உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, February 23, 2012

நேசப் பயணம்

இந்த மாதம் துவக்கத்தில் அமீரகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இலங்கைக்கு பயணமானோம். இது சுற்றுலா பயணம் அல்ல. அண்ணல் நபிகள் மீது கொண்ட நேசப்பயணம். இங்கு நான் பகிர்வது பயணத்தின் நோக்கத்தை அல்ல. பயணத்தில் ஏற்றபட்ட சில அனுவத்தை பகிரந்துக் கொள்கிறேன்.
இந்த குழுவை ஒருங்கிணைத்த பொருப்பாளர்களில் நானுமிருந்தேன்.

துபாயிலிருந்து இரவு 10.55 மணிக்கு சிரிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களின் பயணம் நிச்சயமாகி இருந்தது. அனைவரிடமும் 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.

8.30 மணிக்கு விமான நிலையத்தில் சிலர் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தோம். மற்றவர்களின் நிலை தெரிந்துக் கொள்ள கைபேசியில் தொடர்புக் கொண்டு துரிதப்படுத்தினேன். வழியில் இருக்கிறோம் வாகன நெரிசலில் மாட்டியிருக்கிறோம் என்றார்கள் அவர்கள் வரும் வரையில் காத்திருந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்தே போடிங் கவுண்டருக்கு சென்றோம்.

ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு தேவையான லக்கேஜ் மற்றும் சிலரிடம் 40 கிலோவிற்கும் அதிகமான லக்கேஜ் இருந்தது. அதை அதிக எடை இல்லாதவர்களோடு சேர்த்து போட்டு போடிங் பெறுவதற்குள் 10 மணி ஆகிவிட்டது.

அடுத்து இமிக்கிரேஷன் முடிக்கவேண்டும் கூட்டம் அதிகமாக நின்றுக் கொண்டிருந்தது. அப்படி இருந்தும் 15 நிமிடங்களில் இமிக்கிரேஷன் என்னோடு நின்றவர்களுக்கு முடிந்துவிட்டது. அங்கிருந்து விமானத்தை நோக்கி நடந்து செல்வதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். பேட்டரிகார் வசதியும் இருக்கிறது அதில் நாங்கள் அமர்ந்துக் கொண்டோம்.
இறங்குமுன் எனக்கு டெலிபோன் வந்தது எங்கள் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தை இமிக்கிரேஷனில் திருப்பி விட்டார்கள். என்றார் ஏன் என்று வினவியதற்கு அவருடைய பையன் பாஸ்போர்ட் மிஸ்சிங் என்றார்!

எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்கு எப்படி தொலைந்தது என்றேன்.
போடிங் கவுண்டரில் அவர் கொடுத்த பாஸ்போர்ட் பழைய மற்றும் புதுப்பித்த பாஸ்போர்ட்டும் சேர்த்து பின் செய்திருந்தது. திரும்ப வாங்கும்போது பின் கலண்டு இருந்ததால் பழைய பாஸ்போர்ட்டை பேக்கில் வைத்து லக்கேஜில் போட்டுவிட்டு புதிய பாஸ்போர்ட்டுடன் இமிக்கிரேஷன் சென்றிருக்கிறார். இமிக்கிரேஷன் அதிகாரி பாஸ்போர்ட்டை வாங்கி அமீரக குடியுரிமை பக்கத்தை தேட அது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளதால் அதை அதிகாரி கேட்க அதை லக்கேஜில் போட்டுவிட்டேன் என்று கூற அந்த பாஸ்போர்ட்டை எடுத்துவா என்று அதிகாரி திரும்ப அனுப்பிவிட்டார்.

அவசரஅவசரமாக போடிங் கவுண்டருக்கு சென்று விசயத்தை கூறி லக்கேஜை கேட்டால் அது இன்னேரம் விமான தளத்திற்கு சென்றிருக்கும் அதை திரும்ப பெற்று இந்த விமானத்தில் பயணம் செய்வது முடியாதது என்று கூறிவிட்டார்கள்.
இந்த லக்கெஜ் இலங்கை சென்று அங்கிருந்து பாஸ்போர்டை எடுத்து கூரியர் மூலம் துபாய் வந்து பிறகு தான் பயணிக்க முடியும் என்றும் நீங்கள் குரூப் டிக்கேட் ஆதலால் ரீபுக்கிங் செய்யஇயலாது என்றும் கூறினார்கள்.

நான்கு தினங்கள் பயணமாக செல்லும் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாத சூழலில் எங்கள் குழுவில் உள்ளவரில் ஒருவர் துபாய் விமான நிலையத்தில் பணிப்புரியக் கூடியவர் அவர் உடனே அவருடைய பணிப் பழக்கத்தை வைத்து ஏர்லைன்ஸ் அதிகாரியிடம் பேசியதில் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றாலும் அவருடைய லக்கேஜ் எடுத்து கொடுத்துவிடுகிறோம் அதை அவர் பெறுவதற்கு சில மணிநேரங்கள் ஆகும் அது வரையில் விமானம் காத்திருக்க முடியாது இந்த லக்கேஜ் கொடுப்பதற்கே முப்பது நிமிடங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றார். அதுபோதும் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் அடுத்த விமானத்தில் மறுதினம் வரட்டும் என்று முடிவுசெய்தோம்.

10.55மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 11.25 மணிக்கு புறப்பட்டது.ஆனால் அவரும் அவர் குடும்பமும் வர முடியவில்லை.

அவர் மறுதினம் ஏர்லைன்ஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசி அதே விமான டிக்கேட்டில் பயணம் செய்து எங்களுடன் சேர்ந்துக் கொண்டார்.

பயணத்தின் போது சிலருக்கு பதட்டம் இருப்பது இயல்பு ஆனால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமலும் கவனமில்லாமலும் பதட்டப்பட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக நேரிடும்.
கவனம் எப்போதும் தேவை.

5 comments:

ஸாதிகா said...

மிக மிக சுவாரஸ்யமாக போய் கொண்டுள்ளது உங்கள் அனுபவங்கள்.அதிக நாள் காத்திருக்க வைக்காமல் விரைவில் அடுத்த பதிவைப்போடுங்கள்:)

கிளியனூர் இஸ்மத் said...

இன்ஷாஅல்லாஹ் நன்றி சகோதரி ஸாதிகா

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//பயணத்தின் போது சிலருக்கு பதட்டம் இருப்பது இயல்பு ஆனால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமலும் கவனமில்லாமலும் பதட்டப்பட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக நேரிடும்.//

ஒவ்வொரு பயணாளிக்கும் சொல்லவேண்டிய புத்திமதி! பகிர்வுக்கு நன்றி சகோ.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சகோதரி அஸ்மா

Sankar Gurusamy said...

நல்ல அனுபவம்.. பயணம் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....