உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, December 12, 2010

தமிழனைச் சந்தித்த தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 5


இது ஒரு பாலை அனுபவம்


மீண்டும் அண்டாவில் முழு ஆடுகளை வேகவைத்து தனியாக எடுத்து, பின் அரிசியை கொட்டி தம்போட்டு, இரண்டு நாட்களாக தண்ணீரில் ஊறிய கோதுமையை கறியுடன் கிளறி, ஹரீஸ் என்ற ஒருவகை கஞ்சி செய்து அதை துடுப்பால் நெஞ்சு வலிக்க கறியின் முள் கரையும் வரையில் கிண்டி, பதம் பார்த்து இரண்டு நாட்களில் இரண்டு மாதவேலையை மூன்று பேர்கள் செய்து முடித்தோம்.

வேர்வை உளருமுன் அவர்களின் கூலியை கொடுத்துவிடுங்கள் என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை)கூறி இருக்கிறார்கள் அவர்களின் பொன்மொழிக்கேற்ப அந்த கூலியை நாங்கள் கையில் பெற்றதும் எங்களின் உழைப்பு கலைப்பு அத்தனையும் பறந்து மறந்து போயின.

இந்த திருமண அனுபவம் புதியவை முன் அனுபவமே இல்லாமல் ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டோம் நம் ஊர்களில் பல திருமண இல்லங்களில் உணவு அருந்தியிருக்கிறோம் சமைப்பவர்களின் கஸ்டம் தெரியவில்லை அதை உணரும் வாய்ப்பு அரபு திருமணத்தில் கிடைத்தது

வழக்கம்போல சின்ன பண்டாறியாய் மாறிவிட்டோம். இனி எங்கு கல்யாணம் நடந்தாலும் எங்களை சமையலுக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்.
ஒருமுறை எங்கள் சமையலை உண்டவர்கள் மறுமுறை கூப்பிடுவார்களா என்ன?
(பாவம் அமீரகப்பதிவர் கூட்டம் என்னை பிரியாணிபாய் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்)

அல்சிலாவில் பொழுதுபோவது கஸ்டமாக இருந்தது அங்கு முனிசிபாலிட்டி கேம்பில் தமிழர் இருக்கிறார் என்ற செய்தியை மலையாளி கூறினார்.
எங்களுக்கு ஆர்வமாக இருந்தது நாம் அவரைபோய் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவரே எங்களைத்தேடி வந்துவிட்டார். எங்களுக்கு ஆச்சர்யம் எப்படி? என்று வினவினோம் அவருக்கும் மலையாளிதான் சொன்னாராம் ஊர் கும்பகோணம் என்றார்.

ஒரு தமிழன் இனனொரு தமிழனை சந்திப்பதில் எவ்வளவு ஆர்வமிருக்கிறது இவ்வளவு ஆர்வமிருந்தும் ஈழத்தமிழர்களை இழந்துவிட்டோமே என்ற வருத்தமிருக்கத்தான் செய்கிறது.
அவருடைய பேச்சில் தமிழைவிட மலையாள வாடை அதிகமாகவே வீசியது அவரிடம் கேட்டேன் நீங்கள் தமிழரா? மலையாளியா?

ஏன் அப்படி கேட்கிறீங்க? நான் மலையாளிகளுடன் கலந்திருப்பதால் மலையாளமே சரளமாக வந்துவிடுகிறது தாயகம் சென்றபோது என் குடும்பத்தினர்களிடமும் இப்படிதான் பேசினேன் இப்போது நீங்கள் வந்துட்டீர்கள் இனி தமிழ் நன்றாக பேசுவேன் என்று தன் தாய் மொழியை மறந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

அந்த புதிய நண்பரிடம் பழைய வார இதழ்கள் கிடைத்தது மூன்று மாதத்திற்கொரு முறை அபுதாபி சென்று வருவாராம் அந்த சமயங்களில் தேவையான பொருட்களை வாங்கி வருவார் என்றார்.

எங்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டார் பாஸ்போர்ட், ஐடி ஏதும் இல்லாமல் இப்படி நீங்கள் வேலைப் பார்ப்பது ஆபத்தானது இந்த ஏரியாக்களில் சிஐடி அதிகம். இந்த பார்டரிலிருந்து சவூதி கத்தார் ஜோர்டான் செல்லக்கூடியது அதனால் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் உங்களுக்கு ஏதும் தேவை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் வாங்கி வருகிறேன் என்று சகோதர பாசத்துடன் பழகிய அவரை என்மனம் மறக்கவில்லை.

எங்களை அழைத்து அவருடைய கேம்பில் விருந்தும் கொடுத்தார் அவருடன் அவருடைய அறை தோழர்கள் மலையாள சகோதரர்களும் அவருடன் இணைந்து விருந்தில் கலந்து எங்களை அவர்களுடைய உறவினர்களைப் போல் கவனித்தார்கள்.

அல்சிலாவில் இருந்த சிலமாதங்கள் வரையில் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
அரபு இளைஞர்களுடன் ஒருமுறை கொமட்டிப் பழம் (வாட்டர் மிலான்) தோட்டத்திற்கு சென்றேன். நம்ம ஊரில் யாரு வீட்டு கொல்லையிலே யாரோ மாங்காய் பறிப்பார்களே அப்படி கொமட்டிப் பழம் பறிக்க அரபு இளைஞர்களுடன் சென்று பறித்து காவலில் இருந்த பாக்கிஸ்தானி சாச்சா எங்களை விரட்ட நாங்கள் ஓட அந்த வயது ஜாலி எல்லாம் இப்போ கிடைக்காது கிடைத்தாலும் இனிக்காது.

ஒருமுறை விடுமுறை எடுத்துக் கொண்டு அபுதாபி செல்வதற்கு ஆயத்தமானோம். எப்படி செல்வது என்று புரியவில்லை. அல்சிலாவிலிருந்து அபுதாபிக்கு பஸ் செல்கிறது ஆனால் கையில் ஐடி இருக்கனும் இருந்தால் மட்டுமே பஸ்சில் பார்டரை கடக்க முடியும் அதனால் அரபியிடம் கூறினேன்.

நான் பார்டர் வரையில் வருகிறேன் என்றார் நாங்கள் தயாரானோம் பஸ்சில் ஏறி பார்டர் வந்தோம் பஸ் நின்றதும் எங்களுடன் வந்த அரபி இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு இறங்கினார்.

சற்று நேரத்தில் பஸ்சில் ஐடியை பரிசோதிக்க பார்டர் செக்யூரிட்டி ஏறி ஒவ்வொருவராக சோதனைச் செய்ய எங்களுக்கு பயம் வந்தது கூடவே செக்யூரிட்டியும் வந்து விட்டார்.
ஐடியை கேட்க நான் கையை விரிக்க செக்யூரிட்டி என்கையைப் பிடித்தார்…

தொடர்வோம்..

10 comments:

அரவிந்தன் said...

முக்கியமான இடத்தில் “தொடரும்”போட்டுடிங்களே

அன்புடன்
அரவிந்தன்

NIZAMUDEEN said...

//ஐடியை கேட்க நான் கையை விரிக்க செக்யூரிட்டி என்கையைப் பிடித்தார்//

உடனே இஸ்மத் அண்ணன் 'தொடரும்' போட்டார்.
அண்ணன்... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.

ஹுஸைனம்மா said...

அப்புறம்..?

கிளியனூர் இஸ்மத் said...

தொடரும் போடாமல் எழுதினால் உங்களுக்கு போர்அடிக்கும் அரவிந்தன்...நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நிஜாம்

கிளியனூர் இஸ்மத் said...

ரொம்ப சுவாரஸ்மா படிக்கிறமாதிரி தெரியுதே சகோதரி ஹுஸைனம்மா நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சுவாரஸ்யமாக இருக்கிறது இத்தொடர்.

எப்படி 30 வருடத்திற்கு முன்பு நடந்ததையெல்லாம் இப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்?

கடின உழைப்பிற்குப் பிறகு நல்ல இடத்தை அடைந்த பிறகு திரும்பிப் பார்ப்பதில் ஒரு தனி சுகம் தான்.

தொடருங்கள்.

ஸாதிகா said...

சகோ..சீக்கிரம் ஆறாம் பாகத்தைப்போடுங்கள்.அப்புறம் என்ன ஆச்சு...?

கிளியனூர் இஸ்மத் said...

மனதில் பதிந்த ஞாபகத்தில் நிலைத்த விசயங்களை மட்டும் பகிர்ந்துக் கொள்கிறேன்.ச.செந்தில்வேலன் வருகைக்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி உங்கள் வேண்டுகோலுக்கிணங்க ஆறாம் பாகத்தைப் போட்டாச்சு நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....