சென்ற ஆண்டு அக்டோபரில் தங்கம் விலை இன்னும் ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அந்த சமயத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 1380 டாலர் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஏழு மாதத்திற்குப் பின் அதிகபட்சம் 1550 டாலரை தொட்டுவிட்டு தற்போது 1496 – 1510 இடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.அந்த பதிவில் 1500 டாலர் தொட்டுவிடும் என்ற நிபுணர்களின் கருத்தையும் ஆணித்தரமாய் கூறியிருந்தேன்.
தங்கத்தைப் பற்றிய எனது பதிவுகளை படித்துவிட்டு சிலர் முதலீடு செய்தனர் அவர்களுக்கு 175 லிருந்து 200 சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்.
இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்யுமளவு என்கையில் பணம் அதிகம் இல்லை என்று சொல்லக்கூயவர்களுக்கு தங்கத்தையும் விட அதிகம் லாபம் தரக்கூடிய தங்கத்தின் தோழர் வெள்ளியைப் பற்றிய விபரத்தை இங்கு காண்போம்.
உலோகத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மக்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பண முதலைகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் அதனால் அவர்களின் போக்குக்கு சந்தையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது இதைப் பயன் படுத்தி நாமும் முதலீட்டாளராக மாறிக் கொண்டால் லாபம் பெறலாம்.
வெள்ளிப் பக்கம் யாருமே அதிகம் செல்லாமல் சென்ற ஆண்டுவரையில் இருந்தார்கள் அப்போது அதன் விலை அவுன்ஸ் 18 – 19 டாலர் என்ற ரீதியில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.
சென்ற ஆண்டின் CHAT
இந்த ஒராண்டுக்குப் பின் 48.48 டாலர் வரை சென்றது கிட்டதட்ட ஒரே ஆண்டிற்குள் 155 சதவீதம் வரை விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் பணமுதலைகளின் திருவிளையாடல்.அவர்கள் நினைத்தால் மண்ணைக்கூட சாக்குகளில் அள்ளி மூட்டை 100 டாலர் என்று சொல்லி விற்பார்கள் இப்பொழுது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.
அவுன்ஸ் 48.48 டாலர் வெள்ளியின் விலை உயர்ந்ததும் நம்மைப்போன்ற சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியின் பக்கம் கவனத்தை திருப்ப முதலைகளோ தங்களிடம் உள்ள வெள்ளியை 50 சதவீதம் விற்பனை செய்ய சந்தை சரிந்திருக்கிறது.
இன்னும் வெள்ளியின் விலை உயரும் என்ற எண்ணத்தில் அவுன்ஸ் 48.48 டாலரில் வாங்கியிருந்தவர்கள் தங்களிடம் பணமிருந்தால் தற்சமயம் 34 டாலரில் இருக்கும் வெள்ளியை வாங்கி ஆவ்ரேஜ் செய்துக் கொள்ளலாம்.
மீண்டும் வெள்ளியின் விலை உயர வாய்ப்பிருக்கிறது. பணமுதலைகள் வெள்ளியை அடுத்தக் கட்ட உயரத்திற்கு கொண்டுச் செல்ல ஆயத்தமாகி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 100 டாலரை கடக்கலாம்.
தங்கத்தின் போக்கு அதிவேகமாக இருப்பதால் ஏழைகள் வெள்ளியின் பக்கம் செல்வது இயல்பே.ஆதலால் தங்கத்தை காட்டிலும் வெள்ளி தற்போது அதிகமான லாபத்தை தந்துக் கொண்டிருக்கிறது.
34 டாலருக்கு தற்போது நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்தால் 3 மாதத்திற்குள் 15 லிருந்து 20 சதவீதம் லாபம் பெற சாத்தியம் இருக்கிறது என்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.
வெள்ளிச் சந்தை விரைவில் தங்கச் சந்தையை முதலீட்டில் மிஞ்சும் என்பது நிதர்சனமாகப்போகும் உண்மை.
ஆதலால் உலோகத்தில் முதலீடு செய்யும் அன்பர்கள் தங்களின் முதலீட்டை வெள்ளியின் பக்கம் திருப்பலாம்.
2 comments:
இந்த வெள்ளியினை வாங்கி பத்திரப்படுத்தி விற்பனை செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக பேச்சிருக்கிறதே. அதாவது நீண்ட நாட்களுக்கு பத்திரபடுத்த இயலாது "வெள்ளி கருத்துவிடும்". அவ்வாறு ஆகிபோனால் வெள்ளி மதிப்பிழந்துவிடுமென்றும் விலைகிட்டாது என்பதாகவும்!!! இதனை குறித்தும் விபரமாக எழுதினால் பயனளிக்குமே!
வெள்ளியை நாம் நீண்ட நாள் அணிந்திருந்தால் நம் உடம்பு உஸ்சணத்தில் அது கறுக்கும்; ஆனால் அதன் தரத்திலோ அதன் தன்மையிலோ எந்த வித மாற்றமும் ஏற்படாது.
நாம் வெள்ளி பார் வாங்கி முதலீடு செய்வதால் அது கறுப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு அப்படியே கறுத்தாலும் அதை மீண்டும் பொலிவுப்படுத்த எத்தனையோ சாதனங்கள் வந்துவிட்டன இது ஒரு பெரிய விசயமே அல்ல.நன்றி ஆக்கூரான் தமிழ்!
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....