உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, December 16, 2010

பாலை எல்லையில் கைதான தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 6

இது ஒரு பாலை அனுபவம்என்கையை பிடித்த அதே நேரம் எனது அரபியும் இன்னொரு அதிகாரியுடன் பேருந்தினுள் நுழைந்தார். என்னை அவருடைய பணியாள் என்று கூறி பார்டரை கடப்பதற்கு பாஸ்சயும் காண்பித்தார் என்னை விட்டார்கள் இந்த பத்தூ அரபிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதை அப்போது விளங்கிக் கொண்டேன்.
மீண்டும் அபுதாபியிலிருந்து அல்சிலா வரும்போது டெலிபோன் செய்யும் படி கூறினார் ஒருவழியாக பார்டரைக் கடந்து அபுதாபி சிட்டி வந்து சேர்வதற்கு சுமார் ஐந்து மணிதுளிகள் ஆகிவிட்டன.

பல நண்பர்கள் பணியின்றி ரூமில் இருக்கவே அவர்களிடம் அல்சிலாவின் மகிமையை எடுத்துக் கூறி உசுப்பேத்தினேன்.பலரும் அல்சிலாவிற்கு வருவதாக கூறினார்கள் அவர்களும் என்னைபோல கல்லி வல்லி கேஸ்.

அதென்ன கல்லி வல்லி என்கிறீர்களா? பாஸ்போர்ட் ஐடி ஏதும் இல்லாதவர்களை இப்படி அழைப்பது வழக்கம் இதன் பொருள் விட்டுதள்ளு என்பதே.

இந்த கல்லி வல்லி நண்பர்கள் பணியின்றி இருப்பதை பார்த்து சிலரைமட்டும் அழைத்துப்போக முடிவு செய்தேன் பார்டர் பிரச்சனையால் அனைவரையும் அழைத்துப்போக முடியவில்லை. அடுத்தக்கட்ட பயணத்தில் இன்னும் சிலரை அழைத்துப்போக ஏற்பாடு செய்தேன்.

மீண்டும் அல்சிலா செல்வதற்கு முன் அரபிக்கு டெலிபோன் செய்து நான் வருவதை உறுதி கூறவே அவரும் பார்டரில் நின்றார் எனது புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் சேர்த்து பாஸ் வாங்கி சென்றோம்.

புதிய நண்பர்களுக்கு உடனடியாக வேலையும் கிடைத்தது அல்சிலா ஏரியாவில் தமிழ் அலை வீசத் தொடங்கியது. மலையாள சகோதரர்களுக்கு பெருத்த ஆச்சரியம்
ஒரு அண்ணா வந்த இடத்துல இப்போ இத்தன அண்ணாவ அழைத்து வந்துறிக்கீங்களே ஆச்சரியமாக கேட்டார்.

இது ஒன்னும் அச்சரியமில்ல அண்ணா! சந்திரமண்டலத்துக்கு போன நீல் ஆர்ம்ஸ்டிராங் அங்கு ஆச்சிரியப்பட்டு போனாராம்…ஏன்னா அவருக்கு முந்தி மலையாளி அங்கு சாயா வித்தாரதாம். நாங்க இங்கு வருவதற்கு முந்தி நீங்கதானே இருக்கீங்க. அதனால உங்களுக்குதான் லாபம் எங்களிடமிருந்து வியாபாரம் நடக்குமே என்றதும் ஆமா ஆமா என்று அமோதித்தார்.

சில தினங்களில் அபுதாபியிலிருந்து சில புதிய தமிழ் நண்பர்கள் அல்சிலா வருவதற்கு முன் அறிவிப்பின்றி பஸ்சில் வந்து பார்டரில் இறங்கி பாஸ் வாங்காமல் அதைக் கடந்து செல்ல அதை பார்த்த சிஐடி அவர்களை கைது செய்தார் என்ற செய்தி கிடைத்தது உடனே எனது பத்தூ இடம் கூறினேன் அவரும் அவர்களை வெளியில் எடுக்க முயற்சித்து ஒரே ஒருவரை மட்டும் விடுவதாக கூறினார்கள்.

ஏன் ஒருவரை மட்டும் என்றால் அந்த ஒருவர் இங்கு பணி புரிகிறார் அவர் அபுதாபி சென்று திரும்பும்போது வேலை இல்லாதா புதியவர்களை அழைத்து வந்துள்ளார் வருவதற்கு முன் சொல்லி இருக்கவேண்டும் மாட்டிக்கொண்டார்கள்.

அவர்களை வெளி எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மனசுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்தது மலையாள சகோதரர்கள் கிண்டல் அடித்தார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அல்சிலா வளர ஆரம்பித்தது நிறை அரபு குடும்பங்கள் அங்கு வாழ்வதற்கு வருகைத்தந்தார்கள். பள்ளிக்கூடம் மருத்துவமனை எல்லா இயங்கத் தொடங்கின.
வெறும் பாலைவனமாக இருந்த அந்த இடம் மனித நடமாட்டங்களை பெற்றது.
அங்குள்ள அரபிகள் தங்களுக்கு தேவையான சாமான்களை மாதம் ஒருமுறை அபுதாபியிலும் சிலர் டோஹா கத்தாரிலும் சென்று வாங்கி வருகிறார்கள்.

அபுதாபி நகரத்தைவிட அல்சிலாவிலிருந்து டோஹா கத்தார் மிக நெருக்கம்.
அரபு சிறுவர்கள் கார் ஓட்டும் அதிசயத்தை அங்குதான் பார்த்தேன். சுமார் பத்து பன்னிரெண்டு வயது சிறுவர்கள் படு சூப்பராக நின்றுக் கொண்டு அதாவது லேண்ட் குரோஸர் 4 வீல் டைரைவ் கார்களை ஓட்டினார்கள் அதன் தாக்கத்தில் ஓருமுறை எனது அரபு காரை எடுத்து ஒட்டி சுவற்றில் மோதவேண்டிய கட்டத்தில் எப்படியோ தப்பித்தேன்.

அந்த அல்சிலா கிராமத்தில் பலரும் கார் ஓட்டுகிறார்கள் சிலருக்கு லைசன்சு கிடையாது அந்த கிராமத்திற்குள் லைசன்சு சோதனைக் கிடையாது.

அங்குள்ள கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களில் வீடியோவில் திரைப்படங்கள் திரையிடுவார்கள் பெரும்பாலும் ஹிந்திப்படங்கள் மட்டுமே. நாங்கள் சிரத்தை எடுத்து அபுதாபியிலிருந்து தமிழ்பட கேஸட்டுகளை வாங்கி அங்கு திரையிட்டோம் 300க்கும் அதிகமானவர்கள் படம் பார்ப்பார்கள் அதில் தமிழர்கள் பத்துபேர்கள் மட்டுமே.
கமல்ஹாசன் அப்போது ஹிந்திக்கு வந்த புதிது என்பதால் பலரும் கமலை நன்றாக தெரிந்திருந்தார்கள். அவர்கள் படம் பார்த்து இரசிக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும் ஏதோ நானே ஹீரோவாக நடிப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.

சிலமாதங்களுக்குப் பின் அல்சிலாவிற்கு குட்பை சொல்லிவிட்டு நான் மட்டும் துபாய் வந்தேன். நண்பன் அத்திக்கடை சகாபுதீனைக் கண்டதும் சந்தோசம் கொண்டேன் நீண்ட நாள் பிரிந்த அந்த நட்பின் வலியும் மீண்டும் சந்தித்ததில் மனம் உண்டாக்கிய அதிர்வில் ஏற்பட்ட ஒளியும் எங்களின் நட்பை பலப்படுத்தியது.

இனிதான் எனது வாழ்க்கையின் திருப்புமுனைகள் அதனால் தொடர்வோம்.

4 comments:

அரவிந்தன் said...

தொடர் டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது...

அன்புடன்
அரவிந்தன்

அ.மு.அன்வர் சதாத் said...

அன்பு அண்ணே,
உங்களின் அனுபவம் நிச்சயம் அனைவர்களின் உள்ளத்தையும் வலிக்கச்செய்யும்.ஏனெனில் ஒவ்வொரு வளைகுடா மனிதனின் வாழ்கையும் இதுபோலத்தானே...
என்று மாறும் இந்த வலி நிரைந்த வாழ்க்கை.
விடாதீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

NIZAMUDEEN said...

கல்லிவல்லி (விட்டுத்தள்ளு) என்ற வார்த்தையை
அறிமுகப்படுத்தினீர்கள். இவ்வாறே இடையிடயே
மேலும் சில அரபி வார்த்தைகள் (பொருளுடன்)
பயன்படுத்தலாமே?
'திருப்பு முனை'யா? அது என்ன? எப்போ சொல்வீங்க?
வாங்க... தொடருங்க...

ஸாதிகா said...

அல்சிலா..கேள்விப்பட்டதே இல்லை சகோ.இப்பொழுது அந்த நகரம் எப்படி உள்ளது?மிகவும் சுவாரஸ்யமாக எழுதுகின்றீர்கள்.வாழ்த்துக்கள்!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....