உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, December 10, 2010

பாலைவனத்தில் தமிழ் பறவை

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 -தொடர் 4

இது ஒரு பாலை அனுபவம்
அபுதாபியிலிருந்து சவூதி பார்டர் அல்சிலா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுமார் நாலரை மணிநேரம் காரில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. இந்த பார்டருக்கு வரவேண்டுமானால் பாஸ்போர்ட் அல்லது லேபர் கார்ட் என்ற அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும் ஆனால் அரபி தனது செல்வாக்கை பயன்படுத்தி எங்களை அல்சிலா பாடருக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.

அது ஒரு சின்ன கிராமம் மொத்தமே இருநூறு வீடுகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் இன்னும் முழுமையாக குடிகள் வரவில்லை. அங்கு வீடுகள் வருவதற்கு முன் மலையாள சகோதரர்கள் வந்துவிட்டார்கள். அங்கு மலையாள டீ கடையும், ஒரு சின்ன குரோசரி கடையும் வைத்திருந்தார்கள்.

அந்த இடத்திற்கு வீட்டு சமையளுக்கென்று முதன்முதலாக நாங்கள் இருவர் மட்டுமே சென்றுள்ளோம் என்பதை பிறகு தெரிந்துக் கொண்டோம்.அழைத்து வந்த அரபி தனது வீட்டுக்கு ஒரு ஆளையும் அவருடைய நண்பர்களின் வீட்டுக்கு ஒரு ஆளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

எங்களை மஜ்லிஸில் (விருந்தினர் ஹால்) அமர வைத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டார். நண்பர்களின் துணைவிமார்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு படையெடுத்து வந்துவிட்டார்கள்.

அவர்கள் எங்களை பார்த்தவிதம் நமது ஊரில் மாப்பிள்ளை பார்க்கும் பட்டாளம் போல இருந்தது இதில் போட்டிவேறு எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்று!
ஏதோ ஒரு வழியாக முடிவாகி என்னையும் ஒரு அரபியும் எனது உறவினரான இக்பாலை ஒரு அரபியும் பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு பணியில் அமர்த்தினார்கள் எங்களின் பணிகள் துவங்கியது.

இந்த அரபிகளை காட்டுவாசிகள் அதாவது ஒரிஜினல் நாட்டுவாசிகள் என்று கூறுவார்கள் அதாவது பத்துஉ என்று அரபி மொழியில் கூறுவார்கள். பத்துஉ என்றால் கிட்டதட்ட ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நகரங்களை விரும்பாதவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்த அல்சிலாவில் வாழக்கூடிய பெரும்பாலோர் பத்துஉ அரபிகள்தான். தினம் மாலையில் தங்களின் குடும்பத்தாருடன் பாலைவனத்திற்குள் சென்று விடுகிறார்கள்.

ஒவ்வொரு அரபிகளுக்கும் ஒரு எல்லையை வகுத்து கூடாரங்கள் அமைத்து அங்கு அவர்கள் ஒட்டகங்கள் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கும் கூடாரங்கள் அமைத்திருக்கிறார்கள் மாலையில் வந்து தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு கிராமத்திற்கு வந்துவிடுவார்கள் இதுதான் இவர்களின் தின வேலையாக இருந்தது.

இதனால் எங்களுக்கு பெரிதும் வேலையில்லை நாங்கள் பாலைவனத்திற்குள் செல்வதில்லை. எங்கள் பணி சமையல் அதைசெய்துக் கொடுத்தால் போதும் அதிகமாக ஓய்வு கிடைத்தது அதனால் லைசன்சு இல்லாமல் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

அரபிக்கு திருமண ஏற்பாடு நடந்தது அப்போது எங்களை பாலைவனத்திற்கு அழைத்துச் சென்று சமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் யோசித்தோம் கல்யாணம் என்றால் கூட்டம் அதிகம் இருக்கும், முழு ஆடுகள், ஒட்டகம் என்று சமைக்க சொல்வார்கள் வேலை அதிகம் இருக்கும் நாம் இருவர் மட்டும் போதாது ஆதலால் அபுதாபியில் உள்ள எனது நண்பர் தேரிழந்தூர் பஷீர் (கொல்லி) அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தோம் அரபி அபுதாபி சென்று அவரை அழைத்தும் வந்தார்.

இந்த கல்யாணத்திற்கு சீப்கொக் நாங்கள் மூவர்தான் பெரிய தொகையை அரபியிடம் பேசி அட்வாண்ஸ் வாங்கியாச்சு ஆனால் கல்யாணம் பாலவனத்திற்குள் அங்குதான் சமைக்கவும் வேண்டும் நினைக்கவே பயமாக இருந்தது.

நம்பள நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுத்திருக்கானுங்களே என்ற ஒரு பதட்டம் இருந்தது. பத்துஉ என்பது சரியாகதான் இருக்கு இவன்களுக்கு ரூசி, மணம், பதம் என்பது எல்லாம் தேவையில்லை எதை ஆக்கி வைக்கின்றோமோ அதை சாப்பிடுவார்கள். என்பது அனுபவப்பட்ட உண்மை அதனால் இப்போதைக்கு அவங்களுக்கு நாமதான் பெரிய கொக் என்று நாங்கள் எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு பாலைவனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

சிலமணி நேரங்களில் பாலைவனத்தின் மையப்பகுதியில் விடப்பட்டோம். எங்கு திரும்பினாலும் மணல் திட்டுக்கள் இங்கிருந்து தப்பித்து போகவேண்டுமென்றால் ரொம்ப சிரமம் இந்த சூழ்நிலையை பார்த்த பஷீருக்கு பயம் வர ஆரம்பிச்சது “மாப்பள இவ்ளோபேருக்கும் நம்மாள சமைக்க முடியுமா? ஏதாவது இசுகு பிசகா ஆனா நம்பள இங்கேயே புதைச்சுடுவானுவோ” என்று என்னை பயமுறுத்துகிற வார்த்தையை சொன்னதும் அதுவரையில் தைரியமாக இருந்த எனக்கு உள்ளுக்குள் சின்ன பயம் வரஆரம்பிச்சது.
டேய் ஏண்டா இப்படி பயப்புடுறீங்க தைரியமா வாங்கடான்னு இக்பால் வார்த்தைகளால் தைரியம் ஊட்டினாலும் பஷீருக்கு பயம் போகவில்லை. சரி அடுப்பை ரெடிபண்ணுவோம் வா என்று பெரிய கற்களை முக்கோணத்தில் வைத்து ராட்சஷ அண்டவை அதன் நடுவில் வைத்தோம்.சமையலை கிண்டுவதற்கு அகப்பை பெரிது எங்களிடம் இல்லாததால் சதுரமான மரச்சட்டத்தை அகப்பையாக மாற்றினோம்.


முதலில் எட்டு ஒட்டகம் அறுத்து சமையலுக்கு வரவே பஷீர் அலறினான். எனக்கு தலை சுற்றியது. எட்டு ஒட்டகத்தை எப்ப சமைச்சு முடிக்கிறது? இரண்டு கிலோ ஆட்டுக்கறிய ஆக்குவதறதுக்கே இரண்டு மணிநேரம் ஆகும் என்று புலம்பினேன்.

இக்பால் தைரியம் கொடுத்தான் முடியும் என்று சொல்லி அண்டாவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டோம்.தண்ணீர் சூடு வந்ததும் மூன்று ஒட்டகத்தை அதனுல் இறக்கி உப்பு மஞ்சள் தூள் பிஜார் பொடி போட்டு வேகவைத்தூம்.அவ்வபோது மரச்சட்டத்தால் ஒட்டகத்தை பிறட்டி பிறட்டி வேக வைத்தோம்.

சிலமணி நேரங்களில் ஒட்டகம் வெந்தமாதிரி தெரியவே மீதி உள்ள ஒட்டகத்தையும் அது மாதிரி செய்தோம்.ஒரு வழியாக ஒட்டகத்தை அவிச்சு பிரியாணிக்கு மேல் வைப்பதற்கு தயாராக இருந்தது.

அடுத்து ஆடுகள் வந்தது அதை பஷீர் எண்ணிக் கொண்டிருந்தான். டேய் எத்தனைடா என்றதும் இருப்பதஞ்சு என்றான். விழி பிதிங்கியது.

தொடர்வோம்...

13 comments:

Rajakamal said...

really interesting,

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்தமாதிரி சூழ்நிலைகளில்தான் நம்மையறியாமலே பயம் வரும். உங்க தைரியத்தை பாராட்டவேண்டியதுதான். அதுவும் பத்தூக்கள் ஏரியாவிலே கலக்கியிருக்கீங்க இஸ்மத் பாய். இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்க. இன்னும் சொல்லுங்க.

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

sultangulam@blogspot.com said...

அந்த அதிரடி அனுபவம்தான் இப்போது சமையலில் நன்றாக உதவுகிறதா?

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ராஜாகமால்

கிளியனூர் இஸ்மத் said...

ஸ்டார்ஜன்! இளம் கன்று பயமறியாது என்பார்களே அந்த வயதில் எல்லாம் சவாலாக தான் தெரிந்தது.
நன்றி சகோதரரே.

கிளியனூர் இஸ்மத் said...

ம.தி.சுதா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

சுல்தான் பாய் இன்னுமா நீங்க என் சமையலை நம்புறீங்க!சமைச்ச பிரியாணிய அழகா தட்டுல வச்சிக் கொடுப்பேன்.பதிவர் சந்திப்புல இப்படிதான் நடந்துக்கிட்டு இருக்கு.
உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பேன் சுல்தான் பாய்.நன்றி

Unknown said...

அழகா சொல்லியிருக்கீங்க. அடுத்ததுக்காக வெயிட்டிங்!

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி உங்கள் வருகைக்கு தஞ்சாவூரான்

ஹுஸைனம்மா said...

திகில் கதை மாதிரி சஸ்பென்ஸ் வச்சு நிறுத்திட்டீங்களே!! தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கேன்.

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி சகோதரி ஹுஸைனம்மா தொடர்ந்து படியுங்கள்.

ஸாதிகா said...

உங்கள் அனுபவம் திகில் கதை படிப்பதுபோல் இருகின்றது.எட்டு ஒட்டகம் சமைத்தீர்களா?அடேங்கப்பா...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....