கொண்டு உறங்கும் அவர் எங்களின் உரையாடலில் உற்சாகமடைந்ததாக கூறினார்.
அதே தருணத்தில் இளைஞர்களான நீங்கள் இப்படிபட்ட உரையாடலை செய்வது அதை நான் கேட்பதும் எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது என்றார்.
அப்படி என்ன நாங்கள் பெருசா உரையாடினோம் என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆன்மீகம்.! ஆமாங்க.... இரு வாலிபர்கள் சினிமாவைப்பற்றி காதலைப்பற்றி பேசினால் அது ஆச்சரியமில்லை திருக்குர்ஆனைப் பற்றியும், பைபிளைப் பற்றியும், பகவத்கீதையை பற்றியும் பேசினால் யாருக்குதான் ஆச்சிரியமாக இருக்காது.
விழுப்புரம் ஸ்டேஷனில் டிடிஆரின் வற்புறுத்தலில் உணவகத்தில் விருந்தே வைத்துவிட்டு சொன்னார் உங்களிடம் லஞ்சம் வாங்கியது தவறு அதற்கு பிராயச்சித்தமாக இந்த விருந்து என்றார்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது படித்ததை நாம் விவாதித்தோம் அது மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்கிறது புரிதல் சரியாக இருந்தால் எல்லா மனிதர்களும் இந்த டிடிஆரைப்போலதான் இருப்பார்கள் என்பதை அந்த தருணத்தில் எங்களால் விளங்க முடிந்தது.(கொடுத்த லஞ்சம் திரும்பிடுச்சில்ல)
13 comments:
லஞ்சம் கொடுப்பது மிக பெரிய தப்பு. குற்றம் செய்தவர் விட அதனை செய்ய துண்டுபவர் பெரிய குற்றம் செய்தவர்
good post.
தாங்கள் விவாதித்த விசயங்கள் என்னவென்று பகிருங்கள்
உங்களுடைய உரையாடலின்மூலம் ஒருவருக்கு மன நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கிறது என்றால் பாராட்டுக்குரிய விசயம்தான்.
நல்ல பகிர்வு..
மனதில் இருந்த சாத்தான் லஞ்சம் வாங்க வைத்தது உரையாடல் மனம் திருப்பியது பகிர்வுக்கு நன்றி
நீடுர்அலி அண்ணே!.........லஞ்சம் கொடுப்பது தவறுதான்...கேட்கப்படாதவரையில்...ஆனா நம்ம ஹீரோ வாங்கியதை தவறு என்பதை உணர்திட்டாரே அதனால குற்றமற்ற தீர்ப்பை வழங்கிடலாம்....வருகைக்கு நன்றி.
நன்றி ராஜவம்சம்.!
சமயங்கள் கூறும் மனித நல்லிணக்கத்தைப்பற்றி எல்லா சமயங்களும் வழியுறுத்தும் அன்புபைப்பற்றி....ஈரோடு நண்டு @ நொரண்டு உங்கள் வருகைக்கு நன்றி.
அண்ணா ஸ்டார்ஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் வந்தமைக்கு மிக்க நன்றி.
நிலாமதி உங்கள் வருகைக்கு நன்றி.
you passed some information to ttr, so he paid for u.- rajakamal
Thanks Rajakamal
///அண்ணா ஸ்டார்ஜன்///
இஸ்மத் பாய், உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.. நான் அண்ணனா.. தம்பிதான்..
Thanks ஸ்டார்ஜன்...
சகோதரர்,அஸ்ஸலாமு அலைக்கும்.புதிதாக இட்ட இடுகைக்கு கமெண்ட் இட முடியவில்லை.சரி செய்யவும்.
சரி செய்துவிட்டேன்....நன்றி சகோதரி ஸாதிகா
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....